Thursday 20 December 2012
வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழியக்காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-1); கிரீன்ஹவுஸ் விளைவு என்பது என்ன? carbon dioxide can really destroy the world by varalatru suvadugal
அனைவருக்கும்
வணக்கம், நெருங்கிவரும் டிசம்பர் 21, 2012 நம் எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறதோ இல்லையோ உலக அழிவு பற்றி நம்
அனைவரையும் அதிகம் சிந்திக்கவைத்திருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது! இதற்க்கு
முன்பும் பலமுறை உலக அழிவு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இப்போது
போல் எப்போதும் உலக அழிவு பற்றி இத்தனை பரபரப்பாக விவாதிக்கப்படவில்லை என்பதே
உண்மை! இந்தமுறை உலக அழிவு பற்றி இத்தனை பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்கு காரணம்
மாயன் இன மக்களும் அவர்களது காலண்டரும்தான் என்றால் மிகையில்லை! உண்மையில்
டிசம்பர் 21, 2012-ல் உலகம் அழியாவிட்டாலும் கூட 2100-ல் உலகம் அழியும் நிகழ்வு துவங்கிவிடும் என்றால் “இதென்ன புதுப் பீதீ”
என்பீர்கள்தானே நீங்கள்? ஆனால் இதனை உலகின் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் உருதிப்படுத்தியிருக்கிறார்கள்
என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் அல்லவா? தாவரங்கள் உட்பட புவியில்
வாழும் அனைத்து உயிரினங்களும் அடியோடு அழிந்துபோகும் அந்த உலக அழிவிற்கு காரணமாக
இருக்கப்போவது கார்பன்டை ஆக்ஸைடு (Carbon Dioxide, CO2) என்ற
கரியமிலவாயு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா நண்பர்களே?
கார்பன்டை ஆக்ஸைடு....விஷத்தன்மை
இல்லாத வாயு ஆயிற்றே? அதனால் ஒரு எலியை கூட கொல்ல முடியாதே...? அப்படி இருக்கும்
போது இந்த உலகத்தையே அதனால் எப்படி அழிக்க இயலும் என்று கேட்பவரா நீங்கள்?
அப்படியென்றால் இங்கேசில அடிப்படை விசயங்களைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது
இன்றியமையாததாகிறது! சூரிய குடும்பத்திலுள்ள (Solar System) அனைத்து கோள்களும் அது இயங்க தேவையான ஆற்றலை (Energy)
சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றல் (Heat Energy) மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறது.! இன்னும் சரியாகச்
சொல்வதானால் சூரியனிடமிருந்து வெளிவரும் கண்களுக்கு புலப்படும் ஒளி (Visible
Light) மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் (Infrared Rays) மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறது! இந்த வெப்பத்தை பயன்படுத்தித்தான்
புவியில் வாழும் அனைத்து உயிரினங்களும் (தாவரங்கள் உட்பட) அது இயங்க தேவையான
அடிப்படை ஆற்றலை தாமே தயாரித்துக்கொள்ளும் வல்லமையை பெறுகின்றன.!
சூரிய வெப்பம்தான்
அனைத்து உயிர்களுக்கும் மூலம் என்றாலும், சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் மொத்த
வெப்ப ஆற்றலும் பூமியின் மீது படுமேயானால் புவியில் சம்பல் கூட மிச்சமிருக்காது
என்பதுஉங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்! சூரியனின் மேற்பரப்பில்
வெளிப்படும் வெப்பத்தில் கிட்டத்தட்ட 2.2 பில்லியனில்
ஒரு பங்கு வெப்பம்தான் (0.00000005%; 174 petawatts) பூமியின்
வளிமண்டல எல்லையை வந்தடைகிறது. இவற்றில் 30% (50
petawatts) சதவீத வெப்பத்தை மேகங்கள் (Clouds) மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்பியது போக எஞ்சிய 70% (120 petawatts) சதவீத வெப்பஆற்றல்தான் பூமியின்
மேற்பரப்பை (Earth’s Surface) வந்தடைகிறது! பூமியின் மேற்பரப்பை
வந்தடையும் வெப்பஆற்றலில் கிட்டத்தட்ட 70% (85 petawatts)
சதவீத வெப்பத்தை பூமியும் கடலும் சேர்ந்து உறிஞ்சி தக்கவைத்துக்கொண்டு எஞ்சிய 30%
(35 petawats) சதவீத வெப்பத்தை மீண்டும் வளிமண்டலத்தில் உமிழ்ந்து
வெளியேற்றம் செய்கிறது.!
