Tuesday 19 June 2012

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சில அடிப்படை தகவல்கள், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-4); History of Surgery (Part-4), History of Organ Transplantation


அனைவருக்கும் வணக்கம், (கடந்த பதிவுகளில் பொது அறுவை சிகிச்சையின் வரலாறுகளை பற்றி விரிவாக அலசினோம் அல்லவா?, அந்த வகையில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Organ Transplantation) பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம் வாருங்கள், அறுவை சிகிச்சை வரலாறின் முந்தைய பாகங்களை வாசிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்து விட்டு இப்பதிவை தொடர வேண்டுகிறேன்) பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும், சாதாரண அறுவை சிகிச்சைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உதாரணத்திற்கு ஒரு சைக்கிள் ட்யூப்பை (Cycle Tube) எடுத்துக்கொள்வோம். ட்யூப் பஞ்சர் (Puncher) ஆனால் அதனை ஒட்டி சரி செய்வது சாதாரண அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொண்டால் அதே பஞ்சர் ஒட்டி சரி செய்ய இயலாத அளவிற்கு பெரிதாய் போய்விடும் போது அந்த ட்யூப்பையே கழட்டி தூர எறிந்துவிட்டு புதிதாக ட்யூப் மாற்றிக் கொள்ளுதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொள்ளலாம்.

அனால் சைக்கிள் ட்யூப்பை மாற்றுவது போல் மனித உடலில் பழுதுபட்ட உடல் உள் உறுப்புகளை மாற்றுவது என்பது அத்தனை சுலபமான காரியமில்லை. அறுவை சிகிச்சை நடைமுறையிலுள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டு மேம்படுத்தப்பட்டு விட்டாலும் கூட உடலுக்குள் புதிதாக புகுத்தும் அந்த உறுப்பை நம் உடல் ஏற்றுக்கொள்வது முக்கியம் அல்லாவா?. ‘சக்கரமே திறந்திடு’ என்று அலிபாபா கதையில் வரும் காசிம் பாய் (Cassim, greedy brother of Ali Baba) போல் கண்ணீர் விட்டு அழுதால் கூட நம் உடல், புதிதாக உடலுக்குள் புகுத்தும் எந்த உறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது, நிராகரித்துவிடும். பின் எப்படி உறுப்புகளை இணைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்கிறீர்களா வாருங்களேன் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.!


அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் நம் உடலில் உள்ள எந்தெந்த உருப்புக்களையெல்லாம் தானம் செய்யமுடியும் என்று தெரிந்துகொள்வது இன்றியமையாதது. அறுபது வயதிற்குட்பட்ட அனைவரும் தாமாக முன்வந்து உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்றாலும் அதற்கென்று சில சட்ட திட்டங்கள் 1900-களில் இருந்தே உலகமெங்கும் நடைமுறையில் உள்ளது. இந்திய அரசியலமைப்பில் 1954-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி 18 வயது நிரம்பிய ஆண் மற்றும் பெண் இருபாலரும் தாமாக முன்வந்து உடல் உறுப்புகளை தானம் செய்ய வழிவகை செய்யப்பட்டது, பிற்காலத்தில் நல்ல காரியங்களுக்கு வயது ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தவுடன் 1994 ஆம் ஆண்டு அதே சட்டத்தில் சின்ன திருத்தம் கொண்டு வரப்பட்டு 18 வயதிற்கு உட்பட்டவரும் பெற்றோர் அல்லது காப்பாளரின் அனுமதியுடன் தங்கள் உறுப்புக்களை தானம் செய்யலாம் என்று அனுமதியளிக்கப்பட்டது.

அந்த வகையில், ஒருவர் தன் உடலிலுள்ள 25 வகையான உறுப்புக்களையும், திசுக்களையும் தானம் செய்ய முடியும் என்றாலும் ஒருவர் உயிரோடு இருக்கும் போது (Living donor) ஒரே ஒரு சிறுநீரகம் (Kidney), ஈரலின் ஒரு பகுதி (Liver), நுரையீரலின் ஒரு பகுதி (Lungs), குடலின் ஒரு பகுதி (Intestine) ஆகிய உறுப்புகளை மட்டுமே தானம் செய்ய முடியும். ஒருவர் இறந்த பின் (deceased or cadaveric donor) எலும்பு (Bone), எலும்பு மஜ்ஜை (Bone Marrow), ரத்த நாளங்கள் (Blood Vessels), இதயத்திலுள்ள வால்வுகள் (Heart Valves), தோல் (Skin), இரெண்டு சிறுநீரகங்கள் (Two Kidneys), கணையம் (Pancreas), குடல் முழுவதும், கண் விழித்திரை (Cornea) ஆகிய உறுப்புகளை தானமாக தரலாம்.


