Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Thursday, 2 August 2012

உலகின் முதல் பல்கலைக்கழகம் தக்சசீலா அழிந்துபோன வரலாறு; destruction of takshashila the world first university


அனைவருக்கும் வணக்கம், உலகின் முதல் பல்கலைகழகமான தக்சசீலாவைப் பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்! வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இந்தப் பதிவை தொடர வேண்டுகிறேன்! தற்போது வரையிலும் எந்த நூற்றாண்டில், யாரால், எப்போது துவங்கப்பட்டது என்று உறுதியிட்டு கூற முடியாத உலகின் முதல் பல்கலைகழகமான தக்சசீலா தற்போதைய பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டேக்ஸிலா என்ற நகரில் தோராயமாக கி.மு.ஏழாம் நூற்றாண்டிலிருந்து (700 BCE) இயங்கி வந்ததாக சென்ற பதிவில் பார்த்தோம் இல்லையா நண்பர்களே! இன்றைய பதிவில் தக்சசீலா பல்கலைக்கழகம் எப்படி அழிந்து போனது என்பது பற்றிப் பார்ப்போம் வாருங்கள்! 

8/02/2012 12:12:00 pm by வரலாற்று சுவடுகள் · 121

Tuesday, 24 July 2012

உங்களுக்கு தெரியுமா உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள் இந்தியர்கள் என்று?; தக்சசீலா உலகின் முதல் பல்கலைக்கழகம்; Thakshasila World First University


அனைவருக்கும் வணக்கம்.., ஒரு மனிதனுக்கு தேவையான ஒழுக்கம், அறிவு ஆகியவற்றை கொடுப்பதுதான் கல்வி! அந்த கல்வியின் மூலம் பெற்ற அறிவை கொண்டே எந்தவித மந்திர சக்தியின் உதவியும் இன்றி இப்புவியில் தனக்கு தேவையானவற்றை, தானே தயாரித்துக்கொள்ளும் வல்லமையை மனிதனால் பெற முடிந்தது! அந்த வல்லமையை அவன் கற்கும் அடிப்படை கல்வியிடமிருந்து ஒருவனால் பெற்றிட முடியாது., அதையும் தாண்டி கற்கும் உயர் கல்வியிடமிருந்து மட்டுமே அவனால் பெற இயலும்! அத்தகைய உயர் கல்வியை உலககெங்கும் உள்ள மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருப்பவை தான் பல்கலைக்கழகங்கள்! இத்தகைய சிறப்பு மிக்க பல்கலைக்கழகங்கள் என்ற அமைப்பை உலகில் முதன் முதலில் நிறுவியவர்கள் இந்தியர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே! 

7/24/2012 12:28:00 pm by வரலாற்று சுவடுகள் · 95

Tuesday, 19 June 2012

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சில அடிப்படை தகவல்கள், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-4); History of Surgery (Part-4), History of Organ Transplantation


அனைவருக்கும் வணக்கம், (கடந்த பதிவுகளில் பொது அறுவை சிகிச்சையின் வரலாறுகளை பற்றி விரிவாக அலசினோம் அல்லவா?, அந்த வகையில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Organ Transplantation) பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம் வாருங்கள், அறுவை சிகிச்சை வரலாறின் முந்தைய பாகங்களை வாசிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்து விட்டு இப்பதிவை தொடர வேண்டுகிறேன்) பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும், சாதாரண அறுவை சிகிச்சைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உதாரணத்திற்கு ஒரு சைக்கிள் ட்யூப்பை (Cycle Tube) எடுத்துக்கொள்வோம். ட்யூப் பஞ்சர் (Puncher) ஆனால் அதனை ஒட்டி சரி செய்வது சாதாரண அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொண்டால் அதே பஞ்சர் ஒட்டி சரி செய்ய இயலாத அளவிற்கு பெரிதாய் போய்விடும் போது அந்த ட்யூப்பையே கழட்டி தூர எறிந்துவிட்டு புதிதாக ட்யூப் மாற்றிக் கொள்ளுதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொள்ளலாம்.

