Thursday 24 May 2012
உங்களுக்கு தெரியுமா அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்தியர் என்று?; அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 1); சுஸ்ருதா அறுவை சிகிச்சையின் தந்தை; History of Surgery (Part - 1)
அனைவருக்கும்
வணக்கம், மனிதனாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும்
சரி அவற்றின் உடலில் ஏற்படும் நோய்க்கான காரணத்தை அடையாளம் கண்டறிந்து மருந்துகள் (Medicines)
மற்றும் அறுவை சிகிச்சை (Surgery) மூலமாக
குணப்படுத்தும் கலையை நாம் மருத்துவம் என்கிறோம். மருத்துவத்துறையின் உயரிய
தொழில்நுட்பமாக கருதப்படும் அறுவை சிகிச்சை இன்று சர்வசாதாரணமாக உலகமெங்கும்
மேற்கொள்ளபட்டாலும் கூட கிட்டத்தட்ட 14000 (12000 BCE) ஆண்டுகளுக்கும்
மேலான தொடர்ச்சியான போராட்டத்தின் முடிவில் தான் மனிதனால் அறுவை சிகிச்சை
மருத்துவத்தில் இன்றைய இந்த வளர்ச்சியை எட்ட முடிந்தது. இப்படிப்பட்ட மகத்தான அறுவைச்
சிகிச்சை துறையின் தந்தை (Father of Surgery) என்று
அழைக்கப்படுபவர் ஒரு இந்தியர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே
..!
அந்த இந்தியரை
பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் அறுவை சிகிச்சையின் வரலாறை அதன் துவக்கத்தில்
இருந்தே தெரிந்துகொள்வது இன்றியமையாததாகிறது. மூளைக்குள் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்தின்
காரணமாகத்தான் ஒருவனின் மனநிலை பாதிக்கப்படுகிறது என்று நம்பிய ஆதிமனிதன் அந்த அழுத்தத்தை
குறைப்பதற்காக மண்டையோட்டில் கூர்மையான கற்களை பயன்படுத்தி வெட்டி வட்டமாக துளைகளை
ஏற்படுத்தியிருக்கிறான். டிரிபானிங் (Trepanning) என்று
அழைக்கப்படும் இந்த உலகின் முதல் அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட 14000 (12000 BCE) ஆண்டுகளுக்கு முன்பு
இருந்தே துவங்குகிறது என்கிறது வரலாறு. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மருத்துவர் மற்றும்
அகழ்வாராய்ச்சி நிபுணரான போல்க் ஹென்சன் (Folke Henschen,
1881 – 1977) என்பவரால் 1970 ஆம்
ஆண்டு ரஷ்யாவின் டினிபர் நதிக்கரையில் தோண்டியெடுக்கப்பட்ட (Digging) 14000 ஆண்டுகளுக்கு முந்தய மனிதனின் மண்டையோடு தான் இதுவரையில்
கண்டறியப்பட்ட உலகின் மிகப்பழமையான டிரிபானிங் செய்யப்பட்ட மண்டையோடு ஆகும்.
டிரிபானிங் செய்யப்பட்ட மண்டையோடுகள் ரஷ்யாவில் மட்டுமல்ல பிரான்ஸ் (France)
மற்றும் கிரீஸ் (Ancient Greek) ஆகிய
நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்விலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை
சிகிச்சையின் அடுத்தகட்ட வரலாறு இந்தியாவிலிருந்து துவங்குகிறது. பண்டைய இந்தியாவின்
சிந்து சமவெளிப்பகுதியின் ஒரு அங்கமாக இருந்த தற்போதைய பாகிஸ்தான் பஞ்சாப்பின் (Pakistan,
Punjab) வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள மெஹர் (Mehrgarh: Balochistan District,
Pakistan) என்ற இடத்தில் கிட்டத்தட்ட 9000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (7000 BCE)
வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த (Cavity) பற்களை
விசேசமாக தயாரிக்கப்பட்ட கூர்மையான கற்களை கொண்டு துளையிட்டு அறுவை சிகிச்சை
செய்து அகற்றியிருக்கிறார்கள். அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரியா கசினா (Professor
Andrea Cucina) தலைமையிலான தொல்லியல் ஆய்வாளர்கள் மெஹரிலுள்ள
சுடுகாட்டை (Graveyard) தோண்டியபோது (digging) கிடைத்த மண்டையோடுகளை பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தியபோது இந்த
உண்மை உலகிற்கு தெரியவந்தது.
