Tuesday 24 July 2012

உங்களுக்கு தெரியுமா உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள் இந்தியர்கள் என்று?; தக்சசீலா உலகின் முதல் பல்கலைக்கழகம்; Thakshasila World First University


அனைவருக்கும் வணக்கம்.., ஒரு மனிதனுக்கு தேவையான ஒழுக்கம், அறிவு ஆகியவற்றை கொடுப்பதுதான் கல்வி! அந்த கல்வியின் மூலம் பெற்ற அறிவை கொண்டே எந்தவித மந்திர சக்தியின் உதவியும் இன்றி இப்புவியில் தனக்கு தேவையானவற்றை, தானே தயாரித்துக்கொள்ளும் வல்லமையை மனிதனால் பெற முடிந்தது! அந்த வல்லமையை அவன் கற்கும் அடிப்படை கல்வியிடமிருந்து ஒருவனால் பெற்றிட முடியாது., அதையும் தாண்டி கற்கும் உயர் கல்வியிடமிருந்து மட்டுமே அவனால் பெற இயலும்! அத்தகைய உயர் கல்வியை உலககெங்கும் உள்ள மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருப்பவை தான் பல்கலைக்கழகங்கள்! இத்தகைய சிறப்பு மிக்க பல்கலைக்கழகங்கள் என்ற அமைப்பை உலகில் முதன் முதலில் நிறுவியவர்கள் இந்தியர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே! 

7/24/2012 12:28:00 pm by MARI The Great · 95

Thursday 19 July 2012

மை நேம் இஸ் சிட்டி..ஸ்பீடு ஒன் டெரா பைட்ஸ்..மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்; My name is City speed one terabytes memory one zettabytes


அனைவருக்கும் வணக்கம்.., தலைப்பை பார்த்து எந்திரன் சினிமா விமர்சனம் - என்று நம்பி வந்திருக்கும் சினிமா பிரியர்களுக்கு பதிவின் ஆரம்பத்திலேயே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்., சர்வ நிச்சயமாய் இது சினிமா விமர்சன பதிவு இல்லை.! நீங்கள் நினைக்கும் எந்த விஷயமும் இந்த பதிவில் இருக்கப் போவதில்லை.! ஆகையால் இப்போதே இந்தப் பக்கத்தை மூடிவிட்டு வேறு ஏதாவது நல்ல (!) தளங்களுக்கு ஓடிவிடுவது உத்தமம்J..! இதற்க்கு பிறகும்.., நீங்கள் இந்த பதிவை வாசித்து விடுவது என்ற திடமான மனதுடன் இருந்தால் உங்களுக்கு நிகழவிருக்கும் துயரத்திற்கு என்னால் பொறுப்பேற்க முடியாதுJ.! 

7/19/2012 11:45:00 am by MARI The Great · 75