இப்படி வெளியேற்றம்
செய்யப்படும் வெப்ப ஆற்றல் மீண்டும் விண்வெளிக்கே தப்பிபோயிருக்குமேயானால்
பூமிமுற்றிலும் குளிர்ந்துபோய் பூமியின் மேற்பரப்பு வெப்பநில கிட்டத்தட்ட மைனஸ் 18 டிகிரி (-18°C) செல்சியஸாக இருந்திருக்கும் ஆனால் வெளியேற்றம் செய்யப்படும் வெப்ப ஆற்றல்
மிக நீண்ட அலைநீளம் (Wavelength) கொண்ட அகச்சிவப்பு
கதிர்களாக இருப்பதால், இவற்றால் வளிமண்டலத்திலுள்ள சில குறிப்பிட்ட வாயுக்களை
ஊடுருவிச் செல்ல இயலுவதில்லை! பொதுவாக கதிர்களின் அலைநீளம், அது எங்கிருந்து
வெளிவருகிறதோ அந்த இடத்தின் வெப்பநிலையைப் பொறுத்து மாருபாடடையும் தன்மை கொண்டது.
வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க கதிர்களின் அலைநீளம் (Wavelength) குறைய ஆரம்பிக்கும், அலைநீளம் குறையக் குறைய கதிர்களின் செறிவுத்தன்மை (intensity)
அதிகரிக்க ஆரம்பிக்கும், செறிவுத்தன்மை அதிகரிக்கும் போது
கதிர்களின் வேகம் (Speed) மிக அதிகமாக இருக்கும்! உங்களுக்கு
எளிதாக புரியும்படி சொல்வதானால் உதாரணத்திற்கு ஒரு குச்சியை (Stick) எடுத்துக்கொள்வோம். அந்த குச்சி எவ்வளவுக்கெவ்வளவு சிறிதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு
அதன் ஸ்திரத்தன்மை (stability) அதிகமாக இருக்கிறதல்லவா அதுபோல
கதிர்களின் அலைநீளம் குறையக் குறைய அந்தக் கதிர்கள் மிகவும் வலிமை
பொருந்தியவையாகவும் அதிவேகம் கொண்டவையாகவும் இருக்கும்!
உயர் வெப்பநிலை கொண்ட
சூரியனிலிருந்து கதிர்கள் பூமியை நோக்கி வரும் போது அவை குறுகிய அலைநீளம் மற்றும்
அதிகவேகம் கொண்ட கதிர்களாக இருப்பதால், அவை வளிமண்டலத்திலுள்ள வாயுக்களை எளிதாக
ஊடுருவி புவியின் மேற்பரப்பை வந்தடைந்துவிடுகின்றன! அதேவேளை புவியிலிருந்து
இக்கதிர்கள் உமிழப்படும் போது மிகக்குறைந்த வெப்பநிலை கொண்ட இடத்திலிருந்து
உமிழப்படுவதால் அவை நீண்ட அலைநீளம் மற்றும் குறைந்த வேகமும் கொண்ட அகச்சிவப்பு
கதிர்களாக இருப்பதால் வளிமண்டலத்திலுள்ள சில குறிப்பிட்ட வாயுக்கலான, நீராவி (Water Vapor, H2O), கார்பன்டை
ஆக்ஸைடு (Carbon Dioxide, CO2), மீத்தேன் (Methane,
CH4), நைட்ரஸ் ஆக்ஸைடு (Nitrous Oxide, N2O), ஓசோன்
(Ozone, O3) ஆகிய வாயுக்களை ஊடுருவிச் செல்ல இயலுவதில்லை!
மேலும் இவ்வாயுக்களுக்கு இயல்பாகவே இருக்கும் சில வேதிப்பண்புகளின் காரணமாக இவை
அகச்சிவப்பு கதிர்களை உறிஞ்சிக்கொண்டு வெப்பமடைகின்றன! இந்த வெப்ப ஆற்றல்
உதவியுடன் உறிஞ்சிய அகச்சிவப்பு கதிர்களை இந்த வாயுக்கள் பூமியின் மீது மீண்டும் உமிழ்ந்து
வெளியேற்றம் செய்வதால்தான் பூமியின் மேற்பரப்பின் மீது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை (14°C)
எப்போதும் நீடித்து நிற்கிறது!
