Monday 30 January 2012

மறைக்கப்பட்ட மாமேதைகள் அஷிஷுல் ஹக் மற்றும் கெம் சந்திர போஸ், இந்தியர்களே மிகத்துல்லியமான கைரேகை ஒப்பீட்டு முறையை உருவாக்கியவர்கள், கைரேகையின் வரலாறு, History of Fingerprints.


எல்லோருக்கும் வணக்கம், இதுவரை மண்ணில் பிறந்த எந்த மனிதனது கைரேகையும் இன்னொரு மனிதனின் கைரேகையை போல் இருந்ததில்லை என்றால் இப்பிரபஞ்சத்தை படைத்த இறைவன் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்று தானே கூற வேண்டும். ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியான அடையாளத்தோடு படைத்துக் கொண்டிருக்கும் அந்த படைப்பின் ரகசியம்., நம் கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. ஒரு மனிதனின் கைரேகை இன்னொரு மனிதனின் கைரேகையை போல் இருப்பதில்லை என்ற உண்மையை முதன் முதலில் தெரிந்து கொண்டவர்கள் யார் தெரியுமா நண்பர்களே.., மேதைகளோ விஞ்ஞானிகளோ அல்ல மண்பாண்டங்களை செய்து விற்கும் சாதாரண குயவர்கள் தான். 

1/30/2012 10:44:00 am by MARI The Great · 15

Saturday 21 January 2012

மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை; Superstition of the Worlds.


எல்லோருக்கும் வணக்கம், நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது. மூட நம்பிக்கைகளுக்கு உதாரணம் சொல்வதென்றால், இன்னார் முகத்தில் ராசி என்று நினைத்துக்கொண்டிருப்பது, காரை முதலில் இயக்கும் போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சம் பலத்தை வைத்து நசுக்குவது, புதிய வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று கோழி அல்லது ஆடுகளை பலிகொடுப்பது, இப்படி வரிசையாக மூட நம்பிக்கைகளுக்கு இன்று முழுவதும் உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.

1/21/2012 09:37:00 am by MARI The Great · 24

Wednesday 18 January 2012

லிப்ஸ்டிக் உருவான வரலாறு, லிப்ஸ்டிக் பிறந்த கதை; உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள் தான், history of lipstick, indians are the first man to produce lipstick


அனைவருக்கும் வணக்கம், மேலை நாட்டு நாகரீகம் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்தவர்களும், உலகிலேயே முதன் முதலில் தயாரித்து உபயோகித்தவர்களும் இந்தியர்கள் தான் என்று கூறினால் நம்புவீர்களா நண்பர்களே, ஆம் உண்மைதான், பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை தயாரித்து பயன்படுத்தியவர்கள் ஆவார். ஆச்சர்யமாக உள்ளதா வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். 

1/18/2012 10:40:00 am by MARI The Great · 2

Sunday 15 January 2012

உலகின் முதல் நூலகம், நூலகம் உருவான வரலாறு, நூலகம் பிறந்த கதை; The world's first library, history of library


அனைவருக்கும் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள், புத்தக பொக்கிஷம் என்று அழைக்கப்படும் நூலகங்கள் பற்றி முன்னுரை எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன் ஏனெனில் அதன் பயன்பாடுகளும் தேவைகளும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வரலாற்று தகவல் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் ஒரு தலைமுறை மக்களிடமிருந்து மற்றொரு தலைமுறை மக்களுக்கு சென்றடைவது நூலகங்களின் வாயிலாகத்தான் என்றால் மிகையில்லை.

1/15/2012 09:38:00 am by MARI The Great · 16

Thursday 12 January 2012

குங்குமபூவின் மருத்துவ குணங்களும் பயன்பாடுகளும்; குங்குமபூவை பாலில் கலந்து பருகி வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?, Clinical applications of saffron


அனைவருக்கும் வணக்கம், சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும், படித்தவர் படிக்காதவர் என்ற பேதமின்றி நம்பப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் பெண்கள் தங்களது கற்பகாலங்களில் காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை கலந்து தொடர்ந்து இரவு வேலையில் குடித்து வந்தால் பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதாகும்.

1/12/2012 11:58:00 am by MARI The Great · 4

Monday 9 January 2012

காகிதம் (பேப்பர்) பிறந்த கதை; காகிதம் உருவான வரலாறு, history of paper making.


எல்லோருக்கும் வணக்கம்,

எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த

1/09/2012 06:31:00 pm by MARI The Great · 11

Sunday 8 January 2012

பிள்ளையார் சுழி (முதல் பதிவு)


எல்லோருக்கும் வணக்கம்,

எனது எல்லா முயற்சிகளையும் வெற்றி பெறச் செய்யும் எம்பெருமான் விநாயகப் பெருமான், எனது இந்த செயலும் (வலைத்தளத்தில் எழுதுதல்) வெற்றியடைய என்னுடன் எப்போதும் துணை நிற்பார் என்ற நம்பிக்கையுடன் எனது எழுத்தை துவங்குகிறேன்.

1/08/2012 01:07:00 pm by MARI The Great · 5