Friday 3 February 2012
தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும், பெரும்பாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லையே ஏன்? How belly is formed?
எல்லோருக்கும் வணக்கம், மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள்
என்றுதான் கூற வேண்டும், ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை கூடுகிறதே தவிர, தொப்பை மிகக் குறைவானவர்களுக்கே ஏற்படுகிறது என்று தான் கூற வேண்டும். அதற்க்கு சில காரணங்கள் இருக்கிறது அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் இந்த தொப்பை எப்படி ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்
நமது உடலை பற்றி சொல்வதனால் அது ஒரு எந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். எப்படி எந்திரங்கள் இயங்க மின்சாரம் என்கின்ற ஆற்றல் தேவையோ அதுபோலவே நம் உடல் என்கின்ற எந்திரம் இயங்க கலோரி என்கிற ஆற்றல் தேவை, அந்த கலோரியை நமது உடல், நாம் தினந்தோறும் உண்கின்ற உணவின் வழியாக பெற்றுக்கொள்கிறது. அப்படி உணவின் வழியாக பெறப்படும் கலோரிகள் நாள் முழுவதும் நம் உடல் இயங்குவதற்கு தேவையான அளவையும் தாண்டி கிடைக்கும் போது அந்த கலோரிகளை வீணடிக்க விரும்பாத மூளை அவசர காலத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற நல்ல எண்ணத்தில் (?) எஞ்சியிருக்கும் கலோரிகளை கொழுப்பாக மாற்றி உடலின் ஒரு பகுதியில் சேமிக்க உத்தரவிடுகிறது.
உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் நம்மை காட்டிலும் நமது மூளை மிகவும் எச்சரிக்கை உணர்வோடுதான் செயல்பட ஆரம்பிக்கிறது. உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் அதை எங்கே எப்படி சேமிக்க வேண்டும் என்பதை மூளை நேரடியாக தலையிட்டு தீர்மானிக்கிறது. இருபத்திநான்கு மணிநேரமும் செயல்படும் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவை இருக்கும் இடங்களை தவிர்த்து உடலின் எந்த பாகம் அதிக வேலையின்றி இருக்கிறதோ அங்கே கொழுப்பை சேமிக்கும்படி மூளை உத்தரவிடுகிறது.
அப்படி மனித உடலில் அதிகவேலையின்றி இருக்கும் இடம் என்று மூளையின் கண்களுக்கு முதலில் தென்படும் இடம் அடிவயிறுதான். மூளையின் உத்தரவின் பேரில் நமது உடலின் வயிற்று தோலின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் கொழுப்பை சேர்த்துவைக்கும் வேலை துவங்குகிறது. அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து வயிறு மேடு தட்டும் போது நாம் உசாராக இல்லை என்றால் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வயிறை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி இறுதியில் ஒரு பானையின் அளவிற்கு பெரிதாக்கிவிடுகிறது. இப்படித்தான் நண்பர்களே மனிதர்களுக்கு தொப்பை உருவாகிறது.
ஆனால் பெண்களுக்கு என்று பார்க்கும் போது ஆரம்பத்திலேயே அடிவயிற்றில் கொழுப்பை சேர்க்க மூளை உத்தரவிடுவதில்லை காரணம் பெண்களின் அடிவயிற்று பிரதேசத்தில் ஆண்களுக்கு இல்லாத கர்ப்பப்பை இருப்பதால்தான். கர்ப்பபை என்பது உயிர்களை உருவாக்கும் அதிமுக்கியமான இடம் என்பதால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கர்ப்பப்பையின் செயல்பாடுகள் குறைந்து விடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் மூளை ஆரம்பத்திலேயே பெண்களுக்கு கொழுப்பை அடிவயிற்றில் சேமிக்க உத்தரவிடுவதில்லை. கர்ப்பப்பை இருக்கும் ஏரியாவை தவிர்த்து கொழுப்பை எங்கு சேமிக்கலாம் என்று மூளை யோசித்துக்கொண்டிருக்கும் போது வயிற்று பகுதிக்கு அடுத்ததாக அதிக வேலையற்ற இடம் என்று மூளையின் கண்ணில் தென்படுவது தொடைப்பகுதியாகும். தொடைப்பகுதி கொழுப்பை சேமிக்க தகுந்த இடம் என்று மூளை கருதியதும் அங்கே கொழுப்பை சேமிக்கும் வேலை துவங்குகிறது. தொடைப்பகுதியில் ஓரளவுக்கு கொழுப்பு சேர்ந்த பின்னாலும் உடலில் கொழுப்பு சேர்ந்துகொண்டே இருந்தால் அடுத்ததாக கொழுப்பை சேர்த்துவைக்க தகுந்த இடம் என்று மூளையின் கண்ணில் தென்படும் இடம் பெண்களின் பின்பகுதியாகும். இதன் காரணமாகத்தான் ஒரு பெண் மெலிந்த (Slim) தோற்றம் உடையவராக இருந்தாலும் கூட அவர்களின் தொடைப்பகுதியும், பின்புறமும் பெரிதாகத் தெரிகிறது.
