Tuesday 28 August 2012
ரெண்டாவது உயிர்க்கோளம் ஐ மீன் இரண்டாவது பூமி (புவி); Biosphere 2 by Varalatru Suvadugal
அனைவருக்கும்
வணக்கம், (நாம் வாழும் இந்த பூமியைப் பற்றி நாம்தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில அடிப்படை தகவல்களை உள்ளடக்கிய எனது முந்தைய
பதிவை வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று தவறாமல்
வாசிக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்) அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்படும் புகை,
அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான
ரசாயனங்களின் பயன்பாடுகள் ஆகியவற்றால் இன்று நாம் நமது சுற்றுப்புறத்தை நம்மால் இயன்ற அளவு மாசுபடுத்தி
வைத்திருக்கிறோம்! அதன் விளைவுகளை கண்கூடாக பார்த்தபிறகு மீண்டும் பழையதுபோலவே மாசுபடுத்தப்படாத பூமி கிடைக்காதா என்று ஏங்குகிறோம்!
அப்படிப்பட்ட மாசுபடுத்தப்படாத பூமி ஒன்று உண்மையில் இருக்கிறது என்றால் உங்களால்
நம்ப முடிகிறதா நண்பர்களே? சத்தியமாக பொய்யில்லை உண்மைதான், அதுதான் இண்டாவது
உயிர்க்கோளம் (Biosphere 2) என்று
அழைக்கப்படும் இரண்டாவது பூமி!
இரண்டாவது
உயிர்க்கோளத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் சுற்றுப்புற சூழல்
மாசுபடுதல் என்றால் என்ன என்பது பற்றி சுருக்கமாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்! நம்மை
சூழ்ந்திருக்கும் காற்று நாம் சுவாசிக்க இயலாத அளவிற்கு அசுத்தமாக மாறுவது மற்றும் நாம் குடிக்கும் குடிநீர், உண்ணும் உணவுப்பொருட்கள்
உட்கொள்ள இயலாத அளவிற்கு நஞ்சாக மாருவதைத்தான் சுற்றுப்புறசூழல் மாசுபடுவது
என்கிறோம்! நாம் எந்த அளவிற்கு நமது சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி
வைத்திருக்கிறோம் என்பதற்கு உதாரணமாக ஒரு சிறிய விஷயத்தை கூறுகிறேன், கேளுங்கள்.!
நான்கில் மூன்று பாகம்
நீரால் சூழப்பட்ட இப்புவியில் உள்ள மொத்த நீரில் 97% சதவீதம் கடல் நீர் தான் (Seawater) அதாவது நாம் நேரடியாக
குடிக்க இயலாத உப்பு நீர் (Saline Water)! மீதமுள்ள 3% சதவீத தண்ணீர் தான் நாம் நேரடியாக குடிக்க உகந்த நன்னீர்
ஆகும்! இந்த 3% சதவீதத்தில் ஆறுகள்,
ஏரிகள், குளம், குட்டை, நிலத்தடி நீர் ஆகிய அனைத்து நன்னீர் ஆதாரங்களும் அடங்கும்!
இவற்றில் நிலத்தடி நீர் தான் உலக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியபங்கு
வகிக்கிறது என்றால் மிகையில்லை! தோராயமாக 30% சதவீத அளவிற்கு உலக
மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது நிலத்தடிநீர் (Ground Water).! அந்த நிலத்தடி நீரின் தற்போதைய நிலை என்ன
தெரியுமா நண்பர்களே? உலகெங்கும் 60% இடங்களிலுள்ள நிலத்தடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை
என்பதுதான்! என்ன நண்பர்களே அதிர்ச்சியாக இருக்கிறதா? இது பற்றி மேலும்
தெரிந்துகொள்வோம், வாருங்கள்.!
கடந்த 2010 ஆண்டில் உலகெங்கும் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு
ஏற்றதாக இருக்கிறதா என்று பெரிய அளவில் சோதனை மேற்க்கொள்ளப்பட்டது! சோதனையின் முடிவில்
உலகெங்கும் 60% சதவீத இடங்களிலுள்ள நிலத்தடி
நீரில் ஃபுளோரைடு (Fluoride), கால்சியம் குளோரைடு (Calcium Chloride) மற்றும் சல்பேட் (Sulfate) போன்ற நச்சுப்பொருட்கள் கலந்திருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது! இந்த நச்சுப்பொருட்கள் கலந்துள்ள நீரை பருகுவதால் மனிதர்களுக்கு கேன்சர் உள்ளிட்ட எண்ணற்ற கொடிய ஏற்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது!
பெருகிவரும் ரசாயன கழிவுகளால் வெறும் 25 ஆண்டுகளில்தான்
நிலத்தடிநீர் இந்த அளவு மோசமாக மாசடைந்திருப்பதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வின்
அறிக்கைகள்! இதனை பல்வேறு நாடுகளை சேர்ந்த நீர்வளத்துறையின் (Department of Water
Resource) தனிப்பட்ட
அறிக்கைகளும் உறுதிப்படுத்துகின்றன!