6/19/2012 05:59:00 pm by வரலாற்று சுவடுகள் · 105

Thursday, 14 June 2012

மரணம் வென்ற அறுவை மருத்துவம் தந்த ஜோசப் லிஸ்டர், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-3); History of Surgery (Part-3)


அனைவருக்கும் வணக்கம், (அறுவை சிகிச்சை வரலாறின் மூன்றாம் பாகம் இது, முதல் இரெண்டு பாகங்களை படிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இணைப்புகளின் வழியே சென்று முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை படித்துவிட்டு இப்பாகத்தை தொடர வேண்டுகிறேன்). சுஸ்ருதா சம்ஹிதா நூலை அடிப்படையாக கொண்டு அபுல்காசிஸ் எழுதிய மருத்துவ நூலான கிதாப் அல் தாஸ்ரிப் (Kitab Al-Tasrif) கிட்டத்தட்ட பதினேழாம் நூற்றாண்டு வரை மருத்துவ உலகில் தவிர்க்க இயலாத முக்கிய இடத்தை பெற்றிருந்தது என்று சொன்னால் மிகையில்லை. குறிப்பாக இந்நூலின் லத்தீன் பதிப்பான “Concessio ei data qui componere haud valet” என்ற நூலின் வாயிலாகத்தான் ஐரோப்பிய கண்டத்தில் முதன் முதலாக போலக்னா பல்கலைகழகத்தில் (University of Bologna, Italy; Founded in 1088) அறுவை சிகிச்சை மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டது என்றால் அந்தக்காலத்தில் இந்நூல் எத்தனை முக்கியத்துவம் பெற்றதாக இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். 

6/14/2012 09:30:00 am by வரலாற்று சுவடுகள் · 40

Thursday, 7 June 2012

அபுல்காசிஸ் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை, அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 2); History of Surgery (Part-2)


அனைவருக்கும் வணக்கம்., (அறுவை சிகிச்சை வரலாற்றின் இரண்டாம் பாகம் இது, முதல் பாகத்தை படிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று படித்துவிட்டு இரண்டாம் பாகத்தை தொடர்ந்திட வேண்டுகிறேன்) இந்தியர்களை போலவே கிரேக்கர்களும் பண்டைய காலத்தில் இருந்தே பொது மருத்துவத்திலும், அறுவைச்சிகிச்சை மருத்துவத்திலும் குறிப்பிட்ட அளவு நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள் என்று  தான் கூற வேண்டும். மருத்துவதிற்கென்று சில விதிமுறைகளை உருவாக்கியவரான கிரேக்கத்தை (Ancient Greece) சேர்ந்த ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates, 460 BCE – 370 BCE) பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். பொது மருத்துவத்தின் தந்தை (Father of General Medicine) என்று அழைக்கப்படும் இவரே உலகில் முதன் முதலாக உடலியல் (Physiology), உடற்கூற்றியல் (Anatomy), மருந்தியல் (Pharmacology), நரம்பியல் (Neurology) ஆகியவற்றை பற்றி தெளிவான மேம்பட்ட கோட்பாட்டை உருவாக்கியவர் ஆவர். 

6/07/2012 09:49:00 am by வரலாற்று சுவடுகள் · 40

Thursday, 24 May 2012

உங்களுக்கு தெரியுமா அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்தியர் என்று?; அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 1); சுஸ்ருதா அறுவை சிகிச்சையின் தந்தை; History of Surgery (Part - 1)


அனைவருக்கும் வணக்கம், மனிதனாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும் சரி அவற்றின் உடலில் ஏற்படும் நோய்க்கான காரணத்தை அடையாளம் கண்டறிந்து மருந்துகள் (Medicines) மற்றும் அறுவை சிகிச்சை (Surgery) மூலமாக குணப்படுத்தும் கலையை நாம் மருத்துவம் என்கிறோம். மருத்துவத்துறையின் உயரிய தொழில்நுட்பமாக கருதப்படும் அறுவை சிகிச்சை இன்று சர்வசாதாரணமாக உலகமெங்கும் மேற்கொள்ளபட்டாலும் கூட கிட்டத்தட்ட 14000 (12000 BCE) ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான போராட்டத்தின் முடிவில் தான் மனிதனால் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் இன்றைய இந்த வளர்ச்சியை எட்ட முடிந்தது. இப்படிப்பட்ட மகத்தான அறுவைச் சிகிச்சை துறையின் தந்தை (Father of Surgery) என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்தியர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே ..! 

