Thursday 19 July 2012
மை நேம் இஸ் சிட்டி..ஸ்பீடு ஒன் டெரா பைட்ஸ்..மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்; My name is City speed one terabytes memory one zettabytes
அனைவருக்கும்
வணக்கம்.., தலைப்பை பார்த்து எந்திரன் சினிமா விமர்சனம் - என்று நம்பி
வந்திருக்கும் சினிமா பிரியர்களுக்கு பதிவின் ஆரம்பத்திலேயே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்., சர்வ நிச்சயமாய் இது சினிமா விமர்சன பதிவு
இல்லை.! நீங்கள் நினைக்கும் எந்த
விஷயமும் இந்த பதிவில் இருக்கப் போவதில்லை.! ஆகையால் இப்போதே இந்தப் பக்கத்தை
மூடிவிட்டு வேறு ஏதாவது நல்ல
(!) தளங்களுக்கு ஓடிவிடுவது உத்தமம்J..! இதற்க்கு பிறகும்.., நீங்கள் இந்த பதிவை வாசித்து விடுவது என்ற திடமான
மனதுடன் இருந்தால் உங்களுக்கு நிகழவிருக்கும் துயரத்திற்கு என்னால் பொறுப்பேற்க
முடியாதுJ.!
கிட்டத்தட்ட ஒரு
மாத கால ஓய்விற்கு பிறகு எழுதும்
முதல் பதிவு என்பதால்., பதிவிற்கு வைக்கப்படும் தலைப்பில் முக்கியத்துவம் இருக்க
வேண்டும் என்று கருதினேன்.! தலைப்பிற்க்காக இரண்டு நாட்களாக மூளையை (அப்பிடி ஒன்னு
உனக்கு இருக்கான்னு கேக்காதீங்க ஹி ஹி) கசக்கி கசக்கி யோசித்தும்., ஒன்றும் புலப்படாமல்
போனதால் இறுதியில் நண்பனை (அப்படித்தான் சொல்லணும் இல்லைனா அடிப்பாய்ங்கJ)
அணுகியபோது அவன் ஒரு "டெரர்ரான" யோசனையைக் கூறினான்.! இதுபோன்ற சிக்கலான (!)
பிரச்சனைகளை தான் சந்திக்கும் போது "மெய் மெய்யப்பன்" புகழ்பெற்ற ஜோதிடரிடம் கன்சல்டிங்
செய்து., அவரது யோசனைப்படி செயல்படுவதாகவும்., அவரால் இந்த பிரச்னைக்கு (!) நல்ல
தீர்வைக் கொடுக்க முடியும் என்றும் கூறினான்.! அப்போதைக்கு எனக்கும் வேறு வழி
தெரியாததால்., "சரி., எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்ப்போமே" - என்று கிளம்ப
ஆயத்தமானேன்.!
ஜோதிடப்புலி "மெய்
மெய்யப்பன்" பற்றி கேள்விபடாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். இவர்.,
உலகின் மூலை முடுக்குகளிளெல்லாம் மிகவும் புகழ் பெற்ற ஜோதிடர்.! நம்ம
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தே எதை செய்வதாக இருந்தாலும் இவரிடம் யோசனை பெற்றுத்தான் செய்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.! அதுமட்டுமில்லை., உலகிலேயே இவர்
ஒருவர் தான் "ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்று போனில் பேட்டரி
இருந்தாலும் பேசுவார் பேட்டரி இல்லாவிட்டாலும் பேசுவார்.!" அப்படிப்பட்ட மகிரிஷி.,
என்னுடைய அடுத்த பதிவிற்கான தலைப்பை சொல்வதாக சொன்னதும் அவர் முன்னே இருவரும் பவ்யமாய்
அமர்ந்தோம்.! எனது ஜாதகத்திலுள்ள கட்டம் கட்டிடம் வட்டம் செவ்வகம் ஆகிய
