Tuesday 24 July 2012
உங்களுக்கு தெரியுமா உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள் இந்தியர்கள் என்று?; தக்சசீலா உலகின் முதல் பல்கலைக்கழகம்; Thakshasila World First University
அனைவருக்கும் வணக்கம்..,
ஒரு மனிதனுக்கு தேவையான ஒழுக்கம், அறிவு ஆகியவற்றை கொடுப்பதுதான் கல்வி! அந்த கல்வியின்
மூலம் பெற்ற அறிவை கொண்டே எந்தவித மந்திர சக்தியின் உதவியும் இன்றி
இப்புவியில் தனக்கு தேவையானவற்றை, தானே தயாரித்துக்கொள்ளும் வல்லமையை மனிதனால் பெற
முடிந்தது! அந்த வல்லமையை அவன் கற்கும் அடிப்படை கல்வியிடமிருந்து ஒருவனால் பெற்றிட முடியாது., அதையும் தாண்டி கற்கும் உயர் கல்வியிடமிருந்து மட்டுமே அவனால் பெற இயலும்!
அத்தகைய உயர் கல்வியை உலககெங்கும் உள்ள மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருப்பவை
தான் பல்கலைக்கழகங்கள்! இத்தகைய சிறப்பு மிக்க பல்கலைக்கழகங்கள் என்ற அமைப்பை உலகில்
முதன் முதலில் நிறுவியவர்கள் இந்தியர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்
நண்பர்களே!
தற்போதைய பாகிஸ்தான்
நாட்டின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ராவல்பிண்டி மாவட்டத்தில், தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து
வடமேற்கு திசையில் 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நகரம் தக்சசீலா (Thakshasila) இது தற்போது டேக்ஸிலா (Taxila) என்று அழைக்கப்படுகிறது! இந்த மண்ணில்தான் உலகின்
முதல் பல்கலைக்கழகமான தக்சசீலா (University
of Thakshasila, 700 BCE – 500 AD) கிட்டத்தட்ட 2700 (700
BCE) ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது! என்னாது 2700 வருசமா என்று நீங்கள் வியப்பது என் மனக்கண்ணில் தெரிகிறது! இது பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில்
இந்த பல்கலைகழகத்திற்க்கான பெயர் காரணம் பெற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்!
இதற்க்காக நாம் வேதகாலத்தை (Vedic Period) நோக்கி பயணிப்பது அவசியமாகிறது! அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய அரசுகளுள் ஒன்று காந்தாரா (Gandhara Kingdom)! இது தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் ஆப்கானிஸ்தான் கிழக்கு
பகுதிகள் சிலவற்றை உள்ளடக்கியது! இங்குதான் உலகில் மிகவும் புகழ் பெற்ற கலைகளுள்
ஒன்றாகக் கருதப்படும் காந்தாரக்கலை பிறந்தது! இந்த காந்தாரா
நாட்டிற்கும் (Gandhara Kingdom) இந்துக்களின் புனித இதிகாசங்களான இராமாயணம் (Ramayana) மற்றும் மகாபாரதத்திற்கும் (Mahabharata)
நெருங்கிய தொடர்பு உண்டு!
இராமாயணத்தில் வரும்
ராமனின் (Raghava Ram) தம்பியான பரதன் (Bharata) பற்றி நாம் அனைவரும் அறிவோம்! வனவாசம் முடிந்து ராமன் நாடு திரும்பினால் தனக்கென ஆட்சி செய்ய ஒரு தனி நாடு
வேண்டும் என்று கருதிய பரதன் காந்தர்வர்களை தாக்கித் தோற்கடித்து அந்த இடத்தில் தனக்கென
ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தினான். அரசின் தலைநகருக்கு தனது மூத்த மகன் தக்சனின் (Thaksha) நினைவாக தக்சசீலா (Thakshasila) என்று பெயரிட்டான்! இந்த நகரம் தான் தற்போது
டேக்சிலா (Taxila) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது! பரதனின் இன்னொரு
மகனான புஷ்கலாவதியின் (Pushkalavati) நினைவாக உருவாக்கப்பட்ட நகரம் புருஷபுரா (Purushapura), இந்த நகரம் தான் தற்போது பெஷாவர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது! தக்சசீலா என்ற ஊரில் துவங்கப்பட்டதன் காரணமாகவே
பல்கலைகழகத்திற்கு தக்சசீலா என்று பெயர் வந்தது!
