Saturday, 29 December 2012

வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன?; carbon dioxide can really destroy the world (part-2) - varalatru suvadugal


அனைவருக்கும் வணக்கம், உலகை அச்சுருத்திக்கொண்டிருக்கும் குளோபல் வார்மிங் பற்றிய எனது பதிவின் இரண்டாம் பாகம் இது. முதல் பாகத்தில் புவி தனது மேற்பரப்பு வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தொடர்ந்து எவ்வாறு தக்கவைத்துக்கொள்கிறது (has been called as Greenhouse Effect) என்பது பற்றி விரிவாக எழுதியிருந்தேன், அதோடு புவி வெப்பமடைதல் அல்லது புவி சூடாதல் அல்லது குளோபல் வார்மிங் (Global Warming) என்றால் என்ன என்பது பற்றியும், அது சார்ந்த அடிப்படைத் தகவல்களைப் பற்றியும் விரிவாக எழுதியிருந்தேன், முதல் பாகத்தை வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு, இந்த பதிவை தொடர வேண்டுகிறேன்!

12/29/2012 01:06:00 pm by MARI The Great · 71

Thursday, 20 December 2012

வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழியக்காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-1); கிரீன்ஹவுஸ் விளைவு என்பது என்ன? carbon dioxide can really destroy the world by varalatru suvadugal


அனைவருக்கும் வணக்கம், நெருங்கிவரும் டிசம்பர் 21, 2012 நம் எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறதோ இல்லையோ உலக அழிவு பற்றி நம் அனைவரையும் அதிகம் சிந்திக்கவைத்திருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது! இதற்க்கு முன்பும் பலமுறை உலக அழிவு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இப்போது போல் எப்போதும் உலக அழிவு பற்றி இத்தனை பரபரப்பாக விவாதிக்கப்படவில்லை என்பதே உண்மை! இந்தமுறை உலக அழிவு பற்றி இத்தனை பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்கு காரணம் மாயன் இன மக்களும் அவர்களது காலண்டரும்தான் என்றால் மிகையில்லை! உண்மையில் டிசம்பர் 21, 2012-ல் உலகம் அழியாவிட்டாலும் கூட 2100-ல் உலகம் அழியும் நிகழ்வு துவங்கிவிடும் என்றால் “இதென்ன புதுப் பீதீ” என்பீர்கள்தானே நீங்கள்? ஆனால் இதனை உலகின் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் உருதிப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் அல்லவா? தாவரங்கள் உட்பட புவியில் வாழும் அனைத்து உயிரினங்களும் அடியோடு அழிந்துபோகும் அந்த உலக அழிவிற்கு காரணமாக இருக்கப்போவது கார்பன்டை ஆக்ஸைடு (Carbon Dioxide, CO2) என்ற கரியமிலவாயு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா நண்பர்களே?

12/20/2012 11:24:00 am by MARI The Great · 56

Monday, 24 September 2012

சுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்; ஓசோன் என்றால் என்ன அது எவ்வாறு பாதிப்படைகிறது?; how do CFC's depleting Ozone Layer by Varalatru Suvadugal


அனைவருக்கும் வணக்கம், (வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடின் (CO2) அளவை கட்டுப்படுத்தி புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதில் கடல் (Sea) எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்று முந்தைய பதிவின் வாயிலாக பார்த்தோம்! முந்தைய பதிவை வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இப்பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் தோன்றியதற்கு உயிர்க்கோளம், முக்கிய காரணமாக இருந்தாலும் இன்றுவரை புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்க்கு ஓசோன் படலமும் (Ozone Layer) ஒரு முக்கிய காரணம் என்பதை எவராலும் மறுக்க இயலாது! ஓசோன் படலம் என்றதுமே நம் நினைவில் வருவது..., வீட்டில் உபயோகிக்கும் ஃப்ரிட்ஜ்ஜிம் (Fridge) அதுவெளியிடும் குளோரோ ஃபுளோரோ கார்பனும் (Chlorofluorocarbons) அதனால் ஓசோனில் ஏற்பட்ட துளையும்தான் (Ozone Depletion) என்றால் மிகையில்லை! வீட்டிற்குள் உபயோகிக்கும் ஃப்ரிட்ஜ் எப்படி விண்வெளியில் உள்ள ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் ஓசோன் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்! 