மெனோபாஸ் துவங்காத அதாவது பூப்பெய்தாத பெண்களுக்கும் மெனோபாஸ் நின்று போன பெண்களுக்கும் கர்ப்பபைகளின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருப்பதால் அந்த வயதில் இருக்கும் பெண்களின் அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை மூளை தடுக்க முயர்ச்சிப்பதில்லை இதன் காரணமாகத்தான் பெண்களில் சிலருக்கு ஆண்களுக்கு நிகராக தொப்பை உருவாகிவிடுகிறது.
தொப்பை, தொப்பையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை அது உடலில் பல நோய்கள் உண்டாவதற்க்கான வழியை ஏற்படுத்தி விடுவதால் குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட உண்டாவதற்கு அடிப்படை காரணமாக இருப்பதால் நாம், நமது உடலில் தொப்பை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இன்றியமையாததாகிறது. முறையான உணவு கட்டுப்பாட்டினை பின்பற்றுவோர் இருக்கும் திசையையே தொப்பை எட்டிப்பார்க்காது என்று தான் சொல்ல வேண்டும். அதோடில்லாமல் தினந்தோறும் குறைந்தது நாற்பது நிமிடம் நடக்கும் பழக்கமும் (Walking) இருந்தால் அது நம் உடலில் ஏற்படும் பாதி நோய்களுக்கு தீர்வாக இருக்கும் என்று சொன்னால் மிகையில்லை.
நடக்க சிரமப்படுபவர்கள் வீட்டுக்குள் இருந்தபடியே சில யோகாசனங்களை செய்யலாம். தொப்பையை குறைப்பதற்கு என்று பார்த்தோமானால் மிகச் சிறந்த பலன் தரும் யோகாசனங்களாக தனுராசனம், சலபாசனம், சர்பாசனம், மற்றும் நல்காசனம் ஆகிய யோகாசனங்களை குறிப்பிடலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த யோகாசனங்களை செய்ய முயற்சிக்கும் போது புத்தகங்களையோ அல்லது டி.வி.களையோ பார்த்து செய்யாமல் சிறந்த யோகா மாஸ்டர் மூலமாக செய்ய முயற்சிப்பது மிகுந்த பயனளிக்ககூடியதாக இருக்கும். தொப்பை விழுந்த பின் கடும் முயற்சி செய்து அவற்றை குறைப்பதைக் காட்டிலும் முறையான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றி வரும்முன் தடுப்பதே சிறந்ததாகும். மீண்டும் ஒரு சிறந்த பதிவினூடாக விரைவில் சந்திக்கிறேன், நன்றி வணக்கம்..!
பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை தவறாமல் பதிவு செய்துவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே, உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும். இந்த பதிவு பயனுள்ள பதிவு என்று நீங்கள் நினைத்தால் உங்களது ஓட்டுக்களை கீழே உள்ள ஓட்டுபட்டைகளில் பதிவு செய்துவிட்டுச் செல்லுங்கள்..!
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான பதிவு!
ReplyDeleteதொப்பை பற்றிய முழு விவரமும் இருக்கிறது!
வாங்க நண்பர் சந்திர கிருஷ்ணா அவர்களே ..,
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோடி ..!
The post leads us to a new start.Thank you. samy
ReplyDelete////////The post leads us to a new start.Thank you. samy///////
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோடி நண்பரே ..!
pretty good post! very useful one too. Thanks for sharing this with others.
ReplyDelete///////pretty good post! very useful one too. Thanks for sharing this with others.//////////
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே ...