அனைத்தையும் ஆராய்ந்து.., இந்த தலைப்பை மட்டும் நீங்கள் வைத்தீர்கள் என்றால் ஒரே
வாரத்தில் உங்கள் தளத்திற்கு ஆயிரம் பாலோயர்ஸ் கிடைப்பது உறுதி என்றார்.! ஆயிரம் பாலோயர்ஸ்
என்றதும் என் கண்ணில் பேராசை பளபளக்க., மறுபேச்சில்லாமல் அவர் சொன்ன தலைப்பையே
இந்த பதிவிற்கு வைத்துவிட்டேன் அந்த தலைப்பு தான் இது.! (ஒரே ஒரு சினிமா தலைப்பு
வைச்சதுக்கு.... எவ்வளவு நீளமா விளக்கம் கொடுக்க வேண்டியதிருக்குடா சாமி J)
எனது சென்ற வார
வலைச்சர ஆசிரியர் பணி பற்றி அனைவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.! தினமும் ஒரு
பதிவு என்று மொத்தமாக ஏழு பதிவுகள் ஏழுதினேன்.! எழுதிய ஏழு இடுகைகளிலும் என்னால் முடிந்த
வரை சில நல்ல கருத்துக்களையும் பதிவு செய்ய முயன்றிருப்பேன்.! அவற்றை உங்களில்
யாரேனும் வாசிக்க தவறியிருந்தால்., அவற்றை வாசிக்க செய்வதே இந்த இடுகையின்
நோக்கம்.! எழுதிய ஏழு பதிவுகளின் தலைப்பையும் பதிவின் முன்னோட்டத்தையும் கீழே
வரிசைப்படுதியுள்ளேன்.! தவறவிட்டவர்கள்... தவறாமல் வாசித்து தங்களது கருத்துக்களை
கூற வேண்டுகிறேன்.! சரி இனி பதிவிற்கு செல்வோம் வாருங்கள்.!
என்னை பற்றிய
அறிமுக இடுகை இது.! நான்...சமீப காலமாக ப்ளேட் பீடியா-கார்த்தியை அதிகமாக
வாசிப்பதாலோ என்னவோ., எனது அறிமுக பதிவில் காமெடியை நுழைப்பதாக நினைத்துக்கொண்டு
ப்ளேடு போட பார்த்திருப்பேன்.! நீங்கள் ப்ளேடுக்கு தப்பியவர்கள் என்றால் நிச்சயம்
இந்த பதிவை வாசித்து உங்கள் ரத்தத்தை பார்த்துக்கொள்ளவும்J.!
பதிவை வாசிக்க இங்கு கிளிக்கவும்!
முத்துசிப்பிக்குள்
முத்துக்கள் எவ்விதம் உருவாகின்றன., இயற்கையாக இல்லாமல் செயற்கையாக முத்துக்களை
முத்துச்சிப்பிக்குள் எவ்வாறு உருவாக்குக்கிறார்கள் போன்ற தகவல்களுடன் பதிவுலகில் நான்
விரும்பி ரசித்து வாசித்து வரும் சில நகைச்சுவை பதிவர்களைப் பற்றியும் எழுதியிருப்பேன்.!
பதிவை வாசிக்க இங்கு கிளிக்கவும்!
பெருகிவரும்
மின்னணு குப்பைகளால் எதிர்காலத்தில் மனித குலத்திற்கு ஏற்படவிருக்கும் தீமைகள்
பற்றி எனக்கு தெரிந்த வரையில் சுருக்கமாக இந்த பதிவில் எழுதியிருக்கிறேன்.! அதுமட்டுமின்றி
என்னை கவர்ந்த சில தொழில்நுட்ப பதிவர்களின் தளங்களை பற்றியும் குறிப்பிட்டிருப்பேன்.!
பதிவை வாசிக்க இங்கு கிளிக்கவும்!
மனிதனுக்கு அடிபட்டால்
ஏன் வலிக்கிறது.., அப்போது உடலில் நிகழும் மாற்றங்கள் என்னென்ன..., அந்த நேரத்தில்
மனித மூளையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் போன்றவை பற்றி இப்பதிவில் கூற
முயற்சித்திருப்பேன் அதோடு என்னை கவர்ந்த சில கவிஞர்களின் வலைத்தளங்கள் பற்றியும் குறிப்பிட்டிருப்பேன்.!
பதிவை வாசிக்க இங்கு கிளிக்கவும்!