அறுவை சிகிச்சை
மருத்துவத்தில் எகிப்தியர்களும் கிட்டத்தட்ட 5500 (3500 BCE) ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டு (1900
AD) வரை மருத்துவ உலகத்தால் விடையறிய முடியாத புதிராக
இருந்த மம்மிபிகேசன் (Mummification) இதற்க்கு ஒரு மிகச்சிறந்த
சான்று. ஆனால் மம்மிபிகேசன் உயிரற்ற உடல்களின் மீதுதான் மேற்கொள்ளப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது. உயிருள்ள மனிதனுக்கு சிகிச்சை அளித்த வகையில் எகிப்திய
வரலாற்றில் மிகச்சிறந்த முதல் மருத்துவராக இம்ஹாதோப் (Imhotep, 2650BCE –
2600BCE) அறியப்படுகிறார் அவர் உடலின் மேற்பரப்பில்
ஏற்பட்ட 30-க்கும் மேற்பட்ட காயங்களுக்கு
மருந்தளித்து சிகிச்சை செய்ததாக வரலாறு கூறுகிறது.
மேலும்
எகிப்தியர்கள் எலும்பு முறிவு அறுவை சிகிச்சையில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவம்
பெற்றிருந்தார்கள் என்பதை எபெர்ஸ் பாப்பிரஸ் (Ebers Papyrus, 1500 BCE) மற்றும் எட்வின் ஸ்மித் பாப்பிரஸ் (Edwin Smith Papyrus,
1500 BCE) ஆகிய
வரலாற்று ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. எகிப்த்தியர்களை போல மெசபடோமியர்களும் எலும்பு
முறிவு அறுவை சிகிச்சையில் சிறிது நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள் என்பதை
ஹமுராபிகோட்ஸ் (Code of Hammurabi, 1772 BCE; World’s first written
legislation) வாயிலாக அறியமுடிகிறது. பொதுவாக உலகம் முழுவதும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பண்டைய காலங்களிலிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது
என்பதை அவ்வப்போது கண்டறியப்படும் குகை ஓவியங்கள் (Cave Paintings) வாயிலாகவும் அறியமுடிகிறது.
உலகின் எந்த
மூலையிலும் கி.மு. எட்டாம் நூற்றாண்டு வரையில் (800 BCE) எலும்பு
முறிவு மற்றும் பல் அறுவை சிகிச்சை ஆகியவற்றை
தவிர வேறெந்த அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக நடந்ததாக வரலாறு இல்லை. அதுமட்டுமல்ல உயிரோடு இருக்கும் ஒரு மனிதனின்
உடலில், வேறு எந்த உறுப்புக்களின் மீது அறுவை சிகிச்சை
செய்யும் தைரியமும், தொழில்நுட்பமும் எவரும் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. இந்நிலையில்
மருந்துகளால் குணப்படுத்த முடியாத உடலின் பாதிப்படைந்த பகுதிகளை உயிரிழப்பை
ஏற்படுத்தாமல் அறுவை சிகிச்சை மூலம் எப்படி குணப்படுத்துவது, அதற்காக உடலில் கீறல்களை
(Incisions) எப்படி உண்டாக்கி செப்பனிட்டு பின்பு
கிழித்த உடலை மீண்டும் எப்படி தைப்பது என்பதை உலகிற்க்கே முதன் முதலாக தெளிவான
வழிகாட்டுதலுடன் விளக்கிக்கூறி., செய்தும் காட்டியவர் சுஸ்ருதா (Sushruta,
800 BCE) என்ற இந்திய ஆயுர்வேத மருத்துவர் (Ayurveda,
traditional Indian medicine) என்றால் ஆச்சிரியப்படுவீர்கள் தானே,
அதுமட்டுமல்ல அவர் கிட்டத்தட்ட 300-க்கும்
மேற்பட்ட அருவைசிகிச்சை செய்வதற்கான வழிமுறைகள் பற்றி மிகத்துல்லியமாக கி.மு.
எட்டாம் நூற்றாண்டிலேயே (800 BCE) கூறியிருக்கிறார்
என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே, ..?