உலகெங்கும் உள்ள
நிலத்தடி நீரின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று மேலே சொன்னேன் அல்லவா, அப்போது
சென்னையில் நிலத்தடிநீரின் தூய்மையை பரிசோதிப்பதற்காக சென்னையை சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து நிலத்தடி நீர் பெறப்பட்டு அவை
சோதனைக்கு உட்படுத்தப்பட்டது! சோதனையின் முடிவில் இரண்டே இரண்டு இடங்களில் இருந்து
பெறப்பட்ட நிலத்தடிநீர் மட்டுமே குடிப்பதற்கு ஏற்றதாக இருப்பதாக கண்டறியப்பட்டது! எஞ்சிய
இடங்களிலிருந்து பெறப்பட்ட நீரில் ஃபுளோரைடு கலந்திருந்தது உறுதிசெய்யப்பட்டது! இரண்டு
வருடங்களுக்கு முன்பே சென்னை நிலத்தடி நீரின் நிலை இந்த அளவு மோசமாக
இருந்திருந்தால், இப்போது எப்படி இருக்ககூடும் என்று நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறதல்லவா?
இந்த அளவிற்குத்தான் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்திக் கொண்டிருப்பதை நோக்கிய நமது
பயணம் சென்றுகொண்டிருகிறது! இது ஒரு சின்ன உதாரணம் தான் உங்களை மிரட்ட
இதைப்போல இன்னும் பல விசயங்கள் இருக்கிறது.!
சரி இப்போ பதிவோட
தலைப்புக்கு போவோம்! உயிரினங்கள் வாழ்வதால் தான் பூமி ஒரு உயிர்க்கோள் என்று
அழைக்கப்படுகிறது! புவியில் உயிரினங்கள் தோன்றியதற்கு பல்வேறு காரணிகள் உறுதுணையாக
இருந்தாலும் மிகமுக்கிய காரணமாக கூறப்படுவது புவியின் நீர்க்கோளம், நிலக்கோளம்
மற்றும் வளிமண்டலம் ஆகியவையே ஆகும்! இவற்றில் நிலவிய சாதகமான சூழ்நிலைகளின் விளைவாகவே
புவியில் தாவரங்கள், உட்பட நுண்ணியிரிகள், விலங்குகள் மற்றும் மனிதன் ஆகிய அனைத்து உயிரினங்களும் தோன்றியது!
இப்படி தோன்றிய
உயிரினங்கள் எவ்வித பாதிப்பும் இன்றி புவியில் தொடர்ந்து வாழ சுற்றுசூழல் அதாவது
சூழ்நிலைமண்டலம் (Ecosystem) பாதிப்படையாமல்
இருப்பது மிகவும் அவசியம்! தாவரங்கள், நுண்ணியிர்கள், நீந்துவன, ஊர்வன, பறப்பன,
விலங்குகள் ஆகிய அனைத்தும் சேர்ந்த தொகுப்பைத்தான் சூழ்நிலைமண்டலம் என்று
அழைக்கிறார்கள்! உயிருள்ள இந்த சூழ்நிலைமண்டலமும், உயிரற்ற இயற்கை சூழலும் (நீர்,
நிலம், காற்று) சேர்ந்துதான் புவியில் மனித இனம் தோன்றுவதற்கு வித்திட்டது! மனித இனம்
உருவாகி பரவியதில் சூழ்நிலைமண்டலத்திற்கும் இயற்கை சூழலுக்கும் இடையேயுள்ள தொடர்பைபற்றி
ஆய்வு செய்யும் துறையைத்தான் சூழியல் (Ecology) என்று அழைக்கிறோம்! சூழ்நிலைமண்டலம்
மற்றும் இயற்கை சூழல் ஆகிய அனைத்தும் இணைந்த ஓட்டு மொத்த தொகுப்பையே உயிர்கோளம் (Biosphere) என்று அழைக்கிறார்கள்!.
நமக்கு தெரிந்து பரந்து
விரிந்த இந்த பேரண்டத்தில் பூமியிலிருந்து தோராயமாக 14 பில்லியன்
ஒளியாண்டுகள் சுற்றுதொலைவில் பூமியில் மட்டுமே உயிர்கோளம் இருப்பதால் பூமி, உயிர்க்கோளம்-1 (Biosphere 1, The Earth) என்று அழைக்கப்படுகிறது! காடுகளை அழித்தல், நீர், நிலம் மற்றும் காற்றை
மாசுபடுத்துதல் மூலமாக சூழ்நிலைமண்டலம் மற்றும் இயற்கை சூழலின் மீது நாம் பாதிப்பை
ஏற்படுத்தும் போது இதன் ஓட்டு மொத்த தொகுப்பான உயிர்கோளம் கொஞ்சம் கொஞ்சமாக
அழிக்கப்பட்டு புவியில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழல் முற்றிலும்
அழிக்கப்படும்! புவியிலுள்ள உயிர்க்கோளத்தை எடுத்துக்கொண்டால் அது இயற்கையாகவே
உருவானது! இயற்கையாக உருவான இந்த உயிர்கோளத்தை போலவே செயற்கையாக இப்புவியில்
மனிதனால் உருவாக்கப்பட்ட இயற்கை மண்டலம் தான் இரண்டாவது உயிர்க்கோளம் (Biosphere-2) என்று அழைக்கப்படும் இரண்டாவது பூமி!
அமெரிக்காவின்
அரிசோனா (Arizona) மாநிலத்திலுள்ள டஸ்கன் (Tucson) என்ற நகரிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாண்டா கேடலினா (Santa Catalina Mountain) என்ற மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் மிகச்சிறிய கிராமம் ஆரக்கிள் (Oracle)! இங்கு தான் மேற்சொன்ன ரெண்டாவது உயிர்க்கோளம் மனிதனால்
செயற்கையாக கட்டப்பட்டுள்ளது! கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் முழுக்க முழுக்க கண்ணாடி தடுப்பு சுவர்களுக்குள்
கட்டப்பட்டுள்ள இந்த சின்னஞ்சிறிய உலகத்தில் புவியில் உயிரினங்கள் தோன்றியபோது
இயற்கை மண்டலம் எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே அளவு தூய்மையுடன் செயற்கையாக கட்டப்பட்டுள்ளது!