புவி தனது மேற்பரப்பு
வெப்பநிலையை, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் இந்த
நிகழ்வைத்தான் கிரீன் ஹவுஸ் விளைவு (Greenhouse Effect) அல்லது பசுமை இல்ல விளைவு என்று அழைக்கிறார்கள்! இதனை பிரான்ஸ் நாட்டை
சேர்ந்த இயற்பியல் ஆய்வாளரான ஜேன் பாப்டிஸ்ட் ஜோசப் போரியர் (Jean Baptiste
Joseph Fourier, 1768 – 1830) என்பவர்தான் 1824-ஆம் ஆண்டு உலகில் முதன் முதலாக கண்டறிந்தார்! கிட்டத்தட்ட 90% வாயுக்களால் நிரப்பப்பட்டிருக்கும் பூமியின் வளிமண்டலம் (Atmosphere)
எண்ணற்ற வாயுக்களை கொண்டிருந்தாலும் கூட, குறிப்பிட்ட இந்த ஐந்து
வாயுக்களுக்கு மட்டுமே அகச்சிவப்பு கதிர்களை உறிஞ்சி உமிழும் தன்மை இருப்பதால்,
இவை மட்டுமே புவியின் மேற்பரப்பு வெப்பநிலையை தீர்மானிக்கும் கிரீன்ஹவுஸ் விளைவில்
பங்குபெறுகின்றன இதன் காரணமாகவே இந்த வாயுக்கள் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (Greenhouse
Gases) என்று அழைக்கப்படுகின்றன! வளிமண்டலத்தில் இந்த கிரீன்ஹவுஸ் வாயுக்கள்
மட்டும் இல்லாமல் போயிருந்தால், பூமிமுற்றிலும் குளிர்ந்துபோய் பூமியின்
மேற்பரப்பு வெப்பநில கிட்டத்தட்ட மைனஸ் 18 டிகிரி (-18°C) செல்சியஸாக இருந்திருக்கும்! அப்படி இருந்திருந்தால் பூமியில் எந்த
உயிரினமும் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்!
இங்கேதான் நீங்கள்
ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தெரிந்துகொள்வது இன்றியமையாததாகிறது! பூமியின்
மேற்பரப்பின் மீது உமிழப்படும் வெப்பத்தின் அளவுவளிமண்டலத்தில் இந்த கிரீன்ஹவுஸ்
வாயுக்கள் இருக்கும் எண்ணிக்கையை பொறுத்தே அமைந்திருக்கும், வளிமண்டலத்தில் இந்த
வாயுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது புவியின் மீது உமிழப்படும் வெப்பமும்
அதிகரிப்பதால் பூமியின் வெப்பநிலையும் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்! இந்த
கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்றான கார்பன்டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் தற்போது தொடர்ந்து
அதிகரித்துவருவதன் காரணமாக புவியின் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து
வருவதைத்தான் புவி வெப்பமயமாதல் அல்லது புவி சூடாதல் அல்லது குளோபல் வார்மிங் (Global Warming) என்று
அழைக்கிறார்கள். இதனை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இயற்பியல் வல்லுனரான ஸ்வண்டே ஆகஸ்ட்
ஹர்ஹெனியஸ் (Svante August Arrhenius, 1859 – 1927) என்பவர்தான்
1896 ஆம் ஆண்டு உலகில் முதன் முதலாக கண்டறிந்தார்.!
மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களோடு இத்தொடர் பதிவின் அடுத்தபாகம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது நண்பர்களே, தொடர்ந்து இணைந்திருங்கள்! பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்ய மறக்க வேண்டாம்! உங்கள் கருத்துக்கள் மூலமாகத்தான் என் தவறுகளை திருத்திக்கொள்ளவும் என்னை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்! விரைவில் இரண்டாம் பாகத்தின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன்.. நன்றி வணக்கம்!!!
மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களோடு இத்தொடர் பதிவின் அடுத்தபாகம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது நண்பர்களே, தொடர்ந்து இணைந்திருங்கள்! பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்ய மறக்க வேண்டாம்! உங்கள் கருத்துக்கள் மூலமாகத்தான் என் தவறுகளை திருத்திக்கொள்ளவும் என்னை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்! விரைவில் இரண்டாம் பாகத்தின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன்.. நன்றி வணக்கம்!!!
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தரும் வ.சு .உங்களை வரவேற்கிறேன்.கிரீன் ஹவுஸ் விளைவு பற்றி அறிந்திருந்தாலும் உங்கள் பதிவு விளக்கமாகவும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையிலும் உள்ளது.
ReplyDeleteஇரண்டு பகுதிகளாக வெளியிடுவதே சரியானது. தொடர்ந்து அசத்துங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஅருமையான தகவல்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!
