Monday 30 January 2012

மறைக்கப்பட்ட மாமேதைகள் அஷிஷுல் ஹக் மற்றும் கெம் சந்திர போஸ், இந்தியர்களே மிகத்துல்லியமான கைரேகை ஒப்பீட்டு முறையை உருவாக்கியவர்கள், கைரேகையின் வரலாறு, History of Fingerprints.


எல்லோருக்கும் வணக்கம், இதுவரை மண்ணில் பிறந்த எந்த மனிதனது கைரேகையும் இன்னொரு மனிதனின் கைரேகையை போல் இருந்ததில்லை என்றால் இப்பிரபஞ்சத்தை படைத்த இறைவன் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்று தானே கூற வேண்டும். ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியான அடையாளத்தோடு படைத்துக் கொண்டிருக்கும் அந்த படைப்பின் ரகசியம்., நம் கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. ஒரு மனிதனின் கைரேகை இன்னொரு மனிதனின் கைரேகையை போல் இருப்பதில்லை என்ற உண்மையை முதன் முதலில் தெரிந்து கொண்டவர்கள் யார் தெரியுமா நண்பர்களே.., மேதைகளோ விஞ்ஞானிகளோ அல்ல மண்பாண்டங்களை செய்து விற்கும் சாதாரண குயவர்கள் தான். 

கி.மு. பதினாறாம் நூற்றாண்டில் மெசபடோமியப் பிரதேசத்தில், பாபிலோனிய அரசாங்கத்தின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த குயவர்கள் தற்செயலாக ஒருநாள் மண்பாண்டங்களை செய்யும் போது தங்கள் கைரேகைகள் மண்பாண்டங்களின் மீது படிவதைக் கண்டார்கள், கைரேகை பதிக்கப்பட்ட அந்த மண்பாண்டங்கள் கைரேகை பதியாத ஏனைய மண்பாண்டங்களில் இருந்து விலகி ஒருவித ஈர்ப்புடன் தோற்றமளிப்பதைக் கண்டு ஆச்சிரியமடைந்தார்கள்.


மற்றொரு நாள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் கைரேகை ஒரே மண்பாண்டத்தில் பதிய.., ஒவ்வொரு மனிதர்களின் கைரேகைகளிலும் சிறிது வித்தியாசம் இருப்பதைக்கண்டு ஆச்சிரியம் அடைந்தார்கள். நாளடைவில் இது வளர்ச்சியுற்று நிலங்களை வாங்க மற்றும் விற்கும் போது மோசடிகளை தவிர்ப்பதற்காக கையொப்பத்துடன் கைரேகையையும் சேர்த்து பயன்படுத்தும் அளவிற்கு வளர்ந்தது.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் மெசபடோமிய பிரதேசத்தை சேர்ந்த வணிகரான Abu Zayed Hasan என்ற அரேபிய வணிகர், தன்னிடம் கடன் பெற வருவோரின் கைரேகையை களிமண்ணில் பதிவு செய்து அதனை உறுதிமொழி பத்திரமாக (promissory bond) பயன்படுத்தினார் என்று சில வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இவர் தான் மனிதனின் கைரேகையை அடையாளத்திற்கென்று வணிக நோக்கில் பயன்படுத்திய முதல் மனிதர் ஆவார்.


பண்டைய மக்கள் கைரேகையை அடையாளத்திற்காக பயன்படுத்தினார்களே தவிர, எந்த ஒரு மனிதனின் கைரேகையும் இன்னொரு மனிதனின் கைரேகையைப்போல் இருக்காது என்ற அடிப்படை உண்மையை அறிந்திருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஜெர்மனியைச் சேர்ந்த ஜோகன் கிறிஸ்டோப் அன்ட்ரியாஸ் (Johann Christoph Andreas) என்ற மருத்துவர் தான் இந்த உண்மையை முதன்முதலில் ஆதாரப்பூர்வமாக கி.பி.1788–ஆம் ஆண்டு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நிரூபித்தார்.!


கைரேகை மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது என்று அறிந்துகொண்டாலும், கைரேகை வழியாக ஒரு குறிப்பிட்ட மனிதனை அடையாளம் காணும் தொழில்நுட்பம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதிவரை வழக்கத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கி.பி. 1880-ஆம் ஆண்டு தான் முதன்முதலில் கைரேகையை கொண்டு ஒரு குறிப்பிட்ட மனிதனை அடையாளம் காணலாம் என்ற கருத்து தோன்றியது, ஹென்றி பௌல்ட்ஸ் என்ற ஸ்காட்லாந்து மருத்துவர் இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு தனது அறிக்கையை லண்டன் மாநகர காவல் துறைக்கு அனுப்பி, இந்த தொழில்நுட்பம் தடயவியல் வல்லுனர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இவர்தான் முதன் முதலில் இடது கை பெருவிரலை கைரேகை பதிப்பதற்க்காக பரிந்துரை செய்தவர். இன்றுவரை நாம் இடதுகை பெருவிரலைதான் கைரேகை பதிக்க பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நூறு சதவீதம் முழுமை பெறாத அப்போதைய அவரின் அந்த ஆராய்ச்சி கட்டுரைகளையும் அறிக்கைகளையும் லண்டன் மாநகர காவல்துறை ஏற்றுகொள்ள மறுத்து தள்ளுபடி செய்தது.