2700 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பல்கலைகழகத்தில் 10,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றிருக்கிறார்கள் என்றால் அந்த பல்கலைக்கழகம்
எத்தனை பிரம்மாண்டமாய் இருந்திருக்க வேண்டும் இல்லையா நண்பர்களே அது தான் தக்சசீலா!
இங்கு.... வேதம், அறிவியல், கணிதம், மருத்துவம், மதம், அரசியல், வானியல், இசை,
ஜோதிடம், இலக்கணம், விவசாயம், ஆயுர்வேதம், சட்டம், வில்வித்தை, போர்த்தந்திரம்,
வேட்டையாடுதல், மறைந்திருக்கும் புதையலை கண்டுபிடித்தல் உள்ளிட்ட 65-க்கும் மேற்பட்ட துறைகளில் உயர்கல்வி போதிக்கப்பட்டிருக்கிறது என்றால் அப்போதே
நாம் கல்வி கற்ப்பித்தலில் எத்தகைய அசாதாரண வளர்ச்சியை பெற்றிருந்திருக்கிறோம்
என்று நீங்களே யூகித்துக்கொள்ளலாம்! அந்தக்காலத்திலேயே பாபிலோனியா, கிரீஸ்,
அரேபியா, சீனா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மாணவர்கள் வருகை
புரிந்து இங்கு கல்வி பயின்றிருக்கிறார்கள் என்றால் இந்த பல்கலைகழகத்தின் புகழ் எவ்வளவு
தூரம் பயணித்திருக்கிறது என்று நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்!
தக்சசீலா
பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை.., மதம், நாடு, மொழி என்ற எந்தவித பேதமுமின்றி முழுக்க
முழுக்க திறமை அடிப்படையில் தான் அமைந்திருந்தது! மன்னரின் வாரிசு என்பதற்காகவோ
அல்லது பெரும் செல்வந்தரின் வாரிசு என்பதற்காகவோ எவரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை!
இங்கு கல்வி பயில விரும்பும் மாணவரது குறைந்த பட்ச வயது 16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது! அதோடு அடிப்படை கல்வியில் தேர்ச்சியடைந்து
விட்டதாக தனது ஆசிரியரிடமிருந்து உறுதிப்பத்திரம் பெற்றுவரவும்
வலியுறுத்தப்பட்டிருந்தது! முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு அந்தக்காலத்திலேயே
இங்கு நுழைவுத்தேர்வு முறை பின்பற்றப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அப்போதே நம்மவர்கள் எவ்வளவு உசாராக இருந்திருக்கிறார்கள் என்று! நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெரும்
மாணவர்கள் மட்டுமே இங்கு கல்வி பயில அனுமதிக்கப்பட்டார்கள்! நுழைவுத்தேர்வு எழுபவர்களில்
வெறும் பத்து சதவீதம் பேர்தான் தேர்ச்சி பெற்றார்கள் என்றால் நுழைவுத்தேர்வு
எப்படியிருந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்!
இங்கு கல்வி பயிலும்
மாணவர்களுக்கே இத்தனை கடுமையான சோதனைகள் வைக்கப்பட்டிருந்தால், இங்கு கல்வி
போதிக்க வரும் ஆசிரியர்களுக்கு எத்தனை கடுமையான சோதனைகள்
வைக்கப்பட்டிருந்திருக்கும்? தக்சசீலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களும் மிகவும் புகழ்பெற்றவர்களே! அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் சாணக்கியர் (Chanakya, 350 BCE – 275 BCE)! இவர் புகழ்பெற்ற இந்தியப்பேரரசுகளில் ஒன்றான
மெளரியப் பேரரசை (Maurya Empire, 322
BCE – 185 BCE) தோற்றுவித்தவர்
என்பதோடு மட்டுமல்லாமல் உலகின் மிகச்சிறந்த அரசியல் நீதி நூலான அர்த்தசாஸ்திரத்தை (Arthashastra) எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது!
