Thursday 14 June 2012
மரணம் வென்ற அறுவை மருத்துவம் தந்த ஜோசப் லிஸ்டர், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-3); History of Surgery (Part-3)
அனைவருக்கும்
வணக்கம், (அறுவை சிகிச்சை வரலாறின் மூன்றாம் பாகம் இது, முதல் இரெண்டு பாகங்களை
படிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இணைப்புகளின் வழியே சென்று முதல் மற்றும்
இரண்டாம் பாகத்தை படித்துவிட்டு இப்பாகத்தை தொடர வேண்டுகிறேன்). சுஸ்ருதா சம்ஹிதா
நூலை அடிப்படையாக கொண்டு அபுல்காசிஸ் எழுதிய மருத்துவ நூலான கிதாப் அல் தாஸ்ரிப் (Kitab Al-Tasrif) கிட்டத்தட்ட பதினேழாம் நூற்றாண்டு வரை மருத்துவ
உலகில் தவிர்க்க இயலாத முக்கிய இடத்தை பெற்றிருந்தது என்று சொன்னால் மிகையில்லை. குறிப்பாக
இந்நூலின் லத்தீன் பதிப்பான “Concessio ei data qui componere haud valet” என்ற நூலின் வாயிலாகத்தான் ஐரோப்பிய கண்டத்தில் முதன் முதலாக போலக்னா பல்கலைகழகத்தில்
(University of
Bologna, Italy; Founded in 1088) அறுவை சிகிச்சை மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டது என்றால் அந்தக்காலத்தில் இந்நூல்
எத்தனை முக்கியத்துவம் பெற்றதாக இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
“அல் தாஸ்ரிப்” அடிப்படையாக கொண்டு ரோஜரியஸ் (Rogerius; 1140 – 1195) என்ற இத்தாலியை சேர்ந்த மருத்துவர், ப்ராக்டிகா
ஸிருர்ஜியா (Practica Chirurgiae) என்ற புகழ்மிக்க மற்றொரு மருத்துவ நூலை கி.பி.1180-ஆம் ஆண்டு எழுதினார். பெரும்பாலான நோய்களுக்கு எளிமையான மருத்துவ முறையும்,
எண்ணற்ற அறுவை சிகிச்சைகளுக்கு தீர்க்கமான நடைமுறை விளக்கங்களையும் கொண்டிருந்த
இந்நூலில் தான் உலகிலேயே முதன் முறையாக தோல் அழுகல் நோயான லுபுஸ் (Lupus) பற்றி விளக்கப்பட்டிருந்தது. எழுதப்பட்ட சில
ஆண்டுகளிலேயே போலக்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிற்றுவிப்பதில் முக்கிய
நூல்களில் ஒன்றாக இடம்பிடித்த இந்நூல், பிற்காலத்தில் பதுவா (University of Padua,
Italy; Founded in 1222 AD) மற்றும் மோண்ட்பில்லியர் (University of Montpellier,
France; Founded in 1289 AD) ஆகிய பல்கலைக்கழகங்களிலும் அறுவை சிகிச்சை மருத்துவம் பயிற்றுவிக்கப்படுவதில்
முக்கிய அங்கம் வகித்தது.
ப்ராக்டிகா
ஸிருர்ஜியா நூலை அடிப்படையாகக்கொண்டு பிரான்ஸை சேர்ந்த குய் டி செளலிக் (Guy De Chauliac, 1300 – 1368) என்ற மருத்துவர் 1363-ஆம் ஆண்டு ஸிருர்ஜியா
மேக்னா (Chirurgia Magna) என்ற நூலை எழுதினார். உடற்கூறியல் (Anatomy), மயக்கமருந்து (Anesthetics), எலும்பு முறிவுகள் (Fractures), காயங்களுக்கான (Wounds) சிகிச்சை முறைகள், சிறப்பு நோய்களுக்கான
சிகிச்சை முறைகள் (Special Diseases), பல்வேறு அறுவை சிகிச்சை நடைமுறை விளங்கங்கள் மற்றும் தைத்தல் (Stitching) ஆகிய துறைகளில் துல்லியத்தை புகுத்தி
எழுதப்பட்டிருந்த இந்நூல் கிட்டத்தட்ட நவீன மருத்துவ யுகத்தின் முன்னோடி நூலாகவே கருதப்படுகிறது.