உண்மையில் நாம்
ஏன் கண்ணாடி அணிகிறோம் என்பதை விளக்குவதற்க்காக தான் இந்த பதிவை எழுத
முயற்சித்தேன்.! நேரமின்மை காரணமாக பதிவை முழுமையாக எழுத முடியாமல் போய்விட்டது.! மேலும்
இந்த பதிவில் வலையுலகில் நல்ல கருத்துக்களை எழுதிக்கொண்டிருக்கும் சில நல்ல
பதிவர்களின் வலைத்தளங்கள் பற்றியும் குறிப்பிட்டிருப்பேன்.! பதிவை வாசிக்க இங்கு கிளிக்கவும்!
ஃபிரிட்ஜில்
வைக்கப்படும் உணவுப்பொருட்கள் எப்படி கேட்டுப்போகாமல் இருக்கிறது என்பதை பற்றி
இந்த பதிவில் சுருக்கமாக கூறியிருப்பேன்.! அதோடு வலையுலகில் மிரட்டிக்கொண்டிருக்கும்
சில பெண் பதிவர்களின் வலைத்தளங்கள் பற்றியும் எழுதியிருப்பேன்.! பதிவை வாசிக்க இங்கு கிளிக்கவும்!
வலைச்சர ஆசிரியராய்
நான் எழுதிய கடைசிப் பதிவு.! எழுதும் ஒவ்வொரு பதிவுகளிலும் ஏதாவது பயனுள்ள
தகவல்களும் இருக்க வேண்டும் என்று நினைத்ததால் அதற்குண்டான தகவல்களை
சேகரிப்பதிலேயே அதிக நேரம் போய்விட்டது இதன் காரணமாக பரிந்துரைப்பதற்க்காக
தேர்ந்தேடுத்து வைத்திருந்த பாதிக்கும் மேற்பட்ட பதிவர்களை சரியான முறையில்
பரிந்துரைக்க முடியாமல் போய்விட்டது.! இந்தப் பதிவை வாசிக்க இங்கு கிளிக்கவும்!
வலைச்சரத்தில்
சொல்ல மறந்த கதை: கம்ப்யூட்டர்
என்றதும் நம்முடைய நினைவில் வருவது ஃபர்சனல் கம்ப்யூட்டர்ஸ் (Personal
computer such as Desktop Computers) மற்றும் நோட்புக் (Notebook
such as Laptops) ஆகியவை தான் இல்லையா நண்பர்களே.!
உண்மையில்.., கம்ப்யூட்டருக்கு நமக்கு தெரியாத இன்னொரு முகமும் உண்டு அதுதான் உட்பொதிக்கப்பட்ட
கணினிகள் என்று அழைக்கப்படும் எம்பேடட் கம்ப்யூட்டர்ஸ் (Embedded
Computer).! கம்ப்யூட்டரின் முக்கிய பாகமே கட்டுப்பாட்டகம்
தான்.! அந்த கட்டுப்பாட்டகத்தின் முக்கிய அங்கம் Embedded Systems.! இதுதான் இயக்கங்களை கட்டுப்படுத்தும் தலைமை செயலகம்.! கணிணிக்காகவே
உருவாக்கப்பட்ட அமைப்பு.! இன்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் கைகடிகாரம்
முதற்கொண்டு அனைத்திலும் உட்பொதிக்கப்பட்டுள்ளது.! Embedded Systems அமைப்பு உட்பொதிக்கப்பட்ட அனைத்துமே கணினிகள் தான் அந்த வகையில் நான்
அன்றாடம் உபயோகிக்கும் எம்.பி-3 பிளேயர்கள் (Mp3
players) முதற்கொண்டு சண்டை விமானங்கள் (Fighter Aircraft)
வரை மற்றும் மின்சாரத்தில் இயங்கும் சாதாரண விளையாட்டு பொம்மைகள்
முதற்கொண்டு தொழிற்துறை எந்திரங்கள் (Industrial Roberts) வரை
அனைத்தும் உட்போதிக்கப்பட்ட கணிணிகள் வகையைச் சார்ந்தவைதான்.! இதனை பிளாக்கர்
மெக்கானிக்ஸ் பதிவில் எழுத நினைத்து மறந்துபோனேன்.!
