Tuesday 28 February 2012

தோல்விகளால் துவண்டு போயிருக்கிறீர்களா உங்களுக்காக இதோ சில உற்சாக டானிக் வரிகள்; Best Quotes

எல்லோருக்கம் வணக்கம், சில தினங்களுக்கு முன்பு பின்னிரவு வேலையில் தூக்கம் வராமல் புத்தகம் ஒன்றை புரட்டிக்கொண்டிருந்த போது அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்த சில நல்ல கருத்துக்கள் என்னை கவர்ந்தது, தோல்விகளால் துவண்டு கவலைகளில் ஆழ்ந்திருக்கும் நம்மில் பலருக்கு அந்தக் கருத்துக்கள் உற்சாக டானிக் வரிகளாய் அமையும் என்ற எனது நம்பிக்கையின் காரணமாக அந்த கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன். கருத்துகளுக்கு செல்வோம் வாருங்கள். 

2/28/2012 09:21:00 am by MARI The Great · 42

Saturday 25 February 2012

சைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு, History of Bicycle


எல்லோருக்கும் வணக்கம், உலகம் முழுவதிலும் உள்ள கிராமபுறங்களில் வாழும் மனிதர்களுக்கு இன்றளவும் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருப்பது மிதிவண்டி (Cycle) என்று சொன்னால் மிகையில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்த இந்த சைக்கிளை கண்டுபித்தவர்கள் பட்டறையில் உலோகங்களை உருக்கி காய்ச்சி அடிக்கும் சாதாரண கொல்லர்கள் (Blacksmith). என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம். 

2/25/2012 10:42:00 am by MARI The Great · 24

Saturday 18 February 2012

உலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு, உலக அதிசயங்களின் பட்டியல் பிறந்த கதை, History of World Seven Wonders


எல்லோருக்கும் வணக்கம், உலக அதிசயங்கள் எவை எவை என்பது பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு உலக அதிசயங்களை முதன் முதலில் பட்டியளிட்டவர் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. கிரேக்க நாட்டை (தற்போதைய கிரீஸ்) சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தான் உலகில் முதன் முதலில் உலக அதிசயங்கள் பட்டியளிட்டவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் இது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்...,! 

2/18/2012 11:13:00 am by MARI The Great · 22

Monday 13 February 2012

ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்? விலங்குகளால் மனிதர்களைப்போல் பேச முடிவதில்லையே ஏன்? How do we speak?


எல்லோருக்கும் வணக்கம், இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே நண்பர்களேஉதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100% பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை. 

2/13/2012 12:06:00 pm by MARI The Great · 7

Thursday 9 February 2012

சோப்பு உருவான வரலாறு, உலகின் முதல் சோப்பு கம்பெனி பியர்ஸ் (Pears), சோப்பு பிறந்த கதை; History of Soap Making, Pears the World first Soap Company


எல்லோருக்கும் வணக்கம், இன்றைய நவீன காலகட்டங்களில் சோப்பை பயன்படுத்தாமல் குளிப்பது நூறு சதவீத முழுமையான குளியலாக இருக்காது என்பதில் எவர்க்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளைக் குளிப்பாட்ட கூட இன்று நாம் சோப்பை பயன்படுத்துகிறோம் ஆனால் சென்ற தலைமுறை மக்களின் குளியலறையில் சோப்பு இந்த அளவிற்கு முக்கிய இடத்தை பெற்றிருந்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். 

2/09/2012 10:24:00 am by MARI The Great · 10

Friday 3 February 2012

தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும், பெரும்பாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லையே ஏன்? How belly is formed?

எல்லோருக்கும் வணக்கம்மனிதர்களின் உருவ அழகையும்உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள்

2/03/2012 04:28:00 pm by MARI The Great · 48