இப்படி
ஒவ்வொருவருவராக தனக்கு முந்தைய ஆசிரியரின் நூலின் வாயிலாக மருத்துவம் பயின்று,
பின்பு அந்தநூலில் உள்ள குறைகளை களைந்து, துல்லியமான மருத்துவ சிகிச்சைகளை புகுத்தி..,
தன்னுடைய மருத்துவ ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்த உண்மைகளையும் சேர்த்து எழுதி.,
அறுவை சிகிச்சை மருத்துவத்தில் படிப்படியான வளர்ச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்,
என்றாலும் அறுவை சிகிச்சை மருத்துவமானது 100% பாதுகாப்பானதாக
இருந்ததா என்றால்., இல்லை என்றே சொல்ல வேண்டியதிருந்தது. அறுவை சிகிச்சையின் போது
ஏற்படும் ரத்தப்போக்கு (Bleeding), அறுவை சிகிச்சையின்
போது ஏற்படும் வலி (Pain), மற்றும் அறுவை
சிகிச்சைக்கு பிறகு விரைவில் குணமடையாத சீழ் வடியும் புண்ணின் (ulcer) மூலம் உண்டாகும் தொற்றுநோய் (infection) கிருமிகளின் தாக்குதல் போன்றவற்றால் அறுவை
சிகிச்சை மருத்துவம் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததாகவே இருந்துவந்தது.
அறுவை சிகிச்சையின்
போது ரத்தக்குழாய்கள் பாதிப்படையாமல் தடுத்து ரத்தப்போக்கை
கட்டுப்படுத்துவதற்க்காக அபுல்காசிஸ் லிகர்சர் (Ligatures) என்ற மருத்துவ முறையை அறிமுகப்படுத்தியிருந்தார் என்று ஏற்கனவே சென்ற பதிவில் கூறியிருந்தேன்.
லிகர்சர் மருத்துவமுறையை அடிப்படையாக கொண்டு பிரான்ஸை சேர்ந்த அம்ரோஸ் பாரே (Ambroise Pare, 1510 –
1590) என்ற மருத்துவர் பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு புதிய
கருவி ஒன்றை உருவாக்கினார், பிற்காலத்தில் ஹெமோஸ்டாட் (Hemostat) என்று அழைக்கப்பட்ட இக்கருவி பிரான்ஸை சேர்ந்த
மற்றொரு மருத்துவரான ஜுலஸ் எமிலே பியன் (Jules Emile Pean, 1830 – 1898) என்பவரால் மேம்படுத்தப்பட்டு தற்போதைய இறுதி வடிவத்தை எட்டியது. இதன் பிறகு
அறுவை சிகிச்சையின் போது ரத்தக்குழாய்கள் பாதிப்படைவது குறைந்து ரத்தப்போக்கு
ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டது. கூடுதலாக 20-ஆம் நூற்றாண்டில் ரத்த பிரிவுகள் (Blood Groups) கண்டுபிடிக்கப்பட்டு,
ரத்தஏற்றம் (Blood Transfusion) சாத்தியமானபிறகு, ரத்தப்போக்கு, ஒரு பிரச்சனையான விசயமாகவே இல்லாமல் போனது.
அறுவை சிகிச்சை
வரலாறு எப்பொழுது ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்தே மயக்கமருந்து (Anesthesia) பற்றிய ஆய்வுகளும் ஒருபுறம் ஆரம்பித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கி.மு.எட்டாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கிய இந்த ஆய்வு
கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு பிறகு
ஒருவழியாக தனது மேபட்ட முதல் நிலையை கி.பி.1840-களில் எட்டியது. அமெரிக்காவை
சேர்ந்த மருத்துவரான கிரவ்போர்டு லாங் (Crawford Long, 1815 – 1878) என்பவர் டை-எத்தில்-ஈதர் (Diethyl Ether) என்ற வாயுவை மூக்கின்
மூலமாக சுவாசிக்க செய்து ஒருவரை மயக்கமடைய செய்யலாம் என்று 1843 ஆம் ஆண்டு கண்டறிந்து அதை செயல்படுத்தியும் காட்டினார். தொடர்ந்து
வில்லியம் டி. ஜி. மோர்டன் (William T.G. Mortan, 1819 – 1868) மற்றும் ஹோரேஸ் வெல்ஸ் (Horace Wells, 1815 –
1848) என்ற இரு மருத்துவர்கள் இணைந்து 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி,
டை-எத்தில்-ஈதரை பயன்படுத்தி உலகின் முதல் மேம்பட்ட அனஸ்தீஷியா அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக
நிகழ்த்திகாட்டினார்கள்.
