Thursday 13 September 2012
உங்களுக்கு தெரியுமா கடல்களும் மரங்களை போல் கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்கிறது என்று?; சுற்றுப்புறசூழல் சீர்கேடும் குறைந்துகொண்டிருக்கும் புவியின் வாழ்நாளும்; environmental degradation by varalatru suvadugal
அனைவருக்கும் வணக்கம் (இரண்டாவது உயிர்க்கோளம் அதாவது இரண்டாவது பூமி பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும்
வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு
சென்று வாசித்துவிட்டு இந்த பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில்
உயிரினங்கள் உருவாக அடிப்படை காரணமாக விளங்கிய உயிர்கோளம் (Biosphere) கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே புவியில் உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது!
புவியின் உயிர்கோளம் அதாவது புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இன்னும் அதிகபட்சமாக
2.5 பில்லியன் ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்றும்
கூறப்படுகிறது! அதன் பிறகு சூரியனின் மேற்பரப்பில் ஏற்படவிருக்கும் வெப்பநிலை வேறுபாட்டின்
காரணமாக புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்பட்டு பூமி உயிரினங்கள் இல்லாத கோளாக மாறிவிடும்
என்கிறார்கள் விண்ணியல் வல்லுனர்கள்! ஆனால் இன்று நாம் செய்துகொண்டிருக்கும் தவறுகளால் புவி அதன் வாழ்நாளிளிருந்து
கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிய காத்திருக்கிறது என்றால்
அதிர்ச்சியாக உள்ளதல்லவா? வாருங்கள் இன்றைய பதிவினூடாக இதைப்பற்றி அலசுவோம்!
பெருகிவரும் நகரமயமாக்களுக்காக
இன்று நாம் காடுகளை அதிக அளவில் அழித்து வருகிறோம்! காடுகள் அழிக்கப்படும் போது
விலைமதிப்பில்லாத இயற்கை பொக்கிஷங்களான... மரங்கள், செடிகள், கொடிகள்,
நுண்ணுயிரிகள், பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவை அனைத்தும்
சேர்ந்தே அழிக்கப்படுகின்றன! இவை அனைத்தும் சேர்ந்துதான் சூழ்நிலைமண்டலத்தை
உருவாக்குகின்றது என்று முந்தைய பதிவில் பார்த்தோம், உங்கள் நினைவில்
இருக்கும் என்று நம்புகிறேன்! மனிதன் ஆதிகாலம் தொட்டே தன் தேவைக்காக இல்லாமல்
சுயநலத்திற்காக மட்டும் அழித்த தாவர வகைகளின் எண்ணிக்கை (கவனிக்க தாவர வகைகளின்) லட்சத்தையும்
தாண்டும் என்கிறது தாவரவியல் வரலாறு!
இன்று காடுகள் எந்த
அளவு அழிக்கப்பட்டுக்கொண்டிகிறது என்பதற்கு உதாரணமாக அதிர்ச்சியான புள்ளிவிபரம்
ஒன்றைப் பார்ப்போம் வாருங்கள்! சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை
நிலப்பரப்பின் பெரும்பகுதியை (50% approximately, except Sea) காடுகள்தான் உள்ளடக்கியிருந்திருக்கிறது! கடந்த 2010 ஆம் ஆண்டு இயற்கையின் வளங்களின் தற்போதைய நிலை பற்றி அறிய மேற்கொள்ளப்பட்ட
ஆய்வுகளின் முடிவில் தற்போது உலகில் 30% காடுகள் தான்
எஞ்சியிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது! பெருகிவரும் நகரமயமாக்களுக்காக கடைசி
200 வருடங்களில் மட்டும் நாம் அழித்த காடுகளின் அளவு
சுமார் 10% இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
எதிர்காலத்தில்
நகரங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால் காடுகள் இன்னும் அதிகமாய்
அழிக்கப்படக்கூடும் என்றும் காடுகளை அழிக்கும் விசயத்தில் இதே ரீதியில் இன்னும் நாம்
500 ஆண்டுகள் பயணித்தோமானால் அதன் பிறகு “நேஷனல்
ஜியோகிராபிக் சேனல் வீடியோக்களை” தவிர்த்து வேறெங்கும் காடுகளை காண முடியாது என்றும் அந்த ஆய்வறிக்கையில்
கூறப்பட்டுள்ளது! தாவரங்களும்.., தாவரங்களை உள்ளடக்கிய காடுகளும் அழிக்கப்படும்
போது வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயு (CO2) சமநிலைப்படுத்தப்பட்டு
காற்றில் உயிர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் நிலைநிருத்தப்படுவதில் பல்வேறு சிக்கல்கள்
உண்டாகும் என்பதை இங்கே விளக்கி கூற தேவையில்லை என்று கருதுகிறேன்!
