Thursday 7 June 2012
அபுல்காசிஸ் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை, அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 2); History of Surgery (Part-2)
அனைவருக்கும் வணக்கம்., (அறுவை சிகிச்சை வரலாற்றின் இரண்டாம் பாகம் இது, முதல் பாகத்தை படிக்க
தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று படித்துவிட்டு இரண்டாம் பாகத்தை
தொடர்ந்திட வேண்டுகிறேன்) இந்தியர்களை போலவே கிரேக்கர்களும் பண்டைய காலத்தில்
இருந்தே பொது மருத்துவத்திலும், அறுவைச்சிகிச்சை மருத்துவத்திலும் குறிப்பிட்ட
அளவு நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள் என்று
தான் கூற வேண்டும். மருத்துவதிற்கென்று சில விதிமுறைகளை உருவாக்கியவரான கிரேக்கத்தை (Ancient Greece) சேர்ந்த ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates, 460 BCE – 370 BCE) பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று
நினைக்கிறேன். பொது மருத்துவத்தின் தந்தை (Father of General Medicine) என்று அழைக்கப்படும் இவரே உலகில் முதன் முதலாக உடலியல்
(Physiology), உடற்கூற்றியல் (Anatomy), மருந்தியல் (Pharmacology), நரம்பியல் (Neurology) ஆகியவற்றை பற்றி தெளிவான மேம்பட்ட கோட்பாட்டை உருவாக்கியவர்
ஆவர்.
ஹிப்போகிரேட்டஸ் தனது மருத்துவ நூலான ஹிப்போகிரேட்டிக் கார்பஸில் (Hippocratic Corpus) அறுவை சிகிச்சை
பற்றி குறிப்பிடும்போது., அறுவை சிகிச்சை மருத்துவமானது (surgery) பொது மருத்துவத்தில் (Medicine) இருந்து முற்றிலும் மாறுபட்டது ஆகையால் அருவை
சிகிச்சையானது அந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற அறுவைசிகிச்சை நிபுணர்களை கொண்டே
மேற்கொள்ளப்பட வேண்டும், அதுமட்டுமின்றி பொது மருத்துவம் மட்டும் பயின்றவர்கள்
எக்காரணம் கொண்டும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள கூடாது என்று அறிவுறுத்துகிறார்.
ஹிப்போஹிரேட்டஸ்
நூலின் மூலம் மருத்துவ அறிவு பெற்ற மற்றொரு கிரேக்க மருத்துவரான கேலன் (Galen, 129 AD – 220 AD), ஹிப்போகிரேட்டசஸின் மருத்துவ முறையான ஹிப்போகிரேட்டிக்
கார்பஸை சற்று மேம்படுத்தி கேலனிக் கார்பஸ் (Galenic Corpus) என்ற மற்றொரு மருத்துவ
நூலை உலகிற்கு வழங்கினார் மேலும் கேலன், பொது மருத்துவத்தில்
மட்டுமின்றி அறுவை சிகிச்சை மருத்துவத்திலும் குறிப்பிட்ட அளவு நிபுணத்துவம்
பெற்றிருந்ததாக பல்வேறு வரலாற்று சான்றுகள் உள்ளன, இவர் சுஸ்ருதாவிற்கு பிறகு
யாரும் முயற்சிக்காமல் இருந்த கண்புரை அறுவை சிகிச்சையை கிட்டத்தட்ட பத்து
நூற்றாண்டுகளுக்கு பிறகு வெற்றிகரமாக செய்துகாட்டியவர் என்று வரலாறு கூறுகிறது.