ஆனால்
டை-எத்தில்-ஈதர் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டதாகவும், செறிவு மிக்கதாகவும் (High Concentration) இருந்ததால் சில குறிப்பிட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்த
இயலாமல் போனது. அப்படிப்பட்ட இடங்களில் குலோரோபார்மை (Chloroform) மயக்கமருந்தாக பயன்படுத்தலாம் என்று
ஸ்காட்லாந்தை சேர்ந்த மருத்துவரான ஜேம்ஸ் யெங் சிம்சன் (James Young Simpson, 1811
– 1870) என்பவர் 1847 ஆம் ஆண்டு கண்டறிந்தார். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அனஸ்தீஷியா
துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த இரண்டுமே வாயுக்களும் தற்போது மிக அரிதாகவே
பயன்படுத்தப்பட்டு வருகிறது. நவீன மருத்துவத்தில் தற்போது மெத்தில் ப்ரோபல் ஈதர் (Methyl Propyl Ether) மற்றும் மெத்தாக்ஸிப்ளுரேன் (Methoxyflurane) ஆகிய வாயுக்கள் தான் அனஸ்தீஷியாவாக பயன்படுத்தப்படுகிறது.
“ஆபரேஷன் சக்சஸ் பட்
பேஷன்ட் டெட்” என்று மருத்துவர்களை பற்றி நகைச்சுவை துணுக்குகளை அடிக்கடி பத்திரிகைகளில்
வெளிவர வாசித்து சிரித்திருப்பீர்கள். உண்மையில் அதுதான் பதினெட்டாம் நூற்றாண்டு
வரையில் நடந்துகொண்டிருந்தது. அறுவை சிகிச்சைகள் உயிரிழப்பின்றி வெற்றிகரமாக
நடந்தாலும் கூட, அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 50% மேற்பட்டவர்கள் அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட புண்
ஆறாமல் சிறிது நாட்களிலேயே சீல்பிடித்து செப்டிக் ஏற்பட்டு தோற்று நோய்
கிருமிகளால் தாக்கப்பட்டு இறக்க ஆரம்பித்தார்கள். இதனை தடுக்க வலி தெரியாமல்
மருத்துவ உலகம் கையை பிசைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் தான் கிளாஸ்கோ
பல்கலைக்கழகத்தின் (University of Glasgow, England; Founded in 1451) அறுவை சிகிச்சை மருத்துவ பிரிவிற்கு ஜோசப் லிஸ்டர் (Joseph Lister, 1827 –
1912), என்பவர் தலைமை பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.
தனது கட்டுப்பாட்டின்
கீழ் இருந்த அறுவை சிகிச்சை பிரிவில், அறுவை சிகிச்சைக்கு பிறகு பாதிக்கும்
மேற்பட்டோர், அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட புண் ஆறாமல் சிறிது நாட்களிலேயே சீல்பிடித்து
நெக்ரோசிஸ் (Necrosis) என்னும் அழுகல் நோய்
தாக்கி இறந்து போவதை கண்டு மனம் வருந்தினார் ஜோசப் லிஸ்டர். நோயாளிகளின் இறப்பை தடுக்க
என்ன செய்யலாம் என்று லிஸ்டர் பல்வேறு ஆய்வுகளை மேற்க்கொண்டிருந்தபோது தற்செயலாக
ஹங்கேரியை சேர்ந்த மருத்துவரான இக்னாஷ் செம்மெல்வியூஸ் (Ignaz Semmelweis, 1818 –
1865) என்பவர் எழுதிய ‘தொற்று நோய் கிருமிகளின் பரவல்’ பற்றிய சில கட்டுரைகளை படிக்க நேர்ந்தது. செம்மெல்வியூஸ்
அந்தக் கட்டுரைகளில் மருத்துவர்களின் கைகளின் வழியாகத்தான் ஒரு நோயாளியிடமிருந்து
மற்றொரு நோயாளிக்கு தொற்று நோய் கிருமிகள் அதிகம் பரவுகின்றன என்றும் ஆகையால் ஒரு
நோயாளிக்கு சிகிச்சை செய்துவிட்டு மற்றொரு நோயாளியை அணுகுவதற்கு முன்பு மருத்துவர்
தனது கைகளை நன்றாக கழுவுதல் அவசியம் என்றும் விவரித்திருந்தார். மேலும், தொற்றுநோய்
கிருமிகளின் தாக்கத்தை குறைக்க மருத்துவமனையை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல்
அவசியம் என்றும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து லிஸ்டர்