கரியமிலவாயு நீக்கப்படுதல்
என்றதும் எனக்கு மற்றொரு விஷயம் ஞாபத்திற்கு வந்தது! உங்களுக்கு தெரியுமா, மரங்களைப்
போலவே வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயுவை (CO2) அகற்றுவதில் கடல்களும் (Sea) முக்கிய பங்கு வகிக்கிறது என்று? மரங்களை போல கடல்கள் கரியமிலவாயுவை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுவதில்லைதான்
ஆனால் வாகனங்கள், தொழிற்ச்சாலைகள் மற்றும் இன்னபிற வஸ்துகளால் வெளியேற்றப்பட்டு வளிமண்டலத்தில்
கலக்கும் அதிகப்படியான கரியமிலவாயுவை உறிஞ்சி வெளியேற்றி சுற்றுப்புறசூழல்
பாதிப்படையாமல் காக்கும் விசயத்தில் கடல்கள் மிகமுக்கிய பங்குவகிக்கிறது என்றால்
மிகையில்லை! ஒளிச்சேர்க்கையின் (Photosynthesis) போது தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்ளும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்! மேலும் பள்ளிகூட பாட புத்தகங்களில் இதுபற்றி விரிவாக படித்தும் இருப்போம்! தாவரங்கள் உயிருள்ளவை..., ஆகையால் தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து வாயுக்களை உறிஞ்சிக் கொள்வதில் நமக்கு வியப்பேதும் இருக்கப்போவதில்லை! ஆனால் நீரோ உயிர் அற்றது! என்றால் கடல் நீரால் எப்படி கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்ளமுடிகிறது என்று நீங்கள் கேட்கலாம்! இங்கு தான் வேதியியல் (Chemistry) என்ற ஒன்று வேலை செய்கிறது! கடல் நீர் கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்ளுதல் ஒரு உயிரியல் (Biological) கலந்த இயற்பிய-வேதியியல் (Physiochemical) நிகழ்வு ஆகும்!
கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்வதில் மட்டுமல்ல பூமியின் தட்பவெப்பத்தை கவனித்துக் கொள்வதிலும் கடல்கள் முக்கிய பங்குவகிக்கிறது என்றால் மிகையில்லை! சூரிய வெப்பத்தின் பெரும்பகுதியை கிரகிக்கும் கடல்கள் மட்டும் இல்லையென்றால் பூமி என்றைக்கோ குளிர்ந்து மனிதர்களற்ற கோளாக மாறிப்போயிருக்கும்! இப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கடல் பிரதேசத்தைக்கூட மனிதன் மாசுபடுத்துவதிலிருந்து விட்டுவைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்! ஆண்டொன்றுக்கு தோராயமாக மூன்று முதல் நான்கு லட்சம் டன் அளவு வரையிலான குப்பைகள் இந்தியக் கடலோரப்பகுதியில் மட்டும் கொட்டப்படுகிறது என்றால் உலகம் முழுவதிலும் உள்ள கடல் பிரதேசங்களில் எவ்வளவு குப்பைகள் கொட்டப்படும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்! கொட்டப்படும் குப்பைகளில் 80% சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகள் என்று மிரட்டுகிறது மற்றுமொறு ஆய்வு!
இப்படி அளவுக்கு
அதிகமாக கொட்டப்படும் குப்பையால் கடல் தன் இயற்க்கைத்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக
இழந்துவிடும்.., இதன் காரணமாக மேற்சொன்ன கடலின் இன்றியமையா பணியான வழிமண்டலத்தில் கலந்திருக்கும்
அதிகப்படியான கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுதல் மற்றும் சூரிய வெப்பத்தை உறிஞ்சி
தட்பவெப்பத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுதல் போன்ற பணிகளில் கடல் தோல்வியை
சந்திக்க ஆரம்பிக்கும்! இது நிகழ ஆரம்பிக்கும் போது அதன் விபரீதம்
எப்படியிருக்கும் என்று நான் இங்கே விளக்கிகூற தேவையில்லை!
குப்பைகளை விட கடல்
அதிக அளவில் மாசடைவது எண்ணெய்க் கழிவுகளால் தான் என்கிறது மற்றுமொறு ஆய்வு! கச்சா
எண்ணெய் கழிவுகள் கடலில் கொட்டப்படும் போது அதிலிருக்கும் பாலிசைக்ளிக் அரோமேடிக்
ஹைட்ரோகார்பன் (Polycyclic Aromatic Hydrocarbon, known as PAH) என்ற நச்சுப்பொருள் கடலில் கலந்துவிடுகிறது! இது கடலையே கருப்பு
நிறமாக மாற்றும் தன்மைகொண்டது என்பதோடு மட்டுமல்லாமல் கடலிலுள்ள உணவுசங்கிலி
முழுவதிலும் விஷத்தையும் பாய்ச்சக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது! இந்த
நச்சுப்பொருள் முதலில் தாக்குவது கடலில் வாழும் நுண்ணுயிரிகளைத்தான், பின்பு இந்த நுண்ணுயிரிகளை
உண்டு வாழும் மீனையும் பாதிக்கிறது! இறுதியில் மீனை உணவாக உட்கொள்ளும் மனிதனையும்
பாதிக்கிறது.
கடல் மாசுபடுதல்
இதோடு நின்றுவிடுகிறது என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை! நகரங்கள் மற்றும்
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றம் செய்யப்படும் கழிவு நீர்.., பெரும்பாலும் கடலில்தான்
போய் கலக்கிறது! இதன் காரணமாக கடல் நீர் கொஞ்சம் கொஞ்சமாக மாசடைந்து அமிலத்தன்மை அடைந்துவருவதாகவும்
கூறப்படுகிறது! சமீபத்தில் மற்றுமொறு அதிர்ச்சியான தகவலும் கசிய ஆரம்பித்துள்ளது! அதாவது
வளர்ந்த நாடுகள் தங்களிடமுள்ள “ரசாயன ஆயுதக் கழிவுகளை” எவருக்கும் தெரியாமல் கடலில் கொட்டி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது!
இதற்க்கு இயற்கை ஆர்வலர்களிடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து தற்போது
சர்வதேச கடல்பகுதிகள் செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது! கடல்பரப்பையே
இந்த அளவு மாசுபடுத்திக்கொண்டிருக்கும் போது மனிதன் நிலப்பரப்பை மட்டும் சும்மாவா
வைத்திருப்பான்?