அபெளட்
மை ப்ளாக் ஸ்டேட்ஸ்: தமிழ்
வலைப்பதிவுகளுக்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் தமிழ்மணத்தால் கடந்த
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று
நினைக்கிறேன்.! தரவரிசை பட்டியலில் இரட்டை இலக்கங்களை எட்டுவது என் ஆறுமாத கால கனவாக
இருந்தது.! அந்த கனவு கடந்த ஞாயிறு அன்று தான் நிறைவேறியது. கடந்த ஒரு மாதகாலமாக
நான் பதிவுகள் ஏதும் எழுதவில்லை இருப்பினும் 85-ஆவது
இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.! இதற்க்கு காரணம் நிச்சயமாக நீங்கள்
தான்.! உங்கள் வருகை., வாக்குகள்., பின்னூட்டம் ஆகியவை தான் என்னை அந்த இடத்திற்கு
உயர்த்தியிருக்கிறது.! என் மீது கொண்டிருக்கும் அன்பிற்கும் தொடர்ந்து எனக்கு
அளித்துவரும் ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பர்களே.! உங்கள் ஆதரவோடு.. இறைவனின்
ஆசியும் இருந்தால் நான் இன்னும் மேலே வருவேன் என்று நம்புகிறேன்.! விரைவில்., ஒரு
பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன்., நன்றி.. வணக்கம்.!
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
hypothetical தலைப்பு, டாட்.
ReplyDeleteப்ளேட்பீடியாவுடன் சேர்ந்ததில் இருந்து அது போலவே எழுதுகிறீர்கள். விரைவில் அவரை ஓவர் டேக் செய்ய வாழ்த்துக்கள்.
வலைச்சர பணிக்கும், தமிழ்மண முன்னேற்றத்திற்கும் வாழ்த்துக்கள் நண்பா!
//Embedded Systems// இதை எங்கேயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தா... அட! கல்லூரியில் படித்தது....
:D :D :D
<< ப்ளேட் பீடியாவுடன் சேர்த்ததில் இருந்து அது போலவே எழுதுகிறீர்கள். விரைவில் அவரை ஓவர் டேக் செய்ய வாழ்த்துக்கள் >>
Deleteப்ளேடு வந்து என்னை வெட்டாம இருக்கனுமே :D
தமிழ்மண டாப் 100 லிஸ்டில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே! :) you deserve it!
Deleteமிக்க நன்றி நண்பா!
Deleteமகிழ்ச்சி மேலும் முன்னேற வாழ்த்துகள் டிசம்பரில் நான் 99-ஆம் இடத்தில இருந்தேன். 2011 திசம்பரில் 44-ஆம் இடம். இப்போது நான்காம் இடம்.
ReplyDeleteநீங்கள் இதை விட வேகமாக முன்னேறுவீர்கள் வாழ்த்துகள்
விரைவில் உங்களை முதலாம் இடத்தில் பார்க்க ஆசைப்படுகிறேன் மோகன் சார் :)
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
வலைச்சரத்தில் படிக்காதவர்களுக்கு நல்லதொரு தொகுப்பு...
ReplyDeleteமேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே.. தொடருங்கள்...(த.ம. 2)
வலைச்சர தொகுப்பு.
ReplyDeleteஅருமை.
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜா சார்!
Deleteநீங்க சிட்டிய விட பலம் வாய்ந்த ஆளு போல. அதனால தான் தமிழ்மணம் ரேங்க் அதிகமா வந்துருக்கு. அப்படியே நிறைய பதிவுகள் போட்டு மெமரி யொட்டா பைட் தொட வாழ்த்துகள்.
ReplyDeleteபண்ணனும் நண்பா..ஏதாவது பண்ணனும்..நம்மளை நம்பி இருக்குற தமிழ் எழுத்துலகிற்கு ஏதாவது பண்ணனும்! :D :D
Deleteபதிவுக்கான தலைப்பின் காரணத்தை சரளமான நகைச்சுவையுடன் விவரித்து அந்த ஏரியாவும் வரும் என்று காட்டி விட்டீர்கள். எம்பெடட் கம்ப்யூட்டர் பற்றி விவரித்தது நன்று நண்பா. சென்ற ஆண்டில் வலைப்பதிவு துவங்கி ஒரு மாதத்தில் தமிழ்மணத்தில் 148 இடத்தில் இருந்தேன். ஜனவரியில் 56ம் இடம் எனக்கு, இப்போது 6வது இடம். இதை நண்பர்கள் சொல்லித்தான் கவனித்து மகிழ்ந்தேன். நீங்கள் ராங்க் பற்றி குறிப்பிட்டுள்ளதால் சொல்கிறேன். சீக்கிரத்திலேயே எங்களைத் தொட்டு கடந்தும் விடுவீர்கள். தொடர்ந்து உற்சாகமாக நடை போடுங்கள் நண்பா.