9/24/2012 12:02:00 pm by MARI The Great · 135

Thursday, 13 September 2012

உங்களுக்கு தெரியுமா கடல்களும் மரங்களை போல் கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்கிறது என்று?; சுற்றுப்புறசூழல் சீர்கேடும் குறைந்துகொண்டிருக்கும் புவியின் வாழ்நாளும்; environmental degradation by varalatru suvadugal


அனைவருக்கும் வணக்கம் (இரண்டாவது உயிர்க்கோளம் அதாவது இரண்டாவது பூமி பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இந்த பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் உருவாக அடிப்படை காரணமாக விளங்கிய உயிர்கோளம் (Biosphere) கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே புவியில் உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது! புவியின் உயிர்கோளம் அதாவது புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இன்னும் அதிகபட்சமாக 2.5 பில்லியன் ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது! அதன் பிறகு சூரியனின் மேற்பரப்பில் ஏற்படவிருக்கும் வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்பட்டு பூமி உயிரினங்கள் இல்லாத கோளாக மாறிவிடும் என்கிறார்கள் விண்ணியல் வல்லுனர்கள்! ஆனால் இன்று நாம் செய்துகொண்டிருக்கும் தவறுகளால் புவி அதன் வாழ்நாளிளிருந்து கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிய காத்திருக்கிறது என்றால் அதிர்ச்சியாக உள்ளதல்லவா? வாருங்கள் இன்றைய பதிவினூடாக இதைப்பற்றி அலசுவோம்! 

9/13/2012 11:30:00 am by MARI The Great · 106

Tuesday, 28 August 2012

ரெண்டாவது உயிர்க்கோளம் ஐ மீன் இரண்டாவது பூமி (புவி); Biosphere 2 by Varalatru Suvadugal


அனைவருக்கும் வணக்கம், (நாம் வாழும் இந்த பூமியைப் பற்றி நாம்தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில அடிப்படை தகவல்களை உள்ளடக்கிய எனது முந்தைய பதிவை வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று தவறாமல் வாசிக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்) அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்படும் புகை, அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான ரசாயனங்களின் பயன்பாடுகள் ஆகியவற்றால் இன்று நாம் நமது சுற்றுப்புறத்தை நம்மால் இயன்ற அளவு மாசுபடுத்தி வைத்திருக்கிறோம்! அதன் விளைவுகளை கண்கூடாக பார்த்தபிறகு மீண்டும் பழையதுபோலவே மாசுபடுத்தப்படாத பூமி கிடைக்காதா என்று ஏங்குகிறோம்! அப்படிப்பட்ட மாசுபடுத்தப்படாத பூமி ஒன்று உண்மையில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா நண்பர்களே? சத்தியமாக பொய்யில்லை உண்மைதான், அதுதான் இண்டாவது உயிர்க்கோளம் (Biosphere 2) என்று அழைக்கப்படும் இரண்டாவது பூமி! 

8/28/2012 01:09:00 pm by MARI The Great · 87

Thursday, 2 August 2012

உலகின் முதல் பல்கலைக்கழகம் தக்சசீலா அழிந்துபோன வரலாறு; destruction of takshashila the world first university


அனைவருக்கும் வணக்கம், உலகின் முதல் பல்கலைகழகமான தக்சசீலாவைப் பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்! வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இந்தப் பதிவை தொடர வேண்டுகிறேன்! தற்போது வரையிலும் எந்த நூற்றாண்டில், யாரால், எப்போது துவங்கப்பட்டது என்று உறுதியிட்டு கூற முடியாத உலகின் முதல் பல்கலைகழகமான தக்சசீலா தற்போதைய பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டேக்ஸிலா என்ற நகரில் தோராயமாக கி.மு.ஏழாம் நூற்றாண்டிலிருந்து (700 BCE) இயங்கி வந்ததாக சென்ற பதிவில் பார்த்தோம் இல்லையா நண்பர்களே! இன்றைய பதிவில் தக்சசீலா பல்கலைக்கழகம் எப்படி அழிந்து போனது என்பது பற்றிப் பார்ப்போம் வாருங்கள்! 

8/02/2012 12:12:00 pm by MARI The Great · 121

Tuesday, 24 July 2012

உங்களுக்கு தெரியுமா உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள் இந்தியர்கள் என்று?; தக்சசீலா உலகின் முதல் பல்கலைக்கழகம்; Thakshasila World First University


அனைவருக்கும் வணக்கம்.., ஒரு மனிதனுக்கு தேவையான ஒழுக்கம், அறிவு ஆகியவற்றை கொடுப்பதுதான் கல்வி! அந்த கல்வியின் மூலம் பெற்ற அறிவை கொண்டே எந்தவித மந்திர சக்தியின் உதவியும் இன்றி இப்புவியில் தனக்கு தேவையானவற்றை, தானே தயாரித்துக்கொள்ளும் வல்லமையை மனிதனால் பெற முடிந்தது! அந்த வல்லமையை அவன் கற்கும் அடிப்படை கல்வியிடமிருந்து ஒருவனால் பெற்றிட முடியாது., அதையும் தாண்டி கற்கும் உயர் கல்வியிடமிருந்து மட்டுமே அவனால் பெற இயலும்! அத்தகைய உயர் கல்வியை உலககெங்கும் உள்ள மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருப்பவை தான் பல்கலைக்கழகங்கள்! இத்தகைய சிறப்பு மிக்க பல்கலைக்கழகங்கள் என்ற அமைப்பை உலகில் முதன் முதலில் நிறுவியவர்கள் இந்தியர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே! 