ஒரு நாட்டை
ஆள்பவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், அந்த நாட்டிற்கான வருவாயை பெருக்கும்
வழிமுறைகள் என்னென்ன, அண்டை நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் போது கவனத்தில்
கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன, அண்டை நாடுகளை கைப்பற்றுவதற்கான போர்
தந்திர முறைகள், சட்டம், வெளியுறவுக் கொள்கைகள் போன்றவற்றை பற்றி உலகிலேயே முதன்
முதலாக தெளிவான விளக்கங்களோடு எழுதப்பட்ட தன்னிகரற்ற நூலாக அர்த்தசாஸ்திரம் கருதப்படுகிறது! நாடுகளுக்கிடையே
ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளப் வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி
இவர் வகுத்த கொள்கைகளில் பல இன்றளவும் உலகம் முழுவதிலும் நடைமுறையில் உள்ளது
என்றால் அர்த்தசாஸ்திரத்தின் மகத்துவம் எத்தகையது என்று நாம் உணர்ந்துகொள்ளலாம்!
இங்கு பேராசிரியராக
பணியாற்றியவர்களில் மற்றொரு புகழ் மிக்க பேராசிரியர்களில் ஒருவர் பாணினி (Panini, 600 BCE – 500 BCE approx) இவர் புகழ்பெற்ற சம்ஸ்கிருத இலக்கண நூலான அஸ்டாத்தியாயியை (Ashtadhyayi) எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது! இலக்கணத்திற்காக
எழுதப்பட்ட நூல்களில் உலகின் எந்த மூலையிலும் இதுவரை அஸ்டாத்தியாயிக்கு இணையாக ஒரு
நூலும் எழுதப்படவில்லை என்பது இந்த் நூலிற்கு இருக்கும் பெருமையாகும்! எட்டே எட்டு
அத்தியாயங்களை கொண்டுள்ள இந்த நூல் சமஸ்கிருதத்திற்கான இலக்கண விதிகளை மிகத்தெளிவாகவும்
மிகத்துல்லியமாகவும் விளக்குகிறது!
சொற்கள்
உருவாக்கத்தின் அடிப்படை விதிகளை விளக்கும் இந்நூல் எழுத்துக்களை எப்படி
பயன்படுத்துவது, பயன்படுத்தும் இடத்திற்கேற்ப சொல்லின் அர்த்தம் எப்படி
மாறுபடுகிறது என்பது பற்றியும் தெளிவாக விளக்குகிறது! சுருக்கமாக கூறவேண்டும்
என்றால் தமிழில் ல, ள, ழ என்ற எழுத்துக்களை பயன்படுத்தும் போது ஏற்படும் பொருள்
வித்தியாசத்தை உதாரணமாக கூறலாம்! இதைப்போல அஸ்டாத்தியாயி 3959 இலக்கண விதிகளை
உள்ளடக்கியிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! இந்நூலை முழுமையாக படிப்பது இப்போது
வரை மிகக்கடினமான பணியாகவே கருதப்படுகிறது! இந்நூலை கற்றுக்கொள்வதே கடினமான பணி
என்றால் இந்நூலை எழுதியவர் எத்தகைய அறிவுடையவராக இருந்திருக்கவேண்டும்!