கண்ணாடி தடுப்பு சுவர்களுக்குள் இந்த உலகம் உருவாக்கப்பட்டுள்ளதால் வெளிக்காற்று
உட்செல்லவோ உட்காற்று வெளிச்செல்லவோ இயலாது! வெயில் காலத்தில் உள்ளே உள்ள காற்று
சூடாகாமல் இருப்பதை தடுக்கவும், உள்ளே உள்ள காற்றின் அளவை சரியான அளவில்
வைத்துக்கொள்ளவும் லங்க்ஸ் (Lungs) மிகப்பெரிய அமைப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது! இதன் கட்டுமானம் மிகவும் சிக்கலான மற்றும் உயரிய தொழில்நுட்பத்தை
கொண்டது! தடுப்பு சுவர் அமைக்க பயன்டுத்தப்பட்ட கண்ணாடிகளும், அதனை தாங்கி
நிற்கும் இரும்பு குழாய்களும் (Steel Tube) கூட மிகவும் பிரத்தியோகமாக
தயாரிக்கப்பட்டவையே!
மொத்தம் 3.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சின்னஞ்சிறிய உலகத்திற்குள் 1900 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மழைக்காடுகள் (Rain Forest), 850 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பவளப்பாறைகளை
உள்ளடக்கிய சிறிய கடல் (Sea), 450 சதுர மீட்டர்
பரப்பளவு கொண்ட கிளைகளிலிருந்து வேர்களை உண்டாக்கும் வெப்ப மண்டல மரங்களை
உள்ளடக்கிய சதுப்புநில காடுகள் (Mangrove), 1300 சதுர மீட்டர்
பரப்பளவு கொண்ட புல்வெளிகாடுகள் (Savannah), 1400 சதுர மீட்டர்
பரப்பளவு கொண்ட பாலைவனம் (Desert), 2500 சதுர மீட்டர்
பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் (Agricultural land), மனிதன் உட்பட அனைத்து விலங்குகளும் வசிக்க தேவையான வாழிடங்கள் ஆகிய அனைத்தும்
உண்டு! அதோடு கடல்வாழ் உயிரினங்கள், பாலைவன உயிரினங்கள், புவிக்கு அடியில் வாழும்
நுண்ணுயிரிகள், பறவைகள், ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட விலங்கினங்களும் உள்ளே உள்ள
காடுகளில் அதிக கண்காணிப்புடன் அதே வேலை சுதந்திரமாகவும் வளர்க்கப்படுகின்றன!
சரி இதெல்லாம் எதற்கு
என்கிறீர்களா? மிக மோசமாக சிதிலமடைந்து கொண்டிருக்கும் சுற்றுப்புற சூழலை
சீர்படுத்தி புவியின் வாழ்நாளை நீடிக்க செய்வதுதான் இந்த ரெண்டாவது உயிர்கோளம் (Biosphere 2) கட்டபட்டதற்க்கான முக்கிய நோக்கம் ஆகும்! அதோடு
பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைவதை தடுத்தல், உயிர் பண்மயம் (Bio-Diversity) புவியின் நீர் ஆதார சுழற்ச்சி (Terrestrial Water Cycle), நீர் மற்றும் நிலம் மாசுபடுவதை
கட்டுப்படுத்துதல், சுற்றுப்புற சூழலின் மீது பாதிப்பு ஏற்படுத்தாமல் இயற்கையான
முறையில் விவசாயத்தை பெருக்குவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை பற்றியும் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டு வருகிறது!
1991 ஆம் ஆண்டு முதல்
செயல்பட துவங்கிய இந்த ஆய்வு மையத்தில் இதுவரையில் இரண்டு மிகப்பெரிய ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன! மாசுபடுத்தப்படாத இயற்கை சூழலில் 1991 முதல் 1993 வரை இரண்டு வருடம்
உள்ளேயே வாழ்ந்த இரண்டு மருத்துவர்கள் உள்ளடக்கிய எட்டு பேர் கொண்ட விஞ்ஞானிகள்
குழு, நீர், நிலம், காற்று, காலநிலை மாற்றம், வளிமண்டல அறிவியல், சூழியல், புவி
வெப்பமடைதல், உள்ளிட்ட முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார்கள்! அதோடு நிலத்தில் வாழும்
உயிரினங்கள், கடல் வாழ் உயிரினங்கள், நிலத்திற்குள் வாழும் உயிரினங்கள் குறித்தும்
ஆய்வுகள் மேற்கொண்டார்கள்
இரண்டு வருடம் வெளியே
வராமல் அடைக்கப்பட்ட கண்ணாடி சுவர்களுக்குள்ளே வாழ்ந்த இவர்களுக்கு தண்ணீர்
மட்டுமே வெளியிலிருந்து அதுவும் குழாய்களின் மூலமாக வழங்கப்பட்டது! இந்த தண்ணீர் பல்வேறு
கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட மிகத் தூய்மையான நீர் என்பது
குறிப்பிடத்தக்கது! இந்த தண்ணீரை பயன்படுத்தி அங்குள்ள காடுகளில் அவர்களுக்கு
தேவையான உணவுப்பொருட்களை அவர்களேதான் விளைவித்துக்கொள்ள கொள்ள வேண்டும்.!
