Saturday 2 June 2012

சிந்தனைக்கு சில சீரிய சிந்தனைகள், best quotes on the Tamil calender


அனைவருக்கும் வணக்கம்,. வலைத்தளத்தில் பதிவு போட்டு நிறைய நாள் ஆகிருச்சே நம்மை எல்லோரும் மறந்திருப்பார்களே? நாளை நிச்சயம் ஏதாவது ஒரு பதிவு போட்டாத்தான் விளையாட்டில் நாமும் இருப்பது நிறைய பேருக்கு ஞாபகம் இருக்கும் என்ன செய்யலாம்.., ம்ஹும் என்ன பதிவு போடலாம் என்று நினைத்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்தபோது கண்ணில் பட்டது அறையில் இருந்த அந்த காலண்டர். அட அந்த காலண்டரில் தேதிக்கு கீழே தினமும் ஏதாவது ஒரு நல்ல கருத்து இருக்குமே அதை தொகுத்து ஒரு பதிவாக போட்டால் என்ன..? என்ற சிந்தனை என் மூளையில் உதித்தது, அந்த சிந்தனையை செயலாக்கியதே இந்த பதிவு, சரி இனி கருத்துகளுக்கு செல்வோமா ..?  

ஒரு இல்லத்தை முழுமையான இல்லமாக மாற்ற பெண்களால் மட்டுமே முடியும்.

தன் குற்றங்களை உணராதவன் எவனோ அவனே உண்மையான குருடன்

ஒருவன் பக்தியோடு இருப்பதை காட்டிலும் நல்லவனாக இருப்பதே சிறந்தது.

இறைவன் உங்கள் உள்ளங்களையும் நற்செயலையும் தான் பார்க்கிறார், அல்லாமல் உங்களிடமுள்ள செல்லவத்தை அல்ல

நம்முடைய இதயக் குமுறலை மூழ்கடிக்கும் அற்புதமான சக்தி படைத்தது சிரிப்பு

வாழ்ந்து முடித்த ஒரு மனிதனின் வாழ்வு, வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனின் வாழ்வுக்கு கண்ணாடி

தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கிருந்தே துவங்குகிறது அந்த மனிதனின் ஒழுக்கம்.

ஒரு துளி பேனா மை ஒரு லட்சம் மனிதர்களை சிந்திக்க வைக்கிறது

நேர்மையாக வாழுங்கள் சில சமயம் அதுவே உங்கள் தோல்வியை வெற்றிகளாக மாற்றும் காரணிகளாக இருக்கும்

ஒரு மனிதனின் ஆயுளின் பெருமை அவன் வாழும் ஆண்டுகளில் இல்லை, அவன் வாழும் முறையில் தான் உள்ளது


உண்மை, இறைவனை காட்டிலும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் இறுதியில் அதுவே ஜெயிக்கிறது

ஓய்வு உடலுக்கான அழகான ஆடை, ஆனால் அதை தொடர்ந்து அணிவது நல்லதல்ல

சொற்கள் சில சமயம் வாளை (Sword) விட அதிகம் வெட்டுகிறது

சில இடங்களில் நல்லதை செய்வதாக இருந்தாலும் நிதானித்து தான் செய்ய வேண்டியதுள்ளது.

முயற்சிக்கும் வரை எவருக்கும் தன் திறமை தெரிவதில்லை

எப்போது ஒருவன் தன் தவறை ஒப்புக்கொள்ள ஆரம்பிக்கிறானோ அப்பொழுதே அவன் வெற்றி பெற தகுதியானவனாகிவிடுகிறான்.

பொறுமை அதிகம் உள்ளவனே எதையும் சாதிக்கும் ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான்

மற்றவர்கள் துயரங்களை கேலி செய்யும் நெஞ்சங்களைப் போல கேவலமானவை உலகில் வேறேதும் இல்லை 

புத்தகம் மனித பிறவிகள் இல்லை, ஆயினும் அவை உலகத்தில் என்றென்றும் உயிருடன் வாழ்கின்றன

அட என்னய்யா, நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு திடீர்ன்னு எதுக்கு இந்த கொலைவெறி ஏன் இப்படி மொக்கை பதிவை போட்டு எங்களை கொல்லுற என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் அது என்னவென்றால் அலுவலகத்தில் சென்ற மாதம் முழுவதும் வேலைப்பளு சற்று அதிகமாக இருந்ததால் தகவல்களை சேகரிப்பதில் சற்று சுணக்கம் ஏற்பட்டுவிட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் இருந்தாலும் விரைவில் ஒரு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன் என்று கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.., நன்றி வணக்கம் ..!