நம் உடலில் உள்ள இதயத்தை மட்டும் உயிரோடு இருக்கும் போதும் சரி இறந்த பின்னாலும் சரி, எடுத்து இன்னொருவருக்கு பயன்படுத்த முடியாது. ‘ப்ரெய்ன் டெத் (Brain Death)’ எனப்படும் மூளையின் மரணம் அதாவது மூளை செயல் இழந்து உடலில் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் போது நோயாளிகளிடமிருந்து பிரித்தெடுத்து மட்டுமே பயன்படுத்த முடியும். மூளை செயல் இழந்த பிறகு பிரித்தெடுக்கப்படும் இதயம் மட்டுமல்ல உடலின் மேலும் சில முக்கிய உறுப்புகளான கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றையும் கூட இன்னொருவருக்கு பயன்படுத்த முடியாது. ஒருவரின் மூச்சு நின்ற முதல் ஐந்து நிமிடங்களில் மூளையில் உள்ள 25% செல்கள் செயல் இழந்து விடுகின்றன. பத்தாவது நிமிடத்தில் அது 50% சதவீதமாகவும் 15 நிமிடத்தில் அது 100% சதவீதமாகவும் உயர்ந்து நோயாளியை மெல்ல மெல்ல மரணத்திற்கு கொண்டு போய்விடுகிறது, இதன் காரணமாகத்தான் சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாமல் போகிறது.

சரி., இப்போது உடல் உறுப்புகளை தானம் செய்பவரின் உடம்பிலிருந்து எப்படி பிரித்தெடுக்கிறார்கள் என்று பார்ப்போமா.? உடம்பிலிருந்து ஒரு உறுப்பை பிரித்து எடுப்பதற்கு முன்னால் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்க குளிர்விக்க பயன்படுத்தும் சில ரசாயனக் கலவைகளை பிரித்து எடுக்கப்பட வேண்டிய அந்த உறுப்புக்குள் செலுத்துவார்கள். சில நேரங்களில் கலப்படம் இல்லாத சுத்தமான ஐஸ் கட்டிகளை கூட அந்த உறுப்புக்குள் செலுத்துகிறார்கள். எடுக்கப்பட்ட உறுப்பு உடனடியாக நன்றாக ஸ்டெரிலைஸ் (Sterilize) செய்யப்பட்டு ஜாடியிலோ, குடுவையிலோ அல்லது ஐஸ் பெட்டிகளிலோ வைத்துவிடுவார்கள்.

பிரித்தெடுக்கப்படும் எல்லா உருப்புகளுமே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தன் உயிர்ப்புத்தன்மையை இழந்து விறைத்துப் போக நேரிடும் இதை தடுக்க டாக்டர்கள் அந்த உறுப்புகளை வியாஸ்பான் (Viaspan), யூரோ கோலின்னஸ் (Euro-Collins), கஸ்டோர்சல் (Costorsol) ஆகிய ரசாயன கலவைகளுக்குள் வைத்து பதப்படுத்துகிறார்கள். அப்படியே பதப்படுத்தி வைத்தாலும் கூட அவற்றிற்கும் ஒரு கால அளவு உண்டு அந்த வகையில் சிறுநீரகத்தை 72 மணிநேரம் வரையிலும், கல்லீரலை 18 மணி நேரமும் வரையிலும், இதயத்தை 5 மணிநேரம் வரையிலும், நுரையீரலை 4 மணிநேரம் வரையிலும் கணையத்தை 20 மணிநேரம் வரையிலும் பதப்படுத்தி வைத்திருந்து உபயோகிக்கலாம். அதே போல் கார்னியா எனப்படும் கண் விழித்திரையை 10 நாட்கள் வரையிலும், தோல், எலும்பு, இதயத்தின் வால்வுகள் போன்றவை 5 வருடகாலம் வரையிலும் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்.

உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அதாவது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நல்ல உடல் நலத்தோடு இருத்தல் அவசியம். பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர்கள், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காமாலை மற்றும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிளட் பிரஷர், சுகர் இருப்பவர்கள் ஆகிய அனைவரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய தகுதியற்றவர்களாக கருதப்படுகிறார்கள் (அப்போ நாட்டில ரொம்ப பேருக்கு உடல் உறுப்புகளை தானம் செய்யும் தகுதியிருக்காது போலிருக்கே ம்ம்ம்.?)