தொப்பைக்கு அதிக காலரிகள் ஒரு காரணமென்றாலும் கூட வயது கூட கூட அதிக காலரிகளின் ஒரு பகுதி சேமிப்பில் கொழுப்பு உடலில் தங்கி விடுகிறதென்றே நினைக்கின்றேன்.கூடவே நமக்கு அரிசி ஒரு முக்கிய உணவாக இருப்பதால் அதிக கார்போ ஹைட்ரேட் உடலில் சேர்ந்து விடுகிறது.ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் சமமான உணவுகளாக காய்கறி,பழங்கள்,பால்,இறைச்சி,கொழுப்பு உணவுகளை கலந்து சாப்பிடுவது மட்டுமே உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
////காய்கறி,பழங்கள்,பால்,இறைச்சி,கொழுப்பு உணவுகளை கலந்து சாப்பிடுவது மட்டுமே உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்/////////
ReplyDeleteஉண்மைதான் நண்பரே .., எந்த உணவாக இருந்தாலும் அதை வயிறு நிரம்ப சாப்பிடுவதுதான் தவறு மிகச்சரியான அளவு எது என்று நமக்கு தெரிந்துவிட்டால் எந்த உணவு வகைகளைகளையும் சாப்பிடலாம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோடி நண்பரே ...!
good post
ReplyDeleteuseful info thanks
ReplyDelete@ sharfu @ , @ ♠புதுவை சிவா♠ @....
ReplyDeleteநண்பர்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோடி
மிக அருமையான கட்டுரை. நீண்ட நாட்களாக தொப்பையை குறைக்க போராடி வருகிறேன். தொப்பை உருவாவது பற்றி தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள், ரொம்ப நன்றி.
ReplyDelete//////தொப்பை உருவாவது பற்றி தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள், ரொம்ப நன்றி.//////////
ReplyDeleteநண்பர் திரு.ரவி அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோடி ...,
Thanks for sharing the detailed information
ReplyDeleteThanks to sharing the information
ReplyDelete////Thanks to sharing the information///
ReplyDeletethanks for coming and drop your comments.
anaivarukkum payanulla padhivu vaazhththukkal nandri
ReplyDeletesurendran1973@gmail.com
நம் நாட்டிற்கு இந்த பதிவு மிகவும் அவசியம்.. தொடருங்கள் உங்கள் பணியை..
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteஅன்பரே தொப்பையை பற்றி பல புதிய தகவல்கள் நன்றி
ReplyDeleteNice share, keep it up
ReplyDeleteயோகாசனம் செய்ய குரு வேண்டும் என்று நிர்பந்திப்பதே ஒரு மோசடி.
ReplyDeleteஇவ்வளவு நல்ல தகவல்கள் சொல்லும் ஒரு பதிவில் ஏன் இந்த கரும்புள்ளி?
விளையாட்டில் நாம் செய்யும் தவறுகளை திருத்தி நம்மை மேம்படுத்திக்கொண்டு தொடர்ந்து வெற்றிபெற அந்த விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரது பயிற்சி இன்றியமையாததாகிறது. அதுபோலவே நாம் யோகாசனங்கள் செய்யும் போது நமது தவறுகளை திருத்திக்கொண்டு யோகாசனத்தின் முழுப்பலனை பெற அதில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரிடம் பயிற்சி எடுத்துக்கொள்வது இன்றியமையாததாகிறது.!
Deleteபுரிதலுக்கு நன்றி சகோ, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..!
நல்ல புத்தகங்களைப் படித்து யோகாசனப் பயிற்சி செய்து அதன் மூலம் அருமையான பலன்களை அடைந்தவர்கள் பலரை எனக்கு நன்றாகத் தெரியும்.
ReplyDeleteஉங்களுக்குத் தெரியக் கூடிய எடுத்துக் காட்டு வேண்டுமெனில்...நடிகர் சிவக்குமார்.
ஆசனப் பயிற்சியைப் பிழைப்பாகக் கொண்டவர்களின் மோசடி குருமுகமாகத்தான் ஆசனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது !!
வாருங்கள் சகோ..,
Deleteயோகாசனம் என்பது சாதாரண விஷயம் அல்ல அது உடலிலுள்ள அனைத்து தசைப்பகுதியிலும் சிறப்பான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது, ஆகையால் தான் யோகாசனத்தை தவறாகச் செய்து அதன் காரணமாக உடலில் மோசமான பக்கவிளைவுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் பயிற்சி பெற்ற ஒருவரின் முன்னிலையில் மேற்கொள்வது சிறந்தது என்று கூறினேன், அதைத்தவிர்த்து வேறு எந்த உள்நோக்கமும் இல்லை சகோ ..!