5/24/2012 12:12:00 pm by வரலாற்று சுவடுகள் · 54

Tuesday, 15 May 2012

ராக்கெட் உருவான வரலாறு (பாகம் - 2), வெர்னர் வான் பிரவுன் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ராக்கெட் விஞ்ஞானி; History of Rocket (Part-2)

அனைவருக்கும் வணக்கம், வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 1799 ஆம் ஆண்டு ஸ்ரீ ரெங்கப்பட்டினத்தில் (Srirangapatna, Karnataka) நடந்த நான்காவது ஆங்கிலோ மைசூர் யுத்தத்தில் (Forth Anglo – Mysore War, 1798 – 1799) திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்டதும் அவரது அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயப்படைகள் அங்கு எரிந்த மற்றும் எரியாத ராக்கெட்டுகள் என்று எதையும் விட்டுவைக்காமல் ஒட்டு மொத்தமாக 9700 - க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை கைப்பற்றியது. திப்புவின் அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ஓரியண்டல் லைப்ரரி (Oriental Library) என்ற நூலகத்தையும் விட்டுவைக்காத ஆங்கிலப்படைகள் அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் ராக்கெட் தயாரிப்பு சம்மந்தமான ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு நூல்கள் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் அள்ளிச் சென்றது. 

5/15/2012 10:40:00 am by வரலாற்று சுவடுகள் · 55

Wednesday, 9 May 2012

ராக்கெட் உருவான வரலாறு (பாகம்-1), திப்புசுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட்டை வடிவமைத்த விஞ்ஞானி; History of Rocket


அனைவருக்கும் வணக்கம், நம்மால் இன்று நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் கைதொலைபேசியின் வாயிலாக பேசிவிட முடிகிறது என்றால் அது செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்த செயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் (Outer Space) நிலைநிறுத்துவதில் ராக்கெட்டுகளின் (Rocket) பங்கு அளவிடற்கரியது. அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம் புதிய சகாப்தத்தை அடைய ராக்கெட் தொழில்நுட்ப (Rocket Technology) கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. 

5/09/2012 10:06:00 am by வரலாற்று சுவடுகள் · 40

Thursday, 26 April 2012

பற்பசை (Toothpaste) உருவான வரலாறு, டூத்பேஸ்ட் பிறந்த கதை, உலகின் முதல் டூத்பேஸ்ட் கம்பெனி கோல்கேட்(Colgate); History of Toothpaste


அனைவருக்கும் வணக்கம், ஒரு மனிதன் தன்னுடைய உடலை எப்படி தூய்மையாக வைத்துக்கொள்வது என்பதை உலகிற்கு கற்றுகொடுத்தவர்கள் இந்தியர்கள் என்றால் மிகையில்லை. ஒரு மனிதன் அன்றாடம் காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலையான பல் துலக்குதலிளிருந்துதான் நாம், நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கான முதல் பயணம் துவங்குகிறது, அதன் பிறகுதான் குளிப்பதும் (Bathing) ஏனைய செயல்களும்அந்தவகையில் பல்துலக்குதல் (Tooth Brushing) என்பது நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கு எடுத்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படையான செயலாக அமைகிறது என்றால் மிகையில்லை. சரி இந்த பல்துலக்கும் பழக்கம் எந்த நாட்டு மக்களிடம் முதன் முதலில் தோன்றியது என்று தெரியுமா நண்பர்களே.. நம்புங்கள் இந்தியர்களிடம் தான் பல்துலக்கும் பழக்கம் முதன் முதலில் இருந்ததாக கூறுகிறது வரலாறு. 