உயிருடன் இருக்கும் போது உடல் உறுப்பை தானம் செய்வதால், தானம் செய்தவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா, என்கின்ற சந்தேகம் படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் இருக்கவே செய்கிறது. பொதுவாக உடல் உறுப்புகளை தானம் செய்கிறவர்களுக்கு எந்த காலத்திலும் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இரண்டு சிறுநீரகங்கள் உள்ளவர்கள் ஒன்றை தானமாக கொடுக்கும் போது இரண்டு உறுப்பு செய்ய வேண்டிய வேலையை, ஒரு உறுப்பு செய்வதால் நாளடைவில் அதனுடைய அளவு சற்று பெரிதாகும், அவ்வளவுதான் வேறு எந்த பின்விளைவுகளும் ஏற்படுவதில்லை. நுரையீரலின் ஒரு பகுதியை மட்டும் கொடுப்பதால் மீதமுள்ள ஒரு நுரையீரலின் பகுதி சீராக வேலை செய்யும், கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்தவர்களுக்கு அடுத்த சில மாதங்களுள் கல்லீரல் தானாகவே வளர்ந்துவிடும். ஆகையால் உடல் உறுப்புகளை தானம் செய்தவர்களும் சாதாரண ஆட்களை போலவே இயல்பாக இருக்கலாம்.


இவ்வளவு பிரச்சனைகளையும் சோதனைகளையும் தாண்டி உடலுக்குல் ஒரு உறுப்பை பொருத்தினோம் என்றால் நம் உடல் சிம்பிளாக ‘No I will not accept என்று பெரிதாய் தலையை ஆட்டி மறுக்கவே செய்தது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, மருத்துவ மாமேதைகளின் கனவாக இருந்த  இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தோல்வியை மருத்துவர்களால் அத்தனை சுலபமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை, தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு பிறகு ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு புரதமான ஆண்டிபாடீஸ் தான் (Antibody known as immunoglobulin), உடல் பாதுகாப்பு கருதி அந்த உறுப்புக்களை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்கிறது என்பதை கண்டறிந்தனர். சோர்ந்து போய்விடாத நம் மருத்துவர்கள் ‘பிளாஸ்மா பெரிஸிஸ் (Plasmapheresis)’ என்கின்ற, ரத்த புரதங்களை தனித்தனியாக பிரிக்கும், சிகிச்சை முறையை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகளை மட்டும் ரத்தத்தில் இருந்து பிரித்து அகற்றிவிட்டு., தானமாக பெற்ற அந்த உறுப்பை உடலில் பொறுத்த.., ஒரு வழியாக உடல் ‘ஜெ போட்டு ஒத்துக்கொள்ள ஆரம்பித்ததோடு அந்த உறுப்புக்கு உண்டான இயல்பான பணியையும் தொடர்ந்து செய்ய வழிகளை ஏற்படுத்தியது, தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது உடலில் இந்த ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதில் முக்கிய உறுப்பாக திகழும் மண்ணீரலையும் (Spleen) எடுத்துவிட்டே பொருத்துகிறார்கள் இதனால் தானம் பெறப்பட்டு பொருத்தப்படும் உறுப்புகள் ஒரு போதும் நிராகரிக்கப்படுவதில்லை.


உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் வரலாறும் கூட நம் இந்திய மருத்துவ மாமேதையான சுஸ்ருதாவிலிருந்தே ஆரம்பிக்கிறது, மருத்துவ கூற்று படி, தோல் இடமாற்று அறுவை சிகிச்சை கூட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றே கருதப்படுகிறது அந்த வகையில் சுஸ்ருதா அறிமுகபடுத்திய உடலின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து சதையை அறுத்தெடுத்து கிழிந்த மூக்குகளை சரிசெய்யும் ரினோபிளாஸ்டி (Rhinoplasty) எனப்படும் மூக்கை செப்பனிடும் அறுவை சிகிச்சையும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாகவே கருதப்படுகிறது. இதைதவிர்த்து மருத்துவ விஞ்ஞானம் சமர்ப்பித்த ஆதாரங்களின் படி, உடல் உள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்று பார்த்தோமானால் 1902 ஆம் ஆண்டு அலெக்ஸில் கர்ல் (Alexis Carrel, 1873 – 1944) என்ற பிரான்ஸை சேர்ந்த மருத்துவர் தான் உலகில் முதன் முதலாக இன்னொரு மனிதனிடமிருந்து தானமாக பெற்ற ரத்தக் குழாய்களை (Blood Vessels) அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக இன்னொரு நோயாளியின் உடலில் இணைத்து பொருத்தியவர் ஆவார். அத்தோடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும் புதிய கதவையும் திறந்து வைத்தவர் ஆவர்.!