புரிதலுக்கு நன்றி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!
Your post is very important at current situation in the world and note that nowadays fast food habit also already occupied in rural areas.
ReplyDeleteThey also like the same and reduce the time for cooking( :( ).
Belly problem is not dominated in rural areas particularly who are sincerely worked with harvest field and the as deep hard worker(physically/mentally)at town side.
Thanks
கிராமபுறங்களிலும் இந்த "Fast Food" அதிவேக உணவு கலாச்சாரம் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது சற்று வேதனையான விஷயம் தான் ஆனாலும் முழுமையாக இன்னும் ஆக்கிரமிப்பு செய்துவிடவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம்.,
Deleteவியர்வை கரைந்தோட வேலை செய்யும் எவர்க்கும் தொப்பை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான் சகோ..!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
அனைவரையும் பயமுறுத்தும் பாடாய் படுத்தும்
ReplyDeleteதொந்தி குறித்த பதிவு மிக மிக அருமை
அறியாத பல விஷயங்க்களை அறிந்து கொண்டோம்
பதிவுக்கு மிக்க நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி ஐயா.!
Deleteசூப்பர்......
ReplyDeleteவருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!
Deleteஅருமையான தகவல் மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் .
ReplyDeleteஇப்போதெல்லாம் ஆண்களை விடவும் பெண்களுக்கு
இந்தத் தொப்பை ஒரு பெரும் துன்பம் .எங்கு பார்த்தாலும்
இப்படியானதொரு ஆக்கத்தை வாசிக்க தவறமாட்டார்கள்
அந்த அளவுக்கு இந்தத் தகவலுக்கு முக்கியத்துவம் பெருகி
விட்டது சகோதரரே :) மிக்க நன்றி காலத்துக்கு ஏற்ற நல்ல
பகிர்வைத் தந்தமைக்கு .
அதனால் தான் என்னவோ எனது தளத்தில் வேறு சில நல்ல பதிவுகள் இருந்தும் மற்ற எந்த பதிவும் எட்ட முடியாத வாசிப்பு பக்கங்களை இந்த பதிவு கடந்து தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
Deleteவருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!
wow good... thanks
ReplyDeleteவருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteதொப்பைக்கு பின்னால் கொழுப்பு மட்டும் இருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு பல விசயங்களை புரிய வைத்திருக்கிறது உங்கள் பதிவு.குறிப்பாக மூளையின் செயல்பாடு.நன்றி நண்பா.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteவணக்கம் நண்பா , தகவலுக்கு மிக்க நன்றி ! அருமையான பதிவு !
ReplyDeleteருசிக்கு சாப்பிடாமல் பசிக்காக சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும். வள்ளுவப் பெருந்தகை கூறியது போல பசித்தபின் உண்ண வேண்டும்.. அவசர அவசரமாக அள்ளி விழுங்காமல் 'நொறுங்க தின்றால் நூறு வாழ்வு' என்பதை உணர்ந்து உண்ண வேண்டும். மிக முக்கியமாக சாப்பிடும் போது சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்,அந்த நேரங்களில் டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது,புத்தகம் படித்துக்கொண்டே சாப்பிடுவது,பிற விடயங்களை சிந்தித்து கொண்டே டென்ஷனாகவும் வேண்டா வெறுப்பாக கடமைக்காக அள்ளி வீசுவதையும் தவிர்க்க வேண்டும். கடைசியாக சாப்பிடுவதற்கு ஒரே நேரஅளவை கடைபிடிக்க வேண்டும்,,
ReplyDeleteஇந்த அவசர யுகத்தில் இத்தனையும் சாத்தியமா என்கிறீர்களா? மனமிருந்தால் மார்க்கமுண்டு... உஷ் அப்பாடா! ஏதோ என்னால் முடிந்தது
என்றும் அன்புடன் தமிழ்நேசன்
என்னால் முடிந்தது என்று சொல்லிவிட்டு பல விசயங்களை பட்டியளிட்டுவிட்டீர்களே! அனைத்தும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
பயனுள்ள தகவலை சொன்னீர்கள் ..
ReplyDeleteமிக்க நன்றி .
தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள்
Pays nulla thagaval
DeletePays nulla thagaval
Delete@shanavas syed
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா!
Thanking for you this data useful for me
ReplyDeletethanks for your compliments, and please do visit often.
Deleteநன்றி
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி
ReplyDelete