நிலப்பரப்பு தற்போது எந்த
அளவு மாசுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சிறிய விஷயத்தை
இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்! மனிதர்களால் அத்தனை சுலபமாக
அடைந்துவிடமுடியாத புவியின் உச்சபட்ச உயர்ந்த நிலப்பரப்பு எவரெஸ்ட் என்பது நாம்
அனைவரும் அறிந்ததே! பல நூற்றாண்டுகளாக எட்டமுடியாமல் இருந்த இந்த புவியின் உயர்ந்த
நிலப்பரப்பை உலகிலேயே முதன்முதலாக நியுசிலாந்து நாட்டை சேர்ந்த எட்மண்ட் ஹில்லாரி (Edmund Percival
Hillary, 1919 – 2008) மற்றும் நேபாளத்தை
சேர்ந்த டென்சிங் நோர்கே (Tenzing Norgay, 1914 - 1986) ஆகிய இருவரும் 1953-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி எட்டிபிடித்தனர்!
அன்றிலிருந்து இன்றுவரை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மலை ஏறும் நிபுணர்கள் எவரெஸ்ட்
சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துவருகிரார்கள்.! எவரெஸ்ட் சிகரத்தை தொடும் ஒவ்வொரு
மலையேற்றக் குழுவும் பயணத்தின் போது அவர்களுடன் கொண்டுசெல்லும் உணவுடப்பாக்கள்,
பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் ஆகியவற்றை உபயோகித்துவிட்டு மலையிலேயே வீசிவிட்டு
திரும்புகின்றனர்!
மலையேற்றக்குழு மலையில்
விட்டுவந்த குப்பைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் புவியில் இன்னொரு எவரெஸ்ட்
மலையையே உருவாக்கலாம் என்னும் அளவிற்கு இன்று குப்பைகளால் நிரம்பி வழிகிறது
எவரெஸ்ட்! தொடர்ந்து இமயமலையின் சுற்றுப்புறசூழல் பாதிப்படைய ஆரம்பித்ததும்
விழித்துக்கொண்ட நேபாள அரசு இதற்க்காக அபா செர்பா (Apa Sherpa, 1961 – Present) என்பவரது தலைமையில் குழு ஒன்றை அமைத்து எவரெஸ்ட் மலையில்
தேங்கிக்கிடக்கும் குப்பையை அகற்றும் பணியை (Eco Everest Expedition) 2008 ஆம் முதல் துவக்கி செயல்படுத்திவருகிறது! கடந்த நான்கு
ஆண்டுகளில் வெவ்வேறு மலையேற்ற குழுக்களின் வாயிலாக இதுவரை அப்புறப்படுத்தப்பட்ட
குப்பைகளின் மொத்த எடை கிட்டத்தட்ட 20,000 கிலோ என்றால்
சுற்றுப்புறசூழலை மாசுபடுத்திக்கொண்டிருப்பதில் மனிதன் இமாலய சாதனையை படைத்துக்கொண்டிருக்கிறான்
என்பதற்கு இதைத்தவிர வேறு என்ன ஆதாரம் வேண்டும் நண்பர்களே!
இப்போதுவரை... சுற்றுப்புறசூழல்
தொடர்ந்து மாசடைந்துகொண்டிருப்பதை நம்மால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதை
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியதுள்ளது! எதிர்காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தின்
காரணமாக நகரங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் இதன் எதிரொலியாக காடுகளும் அதிகமாக
அழிக்கப்படக்கூடும்! இதன் காரணமாக புவியின் வெப்பநிலை உயர்ந்து உயிர்க்கோளம்
கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைந்து அதன் உட்சபட்ச வாழ்நாளிலிருந்து (2.5 பில்லியன் ஆண்டுகளிலிருந்து) தோராயமாக ஒரு பில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பே முற்றிலும் அழிந்துபோய் விடலாம் என்று மிரட்டுகிறார்கள் சுற்றுப்புறசூழல்
ஆய்வாளர்கள்! இதனை வலுவான ஆதாரங்கள் கொண்டு இவர்கள் நிரூபிக்கவில்லை என்றாலும் கூட நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் இதனை உண்மையென்றே உணர்த்துகின்றன! சுருக்கமாக ஒரு
வரியில் சொன்னால் மனிதகுலம் தங்களை அறியாமல் ஒட்டு மொத்தமாக தற்கொலை முயற்ச்சியில்
கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை!
மேலும் சில
சுவாரஸ்யமான தகவல்களோடு இத்தொடர் பதிவின் அடுத்தபாகம் உங்களுக்காக
காத்துக்கொண்டிருக்கிறது நண்பர்களே, தொடர்ந்து இணைந்திருங்கள்! பதிவு பற்றிய
உங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்ய மறக்க வேண்டாம்! உங்கள் கருத்துக்கள் மூலமாகத்தான்
என் தவறுகளை திருத்திக்கொள்ளவும் என்னை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்! விரைவில்
மற்றுமொறு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன்.. நன்றி வணக்கம்!!!