தற்போதைய
உத்திரப்பிரதேச மாநிலம் (Utter Pradesh) வாரனாசி (Varanasi)
மாவட்டத்திலுள்ள பனாரஸ் (Banaras) என்ற
இடத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயுர்வேத மருத்துவரான சுஸ்ருதா உலகிலேயே
முதன் முதலாக மனித உடலில் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை பற்றிய ஒரு தெளிவான
கோட்பாட்டை உருவாக்கியவர் ஆவர். மேலும் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும்
பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை கருவிகள் எத்தகைய வடிவத்தில் இருக்க வேண்டும் என்கின்ற
தெளிவான அடையாளத்தை முதன் முதலாக எற்படுத்தியவரும் சுஸ்ருதாதான். விலங்குகளின்
எலும்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட 120 க்கும்
மேற்பட்ட அறுவைசிகிச்சை கருவிகளை பயன்படுத்தி கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை கி.மு எண்ணூறுகளிலேயே (800
BCE) வெற்றிகரமாக செய்து காட்டியிருக்கிறார் என்றால் அவரது
மருத்துவதிறன் எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.
கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை பயன்படுத்தி 1120-க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தியவர் சுஸ்ருதா. அவர் வாழ்ந்த
காலத்தில் குற்றசெயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனையாக மூக்கை அறுக்கும் தண்டனை
வழக்கத்தில் இருந்தது. அப்படி மூக்கு அறுக்கப்பட்டவர்கள் தன்னிடம்
மருத்துவத்திற்காக வந்தபோது உடலின் வேறொரு பகுதியிலிருந்து சதையை அறுத்தெடுத்து
மூக்கின் மீது ஓட்டி மீண்டும் மூக்கை புணரமைத்தார். ரினோபிளாஸ்டி (Rhinoplasty) என்று அழைக்கப்பட்ட இந்தவகை சிகிச்சை தான் பிற்காலத்தில் பிளாஸ்டிக்
சர்ஜரியாக (Plastic Surgery) உருமாற்றம் பெற்றது
என்பது குறிப்பிடத்தக்கது. அட அவ்வளவு ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி புதிய பரிணாமத்தை
எட்ட முக்கிய காரணமாக இருந்த இத்தாலியைச் சேர்ந்த காஸ்பரோ டக்லியாகோஸி (Gasparo
Tagliacozzi, 1546 – 1599) சுஸ்ருதா சம்ஹிதா நூலின் வாயிலாகத்தான்
பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி கற்றுக்கொண்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
கண்புரை அறுவை
சிகிச்சை (Cataract Surgery), மகப்பேறு அறுவை
சிகிச்சை (Cesarean), குடலிறக்க அறுவை சிகிச்சை (Hernia
Surgery), காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை (Ear,
Nose, Throat; known as ENT surgery), விரை வீக்க நோய் சிகிச்சை (Hydrocele), மூலநோய் சிகிச்சை (Hemorrhoids) போன்ற
சிக்கலான அறுவை சிகிச்சைகளை கூட மிக சாதாரணமாக செய்த சுஸ்ருதா பெற்றிருந்த
மருத்துவ அறிவை பற்றி எழுத பத்து பதிவுகள் கூட போதாது. தற்போது அருவைசிச்சையின்
போது ஏற்படும் வலியை நோயாளிகள் உணராமல் இருக்க மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கப்படுகிறதல்லவா அதுபோல சுஸ்ருதா தானே தயாரித்த மதுவுடன்
கன்னாபிஸ் (Cannabis) என்ற ஒருவகை போதை செடியை கலந்து
நோயாளிகளுக்கு கொடுத்து பின்பே அருவைசிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார். இன்று நாம்
அருவை சிகிச்சை மேற்கொள்ள பயன்படுத்தும் பல்வேறு கருவிகள் சுஸ்ருதா பயன்படுத்திய அறுவை