4/26/2012 01:14:00 pm by வரலாற்று சுவடுகள் · 22

Monday, 9 April 2012

பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு; பிளாஸ்டிக் (Plastic) பிறந்த கதை; History of Plastic by varalatru suvadugal


அனைவருக்கும் வணக்கம், இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை. அப்படி மனிதனால் தயாரிக்கப்பட்டு புவியினால் எக்காலத்திலும் சிதைத்து அழிக்க முடியாத பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் (Plastic). அது எப்படி உருவானது என்பதைத்தான் இன்றைய பதிவுனூடாக நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம் ..!

4/09/2012 10:52:00 am by வரலாற்று சுவடுகள் · 14

Saturday, 31 March 2012

புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்; The Earth

அனைவருக்கும் வணக்கம், பரந்து விரிந்த இந்த பேரண்டத்தில் மனிதனது செயற்கை கண்களுக்கு (செயற்கைக்கோள்) எட்டிய தொலைவு வரையிலான தேடலின் முடிவில் நாம் வாழும் இந்த புவியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகூட புத்தகங்கள் வாயிலாக புவியை பற்றி நாம் நிறைய படித்திருந்தாலும் கூட அப்போது மதிப்பெண்களுக்காக படித்த காரணத்தினால் நம்மில் பலருக்கு பெரும்பாலான தகவல்கள் மனதில் பதிந்திருக்காது. நாம் வாழும் இந்த கிரகத்தை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய தகவல்களை இந்த பதிவின் வாயிலாக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துவதில் நான் மற்றற்ற மகிழ்ச்சியடைகிறேன். சரி இனி பதிவிற்கு செல்வோமா.? 

3/31/2012 11:43:00 am by வரலாற்று சுவடுகள் · 38

Wednesday, 21 March 2012

இங்க் (Ink) உருவான வரலாறு, மை (Ink) பிறந்த கதை; வரலாற்று சுவடுகள்; History of Ink


அனைவருக்கும் வணக்கம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனித இனத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி (Computer) என்றால் மிகையில்லை. இந்த கணிப்பொறி கண்டறியப்பட்ட பின்புதான் மனித சமுதாயத்தின் லட்சிய இலக்குகள் இப்புவியையும் தாண்டி வானத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணிப்பொறிக்கு நிகரான கண்டுபிடிப்பு என்று வேறு ஏதாவது இருக்குமென்றால் அது சுமார் 4600 ஆண்டுகளுக்கு (2600 BC) முன்பு சீனர்களால் கண்டறியப்பட்டு இன்றுவரை நாம் எழுதுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் மையைத் (Ink) தவிர வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை என்பேன் நான்..! 

3/21/2012 11:08:00 am by வரலாற்று சுவடுகள் · 27

Monday, 12 March 2012

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு; வரலாற்று சுவடுகள்; பெட்ரோல் உருவான வரலாறு, history of petrol


அனைவருக்கும் வணக்கம், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர். 

3/12/2012 06:42:00 pm by வரலாற்று சுவடுகள் · 28

Saturday, 25 February 2012

சைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு, History of Bicycle


எல்லோருக்கும் வணக்கம், உலகம் முழுவதிலும் உள்ள கிராமபுறங்களில் வாழும் மனிதர்களுக்கு இன்றளவும் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருப்பது மிதிவண்டி (Cycle) என்று சொன்னால் மிகையில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்த இந்த சைக்கிளை கண்டுபித்தவர்கள் பட்டறையில் உலோகங்களை உருக்கி காய்ச்சி அடிக்கும் சாதாரண கொல்லர்கள் (Blacksmith). என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம். 

2/25/2012 10:42:00 am by வரலாற்று சுவடுகள் · 24

Saturday, 18 February 2012

உலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு, உலக அதிசயங்களின் பட்டியல் பிறந்த கதை, History of World Seven Wonders


எல்லோருக்கும் வணக்கம், உலக அதிசயங்கள் எவை எவை என்பது பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு உலக அதிசயங்களை முதன் முதலில் பட்டியளிட்டவர் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. கிரேக்க நாட்டை (தற்போதைய கிரீஸ்) சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தான் உலகில் முதன் முதலில் உலக அதிசயங்கள் பட்டியளிட்டவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் இது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்...,! 

