Thursday 24 May 2012
உங்களுக்கு தெரியுமா அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்தியர் என்று?; அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 1); சுஸ்ருதா அறுவை சிகிச்சையின் தந்தை; History of Surgery (Part - 1)
அனைவருக்கும்
வணக்கம், மனிதனாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும்
சரி அவற்றின் உடலில் ஏற்படும் நோய்க்கான காரணத்தை அடையாளம் கண்டறிந்து மருந்துகள் (Medicines)
மற்றும் அறுவை சிகிச்சை (Surgery) மூலமாக
குணப்படுத்தும் கலையை நாம் மருத்துவம் என்கிறோம். மருத்துவத்துறையின் உயரிய
தொழில்நுட்பமாக கருதப்படும் அறுவை சிகிச்சை இன்று சர்வசாதாரணமாக உலகமெங்கும்
மேற்கொள்ளபட்டாலும் கூட கிட்டத்தட்ட 14000 (12000 BCE) ஆண்டுகளுக்கும்
மேலான தொடர்ச்சியான போராட்டத்தின் முடிவில் தான் மனிதனால் அறுவை சிகிச்சை
மருத்துவத்தில் இன்றைய இந்த வளர்ச்சியை எட்ட முடிந்தது. இப்படிப்பட்ட மகத்தான அறுவைச்
சிகிச்சை துறையின் தந்தை (Father of Surgery) என்று
அழைக்கப்படுபவர் ஒரு இந்தியர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே
..!
5/24/2012 12:12:00 pm by MARI The Great · 54
Tuesday 15 May 2012
ராக்கெட் உருவான வரலாறு (பாகம் - 2), வெர்னர் வான் பிரவுன் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ராக்கெட் விஞ்ஞானி; History of Rocket (Part-2)
அனைவருக்கும் வணக்கம், வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 1799 ஆம் ஆண்டு ஸ்ரீ ரெங்கப்பட்டினத்தில் (Srirangapatna,
Karnataka)
நடந்த நான்காவது ஆங்கிலோ – மைசூர் யுத்தத்தில் (Forth Anglo – Mysore War, 1798 – 1799) திப்பு சுல்தான்
வீழ்த்தப்பட்டதும் அவரது அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயப்படைகள் அங்கு எரிந்த
மற்றும் எரியாத ராக்கெட்டுகள் என்று எதையும் விட்டுவைக்காமல் ஒட்டு மொத்தமாக 9700 - க்கும் மேற்பட்ட
ராக்கெட்டுகளை கைப்பற்றியது. திப்புவின் அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ஓரியண்டல்
லைப்ரரி (Oriental
Library)
என்ற நூலகத்தையும் விட்டுவைக்காத ஆங்கிலப்படைகள் அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும்
மேற்பட்ட நூல்கள் மற்றும் ராக்கெட் தயாரிப்பு சம்மந்தமான ஆய்வுக்குறிப்புகள்
மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு நூல்கள் ஆகியவற்றை
ஒன்றுவிடாமல் அள்ளிச் சென்றது.
5/15/2012 10:40:00 am by MARI The Great · 55
Saturday 12 May 2012
25 - ஆவது பதிவு, டாப் டென் பை ஹிட்ஸ்; Top Ten by Hits
எல்லோருக்கும் வணக்கம், புதிதாய் பிறந்த நான் ஒருவழியாக உருண்டு பிரண்டு உட்கார்ந்து பின் தரையை தேய்த்து தவழ்ந்து, சுவற்றின் உதவியுடன் நின்று தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடக்கவும் ஆரம்பித்து விட்டேன், ஆம் இது என்னுடைய 25 – ஆவது பதிவு. தற்போது மீண்டும் ஒருமுறை எனது முதல் பதிவையும் கடந்த இருபத்தி நான்காவது பதிவையும் வாசித்துப்பார்க்கிறேன், எனது எழுத்து நடையில் கொஞ்சம் முன்னேற்றம் எற்பட்டிருப்பது (?) புரிகிறது.
5/12/2012 09:22:00 am by MARI The Great · 40
Wednesday 9 May 2012
ராக்கெட் உருவான வரலாறு (பாகம்-1), திப்புசுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட்டை வடிவமைத்த விஞ்ஞானி; History of Rocket
அனைவருக்கும் வணக்கம், நம்மால் இன்று நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் கைதொலைபேசியின் வாயிலாக பேசிவிட முடிகிறது என்றால் அது செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்த செயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் (Outer Space) நிலைநிறுத்துவதில் ராக்கெட்டுகளின் (Rocket) பங்கு அளவிடற்கரியது. அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம் புதிய சகாப்தத்தை அடைய ராக்கெட் தொழில்நுட்ப (Rocket Technology) கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை.
5/09/2012 10:06:00 am by MARI The Great · 40
Subscribe to:
Posts (Atom)