தொடர்ந்து மூன்று வருடம் கழித்து 1905 ஆம் ஆண்டு டாக்டர் எட்வர்ட் ஸிம் (Eduard Zirm, 1863 – 1944) என்ற ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த மருத்துவர் உலகில் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துகாட்டினார். அதன் பிறகு 50 ஆண்டுகள் கழித்து 1954 ஆண்டு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் டாக்டர் ஜோசப் முர்ரே (Josseph Murray, 1919 – active) மற்றும் ஜான் ஹாரிஸ்சன் (John Harrison, 1909 – 1984) என்ற இரு அமரிக்க மருத்துவர்கள் இணைந்து உலகின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காட்டினர். அதன் பிறகு 1967 ல் அமெரிக்காவில் உள்ள டென்வர் என்ற இடத்தில் முதன் முதலாய் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு முதல் இறந்தவர்களின் உடல் உறுப்புகளையும் மாற்று அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். பிறகு இரெண்டு வருடம் கழித்து 1967 ஆம் ஆண்டு டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் (Christiaan Barnard, 1922 – 2001) என்ற தென் ஆப்ரிக்காவை சேர்ந்த மருத்துவர்., மருத்துவ உலகத்தில் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக்காட்டினார். அது உலகின் முதல் வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை ஆகும். தொடர்ந்து மருத்துவ துறையில் ஏற்பட்ட அசாதாரண வளர்ச்சி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் பரிணாம வளர்சிக்கு வித்திட்டது.

இன்றைய நவநாகரீக உலகத்தில்., மருத்துவத்துறை எத்தனையோ அபிரிமிதமான வளர்ச்சியடைந்திருந்தாலும் கூட பொது மருத்துவமாகவே இருக்கட்டும், அறுவை சிகிச்சை மருத்துவமாகவே இருக்கட்டும் அது ஆரம்பித்த இடம் எனது இந்திய மருத்துவரான சுஸ்ருதாவிடம் இருந்துதான் என்பதை நினைத்து பார்க்கும் போது என் ரத்தநாளங்களில் ஆணவ ரத்தம் தறிகெட்டு பாய்வதை உணர இயலுகிறது. இந்த தொடர் பதிவின் மூலம் சில நல்ல விசயங்களை உங்களிடம் பகிர்ந்துகொண்ட மனநிறைவுடன் இத்தொடர் பதிவை நிறைவு செய்கிறேன், விரைவில் மற்றுமொறு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன், நன்றி.., வணக்கம்.!

பதிவுகளை தவறவிடாமல் வாசிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

106 comments:

  1. அதுக்குள்ள முடிச்சுட்டீங்க...
    இன்றைய முடியாதது நாளைய சாதாரணம் ..இது தான் அறிவியல்...விரைவில் எல்லா உறுப்பு மாற்று சிகிச்சையும் சாத்தியமாகும் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. அந்த நாள் விரைவில் வந்துவிடும் ரெவெரி சார்., வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!

      Delete
    2. யோவ் வரலாறு ஏன்யா ரெண்டு மூணு தடவை வர்றீங்க...

      சர்வர் கிராஷ் ஆயிருங்க நிறைய பேர் நிறைய தடவை வந்தா...

      மத்தவங்களுக்கும் வாசிக்க இடம் கொடுங்க....அவ்வ்வ்வ் -:)

      BTW,I Luv U all

      Delete
    3. அவ்வளவு ட்ராபிக்காவா இருக்கு ஹி ஹி ஹி.!

      Delete
    4. சொன்னா புரிஞ்சுக்கமாட்டீங்றீங்களே !!!!

      Delete
    5. தவறிழைத்திருந்தால் மன்னிக்கவும் :)

      Delete
    6. இப்ப தான் பிரேம் வலையிலே உங்களை பாராட்டிட்டு வந்தேன்..நூறு ஆயுசு...

      Delete
  2. தெரியாத விஷயங்கள். நன்றி பாஸ்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல.!

