Tuesday 19 June 2012

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சில அடிப்படை தகவல்கள், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-4); History of Surgery (Part-4), History of Organ Transplantation


அனைவருக்கும் வணக்கம், (கடந்த பதிவுகளில் பொது அறுவை சிகிச்சையின் வரலாறுகளை பற்றி விரிவாக அலசினோம் அல்லவா?, அந்த வகையில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Organ Transplantation) பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம் வாருங்கள், அறுவை சிகிச்சை வரலாறின் முந்தைய பாகங்களை வாசிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்து விட்டு இப்பதிவை தொடர வேண்டுகிறேன்) பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும், சாதாரண அறுவை சிகிச்சைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உதாரணத்திற்கு ஒரு சைக்கிள் ட்யூப்பை (Cycle Tube) எடுத்துக்கொள்வோம். ட்யூப் பஞ்சர் (Puncher) ஆனால் அதனை ஒட்டி சரி செய்வது சாதாரண அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொண்டால் அதே பஞ்சர் ஒட்டி சரி செய்ய இயலாத அளவிற்கு பெரிதாய் போய்விடும் போது அந்த ட்யூப்பையே கழட்டி தூர எறிந்துவிட்டு புதிதாக ட்யூப் மாற்றிக் கொள்ளுதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொள்ளலாம்.

6/19/2012 05:59:00 pm by MARI The Great · 105

Thursday 14 June 2012

மரணம் வென்ற அறுவை மருத்துவம் தந்த ஜோசப் லிஸ்டர், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-3); History of Surgery (Part-3)


அனைவருக்கும் வணக்கம், (அறுவை சிகிச்சை வரலாறின் மூன்றாம் பாகம் இது, முதல் இரெண்டு பாகங்களை படிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இணைப்புகளின் வழியே சென்று முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை படித்துவிட்டு இப்பாகத்தை தொடர வேண்டுகிறேன்). சுஸ்ருதா சம்ஹிதா நூலை அடிப்படையாக கொண்டு அபுல்காசிஸ் எழுதிய மருத்துவ நூலான கிதாப் அல் தாஸ்ரிப் (Kitab Al-Tasrif) கிட்டத்தட்ட பதினேழாம் நூற்றாண்டு வரை மருத்துவ உலகில் தவிர்க்க இயலாத முக்கிய இடத்தை பெற்றிருந்தது என்று சொன்னால் மிகையில்லை. குறிப்பாக இந்நூலின் லத்தீன் பதிப்பான “Concessio ei data qui componere haud valet” என்ற நூலின் வாயிலாகத்தான் ஐரோப்பிய கண்டத்தில் முதன் முதலாக போலக்னா பல்கலைகழகத்தில் (University of Bologna, Italy; Founded in 1088) அறுவை சிகிச்சை மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டது என்றால் அந்தக்காலத்தில் இந்நூல் எத்தனை முக்கியத்துவம் பெற்றதாக இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். 

6/14/2012 09:30:00 am by MARI The Great · 40

Thursday 7 June 2012

அபுல்காசிஸ் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை, அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 2); History of Surgery (Part-2)


அனைவருக்கும் வணக்கம்., (அறுவை சிகிச்சை வரலாற்றின் இரண்டாம் பாகம் இது, முதல் பாகத்தை படிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று படித்துவிட்டு இரண்டாம் பாகத்தை தொடர்ந்திட வேண்டுகிறேன்) இந்தியர்களை போலவே கிரேக்கர்களும் பண்டைய காலத்தில் இருந்தே பொது மருத்துவத்திலும், அறுவைச்சிகிச்சை மருத்துவத்திலும் குறிப்பிட்ட அளவு நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள் என்று  தான் கூற வேண்டும். மருத்துவதிற்கென்று சில விதிமுறைகளை உருவாக்கியவரான கிரேக்கத்தை (Ancient Greece) சேர்ந்த ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates, 460 BCE – 370 BCE) பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். பொது மருத்துவத்தின் தந்தை (Father of General Medicine) என்று அழைக்கப்படும் இவரே உலகில் முதன் முதலாக உடலியல் (Physiology), உடற்கூற்றியல் (Anatomy), மருந்தியல் (Pharmacology), நரம்பியல் (Neurology) ஆகியவற்றை பற்றி தெளிவான மேம்பட்ட கோட்பாட்டை உருவாக்கியவர் ஆவர். 

6/07/2012 09:49:00 am by MARI The Great · 40

Saturday 2 June 2012

சிந்தனைக்கு சில சீரிய சிந்தனைகள், best quotes on the Tamil calender


அனைவருக்கும் வணக்கம்,. வலைத்தளத்தில் பதிவு போட்டு நிறைய நாள் ஆகிருச்சே நம்மை எல்லோரும் மறந்திருப்பார்களே? நாளை நிச்சயம் ஏதாவது ஒரு பதிவு போட்டாத்தான் விளையாட்டில் நாமும் இருப்பது நிறைய பேருக்கு ஞாபகம் இருக்கும் என்ன செய்யலாம்.., ம்ஹும் என்ன பதிவு போடலாம் என்று நினைத்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்தபோது கண்ணில் பட்டது அறையில் இருந்த அந்த காலண்டர். அட அந்த காலண்டரில் தேதிக்கு கீழே தினமும் ஏதாவது ஒரு நல்ல கருத்து இருக்குமே அதை தொகுத்து ஒரு பதிவாக போட்டால் என்ன..? என்ற சிந்தனை என் மூளையில் உதித்தது, அந்த சிந்தனையை செயலாக்கியதே இந்த பதிவு, சரி இனி கருத்துகளுக்கு செல்வோமா ..?  

6/02/2012 08:28:00 am by MARI The Great · 44