வாழைப்பழம் பப்பாளிப்பழம், உருளைகிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, வேர்கடலை, பீன்ஸ், அரிசி, கோதுமை உள்ளிட்ட
ஏராளமான காய்கறிகள் மற்றும் உணவுதானியங்கள் அங்குள்ள காடுகளில் விளைவிக்கப்பட்டு
அவற்றையே உணவுப்பொருட்களாக அவர்கள் பயன்படுத்தினார்கள்! எந்தவித ரசாயன சேர்மங்களும்
கலக்காமல் கொஞ்சம் கூட மாசுபடுத்தபடாத இயற்கை சூழலில் விளைவிக்கப்பட்ட இந்த
உணவுப்பொருட்களை உட்கொள்ள ஆரம்பித்தபோது இவர்களது உடல் எடை 40% அளவிற்கு குறைந்துபோனதாம், ஆச்சிரியமாக இல்லை? இரண்டு
வருடம் தீவிர சோதனையில் ஈடுபட்ட இவர்களது முழு இயக்கமும் கண்காணிப்பு கேமராக்களின்
உதவியுடன் முழுமையாக கண்காணிக்கப்பட்டது!
தொடர்ந்து இரண்டாவது
கட்ட சோதனை 1994 ஆம் ஆண்டு மார்ச்
மாதம் துவங்கப்பட்டு சில பிரச்சனைகளின் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது! தொடங்கிய
நாளிலிருந்து இன்று வரை நிர்வாக செலவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து
வரும் இந்த ரெண்டாவது உயிர்கோள ஆய்வு திட்டம் இதுவரையில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு
எதையும் நிகழ்ந்திவிடவில்லை என்றாலும், இதன் முக்கிய நோக்கமான சுற்றுப்புற சூழல்
மாசுபடுவதை கட்டுப்படுத்தி புவியின் வாழ்நாளை அதிகப்படுத்துவது தொடர்பான
மிகச்சிறிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட அதைக்காட்டிலும் மிகப்பிரம்மாண்டமான
கண்டுபிடிப்பு எதையும் நம்மால் நம் எதிர்கால சந்ததிகளுக்கு வழங்கிவிட முடியாது
என்பது மறுக்க முடியாத உண்மை!
சுற்று சூழல்
தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கிய இப்பதிவின் இரண்டாம் பாகம்
உங்களுக்காக காத்திருக்கிறது நண்பர்களே! தொடர்ந்து இணைப்பில் இருங்கள்! பதிவு
தொடர்பான உங்களது கருத்துக்களை பதிவு செய்ய மறக்க வேண்டாம், உங்களது கருத்துக்கள் மூலமாகத்தான்
என் தவறுகளை திருத்திக்கொள்ளவும் என்னை வளர்த்துக்கொள்ளவும் முடியும்! விரைவில்
மீண்டும் ஒரு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன்.! நன்றி.... வணக்கம்.!
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
தங்களின் தகவல்கள் (பதிவுகள்) எல்லாம் மிகவும் அருமை... இந்தப் பதிவையும் சேமித்துக் கொண்டேன்... நன்றி... வாழ்த்துக்கள்... (TM 2)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஉங்களின் ஒவ்வொரு பதிவும்
ReplyDeleteஅரிதாக கிட்டும் பொக்கிஷம் நண்பா
நிறை நல்ல தகவல்கள் கருத்துக்கள்
நானும் சேகரித்துக் கொண்டேன்
வருகைக்கும் கருத்துக்கும் என் பதிவை பற்றிய உயர்ந்த மதிப்பீட்டிற்க்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteமிகவும் சிறப்பான அருமையான பதிவு! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா நிறைய தகவல்களை தந்துள்ளீர்கள்! புவி மாசு அடைவதை தவிர்ப்போம்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
http://thalirssb.blogspot.in/2012/08/6.html
மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html
படித்து விட்டேன்.
ReplyDeleteநிறப்பான பதிவு.
திரும்பவும் பொறுமையாக படித்து நோட்ஸ் எடுத்து வைக்கனும்.
திரும்பவும் வருகிறேன் சகோ.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteஆமா உயிர்க்கோளம் இரண்டில் ஒரு சதுர அடி என்னான்னு தெரிஞ்சா அங்க ஒரு புள்ளையார் நகர் உருவாக்கி குடி போயிடலாமே. :-)
//புள்ளையார் நகர் உருவாக்கி குடி போயிடலாமே//
Deleteபார்டர் கடந்து வசித்தாலும் நீயும் என் தோழனே! :)
இது சுவாரசியமான அறிவியல் பதிவு. இதனுள் அதிக பட்ச உயரம் 91 அடி, மேலும் பூமியின் அடியில் 500 டன் துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் லைனர் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெரிய ஜெனரேட்டர்களுக்கு இயற்கை வாயுவே பயன் படுத்துகிறார்கள். மேலும் இதன் அடுத்த பதிவில் எங்களையும் அங்கே அழைத்து சென்று காட்டுவீர்கள் என எதிர்பார்கிறேன்...
ReplyDeleteசமீப காலமா எனது பதிவுகளுக்கான உங்களுடைய கருத்துக்களை ஆவலாய் எதிர்நோக்குகிறேன்! ஒவ்வொரு முறையும் அசத்தலான கருத்துரையை வழங்குகிறீர்கள்! இது தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்!
Deleteமிக்க நன்றி நண்பரே வருகைக்கும் அசத்தலான கருத்துக்கும்!
அருமையான பதிவுங்க .
ReplyDeleteநிலத்தடி நீர் பற்றி எழுதியிருப்பதை படிக்கும்போதே பகீர் என்கிறது
சென்னைல முக்கால்வாசி வீடுகளில் போர்வெல் தண்ணீர்தானே ..