அப்படியானால் குற்றவாளிகள் எந்த அடிப்படையில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டங்களில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என்ற கேள்வி உங்கள் மனதில் இப்போது எழும்பியிருக்குமே. ஆரம்ப காலகட்டங்களில் நேரடி சாட்சியங்கள் மூலம் தான் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டிக்கப்பட்டனர் பின்பு Anthropometry எனப்படும் மனிதரளவையியல் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் இனம்பிரிக்கப்பட்டனர். இதன்படி மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் அளவீடு செய்யப்பட்டு அதன் மூலம் குறிப்பிட்ட ஒரு நபரை அடையாளம் கண்டறியப்பட்டது. 1882-ஆம் அண்டு அல்போன்ஸ் பெர்டிலன் என்பவர் மனிதரளவையியல் எனப்படும் Anthropometry துறையில் துல்லியத்தை கொண்டுவந்தார்.


உலகிலேயே இந்தியாவில் தான் முதன் முதலில் கைரேகையின் வழியாக ஒரு குறிப்பிட்ட மனிதனை அடையாளம் கண்டறியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி.1858-ஆம் ஆண்டளவில் கல்கத்தாவுக்கு (Kolkata) அருகிலுள்ள ஹூக்லியில் (Hooghly) அரசாங்கததில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் நடைமுறையில் இருந்தது. பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியம் பெற வரும்போது முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு அவர்களின் கையொப்பத்துடன் கைரேகையையும் பெற்று ஏற்கனவே அரசாங்கத்தின் கோப்புகளில் இருக்கும் அவர்களது பழைய கைரேகைகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து சரியாக இருந்தால் பின்பே வழங்கப்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக துல்லியமான கைரேகை ஒப்பீட்டு முறை வழக்கத்தில் இல்லாத அந்த காலத்திலும் கூட ஏதோ ஒரு அடிப்படையில் தான் இவர்கள் ஒப்பீடு செய்திருக்கக்கூடும் என்பது திண்ணம்.


இந்நிலையில் 1873-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதியன்று கொல்கத்தா நகரின் காவல்துறை ஆணையாளராக ரிச்சர்ட் எட்வர்ட் ஹென்றி (Richard Edward Henry) என்பவர் நியமிக்கப்பட்டார். இவரது மேற்பார்வையின் கீழ் பணியாற்றிய அஷிஷுல் ஹக் (Azizul Haque) என்ற கைரேகையியல் நிபுணர் அல்போன்ஸ் பெர்டிலனின் மனிதரளவியல் என்ற தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு மிகத் துல்லியமான கைரேகை ஒப்பீடு முறையை அதாவது கைரேகைகளின் நீல அகலங்கள் மற்றும் கைரேகைகளின் இடையேயுள்ள வளைவுகளின் கோணங்களை அளவீடு செய்து அதன் மூலம் கைரேகையை வகைப்படுத்தி ஒப்பீடு செய்யும் முறையை உருவாக்கினார். இந்தப்பணியில் அஷிஷுல் ஹக்குக்கு பக்கபலமாக இருந்தவர் கெம் சந்திர போஸ் (Hem Chandra Boss) என்ற மற்றுமொறு கைரேகையியல் நிபுணர் ஆவார். இதன் பின்னர் கொல்கத்தா நகரில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளின் கைரேகைகளை மை (Ink) கொண்டு பேப்பரில் பதியச் செய்து அவற்றை தொகுத்து 1897-ல் ஜூன் 12-ல் உலகின் முதல் மனிதரளவையியல் கைரேகை நிறுவனம் (Anthropometric Fingerprints Bureau) கொல்கத்தாவில் துவங்கப்பட்டது.