தக்சசீலா
பல்கலைக்கழகத்தில் படித்து வெளிவந்த மாணவர்கள் எவரும் சோடைபோய்விடவில்லை! அனைத்து
மாணவர்களும் மிகவும் புகழ் பெற்றே விளங்கியிருக்கிறார்கள்! உதாரணத்திற்கு விஷ்ணு
ஷர்மா (Vishnu Sharma, 300 BCE)! மற்றும் ஜீவகா (Jivaka, 500 BCE)! ஆகிய இருவரை
எடுத்துக்கொள்வோம்! இதில் விஷ்ணு ஷர்மா விலங்குகளை கதாப்பாத்திரங்களாக
உருவகப்படுத்தி அரசியல் நீதிக்கதைகளை குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட பஞ்சதந்திரக் கதையை (Panchatantra) இயற்றிய ஆசிரியர் ஆவர்! இன்றளவும் இந்த நூல்தான் சிறுவர்களுக்கான நீதிக்கதைகளை எழுதுவதற்கு அடிப்படையாக காரணியாக இருக்கிறது என்றால்
மிகையில்லை!
மற்றொருவரான ஜீவகா
ஒரு மருத்துவர் ஆவர்! இவர் தான் உலகிலேயே முதன் முதலாக நாடித்துடிப்பைக் கொண்டு
ஒரு நோயாளியின் உடல் நிலையை சோதிக்க முடியும் என்று கூறியவர்! இவர் மகதநாட்டு (Magadha Empire, 684 BCE – 413 BCE) அரசரான பிம்பிசாரவின் (Bimbisara, 558 BCE – 491 BCE) அரண்மனை மருத்துவராக பணியாற்றியவர்
என்பது குறிப்பிடத்தக்கது! அதோடு கெளதம புத்தரின் (Gautama Buddha, 563 BCE – 483 BCE) தனிப்பட்ட (Personal Doctor) மருத்துவராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது!
ஒவ்வொரு மாணாவனின்
புரிந்துகொள்ளுதல் திறனுக்கு ஏற்ப 5 முதல் 8 ஆண்டுகள் வரை இங்கு
உயர்கல்வி போதிக்கப்பட்டது! இன்றுள்ளதைப் போல் ஆண்டுதோறும் தேர்வுமுறைகள் இங்கு கட்டாயம்
கிடையாது! ஒரு மாணவன் எப்போது தேர்ச்சியடைந்துவிட்டான் என்று அவனது ஆசிரியர்
பரிந்துரைகிறாரோ அப்போதே அந்த மாணவன் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற
அனுமதிக்கப்பட்டது! இன்றுள்ளத்தை போல் பட்டமளிப்பு விழா என்று எதுவும் கிடையாது!
இவர் தேறிவிட்டார் என்று உறுதிமொழி பத்திரம் ஏதும் வழங்கப்படவில்லை! மாணவர் பெற்ற
அறிவு ஒன்றே அவர் பெற்ற கல்விக்கான சான்று! இருந்தாலும் உலகம் முழுவதிலும் உள்ள மாணவர்கள்
இங்கு கல்வி பயில கடும் போட்டியிட்டனர் என்றால் மிகையில்லை! அதற்க்கு
காரணம் இங்கு பயிற்றுவிக்கப்பட்ட கல்வியின் தரம்! அன்று உலகையே திரும்பி பார்க்க வைத்த இதே இந்திய பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் இன்று எப்படி இருக்கிறது தெரியுமா நண்பர்களே! சர்வதேச தரமிக்க
பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இருநூறு இடங்களுக்குள் கூட ஒரு
இந்தியா பல்கலைக்கழகமும் இல்லை என்பதே! ஜீரணிக்கவே கடினமாக இருக்கிறதல்லவா! ஆனால் அது
தான் உண்மை! (Source: Topuniversities & Timeshighereducation)
மேலும் பல சுவையான
தகவல்களுடன் பாகம் இரண்டு உங்களுக்காக காத்திருக்கிறது நண்பர்களே., தொடர்ந்து
இணைப்பில் இருங்கள்! பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள்! உங்கள் கருத்துக்கள் என்னை திருத்திக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும்
உதவும்! விரைவில் மேலும் பல புதிய தகவல்களுடன் சந்திப்போம்.., நன்றி..,
வணக்கம்..!