சென்னைல நிலத்தடி நீர்ன்னு ஒன்னு இன்னமும் இருக்கா! :)
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் சுவடுகளே
ReplyDeleteஇரண்டாவது உயிர்க்கோளம் - சுவாரஸ்யமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteபதிவை மேலோட்டமாக படித்து பதிவின் சாரத்தை தெரிந்துக் கொண்டேன் நண்பா!
ReplyDeleteஇப்படியொரு பகுதி (உலகம்) இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. தங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.
//பதிவை மேலோட்டமாக படித்து//
Deleteஉண்மையை உண்மைன்னு ஒத்துகுறீங்க பாருங்க இங்க தான் நீங்க நிற்குறீங்க.., உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு! :) :)
மாதத்திற்கு ஒரு பதிவு போட்டாலும் அரிய தொகுப்பு தான் உங்கள் பதிவுகள்
ReplyDeleteமிக்க நன்றி பிரேம் வருகைக்கும் கருத்துக்கும்!
Deleteமிகவும் அருமையான பகிர்வு. வாழ்த்துகள். மேலும் தொடருங்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி நண்பா, உங்கள் கருத்துரையை நான் நீக்கவில்லை :)
Deleteகாத்திருந்து பதிவு போட்டாலும் கன கச்சிதமாக போடுகிறீர்கள்.ரெண்டாவது உயிர்க்கோளம் பற்றிய தகவல்களை இப்போதுதான் அறிகிறேன்..அருமை நண்பா..அடுத்தப்பதிவிற்காக காத்திருக்கிறேன்... TM -9
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா, வாக்கிற்கு மிக்க நன்றி! :)
Deleteஇதை பற்றி கேள்விப் பட்டிருந்தாலும் விளக்கமாக பதிவிட்டதற்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தலைவரே!
Deleteஇரண்டாவது உயிர்க்கோளம் பற்றிய அறிய தகவல்களை தற்போதுதான் தெரிந்துகொண்டேன்.. தங்கள் உழைப்பிற்கும் பகிர்வுக்கும் ..நன்றி அண்ணா..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தம்பி!
Deleteமிக அருமை...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deletearumai!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஇரண்டாவது உயிர்க் கோளம், அருமையானப் பதிவு, இரண்டாம் பகுதிக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றேன் நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteமிகவும் பிரயோசனமான தகவல்கள்...
ReplyDeleteஇரண்டாவது பூமி எனக்குப் புதிது..
பகிர்வுக்கு நன்றி நண்பரே
புதிய தகவல்கள்! வீட்டில் RO ஃபில்டர் மாறுவதை தவிர வேறு வழி இல்லை! :)
ReplyDeleteஅதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை நண்பரே!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
thankal perum uzhaippirkku nanri..
ReplyDeletepakirvukku nanrikal..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல!
Deleteஅடடா! எவ்வளவு அறியாத புது தகவல்கள். என் பிள்ளைகளுக்காக உங்க பதிவை காப்பி எடுத்துக்கவா? உங்க உழைப்புக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி சொல்லும் நேரத்துல அந்த ரெண்டாவது உயிர்கோளத்தையாவது மாசுப்படுத்தாம இருப்போமா?
ReplyDelete//என் பிள்ளைகளுக்காக உங்க பதிவை காப்பி எடுத்துக்கவா?//
Deleteதாராளமாக எடுத்துக்கொள்ளலாம், இதற்க்கெல்லாம் என் அனுமதி பெற தேவையில்லை சகோ!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நீண்ட நாள் வராமல், வந்தவுடன் அற்புதமான ஆய்வுப்பகிர்வு அதிர்ச்சிப்பகிர்வு சகோ. வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteதம்பி..அருமையான நல்ல பதிவு.சுற்று புற மாசுக்கட்டுப்பாடு விழிப்புணர்வு அவசிய தேவைதான்...நல்ல நல்ல அறிவியல் சம்பந்தமான பதிவா அருமையா இருக்கு..இரண்டாவது பதிவு தொடருங்கள்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா!
Deleteபுதிய தகவல்தான். பல அறிய தகவல்களைத்தரும் உங்களை பாராட்டியே ஆகனும்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி விச்சு சார்!
Deleteஅடுத்த பதிவை படிக்க ஆர்வம் அதிகமாகிவிட்டது...
ReplyDeleteவாழ்த்துகள்!!
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி
மக்கள்சந்தை நிர்வாகத்தினரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Deleteஅருமையான பதிவு. பயனுள்ள தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
ReplyDeleteஉண்மையிலேயே அருமையான வலைப்பூவை கண்டுகொண்ட நிறைவுகிடைக்கிறது தோழா.....தொடர்ந்து வாசிப்பேன்.
ReplyDeleteநன்றி..
-வீரா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteமிக மிக அருமை நண்பா... அட என்று சொல்லு அளவிற்கு அவர்கள் எடுத்து வரும் முயற்சியும்... அதை எங்களுக்குப் புரியும் வண்ணம் நீங்கள் கூறியது அருமை நண்பா ....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனு!
Deleteஅறிந்துகொண்டேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜா சார்!
Deleteஉங்கள் பதிவுகளை இனி நான் பிரமாண்டம் என்றே சொல்லப்போகிறேன் !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteலங்க்ஸ் பற்றி சொல்லி இருப்பது ரொம்ப ஆச்சரியமான செய்தியாக இருந்தது.. காரணம் உள்ள புல்லு பூண்டு எல்லாம் வளருது ஸோ கண்டிப்பா சுவாசம், பிரசாரணம் இன்ன பிற மேட்டர்ஸ் நடக்கும்.. அப்ப கண்டிப்பா காற்று போக்கும் வாரதுமா இருக்கும்.. நீங்க இதுல காற்று வெளி உலகோட சம்மந்த படாது என்று போட்டு இருக்கீங்க.. தாவர விலங்குகள் உள்ளே வாழும் போது கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் காற்று உள்ளே முதல் தடவை சம்மந்த பட்டு இருக்க வேண்டும் மேலும் அதற்க்கு ஒரு வழியும் இருந்து இருக்க வேண்டும் அப்படி தேடலோடு தொடங்கிய போது சில தகவல் கிடைத்தது..