      Delete
  3. இந்த தொடர் பதிவின் மூலம் நானும் மருத்துவ உலகை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன் நண்பனுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா., வருகைக்கும் கருத்துக்கும்.!

      Delete
  4. நிறைய
    விஷயங்கள் தெரிந்துகொண்டேன்
    பயனுள்ள நல்ல நிறை விபரங்களும்

    நன்றி மற்றும் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!

      Delete
  5. விரிவான, விளக்கமான மருத்துவ உலகம் அறிய வேண்டிய முக்கிய கட்டுரை! நன்றி! புகழ சொற்களில்லை! த ம ஓ 5

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா, வருகைக்கும் கருத்துக்கும் :)

      Delete
  6. உங்களது எல்லா இடுகைகளையும் ஒரு தனிப்புத்தகமாக வெளியிட தகுதி வாய்ந்தது.. என்னுடன் "யார் மனசுல யார்?" விளையாட வருகிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும், ஓய்வு நேரத்தில் நிச்சயம் வருகை புரிவேன் உங்கள் தளத்திற்கு :)

      Delete
  7. மருத்துவத்திலும் முன்னோடியான நமது சுஸ்ருதரை நினைக்கையில் பெருமிதம் ஏற்படுகிறது. மருத்துவத் துறையில் நிகழ்ந்து வரும் முன்னேற்றங்கள் வியப்பூட்டுபவை. இத்தனை அழகாக எளிமையாக யாரும் உறுப்பு மாற்று ஆபரேஷனை எனக்கு விளக்கியதில்லை. இது புகழ்ச்சியில்லை... உண்மை! தொடருங்கள், தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.., கண்டேன் தங்களை எண்ணில் (தளத்தில்) ஆதலின் இன்றே வாழ்கையில் பொன்னாள் என்றேன்.!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார் :)

      Delete
  8. அற்புதம். மிக நல்ல பணி. தொடருங்கள்

    உங்கள் பதிவுகள் Dashboard-ல் வருவதில்லை. என்ன பிரச்சனை என பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. Follower Gadget-ல் Unfollow செய்துவிட்டு மீண்டும் தங்களை இணைத்துக்கொண்டு தளத்தை follow செய்து பாருங்கள், பிரச்சனை இருக்காது என்று நம்புகிறேன்.

      எனக்காய் ஒரே ஒரு முறை சோதித்து பாருங்களேன்.!

      Delete
  9. வாழ்த்துக்கள் வரலாறு உமது தொகுப்புக்கு - உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரலாறு தகவலுக்கு நன்றி வரலாறு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தல வருகைக்கும் கருத்துக்கும் :)

      Delete
  10. பயனுள்ள பதிவு சகோ. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் :)

      Delete
  11. அறியாத பல விசயங்கள் ! பிரமாதம்... பாராட்டுக்கள்... நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!

      Delete
  12. நான் அறியாத பல விஷயங்களை தெளிவாக தெரிந்து கொண்டேன் நன்றி...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல., வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      Delete
  13. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)

      Delete
  14. Replies
    1. மீண்டும் ஒரு நன்றி :)

      Delete
  15. சிறப்பான தொடர் பல புதிய தகவல்களை எனக்கு அறிமுகப்படுத்தியது.நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.!

      Delete
  16. அப்பா... இது மட்டுமல்ல உங்களது எல்லாம் மிகககககவும் பயனுள்ள கட்டுரைகள். மருத்துவம் பற்றி அறிய இங்கேதான் படையெடுப்பு... பயனுள்ள பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!

      Delete
  17. சாதாரண அறுவை சிகிச்சைக்கும் உறுப்பு மாற்றும் அறுவை சிகிச்சைக்கும் உள்ள வித்தியாசத்தை மிக எளிமையாக சைக்கிள் ட்யூப் மூலம் விளக்கிய விதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.!

      Delete
  18. எப்போது அன்பரே பதிவிடுகீறீர்கள் டாஷ்போர்டில் வருவதில்லையே

    ReplyDelete
    Replies
    1. இது குறித்து தங்களுக்கு மின்மடல் ஒன்று அனுப்பியுள்ளேன்., பதிலுரைக்காக காத்திருக்கிறேன்.!