2/18/2012 11:13:00 am by வரலாற்று சுவடுகள் · 22

Thursday, 9 February 2012

சோப்பு உருவான வரலாறு, உலகின் முதல் சோப்பு கம்பெனி பியர்ஸ் (Pears), சோப்பு பிறந்த கதை; History of Soap Making, Pears the World first Soap Company


எல்லோருக்கும் வணக்கம், இன்றைய நவீன காலகட்டங்களில் சோப்பை பயன்படுத்தாமல் குளிப்பது நூறு சதவீத முழுமையான குளியலாக இருக்காது என்பதில் எவர்க்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளைக் குளிப்பாட்ட கூட இன்று நாம் சோப்பை பயன்படுத்துகிறோம் ஆனால் சென்ற தலைமுறை மக்களின் குளியலறையில் சோப்பு இந்த அளவிற்கு முக்கிய இடத்தை பெற்றிருந்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். 

2/09/2012 10:24:00 am by வரலாற்று சுவடுகள் · 11

Monday, 30 January 2012

மறைக்கப்பட்ட மாமேதைகள் அஷிஷுல் ஹக் மற்றும் கெம் சந்திர போஸ், இந்தியர்களே மிகத்துல்லியமான கைரேகை ஒப்பீட்டு முறையை உருவாக்கியவர்கள், கைரேகையின் வரலாறு, History of Fingerprints.


எல்லோருக்கும் வணக்கம், இதுவரை மண்ணில் பிறந்த எந்த மனிதனது கைரேகையும் இன்னொரு மனிதனின் கைரேகையை போல் இருந்ததில்லை என்றால் இப்பிரபஞ்சத்தை படைத்த இறைவன் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்று தானே கூற வேண்டும். ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியான அடையாளத்தோடு படைத்துக் கொண்டிருக்கும் அந்த படைப்பின் ரகசியம்., நம் கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. ஒரு மனிதனின் கைரேகை இன்னொரு மனிதனின் கைரேகையை போல் இருப்பதில்லை என்ற உண்மையை முதன் முதலில் தெரிந்து கொண்டவர்கள் யார் தெரியுமா நண்பர்களே.., மேதைகளோ விஞ்ஞானிகளோ அல்ல மண்பாண்டங்களை செய்து விற்கும் சாதாரண குயவர்கள் தான். 

1/30/2012 10:44:00 am by வரலாற்று சுவடுகள் · 15

Wednesday, 18 January 2012

லிப்ஸ்டிக் உருவான வரலாறு, லிப்ஸ்டிக் பிறந்த கதை; உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள் தான், history of lipstick, indians are the first man to produce lipstick


அனைவருக்கும் வணக்கம், மேலை நாட்டு நாகரீகம் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்தவர்களும், உலகிலேயே முதன் முதலில் தயாரித்து உபயோகித்தவர்களும் இந்தியர்கள் தான் என்று கூறினால் நம்புவீர்களா நண்பர்களே, ஆம் உண்மைதான், பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை தயாரித்து பயன்படுத்தியவர்கள் ஆவார். ஆச்சர்யமாக உள்ளதா வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். 

1/18/2012 10:40:00 am by வரலாற்று சுவடுகள் · 2

Sunday, 15 January 2012

உலகின் முதல் நூலகம், நூலகம் உருவான வரலாறு, நூலகம் பிறந்த கதை; The world's first library, history of library


அனைவருக்கும் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள், புத்தக பொக்கிஷம் என்று அழைக்கப்படும் நூலகங்கள் பற்றி முன்னுரை எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன் ஏனெனில் அதன் பயன்பாடுகளும் தேவைகளும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வரலாற்று தகவல் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் ஒரு தலைமுறை மக்களிடமிருந்து மற்றொரு தலைமுறை மக்களுக்கு சென்றடைவது நூலகங்களின் வாயிலாகத்தான் என்றால் மிகையில்லை.

1/15/2012 09:38:00 am by வரலாற்று சுவடுகள் · 16

Monday, 9 January 2012

காகிதம் (பேப்பர்) பிறந்த கதை; காகிதம் உருவான வரலாறு, history of paper making.


எல்லோருக்கும் வணக்கம்,

எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த

1/09/2012 06:31:00 pm by வரலாற்று சுவடுகள் · 11