ReplyDeleteஆரம்பத்தில் முதல் குழு உள்ளே சென்ற போது ஏகத்துக்கும் ஒட்சிசன் (21 to 14) குறைந்து விட்டதாம் பிறகு சில டெக்னிக்கல் இடையூறுகளும் வர தீர்வாக தான் இந்த லங்க்ஸ் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.. ஆனால் இதில் காற்று போய் வர பெரிய நிலத்தடி சுரங்கம் இருப்பது போல வாசித்தேன்.. அப்போ காற்று ஏதோ வகையில் உள்ளே போகிறது தானே நண்பா.. சில வேளை நான் புரியாமல் வாசிதேனோ தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும் ஆரம்பத்தில் இப்படியாக முதல் காற்று போக இப்படியான ஏற்பாடுகள் இருந்து இருக்க வேண்டும்..
என்னோட சில கேள்வி (மொக்கையா இருந்தா மன்னிச்சு .. வாசிக்கும் போதே நோட் பண்ணி வைத்தேன்-முதலாவது தவிர)
1. காற்று மேலே சொன்னது போல ஏற்பாடுகள் இருந்து இருக்க வேண்டும்.. அப்படியாயின் காற்று தொடர்ச்சியாக போக்கும் வரதுமாக இருக்கிறதா இல்லை.. ஒரு தடவை மட்டும் தானா.. ஒரு தடவை மட்டும் என்றால் ஓகே புது உலகம் எனலாம்.. ஒவ்வொரு முறை என்றால் அது இரண்டாம் உலகமாய் இருக்க வாய்பே இல்லை.. இருந்தாலும் சோதனையை பாராட்டுவோம்..
2. சோலார் கதிர்வீச்சு மூலமா அகத்துறிஞ்சல், நீட்சி எல்லாம் நடக்குமா?
சூரிய ஒளியே இதுக்குள்ள வராதா?
3. காலையிலயும் இரவுலையும் ஒரே நிலை தான் எப்பிடியும் பேணுவாங்க.. அப்போ வேற வேற நாடுகள்ள வித்தியாசமான கால நிலைக்கேற்ப வளர்ற தாவர விலங்குகளுக்கு இந்த பொது இடம் பொருந்துமா (இலங்கை தேயிலை, ஆர்க்டிக் பனிக்கரடி)? இது கண்டிப்பா பொசிபில் இல்ல என்றே நினைகிறேன்..
4. அடுத்து ஒரு உயிர் வட்டம் பாதிக்க படாமல் தொடர முடியுமா? சூழல் சமநிலை பேணுவதும் கொஞ்சம் கடினம் தானே..
உண்மை சொல்ல போனால் எல்லாரும் உங்க பதிவை முழுசா படிச்சாங்க என்றா உண்மையிலே நல்ல தகவலா எல்லாருக்கும் இருக்கும்.. மேலும் நண்பா சின்ன வேண்டுகோள் உங்க பதிவை உண்மையிலே இன்னும் பல பேர் easyaa புரிய போல ஏதாவது (VIDEO/DIAGRAM) அடுத்த முறை அதிகமா இணைங்க.. கண்டிப்பா அதுக்கு பலன் இருக்கும்.. நன்றி நண்பா
மிக நீண்ட கருத்துரையை பதிவுசெய்தமைக்கு முதலில் நன்றி நண்பா, மிகத்தாமதமாக நான் பதிலளித்தமைக்கு, மன்னிக்கவும்! பஹ்ரைனில் வெள்ளி வார விடுமுறை, வழக்கமாக வியாழக்கிழமை என்றால் நான் நள்ளிரவு 12 மணிக்கு மேலே தான் படுக்கைக்கு போவேன், தூங்கினால் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மதியம் 2 அல்லது 3 மணிக்கு மேலேதான் எழும்புவேன். வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் நீண்ட ரெஸ்ட் எடுத்துக்கொள்வேன்! ஆகையால்தான் உங்கள் கருத்துரைக்கு உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை, இதற்க்காக மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!
Deleteசரி இப்போது உங்கள் கேள்விகளுக்கான பதிலை பார்ப்போம்!
1. உயிர்க்கோளம் 2 என்ற இந்த இரண்டாம் உலகிற்குள் முதன் முதலாக நம் வளிமண்டலத்திலுள்ள காற்றுதான் தூயமைபடுத்தப்பட்டு உட்செலுத்தப்பட்டது, உட்செலுத்தப்பட்ட காற்றில் ஆக்ஸிசனின் அளவு ஆரம்பத்தில் 20.9% என்றிருந்தது, முதன் முதலாக மனிதர்களும் விலங்குகளும் ஆய்வுக்காக உயிர்க்கோளம்-2 க்குள் உட்செலுத்தப்பட்ட போது உள்ளிருந்த காற்றில் ஆக்ஸிசனின் அளவு (கவனிக்க ஆக்ஸிசனின் அளவு) கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு பிறகு 6.4% அளவிற்கு குறைந்து 20.9% லிருந்து 14.5% என்றானது, இதனால் உள்ளிருந்த விஞ்ஞானிகள் சுவாச திணறலை உணர்ந்தார்கள், தொடர்ந்து ஆக்ஸிசன் இஞ்செக்ஷன் (injection) முறையில் உட்செலுதப்பட்டு தொடர்ந்து உள்ளிருக்கும் காற்றில் ஆக்ஸிசனின் அளவு 20.9% என்று இருக்குமாறு பார்த்துக்கொள்ளபட்டது! இதுவரையில் இப்படி ஒரே ஒரு முறை மட்டும் தான் அதுவும் ஆக்ஸிசனின் மட்டும் தான் உட்செலுத்தப்பட்டிருக்கிறது! அதைத்தவிர்த்து உள்ளே உள்ள காற்றிக்கும் வெளிப்புற காற்றிக்கும் எந்த வித நேரடித்தொடர்பும் கிடையாது! நேரடித்தொடர்பு இருந்தால் இந்த ஆய்வின் அடிப்படையே மாறிவிடுமே?