      Delete
  19. அருமையான பதிவு. நம் மொழியில் இவ்வளவு விளக்கம் தந்தும், அருகிலேயே தமிழ் வார்த்தைக்கு நிகரான ஆங்கில வார்த்தையும் கூடவே சில பொதுவானவைகள் மற்றும் படங்கள் அருமையிலும் அருமை. உதாரணமும் மிகவும் அருமை. (குறிப்பாக இந்த பதிவு மட்டுமில்லாமால், முந்தைய பதிவுகளிலும் சேர்த்து). அனைவரும் அறிந்து கொள்ள வேண்டி உறுப்பு மாற்று சிகிச்சை தெள்ளத் தெளிவாக விளக்கியமைக்கு நன்றி. முற்றிலும் படிக்க தூண்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து படித்து., என் நெஞ்சில் உற்சாகத்தை ஏற்படுத்திடும் பின்னூட்டம் வழங்கிய நண்பருக்கு இதயம் என் கனிந்த நன்றிகள்.

      தற்போது பேச்சு வழக்கில் அதிகம் ஆங்கில வார்த்தைகள் வழக்கத்தில் உள்ளதால் சிலருக்கு அதற்க்கு இணையான தமிழ் வார்த்தைகளை அர்த்தம் புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது, அதனை தவிர்க்கும் பொருட்டே ஆங்கில வார்த்தையையும் அடைப்புக்குறிக்குள் எழுதுகிறேன் , என் என்னத்தை சரியாக புரிந்து கொண்டு கருத்திட்டமைக்கு மீண்டும் ஒரு நன்றி நண்பா :)

      Delete
    2. பயனுள்ள அறிய பதிவு நண்பரே ! மிக்க நன்றி
      //முக்கிய உறுப்பாக திகழும் மண்ணீரலையும் (Spleen) எடுத்துவிட்டே பொருத்துகிறார்கள் இதனால் தானம் பெறப்பட்டு பொருத்தப்படும் உறுப்புகள் ஒரு போதும் நிராகரிக்கப்படுவதில்லை.//
      வாழ்கை முழுவதும் நோய் எதிர்ப்பு சக்திக்கு வெளிமருந்தை நம்பித்தான் இருக்க வேண்டும் ?

      Delete
    3. மண்ணீரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிகொண்டவர்கள் (is called as splenectomy) அல்லது மண்ணீரல் சரிவர இயங்காதவர்கள் லேசாக தும்ம ஆரம்பித்தாலும் மருத்துவரை உடனடியாய் போய் பார்த்தல் நலம். இதற்க்கு வேறு தீர்வும் இல்லை வழியும் இல்லை.!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!

      Delete
  20. மருத்துவத் துறையில் சாதித்தவர்கள் கூட இந்த அளவிற்குக் கூட விவரமாக சொல்ல முடியாது...அருமையாக தெளிவா எழுதியிருக்கீங்க...கலக்கல் பதிவு..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து என் மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்துகிறது., உண்மையில் ஒரு மருத்துவர் இப்பதிவை எழுதியிருந்தால் இதைக்காட்டிலும் 90% தெளிவாகவும் தரமாகவும் நச்சென்றும் எழுதியிருக்கலாம்.!

      வருகைக்கும் கருத்துக்கும், அன்பிற்கும் மிக்க நன்றி நண்பா.!

      Delete
    2. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.!

      Delete
  21. எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத் ஒரு கதை எழுதுவதாக இருந்தால் அந்தக்கதையில் வரும் ஒவ்வொரு நுணுக்கத்தையும் தெரிந்து கொண்டு எழுதுவார் . அதுபோல் உங்கள் ஒவ்வொரு பதிவையும் நுட்பமாக அலசி ஆராய்ந்து பதிவிடுவது அட்டகாசம். தொடருங்கள் ............

    ReplyDelete
    Replies
    1. இவரது கதையை படித்திருக்கிறீர்களா நண்பா?, இவரை பற்றி கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் இவரது கதையை, நாவலை படித்ததில்லை. எழுத்தில் இமயம் தொட்டவர். அவரது நாவல் தமிழ் வெர்சன் இணையத்தில் கிடைத்தால் அறியத்தாருங்கள் நண்பா :)

      Delete
    2. http://www.baleprabu.com/2012/05/yandamoori-veerendranath-tamil-novels.html

      Delete
    3. இவரது நாவல் அலையன்ஸ் பதிப்பகத்தில் கிடைகின்றன . இவரின் "பிரளயம்" நாவல் விண்வெளி சம்பந்தமான நாவல். படு சூப்பராக இருக்கும் .