சிகிச்சை கருவிகளை அடிப்படையாக கொண்டு தயரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை
சிகிச்சைக்கு பிறகும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடங்களில் செப்டிக் (Septic)
ஆகாமல் தடுப்பது இன்றியமையாதது என்பதை உணர்ந்த சுஸ்ருதா அதற்காக
பல்வேறு ரசாயனங்களையும் பயன்படுத்தியிருக்கிறார், அதோடு விஷமுறிவு சிகிச்சைகள்,
உளவியல் நோய்கள், பாலுறவு உறுப்பு நோய்கள், சில நரம்பியல் சிகிச்சைகள், குழந்தை
கர்ப்பபையில் இருக்கும் போது பல்வேறு கால கட்டங்களில் அக்குழந்தையின் வளர்ச்சி
நிலைகள் போன்றவை பற்றியும் விளக்கிய சுஸ்ருதா தான் பெற்ற மருத்துவ அறிவை தன்னோடு
புதைத்து விட விரும்பாமல் உலகிக்கும் தெரியபடுத்த வேண்டும் என்று கருதி சுஸ்ருதா
சம்ஹிதா (Sushruta Samhita, 800 BCE) என்ற நூலை
எழுதினார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட உலகின் முதல் தலைசிறந்த மருத்துவ நூல்
என்று அழைக்கப்படும் இந்த நூல்
உடலை எவ்வாறு பரிசோதிப்பது, நோயை அடையாளம் கண்டறிவது, நோய்க்கான காரணிகள் என்ன? மற்றும்
அதற்க்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது போன்ற முழுமையான தகவலை கொண்டிருந்ததோடு
மட்டுமில்லாமல் அறுவை சிகிச்சை மருத்துவத்தின் பல்வேறு உயரிய தொழில்நுட்ப தகவல்களையும்
உள்ளடக்கியிருந்தது. இந்த நூலை முழுமையாக படிப்பவர் உலகில் மிகச்சிறந்த அறுவை
சிகிச்சை நிபுணராகும் தகுதியை எட்டிவிடுவார் என்று இங்கிலாந்தை சேர்ந்த “தி
ஜென்டில்மேன் மேகசின்” (The Gentleman Magazine, 1731 – 1922)
என்ற பத்திரிகை 1974 ஆம் ஆண்டு வெளியிட்ட கட்டுரை ஒன்றில்
கூறியிருக்கிறது என்றால் இந்த நூலின் மகத்துவம் எப்படிப்பட்டது என்பதை நாம்
உணர்ந்துகொள்ளலாம்.
சுருக்கமாக
சொல்வதானால் சுஸ்ருதா வாழ்ந்த காலத்தில் உலகின் எந்த மூலையிலும் அவருக்கு இணையாக மருத்துவ அறிவு
பெற்றிருந்தவர்கள் அப்போது இல்லை. எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத இருள் சூழ்ந்த
அன்றைய உலகில் சிக்கலான அறுவை சிகிச்சைகளையெல்லாம் மிக சர்வசாதாரணமாக மேற்கொண்ட இவரை மருத்துவ உலகம் அறுவை சிகிச்சையின் தந்தை (Father of Surgery) என்று அழைப்பதில் வியப்பில்லை. லட்சக்கணக்கான தமிழ் பதிவர்கள் இருந்தும் இத்தனை பெருமை வாய்ந்த இந்தியரை பற்றி இதுவரை தமிழில் ஒரு பதிவுகள் கூட இல்லாதது ஆச்சிரியமளிக்கக்கூடியதோடு மட்டுமல்ல வருத்தமளிக்ககூடியதுமே. அறுவை சிகிச்சை
வரலாறு பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய அறுவை சிகிச்சை வரலாறு
(பாகம்-2) உங்களுக்காக காத்திருக்கிறது, தொடர்ந்து என்னோடு
இணைந்திருங்கள். பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்ய
மறக்க வேண்டாம், விரைவில் மீண்டும்
சந்திப்போம்.., வணக்கம் ..!
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
பிளந்த வாய் மூடாமல் படித்து முடித்தேன். இன்னும் வியப்புமேலீட்டால் என்ன எழுதுவதென்று தெரியாமல் விழிக்கிறேன். எத்தனை அற்புதமான தகவல் திரட்டு.அறுவை சிகிச்சை மருத்துவத்தில் நம் மூதாதையரே முன்னோடி என்பதை இப்போதுதான் அறிகிறேன். நுட்பமான ஆயுதங்கள் இன்னொரு வியப்புக் கூட்டல். பகிர்வுக்கு மிகவும் நன்றி விச்சு.
ReplyDeletecannabis என்பது கஞ்சாதானே?