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
சுற்றுப்புறசூழல்பற்றி பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteஅருமையான மற்றும் சுவாரசியமான பதிவு ,, கடல் நீர் கார்பன் டை ஆக்சைடை எப்படி உறிஞ்சுகிறது என்று சிறிது விளக்கி இருக்கலாம் என நினைக்கிறேன் ,,,
ReplyDeleteபதிவை அப்டேட் செய்திருக்கிறேன் நண்பா! இப்போது பதிவு ஓரளவிற்கு முழுமையடைந்திருக்கும் என்று நம்புகிறேன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Delete
ReplyDeleteநல்ல செய்தி!இதுவரை பலரும் அறியாத ஒன்று!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteஎவரெஸ்டில் மனிதர்கள் விட்டுச் சென்ற குப்பைகளை கொண்டே இன்னொரு எவரெஸ்ட் உருவாக்கலாம்! என்ற செய்தி ஆச்சர்யம் அளித்தது! சிறப்பான பல தகவல்கள் அறிந்து கொண்டேன்! நல்ல விழிப்புணர்வு பதிவு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ஓல்டு ஜோக்ஸ் 2
http://thalirssb.blogspot.in/2012/09/2.html
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteபயனுள்ள விழிப்புணர்வு பகுதி கொஞ்சம் தொடராக பதிகள் குறைத்து கொடுத்தல் முழுதாக படிக்க எதுவாக இருக்கும்
ReplyDeleteஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு விஷயத்தை சொல்ல முயற்சிக்கிறேன், சொல்ல வந்த விஷயத்தை முழுமையாக...கொஞ்சமாவது எல்லோருக்கும் புரியும் படியாக சொல்லவேண்டும் என்று நினைப்பதால்தான் பதிவு கொஞ்சம் நீளமாகிவிடுகிறது! தயைகூர்ந்து பதிவின் நீளத்தை பொருட்படுத்தாமல் பொறுமையாக பதிவை வாசிக்க வேண்டுகிறேன், எதிர்காலத்தில் கூடுமானவரை பதிவின் நீளத்தை குறைக்க முயல்கிறேன் சகோ!
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
அருமையான , பல முக்கிய விஷயங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதிவு நன்றி நண்பா
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தல!
Deleteநல்ல தெளிவான பயனுள்ள பதிவு.(5 )
ReplyDeleteகரியமிலவாயுவை அகற்றுவதில் கடல்களும் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற செய்தி தற்போதுதான் படிக்கிறேன். வியப்பான செய்தி..
இமயமலையில் உள்ள பனிக்கட்டிகளால் அங்கு விட்டுச்செல்லும் கழிவுகள் எத்தனை ஆண்டு ஆனாலும் அழியாமல் அப்படியே இருக்கிறதான்...நல்லவேளை நேபாளஅரசு சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.
இமயமலையை மாசுபடுத்துவதில் மனிதன் இமாலய சாதனை படைக்கிறான்...உங்கள் எழுத்தும் கருத்தும் அற்புதம் நண்பா...
மிக்க நன்றி நண்பா, தொடர்ந்து இணைந்திருங்கள்! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
Deleteகடல் குறித்த தகவல்கள் புதியது, அத்தோடு அதிர்ச்சி தரும் வண்ணம் நாம் அசுத்தம் செய்வது நினைத்து கவலை கொள்கிறேன். நிலம், நீர், ஆகாயம் என எல்லா இடங்களையும் நாம் அசுத்தமாக்கி விட்டோம் :-((((
ReplyDeleteநல்ல சூழல் பதிவு. கார்பன்-டை -ஆக்ஸைடை கடல் எப்படி உறிஞ்சுகிறது என்பது குறித்து எதிர்பார்த்தேன்
ReplyDeleteஅத்தனை நீரும் வறண்டு போய்
அத்தனை மரங்களும் காணாமல் போய்
அத்தனை மலைகளும் அழிந்து போய்
அத்தனை பனியும் உருகிப் போய்
தனியனாய் நிற்கும்போதாவது உணர்வோமா நம் தவறை
பதிவை தற்போது அப்டேட் செய்திருக்கிறேன் சகோ, ஏற்கனவே பதிவு கொஞ்சம் நீளமாக இருந்தது தற்போது மேலும் சில தகவல்கள் சேர்க்கப்ப்ட்டதால் இன்னும் கொஞ்சம் கூட பதிவு பெரிதாகிப்போனது :)
Deleteவருகைக்கும் கவித்துவமான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
இயற்கயின் அழிவுகளுக்கு நாமே காரணமாயிருக்கிறோமே.அதிசயத் தகவல்கள்.உங்கள் தேடல்கள் அதை எமக்குப் பகிரும் தன்மை...அன்பான பாராட்டுகள் சகோதரா !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteபதிவை வாசித்துக்கொண்டிருக்கும்போதே உள்ளுக்குள் ஒரு பய உருண்டை உருள ஆரம்பித்திவிட்டது! வசிக்க மட்டுமல்ல, சாதரணமாக செல்லகூட முடியாத எவரெஸ்ட்டிலேயே அவ்வளவு குப்பைகள் என்றால்.....?
ReplyDeleteஇருநூறு வருடங்களுக்குள்ளேயே 10சதவிகிதமா? இருப்பது 30 சதவிகிதம்தானா? உலகம் இன்னும் முன்னேறுமே! இன்னும் பத்து வருடங்களுக்கு கூட இந்த 30சதவிகிதம் பத்தாதே! போச்சா? அம்புட்டுதானா?
ஏ வாங்கப்பா! இந்தமாதிரி யாருக்காவது பயம் வந்திருந்துசுன்னா உடனே திருந்தறதுக்கு ஆரம்பிப்போம்!
அட நமக்காக இல்லாட்டாலும் நம்ம குழந்தைகளுக்காவது!