முதல் வெற்றிகரமான கைரேகை நிறுவனத்தின் செயல்பாடுகளை அடுத்து  எட்வர்ட் ரிச்சர்ட் ஹென்றி, அஷிஷுல் ஹக் மற்றும் கெம் சந்திர போஸ் ஆகியோரின் ஆராய்ச்சி கட்டுரைகளையும் ஒப்பீட்டு கணக்கு முறைகளையும் அடிப்படையாக கொண்டு  கைரேகை வகைப்பாட்டு முறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி 1900-ஆம் ஆண்டு வெளியிட்டார். அதோடு லண்டன் மாநகர காவல் துறைக்கும் இது பற்றி எழுதினார். சில அடிப்படை ஆய்வுகளுக்கு பின் அவற்றை ஏற்றுக்கொண்ட லண்டன் மாநகர காவல்துறை 1901-ஆம் ஆண்டு உலகின் முதல் ஒருங்கிணைந்த கைரேகையியல் நிறுவனத்தை ஸ்காட்லாந்து யார்ட் போலீஸாரின் பயன்பாட்டிற்க்காக லண்டன் மாநகரில் ஏற்படுத்தியது. இதன் பிறகு ஒவ்வொரு நாடாக கைரேகை மையங்களை அதன் முக்கியத்துவம் கருதி நிருவத்துவங்கின..!

கைரேகையியல் என்றதும் இன்று எட்வர்ட் ரிச்சர்ட் ஹென்றி தான் அடையாளப்படுத்தப்படுகிறார். உண்மையில் இந்த பெயரும் புகழும் அஷிஷுல் ஹக் மற்றும் கெம் சந்திர போஸ் ஆகியோர்களுக்குத்தான் கிடைத்திருக்க வேண்டும், துரதிஷ்டவசமாக இந்தியர்கள் அந்த காலகட்டங்களில் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்தாலும், இவர்கள் இருவரது உயர் அதிகாரியாக எட்வர்ட் ரிச்சர்ட் ஹென்றி இருந்த காரணத்தினாலும் அஷிஷுல் ஹக் மற்றும் கெம் சந்திர போஸ் ஆகிய இருவரது பெயரும் வெளியில் தெரியாமல் போய்விட்டது. எத்தனையோ சாதனையாளர்கள் காலத்தாலும் சூழ்ச்சிகளாலும் மறைக்கப் பட்டிருக்கிரார்கள், அப்படி மறைக்கப்பட்ட மனிதர்களில் அஷிஷுல் ஹக்கும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். !

பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவுசெய்துவிட்டுச் செல்லுங்கள், அது எம்மை செம்மைபடுத்த உதவலாம் நன்றி.., மீண்டும் சந்திப்போம்...!

பதிவுகளை தவறவிடாமல் வாசிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

15 comments:

 1. தகவலுக்கு நன்றி.


  தொடருங்கள்.

  ReplyDelete
 2. வாருங்கள் ஐயா.திரு. வாஞ்சூர் அவர்களே ...,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் கோடி

  ReplyDelete
 3. புதுமையான வரலாற்று தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  வரலாற்றுப் பகிர்வுகள் தொடர்ந்து சிறந்து வாழ்த்துகள்!

  ReplyDelete
 4. வாருங்கள் திரு.மாணவன் அவர்களே..,

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோடி

  ReplyDelete
 5. மிகவும் ஆழமான கருத்துக்களைக் கொண்ட வரலாற்றுச் சுவடுகள்... தொடரட்டும் தங்கள் அரும்பணி.

  ReplyDelete
 6. @ HOTLINKSIN.COM திரட்டி @

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோடி.., தொடர்ந்து எம்மை ஆதரியுங்கள்...!

  ReplyDelete
 7. கைரேகை (Finger Prints ) குறித்த உங்கள் கட்டுரையை முன்னரே படித்து இருக்கிறேன். ஆனால் கருத்துரை போடவில்லை. இப்போது வலைச்சரம் வழியாக இங்கு வந்துள்ளேன்.
  “ எல்லோருக்கும் தெரிய வேண்டிய தகவல்கள். உண்மையிலேயே மறைக்கப்பட்ட மாமேதைகள்தான்.”

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு கருத்துரை தந்து என்னை ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.!

   Delete
 8. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

   Delete
 9. அன்பின் வரலாற்று சுவடுகள் - அரிய தகவல் - அவ்வளவு எளிதில் கிடைக்காத தக்வல்கள் - தேடிக் கண்டு பிடித்து உரை ஆக்கியமை நன்று - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.. வருகைக்கும் கருத்துக்கும்.!

   Delete
 10. ithu varalaatru suvaduthaan!

  mikka nantri!

  ReplyDelete
 11. வலைச்சரம் வழியே இப்பதிவைக் காணும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி. கைரேகைத் தடவவியலில் இந்தியாவின் பங்கு முதன்மையானது என்பதை அறிய பெருமையாய் உள்ளது. மாபெரும் குற்றவாளிகளும் கைரேகைகளின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டு உறுதிசெய்யப்படுவது எத்தனை சிறப்பான செயல். அருமையானதொரு பகிர்வுக்கு மிகவும் நன்றி வரலாற்று சுவடுகள்.

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் என்னை அடையாளம் காணம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வலைச்சரத்திற்க்கு நன்றி..

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...