தமது அறுவை சிகிச்சை பகுதியை கூடுமானவரை தூய்மையாக வைத்துக்கொண்டார், இருந்தாலும்
இறப்பின் சதவீதம் மட்டும் துளியும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் லூயிஸ் பாஸ்டர் (Louis Pasteur, 1822 –
1895) என்ற பிரான்சஸை சேர்ந்த மருத்துவர் 1865 ஆம் ஆண்டு கிருமிகள் (Bacteria) பற்றி “Germ Theory of Diseases” என்ற ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்த கட்டுரையை படித்த ஜோசப்
லிஸ்டர் சுகாதாரமின்மையின் காரணமாக சுற்றுப்புறத்தில் உருவாகும் பாக்டீரியாக்கள் (Bacteria) திறந்த புண்களின் வழியாக உள்நுழைந்து தான்., நோயாளிகளின்
உடலில் தொற்று நோய் கிருமிகளை உண்டாக்குகிறது என்பதை புரிந்துகொண்ட லிஸ்டர் அறுவை
சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவிகளை நீரில் போட்டு கொதிக்க வைப்பதன் மூலம் (Sterilization) அறுவை சிகிச்சை கருவிகளின் வாயிலாக தொற்றுநோய்
கிருமிகள் பரவவிடாமல் தடுக்கலாம் என்பதையும் புரிந்துகொண்டார்.
தொடர்ந்து பல்வேறு
ஆய்வுகளை மேற்கொண்ட ஜோசப் லிஸ்டர் இறுதியில் கார்பாலிக் அமிலத்தை (Carbolic Acid, Knows as
Phenol) பயன்படுத்தி தொற்று
நோய் கிருமிகளின் தாக்கத்தை முழுமையாக குறைக்க முடியும் என்று கண்டறிந்தார். அறுவை
சிகிச்சைக்கு முன்பு தனது கைகளை கார்பாலிக் அமிலத்தை பயன்படுத்தி நன்றாக கழுவிக்கொண்ட
லிஸ்டர், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் உபகரணங்களையும் கார்பாலிக் அமிலத்தை
பயன்படுத்தி நன்றாக கழுவிக்கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு கட்டு
போடுவதற்க்காக பயன்படுத்தும் கட்டுத்துணி (Bandage Cloth) ஆகியவற்றையும்
கார்பாலிக் அமிலத்தில் கழுவி தூய்மைப்படுத்தி உபயோகிக்க ஆரம்பித்தார். அதோடு அறுவை
சிகிச்சை அறைகளையும் (Operation Theater) கார்பாலிக் அமிலத்தை பயன்படுத்தி, கழுவி சுத்தமாக வைக்கவும் உத்தரவிட்டார்.
இதன் காரணமாக தொற்று நோய் கிருமிகளின் தாக்கம் குறைந்து நோயாளிகள் விரைவில்
குணமடைய ஆரம்பித்ததோடு அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அறுவை சிகிச்சை பிரிவில்
ஒரே ஆண்டில் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் இறப்பின் விகிதம் 50% சதவீதத்திலிருந்து வெறும் 10% சதவீதத்திற்கும் கீழ் வந்தது. தொடர்ந்து ஆண்டிசெப்டிக் துறையில் ஏற்பட்ட
அசாதாரண வளர்ச்சி அறுவை சிகிச்சை மருத்துவத்தை பாதுகாப்பானதாக மாற்றியதோடு
மட்டுமல்லாமல் புதிய பரிணாமத்தை நோக்கி வளரவும் வித்திட்டது.
ஒன்றிக்கும்
மேற்பட்டவர்கள் “நவீன அறுவை சிகிச்சையின் தந்தை” என்று அழைக்கப்பட்டாலும் கூட,
மரணம் வென்ற அறுவை சிகிச்சை மருத்துவத்தை தந்த வகையில் ஜோசப் லிஸ்டர் பத்தொன்பதாம்
நூற்றாண்டில் வாழ்ந்த ஈடு இணையற்ற அறுவை சிகிச்சை மருத்துவர்களுள் ஒருவராகவே கருதப்படுகிறார்.
மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களுடன் அறுவை சிகிச்சை வரலாறு பாகம் நான்கு’
உங்களுக்காக காத்திருக்கிறது, தொடர்ந்து இணைந்திருங்கள். பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை
மறக்காமல் பதிவு செய்யுங்கள் நண்பர்களே, உங்கள் கருத்துக்கள் என்னை
திருத்திக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் உதவும். மேலும் பல புதிய தகவல்களுடன்
விரைவில் உங்களை சந்திக்கிறேன். நன்றி.., வணக்கம்..!