7/24/2012 12:28:00 pm by MARI The Great · 95

Thursday, 19 July 2012

மை நேம் இஸ் சிட்டி..ஸ்பீடு ஒன் டெரா பைட்ஸ்..மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்; My name is City speed one terabytes memory one zettabytes


அனைவருக்கும் வணக்கம்.., தலைப்பை பார்த்து எந்திரன் சினிமா விமர்சனம் - என்று நம்பி வந்திருக்கும் சினிமா பிரியர்களுக்கு பதிவின் ஆரம்பத்திலேயே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்., சர்வ நிச்சயமாய் இது சினிமா விமர்சன பதிவு இல்லை.! நீங்கள் நினைக்கும் எந்த விஷயமும் இந்த பதிவில் இருக்கப் போவதில்லை.! ஆகையால் இப்போதே இந்தப் பக்கத்தை மூடிவிட்டு வேறு ஏதாவது நல்ல (!) தளங்களுக்கு ஓடிவிடுவது உத்தமம்J..! இதற்க்கு பிறகும்.., நீங்கள் இந்த பதிவை வாசித்து விடுவது என்ற திடமான மனதுடன் இருந்தால் உங்களுக்கு நிகழவிருக்கும் துயரத்திற்கு என்னால் பொறுப்பேற்க முடியாதுJ.! 

7/19/2012 11:45:00 am by MARI The Great · 75

Tuesday, 19 June 2012

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சில அடிப்படை தகவல்கள், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-4); History of Surgery (Part-4), History of Organ Transplantation


அனைவருக்கும் வணக்கம், (கடந்த பதிவுகளில் பொது அறுவை சிகிச்சையின் வரலாறுகளை பற்றி விரிவாக அலசினோம் அல்லவா?, அந்த வகையில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Organ Transplantation) பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம் வாருங்கள், அறுவை சிகிச்சை வரலாறின் முந்தைய பாகங்களை வாசிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்து விட்டு இப்பதிவை தொடர வேண்டுகிறேன்) பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும், சாதாரண அறுவை சிகிச்சைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உதாரணத்திற்கு ஒரு சைக்கிள் ட்யூப்பை (Cycle Tube) எடுத்துக்கொள்வோம். ட்யூப் பஞ்சர் (Puncher) ஆனால் அதனை ஒட்டி சரி செய்வது சாதாரண அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொண்டால் அதே பஞ்சர் ஒட்டி சரி செய்ய இயலாத அளவிற்கு பெரிதாய் போய்விடும் போது அந்த ட்யூப்பையே கழட்டி தூர எறிந்துவிட்டு புதிதாக ட்யூப் மாற்றிக் கொள்ளுதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொள்ளலாம்.

6/19/2012 05:59:00 pm by MARI The Great · 105

Thursday, 14 June 2012

மரணம் வென்ற அறுவை மருத்துவம் தந்த ஜோசப் லிஸ்டர், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-3); History of Surgery (Part-3)


அனைவருக்கும் வணக்கம், (அறுவை சிகிச்சை வரலாறின் மூன்றாம் பாகம் இது, முதல் இரெண்டு பாகங்களை படிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இணைப்புகளின் வழியே சென்று முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை படித்துவிட்டு இப்பாகத்தை தொடர வேண்டுகிறேன்). சுஸ்ருதா சம்ஹிதா நூலை அடிப்படையாக கொண்டு அபுல்காசிஸ் எழுதிய மருத்துவ நூலான கிதாப் அல் தாஸ்ரிப் (Kitab Al-Tasrif) கிட்டத்தட்ட பதினேழாம் நூற்றாண்டு வரை மருத்துவ உலகில் தவிர்க்க இயலாத முக்கிய இடத்தை பெற்றிருந்தது என்று சொன்னால் மிகையில்லை. குறிப்பாக இந்நூலின் லத்தீன் பதிப்பான “Concessio ei data qui componere haud valet” என்ற நூலின் வாயிலாகத்தான் ஐரோப்பிய கண்டத்தில் முதன் முதலாக போலக்னா பல்கலைகழகத்தில் (University of Bologna, Italy; Founded in 1088) அறுவை சிகிச்சை மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டது என்றால் அந்தக்காலத்தில் இந்நூல் எத்தனை முக்கியத்துவம் பெற்றதாக இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். 

6/14/2012 09:30:00 am by MARI The Great · 40