2. வெளியுலகத்தோடு உயிர்க்கோளம் 2 என்ற இந்த இரண்டாம் உலகிற்கு எவ்வித நேரடித்தொடர்பும் கிடையாது, ஆகையால் சூரியஒளியும் நேரடியாக உட்புக முடியாது! இருப்பினும் உள்ளே ஒளிர்சேர்க்கை நிகழ்கிறது! இதற்க்கு நிச்சயம் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்!
3. குறிப்பிட்ட சூழலில் மட்டும் வாழும் உயிரினங்கள் இதுவரை உள்ளே ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்றே அறிகிறேன்! (அதாவது நீங்கள் சொன்ன ஆர்டிக் பிரதேசங்களில் மட்டும் உயிர் வாழும் பனிக்கரடி போன்றவை)
4. சூழ்நிலை சமநிலை பேணுவது என்பது படு சவாலான பணி, அத்தனையும் தாண்டி இப்போது வரை உயிர்க்கோளம் 2 வெற்றிகரமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது! நான் முன்னமே சொன்னது போல் இதன் கட்டுமானமும், இயக்கமும் மிகவும் உயர்ந்த மற்றும் மிகச்சிக்கலான தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது! இயற்கை மண்டலத்தை, செயற்கையாக நிறுவும் இந்த உயிர்க்கோள ஆய்வை பொறுத்தவரையில் ரஷ்யர்கள் தான் உகளிற்கு முன்னோடி ஆவர்! ரஷ்யாவில் மிகச்சிறிய அளவில் 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்ட BIOS-3 தான் உயிர்க்கோளம் 2 கட்டப்பட அடிப்படை காரணம் என்றால் மிகையில்லை! ரஷ்யர்களின் BIOS-3 தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுதான் மிக பிரம்மாண்டமாக உயிர்க்கோளம்-2 கட்டப்பட்டது! நிர்வாக செலவு மட்டுமே இப்போது உயிர்க்கோளம்-2 முன்னே நிற்கும் மிகப்பெரிய சவால், இயற்கையின் மீது அளவற்ற பற்று கொண்டிருக்கும் இயற்கை ஆர்வலர்களின் நன்கொடையின் மூலமாகத்தான் இப்போது வரை இது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது!
என் அறிவுக்கு தெரிந்த வரை இயன்ற அளவு உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்ல முயன்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்!
ஹாரியா இது?
Deleteசத்தியமா நம்ம ஹாரி தான்! :)
Deleteஎப்பிடியும் ஒரு ரெண்டு மணி நேரம் தளத்தில் செலவிட்டிருப்பார் என்று நினைக்கிறேன் ஏன்னா இதையெல்லாம் டைப் பண்ணவே 10-15 நிமிஷம் ஆகும்! அதுமில்லாம இணையங்களில் தேடிப்பிச்சு இது குறித்து படிச்சும் பார்த்திருக்கிறார்!
//ஹாரியா இது?//
Deleteஏன்னே தளத்தில பதிவு என்ற பேர்ல படத்த சேர் பண்ணிட்டு
இங்க இப்படி general knowledge.aa பேசுறானே என்று ஷாக் ஆயிட்டிங்களா.. ஹி ஹி.. (இங்கயும்) அரசியல்ல இதெல்லாம் சகஜம் அப்பா..
//சத்தியமா நம்ம ஹாரி தான்! :)//
இந்த சப்ஜெக்ட் கொஞ்சம் பிடிச்சு இருந்தது அதான்..
முதலாவது கேள்விக்கு காரணம் கண்டிப்பா இணையம் தான்.. பதிலில எனக்கு முழு திருப்தி (இணைய பதில்) கிடைக்கல அதான் முதல் கேள்வியா மாறிட்டு.. மற்ற மூன்று கேள்வியும் பதிவ வாசிக்கும் போதே பிரேக் போட்டு டைப் பண்ணினேன்..
சைக்கிள் கேப்புல பாஸித் பாயை அண்ணன் என்று அழைக்கிறீர்களே, அவருக்கு ரொம்ப சின்ன வயசுங்க ஹாரி! ஆமாம் என்னை விட 2 வருஷம் தான் பாஸித் பாய் பெரியவர்! (ஸ்ஸ்ஸ் ஸப்பாடா நாம எஸ்கேப்பு :D )
Delete:) :)
Deleteஅருமையான தகவல்கள்.
ReplyDeleteசிறப்பானதொரு அறிவியல் பதிவு.
வாழ்த்துக்கள்.