ஆம் சகோ cannabis என்பது கஞ்சாதான்.,
Deleteவருகைக்கும் உற்சாகமான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ
அனைத்துத் துறைகள் பற்றிய வரலாறுகளை
ReplyDeleteமிகத் தெளிவாகத் தகவல்களைத் தரும் தங்களை
பல்துறை வரலாற்றுப் பதிவர் என்று பாராட்டு
கிறேன்! வளர்க! உங்கள் தொண்டு! வாழ்க!
நீண்ட காலம்!
சா இராமாநுசம்
மன்னிக்கவேண்டும். விச்சுவின் வலைத்தளத்தில் படித்ததாய் நினைத்து அவருடைய பெயரைக் குறிப்பிட்டுவிட்டேன்.
ReplyDeleteபகிர்வுக்கு மிகவும் நன்றி வரலாற்று சுவடுகள்.
சுஸ்ருதா தங்க ஊசியை பழுக்க காய்ச்சி கண்ணின் புரையை நீக்கியதாக படித்திருக்கிறேன்....முதல் கண் புரை சிகிச்சை செய்தவர் ஒரு இந்தியர் என்பதும் பெருமை நல்ல கட்டுரை!
ReplyDeleteஅவரைப்பற்றி நிறைய ஆங்கிலத்தில் படித்துள்ளேன்...உலக வரலாற்றிலேயே தமிழில் இவ்வளவு தகவல் இன்று தான் நண்பரே...தொடருங்கள் யாகத்தை..
ReplyDeleteஅட அறுவை சிகிச்சையின் தந்தை இந்தியரா புது தகவல் நன்றி
ReplyDeleteஇதுவரை அறியாத பல புது தவல்கள் நன்றி நண்பா
ReplyDeleteஎளிய தமிழில் அருமையான கட்டுரை. படிக்க படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteதெரியாததை தெரிந்து கொண்டேன் தெரிவித்த நண்பனுக்கு நன்றி
ReplyDeleteநல்ல பகிர்வு. தமிழுலகம் அறியாமையில் சிக்கித் தவிப்பது வருத்ததிற்கு உடையது.
ReplyDeleteநன்றி.
மத்தியானமும் வந்து வாசித்தேன்.இப்போதும் முழுமையாக வாசித்துவிட்டே பின்னூட்டம் தருகிறேன்.எத்தனை அதிசயமான தகவல்கள்.உங்கள் தேடலுக்குத்தான் என் பாராட்டுக்கள்.உங்கள் நேரத்தைப் பிரயோசனமாக்கி எங்களுக்கும் தருகிறீர்கள்.நன்றி !
ReplyDeleteஅறியாத தகவல்கள் நண்பரே பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஆச்சர்யப் படவைக்கும் தகவல்கள் சகோ. அறுவை சிகிச்சை பற்றி அறுவையின்றி அருமையாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளை நூலாக வெளியிட முயற்சி செய்யுங்கள். (அப்படி நூலாக வெளி வந்தால் எம்பேரை கட்டாயம் குறிப்பிடனம்.ஆமாம் சொல்லிட்டேன்.ஹி,ஹி.)
ReplyDeleteஇறைவன் அருளால் அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் உங்கள் பெயரை குறிப்பிடுவது என்ன நண்பா, உங்கள் தலைமையில் தான் நூலை வெளியிடுகிறோம்., ஆனால் நிகழ்ச்சி வருவதற்கு சினிமா நடிகர்கள் மாதிரி பணம் கேட்கக்கூடாது ஆமா சொல்லிப்புட்டேன் ஹி ஹி ஹி ..!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
உண்மையிலே அருமையான நாம் பெருமைப்படக்கூடிய பதிவு.உங்கள் எழுத்து நடையும் சுவாரஸ்யமாக இருக்கு.
ReplyDeletevery Thanks for your Hard work
ReplyDeleteஇதுபோன்ற வாழ்த்துக்கள் உழைப்பிற்கு அளிக்கப்படும் ஊன்றுகோள்கள், மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் ..!
DeleteVery good article. thanks
ReplyDeletenagu
www.tngovernmentjobs.in
மிக அருமையான ஆக்கம் சகோ மிக்க நன்றிகள்
ReplyDeleteஅறிய தகவல்களை அருமையாய் பகிர்ந்த விதம் அருமை .