திருந்துவாங்கன்னா சொல்லுறீங்க...ம்ம்ம்ஹீம் அது மட்டும் நடக்கவே நடக்காது நண்பரே..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Deleteபயனுள்ள விழிப்புணர்வு பகிர்வு. கடைப்பிடிப்பது நமது கைகளில்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteதெரிந்து கொண்டேன்,இந்த பதிவை மற்றவர்களும் படிக்க என்னுடைய முகநூளிலும் பகிர்கிறேன்.விழிப்புணர்வு பதிவை பகிர்ததர்க்கு நன்றி நண்பா
ReplyDeleteமுகநூலில் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பா..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Deleteவாவ் ! அற்புதமான பதிவு .. காலநிலை, சுற்றுபுறச் சூழல் குறித்தான பதிவுகளில் எனக்கு அலாதி பிரியம் உண்டு.. இயற்கையின் ஒவ்வொரு விடயமும், பேலண்ஸ் செய்யும்படியாக பரிணமித்துள்ளன. அவற்றை கெடுதியில் மாற்றிவிடுவோமானால் நுனிக் கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுவது போன்றே ஆகும் ... விழிப்புணர்வுப் பதிவுகள் பலவற்றைத் தொடர்ந்து எழுதுவோம்.
ReplyDeleteபடிக்க : மிதவாத முஸ்லிம்கள் மௌனித்து இருப்பதேனோ ?
வாங்க இக்பால் செல்வன்; பிரபலமான பதிவரில் ஒருவரை எனது இந்த சின்ன வலையில் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது...மிக்க நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்!
Deleteவிளக்கமான சிறப்பானபகிர்வு
ReplyDeleteஒவ்வொரு பதிவிலும் அருமையான புதிய தகவல்கள்.. மலையில் இவ்வளவு சுற்று சூழல் கேடா..இதற்கான விழிப்புணர்வு மிக மிக அவசியம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா!
Deleteபயனுள்ள பதிவு தோழா.....
ReplyDeleteஎவரெஸ்ட் பற்றிய தகவல் உண்மைதானா? அதிர்ச்சி அளிக்கிறது! பிளாஸ்டிக் நமக்கு நாமே வைத்து கொள்ளும் ஆ_பு! :(
ReplyDeleteநம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும் உண்மைதான் நண்பரே!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நிறைய தகவல்கள்..நல்ல விழிப்புணர்வு பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா...
ReplyDeleteவருகைக்கும் கருத்தும் மிக்க நன்றி தம்பி!
Deleteநிறைய தகவல்கள் அடங்கிய பதிவு நண்பரே......
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குருவியாரே!
Deleteவழமையாக சுற்று புற சூழல் விழிப்புணர்வு கட்டுரைகளில் தொடப்படாத (நான் காணாத) மலை சார் விடயங்களையும் கணக்கில் எடுத்து இருக்கீங்க தகவல்களோடு.. அதற்க்கு முதலில் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநண்பா 20000 kg என்று ஒரு தொகையிலான குப்பைகள் பற்றி போட்டு இருந்திங்க.. உண்மையிலே மொத்த கணக்கெடுப்பை பார்த்த தல சுத்திடும் போல தான் இருக்குல..
ஆனா நண்பா உண்மையிலே மீள் சுழற்சி பற்றிய ஒட்டு மொத்த விழிப்புணர்வு வந்தால் ஒரு வேளை மாசுபடுதலை குறிப்பிட்டளவு குறைக்கலாம்நு நினைக்கிறேன்.. (ஆனாலும் அழிச்ச காட்ட அதோட இருந்த உயிரினங்கள மீள் சுழற்சி மூலம் மறுபடி பெறமுடியாது தான் ஆனா ஒரு மரம் நடுவோம்னு ஒவ்வொருவரும் ஆரம்பிக்கலாம் இல்ல.. கொஞ்சம் ஆவது பிரயோஜனமா இருக்கும்)
//“ரசாயன ஆயுதக் கழிவுகளை”//
இதெல்லாம் கண்டு பிடிக்கிற பயபுள்ளைங்க இந்த மீதி ரசயானங்கள் வேறொரு ரசாயனதொட சேர்ந்தா நல்லதா மாறலாம் என்று இன்னொரு ஆராய்ச்சி பண்ணுவாங்க என்றா நலம் இல்லாட்டி அதை மீள் சுழற்சி பண்றதுக்காகவாவது ஆராய்ச்சி பண்ணலாம்.. (சும்மா ஜோக்குக்கு).. ஆனா பாருங்க கண்டு பிடிக்கிற ஆயுததாலையும் ஆபத்து தான்.. அதுல வார மிச்ச மீதியாலையும் ஆபத்து தான் ஹி ஹி
அழிவை பற்றி கட்டுரை எழுதினா அதை தவிர்க்கிரதுக்கும் யோசனைகள் போல சிலத சேர்த்து எழுதி இருப்பிங்க என்றா இன்னும் கட்டுரை முழுமையா இருந்து இருக்கும்..
வாழ்த்துக்கள் நண்பா தொடரட்டும்..
Finally (எனக்கு ரொம்ப பிடிச்ச வாசகம் )
“Only after the last tree has been cut down, only after the last river has been poisoned, only after the last fish has been caught, only then will you find that money cannot be eaten”. Cree Indian Prophecy (Thank you - UNEP)
>>>இதெல்லாம் கண்டு பிடிக்கிற பயபுள்ளைங்க இந்த மீதி ரசயானங்கள் வேறொரு ரசாயனதொட சேர்ந்தா நல்லதா மாறலாம் என்று இன்னொரு ஆராய்ச்சி பண்ணுவாங்க என்றா நலம் >>>
Deleteஉண்மையில் இது பற்றி விஞ்ஞானிகள் சிந்தித்தார்கள் என்றால் நலம்!
>>>அழிவை பற்றி கட்டுரை எழுதினா அதை தவிர்க்கிரதுக்கும் யோசனைகள் போல சிலத சேர்த்து எழுதி இருப்பிங்க என்றா இன்னும் கட்டுரை முழுமையா இருந்து இருக்கும்>>>
பதிவின் நீளம் கருதியே பல தகவல்களை எழுத இயலாமல் போகிறது நண்பா!