கி.மு எட்டாம்
நூற்றாண்டில் இந்தியாவின் சிந்து சமவெளிப்பகுதியில் புகழ்பெற்று விளங்கிய
சுஸ்ருதாவின் (Sushruta, 800 BCE) மருத்துவம் பற்றிய தகவல்கள் சில புத்தமத
துறவிகள் (Buddhist Monk) வாயிலாக சீனாவை சென்றடைந்தது. சீன வரலாற்றில் புகழ்பெற்று விளங்கிய பண்டைய அறுவை சிகிச்சை
மருத்துவரான ஹுவா டொ (Hua Tuo, 140 AD
– 208 AD) இந்தியாவில் இருந்தே
மருத்துவம் கற்றுக்கொண்டதாக சில வரலாற்று சான்றுகள் தெரிவிக்கிறது. தொடர்ந்து, சில
மெசபடோமிய வணிகர்களின் வாயிலாக சுஸ்ருதாவின் அறுவை சிகிச்சை மருத்துவம் பற்றிய தகவல்கள்
மெல்ல மெல்ல அரேபிய கண்டங்களை எட்ட ஆரம்பித்தது. சுஸ்ருதாவின் மருத்துவ நூலான சுஸ்ருதா
சம்ஹிதாவின் (Sushruta Samhita) மகத்துவம் பற்றி அறிந்துகொண்ட ஈராக்கியர்கள், அந்நூலினை
கி.பி. 750 – இல் அப்பாசித் காலிபேட் (Abbasid Caliphate, 750 AD – 1258 AD) வம்சத்தினர் ஆட்சிகாலத்தில் அரேபிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்தனர். அதோடு
கிரேக்க நாட்டில் புகழ்பெற்று விளங்கிய பொது மருத்துவ நூல்களான ஹிப்போஹிரேட்டிக் கார்பஸ்
(Hippocratic Corpus) மற்றும் கேலனிக் கார்பஸ் (Galenic Corpus) ஆகிய நூல்களையும் அரேபிய மொழியில் மொழி மாற்றம் செய்தனர்.
சுஸ்ருதாவிற்கு பிறகு
கிட்டத்தட்ட பதினெட்டு நூற்றாண்டுகள் வரை அவருக்கு இணையாக அறுவை சிகிச்சை
மருத்துவம் அறிந்த மருத்துவர்கள் உலகின் எந்த மூலையிலும் உருவாகவில்லை. சுஸ்ருதாவிற்கு பிறகு அறுவை
சிகிச்ச மருத்துவத்தில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்டு, அறுவை சிகிச்சை
மருத்துவம் புதிய பரிணாமத்தை நோக்கி வளர முக்கிய காரணமாக இருந்தவர்களுள் முதன்மையானவராக
கருதப்படும் அபுல் காசிஸ் (Abul Casis,
936 – 1013), சவுதி அரேபியாவை (Hejaz, Saudi Arabia) பூர்வீகமாக கொண்டு பின்பு ஸ்பெயினில் (El Zahra; Cordoba, Spain) குடியேறி வாழ்ந்து வந்த அன்சார் இன அரேபியமக்களில் (Ansar Arab) கி.பி.936 ஆம் ஆண்டு பிறந்தார். சுஸ்ருதா சம்ஹிதா நூலின் அரேபிய
பதிப்பின் வாயிலாக அறுவை சிகிச்சை மருத்துவம் பற்றி கற்று தேர்ந்த அபுல்காசிஸ்,
ஹிப்போகிரேட்டஸ் மற்றும் கேலன் ஆகியோரது மேற்கத்திய மருத்துவ நூல்களின் வாயிலாக தனது
மருத்துவ அறிவை கூர் தீட்டிக்கொண்டார்.
மருத்துவ சிகிச்சையை
விட நோயாளிகளிடம் மருத்துவர் காட்டும் அன்பும் அரவனைப்புமே நோயாளிகள் நெஞ்சில்
நாம் மீண்டும் குணமடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக
இருக்கும் என்று கூறிய அபுல்காசிஸ் உலகிலேயே முதன் முதலாக கர்ப்பபைக்கு (Uterus) வெளியே கரு உருவாகும் முறையான எக்டோபிக் பிரக்னன்சி (Ectopic Pregnancy, mostly occur in fallopian tube
and few in cervix, ovaries & abdomen) பற்றி விளக்கிக் கூறியவர் ஆவர். ஐம்பது
ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ பணி மேற்கொண்ட அபுல்காசிஸ் உலகிலேயே முதன் முதலாக
ரத்தம் உறையா நோயான ஹீமோபிலியா (Hemophilia)
பற்றி விரிவாக ஆராய்ச்சி
மேற்கொண்டு அது பரம்பரை பரம்பரையாக பரவிடும் தன்மை கொண்டது என்றும் கண்டறிந்தவர்
ஆவர்.