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
கல்வியின் மூலம் பெற்ற அறிவை கொண்டு தான் எந்தவித மந்திர சக்தியின் உதவியும் இன்றி இப்புவியில் தனக்கு தேவையானவற்றை, தானே தயாரித்துக்கொள்ளும் வல்லமையை மனிதனால் பெற முடிந்தது!
ReplyDeleteஅருமையான சிந்தனைப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான தகவல்கள். அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்.
ReplyDeleteதெரியாத,அரிய, நாம் பெருமைபட்டுக் கொள்ளக்கூடிய தகவல்களை தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteநல்ல புதிய தகவகள்
ReplyDeleteஅறியத் தந்தமைக்கு மிக்க நன்றி தோழரே
பல வரலாற்று தகவல்கள்... அதுவும் விளக்கமாக...
ReplyDeleteபல அரிய விசயங்களை அறிய வைத்தமைக்கு நன்றி நண்பரே...
காத்திருக்கின்றேன் இரண்டாம் பாகம் படிப்பதற்கு... (த.ம. 5)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஉலகின் முதல் பல்கலைக்கழகம் இதுதான் என்பது தெரியும். ஆனால் நீங்கள் தொகுத்து வழங்கிய செய்திகள் பற்றி தெரியாது. இன்று தங்கள் பதிவு அதை நிவர்த்தி செய்யும்படி அமைந்தது. பல்கலைக்கழகம் பற்றியும், அதன் கட்டுப்பாடுகளைப்பற்றியும், அதன் திறமையான மாணவர்களைப்பற்றியும் மிக தெளிவாக அறியத்தந்தீர்கள். அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteஅறியவேண்டிய செய்திகள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜா சார்!
Deleteபுதிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஎன்றோ படிச்ச ஞாபகம்... மீண்டும் படிக்கம் போது உற்சாகமாக இருக்குங்க...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Delete(TM 7) same same
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
Deleteநல்ல பயனுள்ள பதிவு சகோ. சமிபத்திய செய்தி தாளில் பொறியியல் தேர்ச்சி பெற்று வெளி வந்த மாணவர்களை ஆய்வு செய்ததில் 30 சத மாணவர்கள்தான் தேர்ச்சிக்கு தகுதியானவர்கள்,மீதி பேர் படித்த பட்டத்தின் அடிப்படை கல்விக்கே தரமில்லாதவர்கள் என்று படித்த நியாபகம்..நம் கல்விதரம் இப்பிடியிருக்கு. இரண்டாவது பதிவை படிக்க ஆவலாயுள்ளேன்..
ReplyDeleteமனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறனை தான் நம் இன்றய கல்விமுறை வளர்த்துக்கொண்டிருக்கிறது என்ன செய்வது சகோ வருத்தமான விஷயம் தான்!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
நீங்க/நாம படிச்ச UNIVERSITY தான் உலகின் முதல்ன்னு நினைச்சேன்...நம்ம வயதை வைத்து...-:)
ReplyDeleteஹி ஹி ஹி...நீங்க ஒரு ஆள் போதும் போல இருக்கே...ஊர்ல ஒருபய எனக்கு பொண்ணு தராம பண்ணுறதுக்கு!
Deleteஆனா ஒன்னு...உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
நீங்க சொல்றது தப்பு...நமக்கு குடும்பம் தான் முதல் பல்கலைக்கழகம்...
ReplyDeleteவரலாற்றையே திருப்பி எழுதுவோம்ல..
கலக்குங்க தொடர்ந்து...
எழுதுங்க எஜமான் எழுதுங்க நல்லா எழுதுங்க! :)
Deleteவராலற்று பாடத்தில் படிச்சப்போ கஷ்டமா இருந்தது. வரலாற்று சுவடுகள் சொல்லும்போது ஈசியா புரியுது
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மோகன் சார்!
Deleteவிளக்கமான வரலாற்று கட்டுரை. வாசித்தேன்..வாக்கிட்டேன்..நன்றி..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதி ஐயா!