Deleteபுவி வெப்பமாதல் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன் ஆமா அது என்ன நாளை உலகம் இல்லையென்றால் சகோ எப்படி அடுத்த பதிவிற்கு வருவது இன்றே பகிரக் கூடாதா ?
ReplyDeleteபதிவு மிகவும் பெரிதாகிப்போனதால் முழுவதையும் பகிர இயலவில்லை, விரைவில் அடுத்த பாகத்தை பகிர்ந்துவிடுகிறேன் சகோ!
DeleteNALLATHU
Deleteகொடிய விரைவிலா ???? ரைட்டு
ReplyDeleteகுறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே.... நீக்கிவிட்டேன்! :-))
Deleteஎங்கே நீண்ட நாளாய் காணோம்! அருமையான் பதிவு!அடுத்தது காண ஆவல்
உயர்கல்விக்கான தேர்வுக்கு படித்துக்கொண்டிருப்பதால் வலைத்தளத்திக்கம் அதிகம் வர இயலவில்லை புலவர் ஐயா.! ஜனவரிக்கு பிறகு தொடர்ச்சியாக பதிவுகள் எழுதுவேன்!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!
கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிகளின் பின்னர் கண்ட பதிவு...
ReplyDeleteநலம் தானே நண்பரே...
நல்ல பதிவு நல்ல தகவல்கள்....
நான் நலம் நண்பரே..தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்., நலம் தானே?
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
பாட புத்தகத்தை புரட்டி பாக்குற மாதிரியே இருக்கு ! சும்மா...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteவரலாற்றுச்சுவடுகளின் பதிவு அனைத்துமே அரிய தகவல்கள அடங்கிய களஞ்சியம்.மிக்க பயனுள்ள வகையில் எழுதுகிறீர்கள்.தொடருங்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteநீண்ட இடைவெளிக்கு பின் அருமையானதொரு பதிவு நண்பரே! சிறப்பாக எளிமையாக இருந்தது! அருமை தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteநீண்ட இடைவெளிக்கு பின்பு சிறப்பான பதிவை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இன்றைய நிலையை உணர்த்தும் பதிவுடன் வாழ்த்துக்கள் வரலாறு...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteஇந்த மாதிரி செய்திகளை என்னால படிக்கவே முடியாது நண்பரே......... ஏன்னா மனதுக்குள் ஏற்கனவே இருக்கும் கவலைகளே போதும் என்றுதான். இதைப் படிக்கிறவங்க சொந்த வாகனகளைக் குறித்தும், சைக்கிள், காலாற நடத்தல் போன்றவற்றுக்கும் மாறினால் அதுவே பெரிய வெற்றி.
ReplyDeleteஅடுத்த பாகத்தை படித்தால் உங்களுக்கு தூக்கம் வராது என்று கருதுகிறேன்!
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
அன்பின் வரலாற்று சுவடுகள் அவர்களுக்கு,
ReplyDeleteநீண்ட இடைவேளைக்கு பிறகு தங்களை பதிவுலகில் மீண்டும் சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, தங்களின் இந்த பதிவு என்னை மீண்டும் பள்ளிகூடத்திற்கே அழைத்து சென்றது குறிப்பாக பனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் பாட பிரிவு ஆசிரியர் உயர்திரு.சிவசங்கர் அவர்களை நினைவு படுத்தி சென்றது. பாடபுத்தகத்தில் கூட இவ்வளவு விளக்கமாக குறிப்பிட்டிருக்கவில்லை. உங்களின் இந்த பதிவு விளக்கமாகவும் தெளிவாக புரியும் படியும் இருந்தது. எங்களுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இதன் தொடர்ச்சி நிச்சயம் பல அதிர்ச்சியான தகவல்களை தாங்கி வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்த பதிவிற்க்காக நீங்கள் நிச்சயம் அதிகம் உழைத்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன். உங்கள் உழைப்புக்கு நன்றி..தொடர வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன், அன்பிற்கினிய செல்வின் ஸ்மைல்.
இது போன்ற உற்சாகமான கருத்துரைகள் எழுதுபவரை எப்போதும் உற்சகமடையச் செய்யும் என்பதில் துளியும் ஐயமில்லை...
Deleteநீண்ட கருத்துரைக்கு மிக்க நன்றி பிரதர்..தொடர்ந்து இணைந்திருங்கள்!
நண்பா....மிக அருமையான பதிவு.மிகத் தெளிவாகப்புரியும் படி எழுதியுள்ளீர்கள். உங்கள் இந்த பணி மிக முக்கியமானது. பாராட்டுக்கள். நன்றி நன்றி நன்றி...
ReplyDelete-வீரா
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteவணக்கம் வசு.
