Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts
Tuesday, 19 June 2012
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சில அடிப்படை தகவல்கள், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-4); History of Surgery (Part-4), History of Organ Transplantation
அனைவருக்கும் வணக்கம், (கடந்த பதிவுகளில் பொது அறுவை சிகிச்சையின் வரலாறுகளை பற்றி விரிவாக அலசினோம் அல்லவா?, அந்த வகையில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Organ Transplantation) பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம் வாருங்கள், அறுவை சிகிச்சை வரலாறின் முந்தைய பாகங்களை வாசிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்து விட்டு இப்பதிவை தொடர வேண்டுகிறேன்) பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும், சாதாரண அறுவை சிகிச்சைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உதாரணத்திற்கு ஒரு சைக்கிள் ட்யூப்பை (Cycle Tube) எடுத்துக்கொள்வோம். ட்யூப் பஞ்சர் (Puncher) ஆனால் அதனை ஒட்டி சரி செய்வது சாதாரண அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொண்டால் அதே பஞ்சர் ஒட்டி சரி செய்ய இயலாத அளவிற்கு பெரிதாய் போய்விடும் போது அந்த ட்யூப்பையே கழட்டி தூர எறிந்துவிட்டு புதிதாக ட்யூப் மாற்றிக் கொள்ளுதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொள்ளலாம்.
6/19/2012 05:59:00 pm by வரலாற்று சுவடுகள் · 105
Thursday, 14 June 2012
மரணம் வென்ற அறுவை மருத்துவம் தந்த ஜோசப் லிஸ்டர், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-3); History of Surgery (Part-3)
அனைவருக்கும்
வணக்கம், (அறுவை சிகிச்சை வரலாறின் மூன்றாம் பாகம் இது, முதல் இரெண்டு பாகங்களை
படிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இணைப்புகளின் வழியே சென்று முதல் மற்றும்
இரண்டாம் பாகத்தை படித்துவிட்டு இப்பாகத்தை தொடர வேண்டுகிறேன்). சுஸ்ருதா சம்ஹிதா
நூலை அடிப்படையாக கொண்டு அபுல்காசிஸ் எழுதிய மருத்துவ நூலான கிதாப் அல் தாஸ்ரிப் (Kitab Al-Tasrif) கிட்டத்தட்ட பதினேழாம் நூற்றாண்டு வரை மருத்துவ
உலகில் தவிர்க்க இயலாத முக்கிய இடத்தை பெற்றிருந்தது என்று சொன்னால் மிகையில்லை. குறிப்பாக
இந்நூலின் லத்தீன் பதிப்பான “Concessio ei data qui componere haud valet” என்ற நூலின் வாயிலாகத்தான் ஐரோப்பிய கண்டத்தில் முதன் முதலாக போலக்னா பல்கலைகழகத்தில்
(University of
Bologna, Italy; Founded in 1088) அறுவை சிகிச்சை மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டது என்றால் அந்தக்காலத்தில் இந்நூல்
எத்தனை முக்கியத்துவம் பெற்றதாக இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
6/14/2012 09:30:00 am by வரலாற்று சுவடுகள் · 40
Thursday, 7 June 2012
அபுல்காசிஸ் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை, அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 2); History of Surgery (Part-2)
அனைவருக்கும் வணக்கம்., (அறுவை சிகிச்சை வரலாற்றின் இரண்டாம் பாகம் இது, முதல் பாகத்தை படிக்க
தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று படித்துவிட்டு இரண்டாம் பாகத்தை
தொடர்ந்திட வேண்டுகிறேன்) இந்தியர்களை போலவே கிரேக்கர்களும் பண்டைய காலத்தில்
இருந்தே பொது மருத்துவத்திலும், அறுவைச்சிகிச்சை மருத்துவத்திலும் குறிப்பிட்ட
அளவு நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள் என்று
தான் கூற வேண்டும். மருத்துவதிற்கென்று சில விதிமுறைகளை உருவாக்கியவரான கிரேக்கத்தை (Ancient Greece) சேர்ந்த ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates, 460 BCE – 370 BCE) பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று
நினைக்கிறேன். பொது மருத்துவத்தின் தந்தை (Father of General Medicine) என்று அழைக்கப்படும் இவரே உலகில் முதன் முதலாக உடலியல்
(Physiology), உடற்கூற்றியல் (Anatomy), மருந்தியல் (Pharmacology), நரம்பியல் (Neurology) ஆகியவற்றை பற்றி தெளிவான மேம்பட்ட கோட்பாட்டை உருவாக்கியவர்
ஆவர்.
6/07/2012 09:49:00 am by வரலாற்று சுவடுகள் · 40
Thursday, 24 May 2012
உங்களுக்கு தெரியுமா அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்தியர் என்று?; அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 1); சுஸ்ருதா அறுவை சிகிச்சையின் தந்தை; History of Surgery (Part - 1)
அனைவருக்கும்
வணக்கம், மனிதனாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும்
சரி அவற்றின் உடலில் ஏற்படும் நோய்க்கான காரணத்தை அடையாளம் கண்டறிந்து மருந்துகள் (Medicines)
மற்றும் அறுவை சிகிச்சை (Surgery) மூலமாக
குணப்படுத்தும் கலையை நாம் மருத்துவம் என்கிறோம். மருத்துவத்துறையின் உயரிய
தொழில்நுட்பமாக கருதப்படும் அறுவை சிகிச்சை இன்று சர்வசாதாரணமாக உலகமெங்கும்
மேற்கொள்ளபட்டாலும் கூட கிட்டத்தட்ட 14000 (12000 BCE) ஆண்டுகளுக்கும்
மேலான தொடர்ச்சியான போராட்டத்தின் முடிவில் தான் மனிதனால் அறுவை சிகிச்சை
மருத்துவத்தில் இன்றைய இந்த வளர்ச்சியை எட்ட முடிந்தது. இப்படிப்பட்ட மகத்தான அறுவைச்
சிகிச்சை துறையின் தந்தை (Father of Surgery) என்று
அழைக்கப்படுபவர் ஒரு இந்தியர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே
..!
5/24/2012 12:12:00 pm by வரலாற்று சுவடுகள் · 54
Monday, 13 February 2012
ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்? விலங்குகளால் மனிதர்களைப்போல் பேச முடிவதில்லையே ஏன்? How do we speak?
எல்லோருக்கும் வணக்கம், இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே நண்பர்களே. உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100% பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை.
2/13/2012 12:06:00 pm by வரலாற்று சுவடுகள் · 7
Friday, 3 February 2012
தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும், பெரும்பாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லையே ஏன்? How belly is formed?
எல்லோருக்கும் வணக்கம், மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள்
2/03/2012 04:28:00 pm by வரலாற்று சுவடுகள் · 48
Thursday, 12 January 2012
குங்குமபூவின் மருத்துவ குணங்களும் பயன்பாடுகளும்; குங்குமபூவை பாலில் கலந்து பருகி வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?, Clinical applications of saffron
அனைவருக்கும்
வணக்கம், சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள அனைத்து தரப்பு
மக்களாலும், படித்தவர் படிக்காதவர் என்ற பேதமின்றி நம்பப்படும் ஒரு விஷயம்
என்னவென்றால் பெண்கள் தங்களது கற்பகாலங்களில் காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை
கலந்து தொடர்ந்து இரவு வேலையில் குடித்து வந்தால் பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக
பிறக்கும் என்பதாகும்.
1/12/2012 11:58:00 am by வரலாற்று சுவடுகள் · 4
Subscribe to:
Posts (Atom)