>>>Only after the last tree has been cut down, only after the last river has been poisoned, only after the last fish has been caught, only then will you find that money cannot be eaten”. Cree Indian Prophecy (Thank you - UNEP)>>>
செம செம..!
BTW., பதிவை போலவே...மிக நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா!
கடல் co2வை உறிஞ்சுகிறது என்று இன்றுதான் தெரியும் :-)
ReplyDeleteதங்களுக்கு அறியத்தந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா! தொடர்ந்து இணைந்திருங்கள்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
Deleteபயனுள்ள விழிப்புணர்வு பகிர்வு... இந்த குப்பைகள் எல்லாம் குறையும் ---> மனித மனங்களின் குப்பைகள் அகன்றால்...
ReplyDeleteஅன்பு நண்பரே... அவ்வப்போது இப்படி நிறைய பதிவுகளை எழுதவும்...
மனித மனங்களிலுள்ள குப்பையை ஒரு போதும் அகற்ற முடியாதே தலைவரே என்றால் எனக்கு பயமாயிருக்கிறது இக்குப்பைகளை ஒரு போதும் அழிக்கமுடியாதே என்பதை நினைத்து!
Deleteஎனக்கும் நிறைய பதிவுகள் எழுதவேண்டும் என்ற ஆசைதான் நண்பரே..பணிச்சுமை காரணமாகவே இயலாமல் போகிறது ஆனால் எதிர்காலத்தில் பதிவுகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை இயன்றவரை குறைக்க முயற்சிக்கிறேன் நண்பரே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நல்ல விளக்கமான பதிவு.கடலை குப்பை தொட்டியாக பயன்படுத்துவது ஆபத்தானது என்று அழகாக சொல்லி இருக்கிறீர்கள் வ.சு. இந்த லட்ச்சனத்துல அணுக்கழிவுகளுக்கும் கடல்தான் கிடைச்சது.தற்கொலை முயற்சி சொன்னது மட்டும் நடுங்க வைக்கும் உண்மை.தொடர்க அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்! தொடர்ந்து இணைந்திருங்கள்!
Deleteமிக விரிவான பதிவு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜா சார்!
Deleteம்ம் பயனுள்ள நல்ல தகவல்தான்...
ReplyDeleteகடலிலில் இருந்து என்ணெய் கடைபவர்கள்
இதை உணர்ந்தால் வரும் நிம்மதி...
அருமை..........
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி எஸ்தர்!
Deleteபயனுள்ள தகவல் தொடருங்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சசி அக்கா!
Deleteவணக்கம் வரலாற்று சுவடுகள்.
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல் பதிந்திருக்கிறீர்கள். நன்றி.
ஆனால் எனக்கு ஒன்று தான் புரியவில்லை.
எடுப்பதும் புமியிலிருந்து தான். பின்பு அதைத் துர்க்கிப் போடுவதும்
அங்கேயே தான். புதியதாக வேறு ஒரு உலகத்திலிருந்து
இங்கே கொண்டு வந்திருந்தால் அதனால் வீணாகிறது
என்று சொல்லாம்.
சரி அதிக குப்பையாகிறது என்று எரித்தாலும்
அந்த புகையும் வான மண்டலத்தைத் தாக்குகிறது
என்கிறார்கள்.
பிறகு என்ன தான் செய்வது...?
ஏதாவது அதற்கும் வழி இருக்கும் இல்லையா...
(இதை நான் இடக்கு மடக்காக கேட்பதாக நினைக்காதீர்கள்.
எனக்கு உண்மையில் விளங்க வில்லை என்பதால் தான் கேட்கிறேன்.
என்னிடம் இது தான் கெட்டப்பழக்கம். தெரியவில்லை என்றால்
உடனே யாராக இருந்தாலும் கேட்டுத் தெரிந்து கொள்வது.
ஆனால் ஒரு சிலருக்கு இது பிடிப்பதில்லை. அதனால் தான் விளக்கிச் சொன்னேன்.)
தயவு செய்து தவறாக கொள்ளாதீர்கள். நன்றி.
/ஆனால் எனக்கு ஒன்று தான் புரியவில்லை.
Deleteஎடுப்பதும் புமியிலிருந்து தான். பின்பு அதைத் துர்க்கிப் போடுவதும்
அங்கேயே தான்.//
சரி தான்.. ஆனா அப்பிடியே போட்ட குப்பை வராது அண்ணா
மாறாக அதன் நிலை மாற்றும் போதோ (திண்மம், திரவம், வாயு), கலப்பு செய்யும் போதோ (ஆராய்ச்சி), இடம் மாற்றும் போதோ (விலங்கு, தாவரங்கள்) தான் வெற்றி பெறுபவை சாதனைகளாகவும் fail ஆனவை குப்பையாகவும் போகின்றன.. இதை விஞ்ஞான முறையில் விளக்கலாம் ஆனால் வரலாறு அண்ணாவுக்கு வேலை போய் விடும் அபாயம் இருப்பதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்..
@ அருணா செல்வம்.,
Deleteகுப்பைகளில் இரண்டு வகை உண்டு! ஒன்று மக்கும் குப்பை, இன்னொன்று மக்காகுப்பை!
பொதுவாக மக்கும் குப்பைகளால் சுற்றுப்புறசூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது குறிப்பாக அவை முறையாக அகற்றப்படும் போது!