Deleteஇதுவரை அறியாத அரிய தகவலக்ளை
ReplyDeleteஅருமையான விரிவான பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteஇந்த தகவல்களை எல்லாம் எங்கிருந்து திரட்டுகிரீர்கள் என்பதை வெளியிட்டால் நலமாக இருக்கும் அருமையான பணி தொடருங்கள் அன்பரே
ReplyDeleteஹி ஹி தொழில் ரகசியம் வெளியிடுவதிற்கில்லை :D
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteதக்சசீலாவைப் பற்றிய அரிய செய்திகளை விரிவாக தந்து ஆர்வம் கொள்ளச் செய்தீர்கள்! இயல்பாகவே பண்டைய வரலாற்றில் எனக்குள்ள ஆர்வம் மேலும் தூண்டப்பட்டது உங்கள் படைப்பினால்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநேரம் கிடைக்கையில் இங்கு வரலாமே! http://thalirssb.blogspot.in/
நிச்சயம் ஓய்வு நேரத்தில் வருகை புரிவேன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteவிரிவான தகவல்கள் அடங்கிய பகிர்வு. அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் ஜீ!
Deleteவரலாற்றுச்சுவடுகளின் வரலாற்றுப்பதிவு...!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteதக்சசீலான்னு ஒரு வார்த்தையில படிச்ச விஷயத்தை, மேலும் விளக்கமாக தெரிய வைச்சுட்டீங்க சகோ. நல்ல விரிவான, விளக்கமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமறந்தும்...யாரும் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் இந்த விரிவான பதிவு சகோ! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Deleteபல்கலைகழகத்தை பற்றியும் கற்று தந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பற்றி விளக்கியது அருமை. நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு கூறியது அருமையிலும் அருமை. அடுத்த பகுதியை படிக்க ஆர்வமாய் உள்ளது. விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteமுடிந்த அளவு விரைவில் அடுத்த பாகத்தை தந்து விட முயற்சிக்கிறேன் சகோ! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Deleteஉங்கள் தேடல் எப்பவும்போல அற்புதமும் வித்தியாசமும்.வாசிக்க வாசிக்க அதிசயமாகவும் இருக்கு !
ReplyDeleteதகவல் எனக்கு புதுசு வரலாறு புதுசு - தெரிந்து கொண்டேன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல!
Deleteமிகவும் அரிய தகவல்கள் வாசிக்கும் போது மெலும் சுவாரஷ்யம் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை
ReplyDeleteநண்பா படிக்கும் பொழுதே புல்லரிகிறது. தக்ச ஷீலா பற்றி ஓரிரு வரிகளில் அறிந்திருந்த எனக்கு பாகம் ரெண்டும் காத்திருகிறது என்பது புல் மீல்ஸ் தான்... சாணக்கியர் நான் பெரிதும் விரும்பும் ஒருவர்... மீண்டும் மீண்டும் படித்து சிலாகிகிறேன், ஒரே ஒரு வருத்தம் அவ்விடம் இவ்விடம் இல்லையே என்பது தான்.
ReplyDeleteநேற்று வரை அவர்கள் நம் சகோதரர்கள், இன்று நம் பங்காளிகள்! சகோதரர்கள் பங்காளிகளாகிப்போய்விட்டால் உறவு இல்லையென்றாகிவிடுமா? புரிந்துகொண்டிருபீர்கள் என்று நம்புகிறேன்!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
நண்பா மிகவும் அறிய தகவல் தான், ஆனால் தற்போதோ என்ன நடக்கிறது பணதிற்கு தான் மரியாதையை என்ன செய்வது.......... தவறுகள் யாரிடம் இருக்கிறது என்ற தரியவில்லை .............