ReplyDeleteபடிக்கும் பொழுதே இப்படி எல்லாம் எழுதி அசத்துறீங்களே...
படிப்பு முடித்துவிட்டால்...
பதிவு மிக மிக அருமை. நன்றி.
(சில சமயம் இங்கே மைனஸ் 18 வரையில் இருக்கும்.
அப்படியென்றால் இங்கே கிரீன் ஹவுஸ் வாயுக்கள் இல்லையா...?)
அண்டார்க்டிக்காவின் சில பகுதிகளில் மிகக்குறைந்த வெப்பநிலை இருக்கும் (−89.2 °C; Lowest temperature recorded at Soviet Russia, Vostok Station, Antarctica) அதுமட்டிமின்றி மனிதர்கள் வாழும் சில இடங்களில் அதிக்கப்படியான வெப்பமும் அளவிடப்பட்டிருக்கிறது (57.8°C hottest temperature recorded at Aziziya, Libya) அதற்காக இந்த இடங்களில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதிகப்படியாய் ரொம்பி வழிகின்றது, சுத்தமாக இல்லை என்று பொருள் இல்லை!
Deleteகிரீன்ஹவுஸ் வாயுக்கள் பூமியை போர்வையால் போர்த்தியது போல் அடிவளிமண்டலம் (Called the troposphere)முழுவதும் எங்கும் நிறைந்து நிற்கிறது!
sako....
ReplyDeleteeppadi irukkeenga....
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.!
Deleteநான் உங்கள் பதிவுகளை தொடர்த்து படித்து வருகிறேன் மிக நன்றாக உள்ளது நன்றி மற்றும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteதொடர்ந்து இணைந்திருங்கள் நண்பரே..
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
CO2 by Varalaaru can really destroy the world...Ha Ha Ha...
ReplyDeleteHow are you bro...looks like u r really studying hard...I thought you were busy with your English site like most friends...
See you again soon...
நமக்கு தமிழே தரிகினத்தோம்..இதுல இங்க்ளிஸ் ப்ளாக் வேறையா..விளங்கிரும் :-))
DeleteBTW, நான் நலம்..நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்..வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.!
இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயம் நிறைந்த இனிய கிறிஸ்துமஸ்+புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரதர்!
Deleteதல பதிவு சூப்பர்... இதல் உங்கள் உழைப்பு தெரிகிறது.. இருந்தால் குறை சொல்ல விட்டால் அவன் தமிழன் இல்லையே
ReplyDelete// பூமியும் கடலும் // நிலமும் கடலும் அல்லது பூமியும் அதன் பெரும்பகுதி கடலும் என்று இருந்திருக்க வேணுமா, இல்லை பூமி என்று கூறினாலே அது நிலத்தைத் தான் குறிக்குமா....
பதிவுகள் அடிகடி எழுதுங்க
எனக்கும் அந்த கண்பூசன் தான்... அதுதான் அந்த இடத்துல அந்த குழப்பம்! :(
Deleteநீண்ட இடைவெளிக்குப் பின் அருமையானப் பதிவு.கலக்குங்க பாஸ்..
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteசிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteஎப்பிடின்னே இதெல்லாம் கலக்குறீங்க போங்க.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி! :-)
Deleteநல்ல பகிர்வு மாயன் காலண்டரை பற்றி தனி பதிவாக போடாலாமே உங்களால் சிறப்பாக தர முடியும் என்பது என் எதிர்பார்ப்பு
ReplyDeleteவாய்ப்பிருந்தால் எழுதுகிறேன் நண்பா! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
Deleteவணக்கம்! நீண்ட நாட்களாய் வலைப்பூ பக்கம் வரவில்லையே! தங்களின் இப்படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்! http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_23.html நன்றி!
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு நன்றி ஐயா, வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
Deleteபயனுள்ள தகவல்
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.!
Deleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பயனுள்ள பதிவு. நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.!
Delete//சூரிய குடும்பத்திலுள்ள (Solar System) அனைத்து கோள்களும் அது இயங்க தேவையான ஆற்றலை (Energy) சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றல் (Heat Energy) மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறது.! இன்னும் சரியாகச் சொல்வதானால் சூரியனிடமிருந்து வெளிவரும் கண்களுக்கு புலப்படும் ஒளி (Visible Light) மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் (Infrared Rays) மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறது!//
ReplyDeleteபூமி சுழற்சிக்கு தேவையான எனர்ஜி சூரிய ஒளியில் இருந்துதான் கிடைக்கிறதா? விளக்கவும்.பிளீஸ்