மக்காத குப்பைகளினால் தான் பிரச்சனையே குறிப்பாக அவை முறையாக அகற்றப்பட்டாலும் கூட! உதாரணத்திற்கு பிளாஸ்டிக், மின்னணு கழிவுகள் (such as computer and other electronics items) மற்றும் இன்னபிற..! இவையெல்லாம் இயற்க்கையால் படைக்கப்பட்டவை அல்ல, செயற்கையாக மனிதனால் இப்புவியில் உருவாக்கப்பட்டு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருபவை! இயற்கை இப்புவியில் உருவாக்கிய எல்லா பொருளும் இயற்கையாகவே அழியும் தன்மை கொண்டவை என்பதை கவனிக்க!
குப்பைகளை முறையாக அகற்றும் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதும், கூடுமானவரை இயற்கையோடு இயைந்து வாழ்வதும் தான் இப்பிரச்சனைகளுக்கான தீர்வு என்று நான் கருதுகிறேன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்!
தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க வரலாற்று சுவடுகள் மற்றும் ஹாரி பார்ட்டர் அவர்களுக்கும்.
Delete>>>விஞ்ஞான முறைப்படி விளக்கலாம்..ஆனால் வரலாறு அண்ணாவிற்கு வேலை போய்விடும் அபாயம் இருப்பதால்<<<
Deleteஎதையாவது சொல்லு மச்சி அப்பத்தானே நான் எதையாவது தெரிஞ்சிக்க முடியும்!
அருமையான வியப்பான தகவல்களைப் பகிர்ந்தளிக்கும்
ReplyDeleteஉங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ .மிக்க
நன்றி பகிர்வுக்கு .
வணக்கம் நண்பரே..
ReplyDeleteநலமா???
கடல் நீர் கரியமில வாயுவை தன்னுள் உறிஞ்சிக் கொள்வதால்தான்
காற்று மண்டலம் இவ்வளவு மரங்களை வெட்டியா பிறகும்
இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது////
அறிவியப் பூர்வமாக அதிநிறை கருத்துக்களுடன் தங்கள்
பதிவினைப் படிப்பதில் பெரும் ஆனந்தம் எனக்கு...
பல தகவல்களுக்கு நன்றிகள்.
வணக்கம் நண்பரே... நான் மிக்க நலம்..நீங்களும் நலமாயிருப்பீர்கள் என்று நம்புகிறேன்! வருகைக்கும் கருத்தும் மிக்க நன்றி!
Deleteகாட்டு மரங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் காட்டுமிராண்டிகளான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வள்ளுவனும் அவ்வையும் பாரதியும் நெட்டை மரங்கள் என்று மரங்களைக் கூறுவார்கள். அவற்றிடமிருந்து மனித மரங்கள் கற்றுக்கொள்ள் எத்தனை எத்தனை.. அழகான பயனுள்ள பதிவு. விழிப்பார்களா மக்கள்?
ReplyDeleteமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் சிந்திக்க செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteதல ரொம்ப அருமையான விழிபுனர்வைக் கொடுக்கும் பதிவு... கலதாமாக வந்ததற்கு மன்னிக்கவும்,,,
ReplyDeleteமிக அதிகமான நபர்களை சென்று சேர வேண்டிய பதிவு...சலிப்பு தட்டாத எழுத்து நடை .. எதாவது மிகப் பெரிய தளத்திலும் உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள்..நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய எழுத்துகள்
நம்ம அந்த அளவுக்கு வொர்த்தா என்ன? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனு!
Deleteநல்ல விரிவான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதிவு நண்பரே..!
ReplyDeleteபதிவைப் படித்ததும் கணினியிலேயேதான். இக்கணினியே இயற்கைக்கு எதிரானதுதானே நண்பரே...!
இதனால் ஏற்படும் வெப்பமும் பூமி வெப்பமாவதற்கு ஒரு காரணம் என படித்திருக்கிறேன்..!
நன்றி..!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteவணக்கம் பாஸ்...
ReplyDeleteஎப்படி இருக்கீங்க?? :))
பாஸ் என்னமா எழுதுறீங்க அதுவும் பயல் உள்ள பதிவு (கள்).. ஹும் உங்கள எல்லாம் பார்த்து நாம கத்துக்க நிறைய இருக்கு பாஸ்...
வலையுலகில் மொக்கைகளுக்கு நடுவில் உங்களை போன்றோர் ஒரு சிலரே... இந்த எழுத்து நடையை எப்பவும் நிறுத்தாதீங்க ... வாழ்த்துக்கள் பாஸ்...
வணக்கம் துஷ்யந்தன்..நான் நலம்..நீங்க எப்பிடி இருக்கீங்க.. மொத மொத நம்ம கடைத்திக்கம் வந்திருக்கீங்க..வருகைக்கு நன்றி..அடிக்கடி வாங்க..கருத்திற்கு மிக்க நன்றி :) :)
Deleteபுதிய தகவல் இது உண்மையும் கூட. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஉண்மையாலுமே தெரியாது வாப்பா....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteபுதிய தகவல்கள்....நன்றி மக்கா...!
ReplyDeleteஉபயோகமான ஆக்கப் பூர்வமான பதிவுக்கு நன்றி ...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteயம்மாடி எவ்ளோ விசயங்கள்?பதிவுலகில் பதியாத விசயங்களா வருது.....நம்ம மண்டைக்கு அதிகமா தோன்றினாலும் நமது பிரச்சனை என்பதால் படித்தே ஆக வேண்டியதாகிறது.வரலாறு,நிறைய உழைக்கிரீங்க...பாராட்டுக்கள்.பயனுள்ள பதிவிடும் வெகு சில பதிவர்களில் தனி முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும்..கருத்துக்கும்...வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteநன்று.மிகச் சிறப்பான பகிர்வு
ReplyDeleteஇன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”
ஓய்வு நேரத்தில் தங்கள் தளத்திற்கு வருகை புரிகிறேன்; வருகைக்கும் கருத்தும் மிக்க நன்றி நண்பா!