பதிவுகளை தவறவிடாமல் வாசிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

44 comments:

  1. சிந்தனைகள் நச்
    உண்மைய்லேயே சிந்திக்க வேண்டிய விஷங்கள்
    நல்ல சிந்தனைகள் தோழரே

    ReplyDelete
    Replies
    1. வயித்துல பாலை வார்த்தீங்க தலைவா.., மொக்கை பதிவுன்னு யாராவது காமாண்டுவாங்கன்னு பயந்துகிட்டே இருந்தேன் .. :)

      Delete
  2. ந(ல் இ)ல்வாழ்விற்கு நல்வழி காட்டும் சிந்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!

      Delete
  3. தினமும் காலைல newspapper படிக்காட்டியும் இத படிச்சுருவேன். ஆனா பதிவு போடணும்னு தோணுனது இல்ல. nice ..

    ReplyDelete
    Replies
    1. அப்ப.., இந்த மாதிரி மொக்க ஐடியாயெல்லாம் நமக்குத்தான் தோணுதோ? ஹி ஹி ஹி :D

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!

      Delete
  4. சிந்தனை மிகுந்த கருத்துக்கள் நண்பா பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே ..!

      Delete
  5. மிக அருமையான சிந்தனை மிகுந்த பதிவு அண்ணா.

    எங்கே வருலாற்று சுவட்டிலிருந்து மாறி விட்டீர்களோ..

    உங்கள் பெயர் அறிய ஆவலாக உள்ளது என் தளத்தில் வந்து கூறுவீர்களா???...

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றை விட்டுவிட முடியுமா சகோ.., அது என் உயிரிலே கலந்தது, அவை தொடரும் இது சும்மா டைம் பாஸுக்கு :)

      எனது பெயரை வெளியிட்டுக்கொள்ள விருப்பம் இல்லாத காரணத்தினால் தான் எந்த இடத்திலும் எனது பெயரை குறிப்பிடுவதில்லை ..!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி ..!

      Delete
  6. துளித்துளியாய் அத்தனையும் வாழ்வியல் துளிகள்.கிழித்தெறியும் துண்டில்கூட பெறுமையான வார்த்தைகள் கிடைக்கும்.ஒற்றியெடுத்துக்கொண்டேன் சிலவற்றை.நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!

      Delete
  7. நல்ல ஐடியா! காலண்டரில் இருப்பதை பெரும்பாலும் படிப்பதில்லை. அதை தொகுத்து வழங்கியதற்கு நன்றி நல்ல செலக்ஷன்:நல்ல கலக்சன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!

      Delete
  8. சிறப்பான சிந்திக்கவைக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!

      Delete
  9. அருமை அருமை..

    மிகவும் இரசித்தேன் நண்பா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா ..!

      Delete
  10. உண்மையாகவே தினம் தினம் இதற்காகவே காலண்டரைப் பார்ப்பேன் .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..!

      Delete
  11. உங்கள் பதிவுகளை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருப்பின் வாசிக்கவும்.
    http://blogintamil.blogspot.in/2012/06/2.html
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே .., நான் தன்யனானேன் .. :)

      Delete
  12. நல்ல சிந்தனைகள் அருமை அருமை..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!

      Delete
  13. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தலைவரே .. :)

      Delete
  14. ட்ராக் மாறிட்டீங்க...இருந்தாலும் இதுவும் நல்லாத்தானிருக்கு...

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரமே என்னுடைய 'ட்ராக்கு' வந்துவிடுகிறேன் ரெவெரி சார் . :)

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..!

      Delete
  15. பயனுள்ள பதிவு
    இதைவிடவும் பயனுள்ள பதிவு தருவதாக
    இருந்தால் மிக்க சந்தோஷம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.!

      Delete
  16. என்னது மொக்கைப் பதிவா.. மனத்தில் பதியம் போட வெண்டிய பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!

      Delete
  17. உங்கள் தளத்திற்கு இது தான் என் முதல் வருகை. வரலாற்றுச் சுவடுகளை அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன், எழுதுங்கள் உங்களைத் தொடர்கிறேன்.


    காலண்டர் சிந்தனைகளில் பல வாசகங்கள் மனதைத் தொட்டன
    . நன்றி


    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!

      Delete
  18. தினம் ஒரு சிந்தனை படித்து சிந்திக்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!

      Delete
  19. Great ambition is the passion of a great character.

    If you want to see hindu god photos go to visit
    http://www.doloarts.com

    ReplyDelete
    Replies
    1. புகைப்பட தள அறிமுகத்திற்கு நன்றி சகோ!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  20. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  21. பதிவ தேத்துரதுக்கு ரூம் போட்டு யோசிப்பீங்களோ ? நல்லா இருந்துச்சு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  22. அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...