ReplyDeleteமூத்த பதிவர்களில் மூவர் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பது பதிவுலகிற்கு ஆரோக்கியமான விஷயம் கணேஷ் சார்! நான் சகோ தென்றல் சசியும் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருப்பார் என்று நம்பினேன்..விரைவில் அவரும் அந்த இடத்தை எட்டி பிடிப்பார் என்று நம்புகிறேன்!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கணேஷ் சார்!
கருத்துகள் அருமை .
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Delete"வரலாற்று சுவடுகள்+தகவல் களஞ்சியம்" என்று தங்களுக்கு ஒரு பட்டத்தை சூட்டிவிடலாம் என்றிருக்கிறேன், என்ன சொல்கிறீர்?.. தமிழ்மண முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஹி ஹி பட்டத்தை வாங்கிக்கொள்வதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை நண்பரே.. அந்த பட்டத்துக்கு நான் வொர்த்தான்னு எதுக்கும் ஒரு தடவைக்கு நாலு தடவை யோசித்துக்கொள்ளுங்கள் :D :D :D
Deleteவருகைக்கும் கருத்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி நண்பரே!
வாழ்த்துக்கள்.... பின்னுங்க...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல!
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎல்லா பதிவும் ஒரே இடத்தில்.. வாருங்கள்.. அள்ளுங்கள்.. (சும்மா ஒரு விளம்பரம்..)
ReplyDeleteசெய்கூலி இல்லை..சேதாரம் உண்டு - இதை மறந்துட்டீங்களே கோவி அண்ணே :D :D
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
சிறப்பான முன்னுரையுடன் சிறந்த வலைச்சர தொகுப்பு! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
ReplyDeleteதாங்கள் மென்மேலும் முன்னேற அன்புவின் அன்பான வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteவாழ்த்துக்கள். நண்பரே
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteவலைசரத்தை வைத்தே ஒரு பதிவா கலக்குங்கள் உங்களுக்குள் நகைச்சுவை உணர்வா வியந்தேன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Delete\\நீங்கள் நினைக்கும் எந்த விஷயமும் இந்த பதிவில் இருக்கப் போவதில்லை.! ஆகையால் இப்போதே இந்தப் பக்கத்தை மூடிவிட்டு வேறு ஏதாவது நல்ல (!) தளங்களுக்கு ஓடிவிடுவது உத்தமம்J..\\
ReplyDeleteஹி..ஹி...
எப்பிடி நண்பா பதிவின் சில வரிகளை tag செய்கிறீர்கள், எனக்கும் கற்றுதாருங்களேன்!
Delete85-ஆவது இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்..தரமான உங்கள் பதிவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இது...
ReplyDeleteமிக்க நன்றி நண்பா!
Deleteசாரி நண்பா.. நீங்க வலைச்சர பொறுப்பேற்றது இப்போதுதான் தெரியும் .படிச்சுட்டு வாறன்...
ReplyDeleteஅனைத்து பதிவுகளையும் படித்துவிட்டு வந்து கருத்திடுங்கள் நண்பா! காத்திருக்கிறேன் :)
Deleteஉங்கள் அற்புதமான எழுத்துகளுக்கு கிடைத்த அங்கீகாரமே உங்க வெற்றிகள்.. வாழ்த்துக்கள் நண்பா.. அடிக்கடி பதிவு எழுதுங்க..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteமுதல் நாள் கடைசி இடத்தில...இப்ப முதல் இடத்தில...இடையில எங்கெல்லாமோ போய்ட்டு வந்தேன்...-:)
ReplyDeleteவாழ்த்துக்கள் சிறப்பு வலைச்சரத்திற்கு...பட்டையை கிளப்புங்கள் நண்பரே...
விரைவில் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உங்களை பார்க்க விரும்பிகிறேன் பிரதர்!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
சிறந்த வலைச்சர பணி வாழ்த்துகள்,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteஅப்படி ஒன்று மொக்கை எல்லாம் இல்லை பிளடி போடாத பதிவு நண்பா... தங்க வலைசர ஆசிரியர் பனி சிறந்த்ததர்க்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteநன்றி சகோ அறிமுகத்திற்கு. பயனுள்ள பகிர்வுகள்.பணி தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ, வருகைக்கும் கருத்துக்கும்!