      //Alliance Publications,

      Mr Srinivasan V(Proprietor)

      +(91)-(44)-24641314

      +(91)-(44)-43009701

      No 244, Near Indian Bank, Ramakrishna Mutt Road, Mylapore, Chennai - 600004//

      Delete
    4. எவ்வாறு நன்றி கூறுவதென்று தெரியவில்லை., மிக்க நன்றி நண்பா!

      Delete
  22. இவ்வளவு நல்ல செய்திகளை சொல்றிங்க சரி பதிவு எல்லேரர் அறிய எதாவது செய்யுங்க நட்பே.

    ReplyDelete
    Replies
    1. திரட்டிகளில் இணைக்கிறேன். இதைத்தவிர்த்து என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை! தெரிந்தவர்கள் அறிவுரை வழங்கினால் பின்பற்ற ஆவலாய் உள்ளேன்!

      என் பதிவைபற்றிய தங்களின் உயர்ந்த மதிப்பீட்டிற்க்கு மிக்க நன்றி :)

      Delete
  23. வைத்தியராகி வென்று விட்டீர்கள் சொந்தமே...!

    ReplyDelete
  24. ஒரு கைதேர்ந்த சத்திர சிகிசசையாளனின் ஆக்கத்தை படிப்பது போலுள்ளது நன்றி சகோ...

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வாசிப்பிற்கும், கருத்துரைக்கும்!

      Delete
  25. நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete
  26. தெரியாத விஷயங்கள். நன்றி பாஸ்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா, வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete
  27. அரிய விஷயங்கள்.பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  28. என் வலை பூவிற்கு வாருங்கள் சகோ..உங்களுக்கு விருது காத்திருக்கின்றது.

    வந்து பெற்று கொள்ளவும்.:)

    ReplyDelete
    Replies
    1. ஆனந்த அதிர்ச்சி., மிக்க நன்றி சகோ!

      Delete
  29. அறிந்துகொண்டேன்.மேலும் அறிய தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்! தொடர்வதற்கு மிக்க நன்றி சார்!

      Delete
  30. அருமையான பதிவு..மருத்துவ தகவல்கள் பல அறிந்து கொண்டேன்.கல்லீரல் ஒரு பகுதியை தானம் செய்தால் திரும்ப வளர்ந்துவிடும்.இதை படிக்கிறப்ப என் மகன் முன்பு ஒரு முறை கேட்டது ஏம்மா..மனித உடல் உறுப்புல ஏதாச்சும் ஒரு உறுப்பு செயல் இழந்தாலோ,உறுப்பையே இழந்து விட்டாலோ இந்த கல்லீரல் வளர்ற மாதிரி அந்த ஆர்கானும் வளர்ந்துடனும்னு உறவினர் ஒருவரின் குறையை நினைத்து ஆதங்கப்பட்டது நினைவுக்கு வருகிறது..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மைந்தனின் நற்குணத்தை நினைத்து பெருமை கொள்கிறேன், மனிதத்துவம் மிக்க அந்த இதயம் வாழ்வில் வளம்பெற எல்லாம்வல்ல அந்த இறைவனின் ஆசி எப்போதும் உடன் இருக்கட்டும்!

      கருத்துக்கு மிக்க நன்றி சகோ!

      Delete
  31. உருப்படியான பதிவர்களில் நீங்களும் ஒருவர் பாஸ். எப்போது படித்தாலும் பயனளிக்கும் விஷயங்கள்.அனைத்தும் பாடங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி நண்பரே! தொடர்ந்து இணைப்பில் இருங்கள்!

      Delete
  32. தெரிந்ததை விட தெரியாத பல தகவல்களை உங்கள் கட்டுரை மூலயமாக தெரிந்துகொண்டேன்....பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி........

    எங்க தளத்திற்கும் வாங்க ....உங்க கருத்த சொல்லுங்க ......

    புதிய வரவுகள்:
    கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

    கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
    ,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  33. அப்பாடா.. பயனுள்ள பல தகவல்கள். கண்டிப்பாக இது வரலாறு படைக்கும் வலைப்பூ, வாழ்த்தும் நன்றியும் பாராட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ.. வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete
  34. நிறைய தகவல்களை கொண்டது .. மீதியையும் படித்து விடுகிறேன் .. நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete
  35. Replies
    1. மிக்க நன்றி சகோ.. வருகைக்கும் கருத்துக்கும்.!

      Delete
  36. பாஸ் ரொம்ப பிஸியா? பதிவிட்டு ரொம்ப நாளாச்சு....