Deleteஎப்ப பாஸ் பதிவு போடுறீங்க நம்ம டாஷ்போர்ட் க்கு ஒன்னும் வர மாட்டுது .வரலாற்று சுவடுகள் ஏதாவது [அதிர்வு போட்டு இருக்காரான்னு தேடி வந்தேன்
ReplyDeleteஒரு ஆலோசனை :
பதிவின் நீளத்தை குறைத்து பல பாகங்களாக வெளியிடலாமே !
தங்கள் ஆலோசனையை கருத்தில் கொள்கிறேன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரேம்!
Deleteஎவரெஸ்ட் மலையில நாம கொட்டி வச்சிருக்கும் குப்பைகள்ல தேடி எடுத்துக்கிட்டு வந்தது மட்டும் 20,000 கிலோன்னா இன்னும் எவ்வளவு இருக்குமோ? எப்போ விழிச்சுக்க போறோம் நாம்?!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி அக்கா!
Deleteநல்லதொரு பதிவு.. நிறைய புதிய தகவல்களைத் தந்தீர்கள். நன்றி.
ReplyDeleteஇங்கேயும் வாருங்கள்.
ஓய்வு நேரத்தில் தங்கள் தளத்திற்கு நிச்சயம் வருகை புரிவேன்., வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteநன்கு விரிவாக எழுதியிருக்கிறீர்கள்!! அருமையான பதிவு!!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்!
Deleteதல.....ராக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ReplyDeleteஅவ்வ்வ்...கூகிள் பிளஸிலும் வந்தாச்சு போலிருக்கு! :)
Deleteவிழிப்புணர்வு பதிவு...
ReplyDeleteஅருமை...
வாழ்த்துக்கள் சகோ...
http://tk.makkalsanthai.com/2012/09/quotes_21.html
தொழிற்கள நிர்வாகிகளின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது! கருத்துக்கு மிக்க நன்றி!
Deleteநேரம் கிடைக்கும் போது நம்ம பதிவர்களையும் உற்சாகப்படுத்துங்கள் சகோ...
ReplyDeleteஉங்களை போன்றோர் ஊக்கப்படுத்தினால் பல திறமைகளை வெளிகொண்டு வரலாம்...
நன்றி...
நான் பெரும்பாலும் டாஸ்போர்டு வழியாகத்தான் பதிவுகளை பின்தொடர்வதுண்டு! தொழிற்களத்தில் followers widget இல்லாததால் பதிவுகளை பின்தொடர்வதில் சிரமத்தை உணர்கிறேன்! எல்லோரும் எப்படி பின்தொடர்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை..நான் தற்போது தொழிற்களத்தை புக்மார்க் செய்துள்ளேன்..இனி தவறாது வருகை தர முயற்சிக்கிறேன்...நன்றி!
Deleteகடல் என்று சொன்னால்...
ReplyDeleteகடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் தாவங்களின் பங்களிப்பு சுற்று சூழல் பாதுகாப்பிற்கு உறு துணையாக இருக்கிறது. மீன்கள் மட்டுமல்ல பல கடல் உயிரினங்கள்..கடல் தாவரங்கள் அழிந்து விட்டது மனிதனின் சுயநலத்தால்... இங்கு பல சுவாரசிய தகவல்கள் அதிர்ச்சி தகவல்களை கொடுத்திருக்கீங்க. இதில இன்னும் துணை தலைப்புகள் கொடுத்து பல பகுதியாக போட்டிருக்கலாம் என்பது என் கருத்து.
அடுத்த பதிவு இன்னும் கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கும் குமரன் சார்..மறக்காம வாங்க!
Deleteஎதிர்காலத்தில் பதிவின் நீளத்தை கூடியவரை குறைக்க முயற்ச்சிக்கிறேன் குமரன் சார்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
இங்கே இன்னொரு கருத்தையும் பதிகிறேன். தண்ணீர் சிறந்த மாசு நீக்கி என அறிந்துதான் நம் முன்னோர் குளங்களை வெட்டி நீர் வளம் பெருக்கினர் போலும்.
ReplyDeleteஉண்மை உண்மை!
Deletegood post ....
ReplyDeletethanks buddy!
Deleteரெம்ப நல்ல விடயங்களாக எழுதிவருகிறீங்க தம்பி. முதன்முதலாக வந்து பார்த்து,படித்து கருத்தை பதிகிறேன்.நல்ல விழிப்புணர்வு பதிவு. மிகுதி படித்துவிட்டு கருத்திடுகிறேன்.
ReplyDeleteமுதல் வருகைக்கும்..முத்தான கருத்திற்கும் மிக்க நன்றி அக்கா!
Deleteplease come
ReplyDeletei'll buddy.!
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!
Deleteஇன்றைய நிலையில் உலகின் இயற்க்கை வளங்களை காப்பது என்ற மூகமையான குறிக்கோளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் அறிஞ்சர்கள் முதல் எல்லோரும் உள்ளனர் இன்னும் நாம் விழித்துக் கொள்ளை வில்லை என்றால் உலகு வெப்பமயமாகி உயிர்கள் அழிவதை நம் கண்முன்னே காண நேரிடும் இன்றைய எல்லா வேலைகளையும் புறந்தள்ளிவிட்டு அனைவரும் இயற்கைவளங்களை காப்பதன உறுதியான நடவடிக்கையில் ஈடுபடுவோம் உங்களின் சிறந்த கருத்துக் களுக்கு நிறைந்த பாராட்டுகள்.
ReplyDeleteCo2 நீரில்கறையும் தன்மைஉடையதா?
ReplyDelete