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
கார்பாலிக் அமிலம் இது பற்றி எல்லாம் கேள்வி பட்டதே இல்லங்க அறிய பல தகவல்களை சொல்றிங்க தெரிஞ்சிக்கிறோம் . பகிர்வுக்கு நன்றி .
ReplyDeleteTha.ma.2
கார்பாலிக் அமிலம்ங்கிறது வேறே ஒன்னும் இல்லை அக்கா, பினாயில் (Phenol) தான். :)
Deleteம்ம்ம்ம்ம்
ReplyDeleteநல்ல பகீர்வு குள்விப் படாத பல விடயங்களை அறிந்தேன்
தொடருங்கள்......................................
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிஸ்டர்.!
Deleteநல்ல அறிந்து கொண்டு வைத்திருக்கக்கூடிய தகவல்கள்,
ReplyDeleteபிரயோசனமான தகவல்கள் நண்பா...:)
ReplyDeleteஉன் பணிதொடர வாழ்த்துகிறேன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!
Deleteரத்தப்போக்கு, மயக்க மருந்து பற்றி அரிய தகவலுடன் பதிவிட்டிருக்கிறீர்கள். நல்ல விசயங்களை எப்போதும் தொடருங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி விச்சு சார், வருகைக்கும் கருத்துக்கும்.!
Deleteதெரியாத பல தகவல்கள் ! நன்றி சார் ! தொடருங்கள் !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.!
Deleteதுரத்தி துரத்தி அடிக்கிறீங்களே.., ஸ்ஸப்பா முடியலை.!
ReplyDeleteஅவசியமான கருத்துகள்..உயிர் வ◌ாழ வழி செய்த மருத்துவத்தகவல்கள் அறிவதில் பெருமகிழ்வு.வாழ்த்துக்கள் சொந்தமே
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!
Deleteமருத்துவ உலகம் மர்மங்கள் நிறைந்தவை. புரிகிறது என்றாலும், மீண்டும் புரியாமல் போய்விடும்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.!
Deleteலிஸ்டர் உத்வேகம் தருகிறார்...படங்கள் பயம் காட்டுகின்றன...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே.!
Deleteவழக்கம்போல் விளக்கமான ,பல அரிய தகவல்கள் கொண்ட பகிர்வு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.!
Deleteபுதிய வரலாற்று தகவல்கள் பகிர்வுக்கு நன்றி-பிரதர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!
Deleteநல்ல பயனுள்ள மருத்துவ தகவல்கள்..அடுத்த பதிவை ஆவலாக எதிர்பார்க்கிறேன்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!
Deleteதகவல் பகிர்வுக்கு நன்றி.....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல.!
Deleteபலருக்கும் உபயோகமானதாக இருக்கும் என்னையும் சேர்த்து பகிர்ந்த நண்பனுக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.!
Deleteதாங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் எடுத்துக் கொள்ளும்
ReplyDeleteஅககறையும் முயற்சியும் எம்மை பிரமிக்கச் செய்து போகிறது
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களை
அருமையான பதிவுகளாக்கித் தரும் தங்களுக்கு
என் மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் உற்சாகமான பின்னூட்டலுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.!
Deleteநல்ல தகவல்கள்,
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சகோ வருகைக்கும் கருத்துக்கும் :)
Deleteபோலக்னா தான் ஐரோப்பால முதல் பல்கலைகழகமா
ReplyDeleteஆமாம் நண்பா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!
Deleteநண்பா உண்மையில் உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்ல பதிவுகள் தொடரட்டும் உங்கள் பனி நன்றி & வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்.!
DeleteNAANUM KARUTTHU POODUVEENNAPPA
ReplyDeleteஅண்ணனுக்கு கொஞ்சம் மரியாதை (?) இருக்கு பதிவுலத்தில கெடுத்துப்புடாதடா தம்பி ஹி ஹி ஹி.!
Deletenalla patheve
ReplyDeleteநிறைய பல அறிய தகவல்களை தெரிந்து கொண்டோம் ஆனா ஒரு சந்தேகம் சகோ. அறுவை சிகிச்சையின் போது கார்பாலிக் அமிலத்தை பயன்படுத்துகிறார்கள்◌ா என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும்.
ReplyDelete