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..!
DeleteThanks many for your great information and i appreciate your effort. All your articles are excellent...
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும் ..!
DeleteSusruta is a muslim. Allah taught him everything. Mohammad was best friend of Susruta.
ReplyDeleteஏற்கனவே நாட்டில் இருக்கும் சர்ச்சைகள் போதாதா சகோதரா.,
Deleteஒவ்வொரு சாதனையாளர்களையும் மதம் என்ற குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வந்ததால் தான் நாம் நம்முடைய பெருமைகளையே வேறொரு நாட்டுக்காரன் கூறி தெரிந்துகொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.
சாதனையாளர்கள் எல்லைகள் தாண்டி விண்ணில் பறந்து, வானில் நட்சத்திரமாய் ஜொலிக்க வேண்டியவர்கள்., அவர்களை மதம் என்ற குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வந்து நம் வீடு இருக்கும் தெருவுக்குள்லேயே அடைத்து வைக்க வேண்டாம் ..!
புரிதலுக்கு நன்றி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..!
இதுவரை அறியாத தக்வலை
ReplyDeleteஅனைவரும் அறிந்திருக்கவேண்டிய
அருமையான தகவலை
அருமையான விரிவான
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
Tha.ma 11
ReplyDeleteவாருங்கள் ஐயா, தங்களது வருகை என்னை உற்சாகப்படுத்துகிறது, கருத்துக்கு மிக்க நன்றி தமிழ்மண ஓட்டுக்கும் தான் ... :)
Deleteதொடரட்டும் தகவல்கள்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
Deleteவியக்கவைக்கும் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..!
Deleteஎனக்கும் வரலாற்று சுடுகளை மீட்டி பார்த்தல் றொம்ப பிடிக்கும்.. யாவரும் அறிய வேண்டிய வரலாறுதான்... அருமையான பதிவு அண்ணா
ReplyDeleteதங்களின் பெயர் கூறமுயுமா???
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
Deleteமிகவும் அருமையான பதிவு. இது போன்றே சிறந்த பதிவுகள் தர வேண்டும் நண்பரே.
ReplyDeleteமிக்க நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும் ..!
Deleteநல்ல தகவல்.. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா .!
Deleteஒரு ஆராய்ச்சிக் கட்டுரை போல்,அறுவை சிகிச்சையை முழுவதுமாக அறுத்துப் பார்வைக்கு வைத்துள்ளீர்கள்.நன்று.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா ..!
Deleteஅன்பரே உங்களுக்கு ஒரு பரிசு தர விழைகிறேன் பார்க்க உங்கள் தளத்தை இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா ?
ReplyDeleteஆனந்த அதிர்ச்சி .. :)
Deleteசிறந்த கருத்தாளர் விருது வாங்கிடிங்க கலக்குற மச்சி
ReplyDeleteதொடர்ந்து கலக்க தங்கள் அனைவரது ஆதரவும் தேவை நண்பா :)
Deleteசகோ அற்புதமான பகிர்வு. ஓ இதனால்தான், இங்கேயும் மூன்று இனங்கள் இருப்பினும், மருத்துவம் என்றால் இந்தியர்களைத்தான் எல்லோரும் நாடுவார்கள். சூட்சமம் இதுதானே. தொடருங்கள்... வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
Deleteஅழகான, எனக்கு மிகவும் பயன்படும் கட்டுரை. சுஸ்ருதாவும் பிளாஸ்டிக் சர்ஜரியும் என்னும் தலைப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் ஒரு கட்டுரை எழுதி வைத்தேன். தொலைத்து விட்டேன். மீண்டும் எழுத சோம்பேறித்தனமாக இருந்தது.
ReplyDeleteபயனுள்ள கட்டுரைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
arumai
ReplyDeleteமிக்க நன்றி நண்பா!
Deleteஎன்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_3.html) சென்று பார்க்கவும். நன்றி !
அருமை
ReplyDeleteமீண்டும் தங்கள் பதிவு எப்பொமுது கிடைக்கும்
ReplyDeleteதங்களின் அன்பிற்கு மிக்க நன்றி சார்., மிக விரைவில் எழுத்துலகிற்கு திரும்பபோகிறேன் :-)
Delete