கிட்டத்தட்ட
பதினேழாம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை மருத்துவத்தில் மிக முக்கியமான நூலாக
கருதப்பட்ட இவரது நூலான கிதாப் அல் தாஸ்ரிப்பில் தான் (Kitab Al –
Tasrif) உலகிலேயே முதன் முதலாக கிட்டத்தட்ட
200-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை உபகரணங்களை முழுக்க முழுக்க
உலோகங்களை (Metal) பயன்படுத்தி தயாரிக்கும் முறை பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் பெரும்பாலானவை சுஸ்ருதா
பயன்படுத்திய அறுவை சிகிச்சை உபகரணங்களின் மேம்பட்ட வடிவமாக இருந்தாலும் கூட அவற்றில்
30-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை
கருவிகள் உலகில் எந்த அறுவை சிகிச்சை நிபுனராலும் அதுவரையில் உபயோகிக்கப்படாததாகவே
இருந்தது. இதன் பிறகுதான் உலகமெங்கும் அறுவை சிகிச்சை கருவிகள் உலோகத்தை
பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அபுல்காசிஸின் பெருமை
இத்தோடு முடிந்துவிடவில்லை, உடல் உள் உறுப்புக்களின் மீது அறுவை சிகிச்சை
மேற்கொள்ளும் முறைகள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொண்ட அபுல்காசிஸ், உடல் உள் உறுப்புக்களை
தைக்கும் போது இயற்கையான பைபரிலிருந்து (Natural Fiber) தயாரிக்கப்படும்
தையல் நரம்புகளை (Natural stitching
catgut) பயன்படுத்தினால்
மட்டுமே உடல் ஏற்றுக்கொள்கிறது என்பதை உலகில் முதன் முதலாக கண்டறிந்தார். இத்தகைய தையல்
நரம்புகளை தயாரிப்பதற்காக அவர் விலங்குகளின் உணவுக்குழாய் சுவர்களின் உட்புறத்தில் காணப்படும் ஒருவகை
பைபரை (Fiber) பயன்படுத்தினார். இந்தவகை பைபரில் தயாரிக்கப்படும் தையல் நரம்புகள்
மட்டுமே இயல்பாக செரிமாணமடையும் தன்மை கொண்டவையாகும், உள் உறுப்புகளை தைக்க
பயன்படுத்தும் நரம்புகள் செரிமானம் அடையாத்தன்மை கொண்டவையாக இருந்தால் அந்த
நரம்புகளை இன்னொரு அறுவை சிகிச்சை செய்தே அகற்ற வேண்டியதிருக்கும், அது எத்தகைய
ஆபத்தானது என்பதை பற்றி நான் இங்கே விளக்கி கூற தேவையில்லை என்று நினைக்கிறேன். இன்றளவும் அபுல்காசிஸ்
பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்திதான் உடல் உள் உறுப்புகளை தைக்க
பயன்படுத்தப்படும் தையல் நரம்புகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அறுவை
சிகிச்சையின் போது மருத்துவர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை ரத்தப்போக்குதான் (Bleeding). ரத்தப்போக்கை கட்டுப்படுத்த இயலாவிட்டால் நோயாளின் இறப்பை தடுப்பது என்பது ஒரு
சதவீதம் கூட வாய்ப்பில்லாமல் போய்விடும் மேலும் 20 ஆம் நூற்றாண்டு வரை
ரத்தஏற்றம் (Blood Transfusion) என்பது வழக்கத்தில் இல்லாமல் இருந்ததால் உடல்
இழந்த ரத்தத்தை ஈடுகட்டுவது என்பது நடக்காத காரியமாகவே இருந்தது. இயன்ற அளவு
ரத்தப்போக்கை தடுப்பதே இருபதாம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை மருத்துவத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. இதற்க்கு அப்போதைய ஒரே தீர்வு இயன்ற அளவு ரத்தக்குழாய்களை (blood Vessels) சேதப்படுத்தாமல் இருப்பதுதான். அதற்க்கு
நாம் மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்களின் (Blood Vessels) அமைப்பு பற்றி முழுமையாக
அறிந்துகொள்வது இன்றியமையாததாகிறது, ரத்த சுற்றோட்டம் (Circulatory System) பற்றி ஏற்கனவே சுஸ்ருதா தனது நூலில் விரிவாக விளக்கி கூறியிருந்தமையால்
அவருக்கு பின்பு வந்த அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு ரத்தப்போக்கை தடுப்பது
குறிப்பிட்ட அளவு சாத்தியமாகத்தான் இருந்தது.