:-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteநல்ல பதிவு,அனைத்து பதிவுகளும் அருமை
ReplyDeleteசகோ உங்களத் அனைத்துப்பதிவுகளும் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்படவேண்டியவை.பிரிண்ட் எடுத்து பைல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.வாழ்த்துக்கள் சகோ.தொடருங்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
DeleteNice info boss :-)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteநாம் நம்முடைய அசிரத்தையால் இந்த அற்புதமான உலகை அழித்துவிடுவோம் என்று விஞ்ஞானிகளுக்கு பயம் வந்த காரணம்தான் ஒரு மாடல் உலகத்தை உருவாக்கத் தோன்றியது போலும். மிகவும் அபாரமான உழைப்பு தேவைப்பட்டிருக்கும். அவ்வியப்பான தகவலை எளிமையாய் அறிவியல் அறிவு இல்லாதோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் தந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. நன்றி வரலாற்று சுவடுகள். நிலத்தடி நீர் பற்றிய செய்தி படித்து மனம் திடுக்கிட்டது உண்மை. நீரில்லா வருங்காலம் எப்படி இருக்குமென்று நினைக்கவே கவலையாக உள்ளது.
ReplyDeleteவருகைக்கும் விரிவான கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!
Delete”வரலாற்று சுவடுகள்“ - இப்பொழுது தான் உங்கள் பதிவை முழுமையான பொருமையாகவும் படித்தேன். இதற்கு முன் வந்து மேலோட்டமாக படித்துக் கருத்திட்டுவிட்டுச் சென்றுவிட்டேன் மன்னிக்கவும். வேலை பளுவும் முக்கிய காரணம்.
ReplyDeleteமுதலில் நல்ல ஆராய்ச்சிப் புர்வமான பதிவிற்கு மிக்க நன்றி.
நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் வாழ்வதற்கு டவுனை விட்டு ஏதாவது கிராமப்புரங்களுக்குச் சென்றால் முடியும் என்றும், சுட்டெரிக்கும் சூரியன் கடல் நீரை வாங்கி மேகங்களாக்கி நிலத்திற்கு மழையாகத் தருகிறது என்றும் கேள்வி பட்டும் படித்தும் இருக்கிறோம். ஆனால்...சுகாதாரத்திற்காகவே இரண்டாவது உலகம்...!! ஆச்சரியமான விசயம்.
இப்படியெல்லாம் உலகத்தில் நடக்கிறது என்பதை நீங்கள் சொல்லிப் படிக்கும் பொழுது உங்களைத் தான் முதலில் பாராட்ட வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் நண்பரே.
வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteதொழில் களத்தில் உங்கள் அறிமுகம் படித்து விட்டு வந்தேன். இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறேனே என்று தோன்றுகிறது.
ReplyDeleteஇரண்டாவது உயிர்கோளம் பற்றி ரொம்ப விரிவாக படங்களுடன், மிகத் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். முதலிலிருந்து கடைசிவரை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.
புதுப்புது தகவல் அறிந்து கொள்ள முடிந்தது.
உங்கள் உழைப்புக்கு ஓர் சிறப்புப் பாராட்டு.
மேலும் வளர்ந்து பதிவுலகில் வரலாறு படைக்க வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ரஞ்ஜனி
ranjaninarayanan.wordpress.com
முதல் வருகைக்கும் கருத்திற்கும் என் பதிவுகளை பற்றிய தங்களின் உயர்ந்த மதிப்பீட்டிற்கும் மிக்க நன்றி சகோ! வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
DeleteBTW, உங்கள் தளம் பார்த்தேன் நிறைய நல்ல விசயங்களை எழுதுகிறீர்கள்! தங்கள் பயனுள்ள எழுத்துக்கள் இன்னும் பலரை சென்றடைய தாங்கள் பிளாக்கருக்கு மாற வேண்டும் என்பது என் வேண்டுகோள்!!!
வணக்கம் சகோ தங்கள் ஆக்கங் கண்டு பிரமித்துபோய்
ReplyDeleteஉள்ளேன் !..இவ்வளவு அழகாய் பதிவை மட்டும் அல்ல
பதிலைக்கூட போடுகின்றீர்களே அருமை !....அருமை !...
பயனுள்ள ஆக்கம் இது பலரையும் சென்றடைய வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு .
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!
Deleteவணக்கம்
ReplyDeleteவரலாற்றுச் சுவடுகளை வடிவாய்த் தீட்டி
வரலாறு படைக்கின்ற தோழா! உன்றன்
தரம்போற்ற எனக்குள்ள எண்ணம் தோன்ற
தண்டமிழில் தருகின்றேன் விருத்தம் ஒன்று!
உரமேற்ற நிலம்போன்றறே உன்றன் பக்கம்
ஒப்பின்றி விளைந்துளது! நன்றே முற்றி
மரமேற்ற வைரமென வன்மை காண்க!
மகிழ்வோடு வாழ்த்துகிறேன் உயா்ந்து வாழ்க!
என் மின் அஞ்சலில் தொடா்பு கொள்ளவும்
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
வணக்கம்! நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்! தங்களை போன்ற மூத்தோர்களிடமிருந்து ஆசி பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்! வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா!!!
DeleteBTW, தங்கள் தளம் கண்டேன்.. என்னை அங்கே இணைத்துக்கொண்டேன்! உங்கள் தமிழ் பற்றுக்கு என் நன்றி! ஓய்வு நேரத்தில் கட்டாயம் தங்கள் பதிவுகளை வாசிக்கிறேன்!
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தங்களை இங்கே இணைத்து கொண்டமைக்கும் மிக்க நன்றி ஐயா!
நல்ல தகவல்கள் கருத்துக்கள்
ReplyDeleteநல்லதோர் பகிர்வு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!
Deletethanks buddy.! :-))
ReplyDelete