ReplyDeleteபகிர்தமைக்கு மிக நன்றி
வரியவன் என்பதற்காக ஒருவனுக்கு கல்வி மறுக்கப்பட்டது சோகம்தான் என்ன செய்வது எல்லாம் பணம் என்றாகிப்போன பிணங்கள் வாழும் நாட்டில்லாவா நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
முற்றிலும் புதிய தகவல். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteதங்கள் வலைப்பதிவு மிக அருமை
ReplyDeleteஎன்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஅரிய தகவல் சொந்தமே.பெயரிற்கு ஏற்றாற்போல் தங்கள் பகிர்வுகளும் அருமை.சந்திப்போம்.
ReplyDeleteஎப்போதும் வாக்களித்து என்னை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி!
ReplyDelete3ம் நூற்றாண்டைச் சேர்ந்த காந்தார கலை அம்சம் பொருந்திய புத்தர் சிலைகளே 2001 ல் ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டு தாலிபன்களால் அழிக்கப்பட்டது...
ReplyDeleteஉங்களது எதிர்பார்ப்பை அடுத்த பாகம் பூர்த்தி செய்யும் சற்று பொறுத்திருங்கள் :)
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
சின்ன வயதில் படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தன. ஆனாலும் பெஷாவர் பற்றிய தகவல் புதிது. அனைத்தும் மிகுந்த சுவாரஸ்யம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Delete68 comment epidiya unnala mattum..
ReplyDeleteNanraaga menakettu thagaval thirati eluthiya pathivu vaalthukal nanbaa..
Nee kalakku.. Unmayilae puthiya vidayangal..
என் மீது அன்பு கொண்ட நல்லுங்களின் ஆதரவுடன் தான் அனைத்தும் சாத்தியமாகிறது! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteமனுசன அடிக்கடி புல்லரிக்க வைப்பதே உங்கள் பொழப்பாபோச்சு.....
ReplyDeleteநம் முன்னோர்களது பெருமைகள் சாதனைகள் எல்லாம் வியப்பூட்டக் கூடியவையே! நம்மில் பலருக்கு (என்னையும் சேர்த்து) அவை நினைவில் இல்லை என்பதுதான் வருத்தமளிக்கும் விஷயம்! தொடர்ந்து உங்களை புல்லரிக்க வைக்க வரலாற்று தேடல்கள் தொடரும்:)
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
அருமையான வரலாற்று சான்று
ReplyDeleteவானம் கண்மூடியதால்
மேகம் இருட்டானதோ
மேகம் கைவிட்டதனால்
மழை நீர் நிலம் தொட்டதோ
பூமி அணைக்காததால்
வெள்ளம் நதி சென்றதோ
நதிகள் வளைவென்றதால் - அது
வழுக்கி கடல் சென்றதோ
கடலில் அலை செல்வதால் - என்
காதலும் அலைகின்றதோ
அலைகள் கரை தட்டுவதால் - நான்
கரையில் காத்து நிற்பதோ
கருத்துரையில் கவிதையா?
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
நாலந்தா பல்கலைகழகம் தெரியும்.தட்சசீலப் பல்கலைகழகம் இதுவரை அறியாதது அதைப் பற்றிய தகவல்கள் அருமை.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteதக்சசீலா பல்கலைக் கழகத்தைப்பற்றி நிறைய விசயங்கள் அறிந்து கொண்டேன்... 2700 என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.நல்ல சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Delete//ஒரு மாணவன் எப்போது தேர்ச்சியடைந்துவிட்டான் என்று அவனது ஆசிரியர் பரிந்துரைகிறாரோ அப்போதே அந்த மாணவன் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டது//
ReplyDeleteஇப்படியொரு கல்விமுறை இப்போது இருந்தால் நிச்சயமாக வளமான எதிர்காலத்தை உருவாக முடியும்.அருமையான பதிவு நண்பரே..
அப்போதுள்ள ஆட்கள் நேர்மையானவர்கள்! நேர்மையாக நடந்துகொண்டார்கள்! இப்போது பல ஸ்கூல்களே தங்கள் மாணவர்களை காப்பியடிக்க துணை நிற்கின்ற என்பதை மறந்துவிட வேண்டாம்! இப்போது இந்த முறை வந்தால் நிச்சயம் எதிர்விளைவுகள் தான் ஏற்படும்! ஒரே ஆண்டில் அனைத்து மாணவர்களும் இஞ்சினியர், மருத்துவர் என்ற பட்டயத்தோடு கல்வி நிறுவனங்களை விட்டு வெளிவந்துவிடுவார்கள்! அப்புறம் என்ன நடக்கும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்!