இந்நிலையில் அறுவை
சிகிச்சையின் போது நிகழும் ரத்தப்போக்கை (Bleeding) கட்டுப்படுத்துவதற்கான
வழிமுறைகள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொண்ட அபுல்காசிஸ் அறுவை சிகிச்சையின் போது
ரத்தக்குழாய்கள் பாதிப்படையாமல் தடுக்க லிகர்சர் (Ligatures) என்ற மருத்துவ முறையை
உலகில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். இந்த மருத்துவ முறையில் நூலும் (thread) ஒரு சில உபகரணங்களும் (equipments) பயன்படுத்தப்பட்டன. அதாவது அறுவை சிகிச்சை
மேற்கொள்ளப்படும் இடத்திலுள்ள ரத்தக்குழாய்கள் அடையாளம் கண்டறியப்பட்டு நூலின்
உதவியுடன் உடலின் மேற்பரப்பில் இறுக்கி கட்டப்பட்டு அறுவை சிகிச்சை
மேற்கொள்ளப்பட வேண்டிய அந்த குறிப்பிட்ட பகுதிக்கு ரத்தம் செல்வது இயன்ற அளவு தடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் உடலின் மேற்பரப்பின் மீதும் போகப்போக ரத்தக்குழாய்கள் மீதும் நூலை
உபயோகித்து கட்டுபோடப்பட்டு ரத்த ஓட்டம் தடை செய்யப்பட்டது ஆரம்பத்தில் நக்கலாக
பார்க்கப்பட்ட இம்முறைதான் இன்று நாம் அறுவை சிகிச்சையில் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஹெமோஸ்டாட் (Hemostat) என்ற கருவியின் உருவாக்கத்திற்கு வித்திட்டது என்று சொன்னால் மிகையில்லை.
இப்படி பல பெருமைகளை
தன்னுள் கொண்டிருந்த அபுல்காசிஸ், சுஸ்ருதாவிற்கு பிறகு உலக மருத்துவ வரலாற்றில்
மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகவே பார்க்கப்படுகிறார். இன்று நாம் அறுவை
சிகிச்சை மேற்கொள்ள பயன்படுத்தும் பல்வேறு நவீன அறுவை சிகிச்சை கருவிகளை உருவாக்கித்தந்து அறுவை
சிகிச்சை மருத்துவம் புதிய பரிணாமத்தை நோக்கி வளர காரணமாக இருந்த இவரை மருத்துவ
உலகம், நவீன அறுவை சிகிச்சையின் தந்தை (Father of Modern Surgery) என்று அழைப்பதில் வியப்பேதுமில்லை என்று தான் கூற வேண்டும். மேலும் பல சுவையான தகவல்களுடன் "அறுவை சிகிச்சை வரலாறு பாகம்
மூன்று" உங்களுக்காக காத்திருக்கிறது தொடர்ந்து இணைந்திருங்கள். பதிவு
பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள் நண்பர்களே, உங்களது கருத்துகள்
தான் என்னை ஊக்குவிக்கும் காரணி என்பதை மறக்க வேண்டாம். விரைவில் பல புதிய
தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம், நன்றி.., வணக்கம்..!
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
அறிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி .
ReplyDeleteTha.ma.2
ReplyDeleteமிக்க நன்றி அக்கா ..!
Deleteஇதெல்லாம் எங்க இருந்து எடுத்து எழுதுறீங்க .... உங்கள் பதிவுக்கும் வரலாறு தேவை .... ஹி ஹி ஹி
ReplyDeleteநண்பரே உங்கள் பணி எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.அடுத்த பகுதிக்கு நாட்களை கடத்தி விடாதீர்கள்.
ReplyDeleteவிக்கிபிடியாவின் தமிழ் பகுதியில் தங்களது இந்த தொகுப்புகளை சேர்க்கலாமே?
ReplyDeleteஅருமை..தொடருங்கள். இதுபோன்ற விவரங்கள் எப்போதும் ஆங்கிலத்திலேயே இருக்கும்..தமிழில் நீங்கள் எளிமை படுத்தி எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. தாங்கள் மருத்துவரோ!
ReplyDeleteஇப்போது தையல் எல்லாம் இல்லை.. வெட்டே தெரியாத அளவிற்கு ஒட்டிவிடுகிறார்கள் சதையை.
சுஸ்ருதாவை தாண்டி வந்துள்ளீர்கள்...அபுல்காசிஸ் தொட்டிருக்கிறீர்கள்...
ReplyDeleteதொடருங்கள் நண்பரே...
கடந்த இரண்டு பதிவுகளாய் உங்கள் வலை அடிக்கடி கிராஷ் ஆகிறது...புதிய விஜட் ஏதும் சேர்த்தீர்களா?
ReplyDeleteஆம் நண்பரே புதிதாய் MyFreeCopyRight விட்ஜெட் சேர்ந்த்திருந்தேன், தற்போது அதை நீக்கிவிட்டேன், இப்போது அந்த பிரச்சனை உள்ளதா என்று கூற இயலுமா நண்பரே.?
Deleteஇது போன்ற சாதனையாளர்களை பற்றி டாக்டர்க்கு படித்திருந்தால் தெரியும். இல்லலைனா உங்களை போன்றவர்களால் வெளியுலகத்திற்கு தெரியும். நல்ல பதிவு, உங்கள் உழைப்பு தெரிகிறது. - நிஜாம்
ReplyDeleteஅருமையானச் செய்திகளை தந்துள்ளூர் இதுபோன்ற பதிவுகளைப் படிப்போரி்ன் தொகை பெருக வேண்டும்!இது என்னுடைய ஆசை!
ReplyDeleteசா இராமாநுசம்
த ம ஓ 5
மிக்க நன்றி ஐயா, வருகைக்கும், கருத்துக்கும்., வாக்குக்கும் ..!
Deleteஅன்பரே ஒரு சின்ன ஆலோசனை பதிவின் நீளத்தை குறைக்கலாமே
ReplyDeleteயோசிக்க வேண்டிய விஷயம் தான்., ஆலோசனைக்கு நன்றி நண்பா..!
Deleteவித்தியாசமான தேடல்.அறியாத பல விஷயங்கள்.தொடருங்கள் !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteபல அறிய தகவல்களை தேடி தரும் உங்களுக்கு மிக்க நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteஇன்று
ReplyDeleteபாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.
உங்கள் எல்லாப்பதிவும் சூப்பர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..!
Deleteதெரிந்து கொண்டேன்
ReplyDeleteதகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பா
வருகைக்கும் கருத்துக்கும் (500-ஆவது) மிக்க நன்றி தலைவரே :)
Deleteneenga doctorkku padichaningala... anna...
ReplyDeleteஎன் முகத்தை பார்த்தா டாக்டருக்கு படிச்ச மாதிரியா இருக்கு., சும்மா காமெடி பண்ணாதீங்க சிஸ்டர் :D
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
வணக்கம் இன்று தானட தளத்தில் நேரம் செலவிட்டேன்.இரண்டு பகுதியும் படித்தாயிற்று.அறியாதவைகள் எவ்வளவோ இருக்கின்றன்.அறிய வைத்தமைக்கு நன்றி ..வாழ்த்துக்கள்.சந்திப்போம்....!(சொந்தமே)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!