    ReplyDelete
    Replies
    1. அலுவல பணிச்சுமை சற்று அதிகரித்துவிட்டது நண்பா., அதுமட்டுமின்றி சென்ற வாரம் முழுவதும் நான் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியமையால் பதிவு எழுதுவதில் கவனம் செலுத்த முடியவில்லை.! இன்னும் ஓரிரு தினங்களுக்குள் புதிய வேகத்தில் புதுத்தகவலோடு வருவேன்.!

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நண்பா :)

      Delete
  37. கருத்தாழம் மிக்க பகிர்வு. கவனத்தில் கொள்ளத்தக்கதும் ஆகும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete
  38. உறுப்பு மாற்று சிகிச்சையில இவ்வளவு விசயங்கள் இருக்கா?! இந்த சிகிச்சையினால பல்லாயிரம் மனித உயிர்கள் காப்பாற்றாப்படுதுன்னு மட்டும்தான் இதுவரை தெரியும். தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி அக்கா., ரொம்ப நாள் கழித்து மீண்டும் பதிவுலகிற்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி.! கருத்துக்கு மிக்க நன்றி அக்கா!

      Delete
  39. 'உறுப்பு மாற்று அறுவை' மிகவும் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!

      Delete
  40. அருமையான பதிவு.தொடருங்கள் இது போன்ற பயனுள்ள தகவல்களுடன்.அடுத்த பதிவுக்காக காத்துக் கொண்டு இருந்தால் வலைச்சரத்தில் இப்படி அசத்தியுள்ளீர்கள்.வலைச்சரத்தில் தாங்கள் எழுதியவை அனைத்தும் முத்துகள். எப்படி நண்பரே உங்கள் மூளையை இப்படி கசக்கிறீர்கள். குளிர்பதன சாதனத்திலிருந்து ஐஸ் எடுத்து கண்களை நன்றாக தேய்த்துக் கொண்டு விடிய விடிய கணினியில் முழ்குவீர்கள் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்ற நண்பர்கள் அளிக்கும் ஆதரவு..மற்றும்..உற்சாகமான பின்னூட்டங்கள் தான் இது போன்ற பதிவுகள் எழுத எனக்கு உந்து சக்தியாக இருக்கிறது நண்பரே.!

      வருகைக்கும்...கருத்துக்கும்...என் பதிவுகளை பற்றிய உயர்ந்த மதிப்பீட்டிற்க்கும் மிக்க நன்றி நண்பரே.!

      Delete
  41. நண்பரே.! ஒரு சந்தேகம்.இது தான் 100 அல்லது 45 கருத்துரையா? இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். இது போன்று வெற்றிகள் பல தாங்கள் பெற எல்லா வல்ல இறைவனை பிரத்தனை செய்கிறேன்.உங்களை பின் தொடர்ந்து வந்ததில் மாணவன், டிவிஎஸ், பிளாக்கர் நண்பன் போன்ற வலையகங்களின் அறிமுகம் கிடைத்தது பயனுள்ளதாக உள்ளது.நன்றி நண்பரே.!

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே..இப்போதுதான் முதன் முறையாக எனது பதிவு ஒன்று 100 கருத்துரைகளை பெறுகிறது.! உங்கள் பிரார்த்தனைகளுடன் என் முயற்சியோடு மேலும் பல வெற்றிகளை பெற போராடுவேன்.! உங்களுக்கு உபயோகமான பதிவுகளை தந்ததில் எனக்கும் மகிழ்ச்சி நண்பரே.!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!

      Delete
  42. அருமையான பதிவு! எந்தெந்த உறுப்புகளை எந்தெந்த சமயங்களில் தானம் செய்யலாம், யார் தானம் செய்யத் தகுதியானவர்கள் என்ற உபயோகமான தகவல்களுக்கு மிகவும் நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!

      Delete
  43. திருநங்கைகளின் பால்மாற்று சிகிச்சை பற்றி வரும் என எதிர்பார்த்தேன் அண்ணா பட் நோ

    ReplyDelete
    Replies
    1. அட..,அடுத்த பதிவிற்கான கரு சிக்கிக்கொண்டதே :)

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிஸ்டர்!

      Delete
  44. நன்றாக எழுதி இருக்கறீர்....இதெல்லாம் நிச்சயம் சுவடுகள் தான்..காலத்தால் அழியாத...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  45. தெளிவாக இருந்தது..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...