Deleteவிஷ்ணு வர்மாவை பெரும்பாலும் தெரிந்து வைத்திருப்பார்கள்.ஜீவகா பற்றிய தகவல் எனக்கு புதியது. தகவல்கள் படிக்கபடிக்க சுவராஸ்யம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விச்சு சார்!
Deleteநிறைய நாள் விடுப்பு காரணமாக சிறந்த பதிவை பார்க்க காலதாமதம் ஆகிவிட்டது பல்கலைக்கழகம் பற்றிய சிறப்பானதொரு அலசல் அருமை.
ReplyDeleteதங்களது வருகை எப்போதும் சிறப்பிர்க்குரியதே அது எப்போதாக இருந்தாலும்!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்
ReplyDelete“SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
அவரது விருது பட்டியலில் நானும் இடம் பெற்றது மறக்க முடியாத நிகழ்வுகளுள் ஒன்று! வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteதேவையான பதிவு நண்பா.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா!
Deleteம்ம்ம்... நான் நாளந்தா பல்கலைக்கழகம் தான் உலகின் மிகப் பழமையானது என்று நினைத்திருந்தேன். இங்கு தக்க்ஷசீலாவின் விரிவான வரலாற்றைப் பார்க்கையில் வியப்பு. அருமையான பயனுள்ள தகவல் தொகுப்பு. சூப்பர்.
ReplyDeleteநம்மில் நிறைய பேருக்கு தக்சசீலா பல்கலைக்கழகம் இருந்ததே தெரியவில்லை கணேஷ் சார் இது வருத்தத்திற்குரிய விஷயம்! எல்லோரும் அறிந்துகொள்ளவே இந்த தேடல்!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ் சார்!
தட்சசீலத்தைப் பற்றிய விரிவான கட்டுரை. பல அருமையான தகவல்களை உள்ளடக்கியிருந்தது!!
ReplyDeleteஅன்றே நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால், இன்றோ நாம் நுழைவுத் தேர்விற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறோம்!!
//ஒரு மாணவன் எப்போது தேர்ச்சியடைந்துவிட்டான் என்று அவனது ஆசிரியர் பரிந்துரைகிறாரோ அப்போதே அந்த மாணவன் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டது//
இதுவே நல்ல முறை. இன்றைய காலத்தில் மாணவனின் தேர்ச்சியை முடிவு செய்வது தேர்வுகள் தான். அதனால் தான் கல்விநிலை தரம் தாழ்கிறது!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Delete>>>
ஒரு மாணவன் எப்போது தேர்ச்சியடைந்துவிட்டான்......
<<<
இதே கருத்தை நண்பர் மணிமாறனும் மேலே தெரிவித்திருந்தார், அவருக்கு நான் பதிலளித்திருந்தேன், அந்த கருத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்று நினைக்கிறேன்!!!
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை!
Deleteகாந்தாரம், தட்சசீலம் என்றெல்லாம் எப்போதோ படித்த நினைவு வருகிறது. இவ்வளவு விவரங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. மிகவும் அற்புதமாய் தொகுத்தளிக்கும் தகவல்கள் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றி. இந்தியர்களின் பெருமையை இந்தியர்கள் நாமே மறந்துவிட்டோம். நினைவுகூரலுக்கு மீண்டும் நன்றி. தொடரட்டும் தங்கள் அரிய பங்களிப்புகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deletevery nice information...
ReplyDeletewonderful
ReplyDeleteஎன்ன சொல்ல "நன்றி நண்பரே! "
ReplyDeleteHi
ReplyDeleteஅருமை.மிக அருமை. நன்றி தோழா.
ReplyDeleteஅருமை
ReplyDelete