Deleteஇன்று தான் உங்களுடய பதிவு சிலவற்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது . ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து கவனித்து செதுக்கியுள்ளீர்கள். தமிழ் கூறும் நல் உலகிற்கு உங்களை போல் ஒரு சுவடு பதிப்பவர்கள் மிக அவசியம் .
ReplyDeleteதொடருங்கள் .....இனி நானும் தான்.
மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் ..!
Deleteஎனக்கு நிறைய புதிய விசயங்கள். பதிவுக்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
Deleteஉங்களின் முந்தய இடுகையை அறுவை சிகிச்சை பற்றிய இடுகை படிக்க இயலவில்லை இப்போது படித்தேன் இதில் பல வரலாற்று பிழைகள் உள்ளன காரணம் தமிழர்களின் மருத்துவ அறிவு இங்கு முழுமையாக மறைக்கப் பட்டு சுசுருதரிம் மருத்த்வத்தை கண்மூடித்தனமாக இன்று புகுத்தப் பட்டு உள்ளது தமிழர்களின் மருத்துவ அறிவு பத்தாயிரம் ஆண்டுகளிக்கு முந்தையது இதை தமிழர்கள் அறியவில்லை இடுகைக்கு பாராட்டுகள்.
ReplyDeleteமுழுமையாக படித்து பின்னூட்டமிட்டமைக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சகோ.,
Deleteதூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள "ஆதிச்சநல்லூர்" பற்றி கேள்விப்படாத தமிழர்கள் எவரும் இருக்க இயலாது என்று கருதுகிறேன். தற்போது வரை அங்கு கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்., பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பாரம்பரியம் மிக்கவர்களாக கருதப்படும் தமிழர்கள் கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே இரும்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்தும் அளவிற்கு நாகரீகத்தில் வளர்ச்சி பெற்றிருந்தனர் என்று ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன ஆகையால் தமிழர்கள் மருத்துவத்திலும் நிச்சயம் மேம்பட்டே விளங்கியிருப்பார்கள் என்று யூகிக்க இயலும் என்றாலும், வெறும் யுகங்களை மட்டும் வைத்துக்கொண்டு இது போன்ற வரலாற்று கட்டுரைகளை எழுத இயலாது என்பதை நினைவுகூர விரும்புகிறேன்.
நான் தற்போது வரை இறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தான் கடந்த இரண்டு பதிவுகளையும் எழுதியிருக்கிறேன் மேலும் அறுவை சிகிச்சை மருத்துவமானது பொதுமருத்துவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழர்கள் மருத்துவத்திலும் மேம்பட்டு விளங்கினார்கள் என்று ஆதாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடப்படுமேயானால் அது பற்றி பெருமையோடு முதலில் தமிழில் எழுதுபவன் நானாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.
புரிதலுக்கு நன்றி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!
வசதிகளை அனுபவிக்கிறோம் ஆனால் அதன் வரலாறுகளை தேடித் போய்தெரிந்துகொள்ள முனைவதில்லை. தேடி எடுத்துக் கொடுப்பவற்றையாவது பயன்படுத்தவேண்டும். இது போன்ற கட்டுரைகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா ..!
Deleteஇவ்வளவு தகவல்களை எப்படித்தான் தொகுத்துத் தருகிறீர்களோ!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா..!
Deleteஅருமையான அவசியமான தகவல்கள். உங்கள் பதிவுகள் ஏன் Dashboard-ல் தெரிவதில்லை. உங்களை தொடர்ந்தாலும் புதிய பதிவுகள் தெரியலை ஏன் என புரிய வில்லை
ReplyDeleteபின்தொடர்வதிலிருந்து விலகிவிட்டு மீண்டும் ஒருமுறை தங்களை இத்தளத்தில் இணைத்துக்கொண்டு சோதனையிட்டு பார்த்தால் நான் மிகவும் நன்றியுடையவனாவேன்.!
Delete