Deleteநகைச்சுவையாக தாங்கள் தேர்வு செய்த தலைப்பின் இரகசியத்தைச்
ReplyDeleteசொல்லிவிட்டு அழகாக வலைச்சரங்களை அறிமுகம் செய்த பாங்கு
மிகவும் சுவாரசியமாக இருந்தது .தேர்வு செய்யப்பட்ட பதிவர்களுக்கு
எனது வாழ்த்துக்கள் .உங்களுக்கும் எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும் .
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteமுன்னோட்டத்தைப் பார்த்து எஸ் ஆகிடுவோமா என்று பார்த்தேன்...எதுக்கும் நல்ல மேட்டர் ஏதாச்சும் கிடக்கும் என்னு பார்த்தேன்.. :( சில பல பதிவுகளை வலைச்சரத்தில் பார்த்துமிருக்கிறேன்
ReplyDeleteமொத்தமாக பகிர்ந்திருப்பது நல்லதொரு சிந்தனை...
ஒரு மாதம் கழித்து எழுதும் பதிவு என்பதால் நகைச்சுவையோடு துவங்கலாம் என்று நினைத்து தான் ஒரு வித்துயாசமான முன்னுரை! இந்த பதிவிலும் ஏதாவது தகவல் இருக்க வேண்டும் என்பதற்காத்தான் Embedded Systems பற்றி எழுதிருக்கிறேன்!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
வாழ்த்துக்கள் நண்பரே... தமிழ்மணத்தில் இரட்டை இலக்க எண்ணை எட்டிப்பிடித்ததற்கு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விச்சு சார்!
Deleteதங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா.....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteம்ம்
ReplyDelete:)
Deleteதங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துகள்...
ReplyDeleteதமிழ்மண தரவரிசைப் பட்டியலில் விரைவில் முன்னேறிட வாழ்த்துகள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் ஜீ :)
Deleteமேலே மேலே மேலே வாங்க நண்பா.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteநல்லாத்தான் யோசிக்கிறீங்க
ReplyDeleteதலைப்பை சொன்னேன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல!
Deleteதலைப்பை பார்த்ததும் ஏதோ கணிணியில் புதிய அறிமுகம் என எண்ணினேன். படித்ததும் உங்களின் புதிய பரிணாமம் என அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.தலைப்புகள் உள்ளே சென்று படிக்கும் ஆவலை தூண்டும் வண்ணம் உள்ளது. அறிவியல் செய்திகள் சில தெரிந்தது எனினும் கருத்துக்கோர்வையாய் இருந்தது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteபதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteஅழைப்பிற்கு மிக்க நன்றி!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி அண்ணா முன்னேற
ReplyDeleteதங்கையின் வாழ்த்துக்கள்.....
மிக்க நன்றி சிஸ்டர்., உங்கள் ஆதரவோடு இன்னும் முன்னேருவேன் என்ற நம்பிக்கையுள்ளது!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
குறைவான பதிவுகளாக இருந்தாலும் முன்னணிக்குச் சென்றதன் காரணம் தரமான பதிவுகளே.அது மட்டுமல்லாமல் மற்ற பதிவுகளையும் பார்த்து பின்னூட்டமிடுவது சிறப்பு. மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பதிவு. பாராட்டுக்கள்.
ReplyDeleteSir,
There is an award waiting for you. Please visit
http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html
vgk
விருதுக்கு மிக்க நன்றி ஐயா! தங்களிடமிருந்து விருது பெற்றதை பெரும்பாக்யமாக கருதுகிறேன்! அன்பிற்கு மிக்க நன்றி!
Deleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteஒரு ரெண்டு படத்த torrent ல இருந்து இறக்கினேன்.கொஞ்ச இடம் பற்றாக்குறையா இருக்கு. ஒங்கிட்ட இருந்தா கொஞ்சம் குடுத்து ஒதவி செய்ய முடியுமா.வாடகை வேனா கொடுத்திருதேன்.
ReplyDeleteகாளிங்ற பேர் கொண்ட இந்த அன்னாத்தைக்கு ஒரு external hard drive பார்ஸல்ல்ல்ல்! :)
Delete