Saturday, 21 January 2012
மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை; Superstition of the Worlds.
எல்லோருக்கும் வணக்கம், நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர
வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மூட
நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு
வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது. மூட நம்பிக்கைகளுக்கு உதாரணம்
சொல்வதென்றால், இன்னார் முகத்தில் ராசி என்று நினைத்துக்கொண்டிருப்பது, காரை
முதலில் இயக்கும் போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சம் பலத்தை வைத்து நசுக்குவது,
புதிய வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று கோழி அல்லது ஆடுகளை பலிகொடுப்பது, இப்படி வரிசையாக
மூட நம்பிக்கைகளுக்கு இன்று முழுவதும் உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.
சரி., இந்த மாதிரியான மூட இந்தியாவில் மட்டும்தான்
இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆம் இந்த மாதிரியான மூட
நம்பிக்கைகள் உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.
அட அவ்வளவு ஏன் உழைப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டு மக்களிடையேயும் கூட சில மூட
நம்பிக்கைகள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஜப்பான் நாட்டு மக்களிடையே ஒரு வினோதமான பழக்கம் வழக்கத்தில்
உண்டு. பாம்புக்கறியை கன்னாபின்னாவென்று வெட்டும் ஜப்பானியர்களுக்கு பாம்பு தோல்
என்பது மிகவும் புனிதமான பொருள் ஆகும். பாம்புத் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி
மணி பர்ஸிலும், வீட்டில் பணம் வைக்கும் பீரோக்களிலும் வைத்துக்கொள்கிறார்கள். அப்படி
வைத்துக்கொண்டால் பணம் பெருகி பலமடங்கு ஆகிக்கொண்டே இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
அதுவும் வெள்ளை பாம்பின் தோல் என்றால் இன்னுமும் ஸ்பெஷல். எவ்வளவு விலை கொடுத்தும்
வாங்க ஜப்பானியர்கள் தயாராக இருப்பார்கள். உழைப்புக்கு பெயர்போன ஜப்பானிய
மக்களிடையே இப்படி ஒரு மூடநம்பிக்கை இருப்பது விந்தையிலும் விந்தை.
நம்மவர்கள் முக்கியமான வேலைக்காக வீட்டை விட்டு வெளியே
கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அவ்வளவுதான். மீண்டும் வீட்டுக்குள்
வந்து தண்ணீர் அருந்தாமல் மீண்டும் வெளியே செல்ல மாட்டார்கள். இதைப்போல கொரிய
நாட்டு மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. என்னவென்றால் முக்கியமான வேலை
நிமித்தமாக வெளியே செல்லும் போது காகத்தை பார்த்து விட்டார்கள் என்றால் அவ்வளவுதான்
அப்செட் ஆகிவிடுவார்கள். மீண்டும் வீட்டுக்குள் வந்து அமர்ந்துவிட்டு சிறிது நேரம்
கழித்து தான் செல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
பிரேசில் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு ஒரு வித்தியாசமான
பழக்கம் வழக்கத்தில் உண்டு. அங்கே எந்த ஹோட்டலுக்கு சென்று காப்பி அல்லது டீ
கேட்டீர்கள் என்றால் கப்பை எடுத்துக்கொண்டு முதலில் அதில் சர்க்கரையைத்தான்
போடுவார்கள் பிறகுதான் தேயிலை தூள், டிகாஷன் மற்றும் பால் சேர்ப்பார்கள். மறந்தும்
கூட கப்பில் முதலில் பாலையோ அல்லது டிகாஷனையோ ஊற்ற மாட்டார்கள். காபியோ அல்லது
டீயோ தாயாரிக்கும் போது முதலில் சர்க்கரையை போட்டால் பணம் நம்மிடம் வந்து குவியும்
என்றும் அவ்வாறில்லாமல் இறுதியில் சர்க்கரையை போட்டால் நம்மிடம் இருக்கும் எல்லா பணமும்
நம்மை விட்டு போய் நாம் ஏழைகள் ஆகிவிடுவோம் என்பதும்
அங்கே காலம் காலமாக வழக்கத்தில்
இருந்துவரும் ஒரு நம்பிக்கை ஆகும். தெரியாத்தனமாக அங்கே டீ அல்லது காப்பி தயார் செய்கையில் முதலில் சர்க்கரை
அல்லாமல் வேறு எதையும் போட்டோமானால் அவ்வளவுதான் நம்மை அடிதுவைத் தெடுத்துவிடுவார்கள்.
நம்ம ஊரில் நரிகொம்பு விற்கும் நரிக்குறவர்களை போல மெக்ஸிகோ நாட்டில்
மிகவும் பிரபலமானவர்கள் முயலின் வால் மற்றும் தோல் விற்பவர்கள் ஆவர். காரணம், வீட்டில்
முயல் தோலோ அல்லது வாலோ இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் எல்லாருடைய
முயற்சிகளும் எந்த தடையும் இல்லாமல் வெற்றியடைந்து சிறப்பாக வாழ்வார்கள் என்பது மெச்சிக்கோ நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
எந்த பாத்திரமாக இருந்தாலும் சரி, ஒரு வேலை அது புதிய பாத்திரங்களாகவே
இருந்தாலும் சரி, அந்த பாத்திரத்தின் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய நசுங்கள்கள்
இருந்தாலும் அந்த பாத்திரங்களை ரஷ்ய மக்கள் பயன்படுத்த மாட்டார்கள், அதே போல்
உடைந்த கண்ணாடியிலும் ரஷ்ய நாட்டு மக்கள் முகம் பார்க்க மாட்டார்கள்.
இதைப்போல எண்ணற்ற மூடநம்பிக்கைகளும் மூட பழக்கங்களும் உலகெங்கும்
எல்லா நாடுகளிலும் எல்ல இடங்களிலும் உண்டு, ஆகையால் மூடநம்பிக்கைகளும்
மூடப்பழக்கங்களும் இந்தியாவில் மட்டும் தான் காணப்படுகிறது என்று எண்ணி நம் மக்களை
வசை பாடிக்கொண்டிருக்க வேண்டாம். அது எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா இடங்களிலும் புரையோடிக்கிடக்கும்
ஒரு பழக்கம் தான். விரைவில் மற்றுமொறு பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன்.
வணக்கம்.
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
ReplyDeleteவாங்க ஓசூர் ராஜன் ..,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோடி
உங்க கவிதை எனக்கு பிடிச்சிருக்கு ..!
romba sari!
ReplyDeletenaan irukkum canadavil iropavai sendha oru nattinar thangalin handbasg-i nammai vaida thaalndha idathil vaikka koodaathu enbaargal.
வாங்க பெயரில்லா நண்பரே...,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோடி,
நீங்க சொன்னது புதிய விசயமா இருக்கு..
அமெரிக்கா கண்டத்தில பொதுவா 13-நம்பர் வீட்டில குடியிருக்க விரும்பமாட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்., உண்மையா???
//அமெரிக்கா கண்டத்தில பொதுவா 13-நம்பர் வீட்டில குடியிருக்க விரும்பமாட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்., உண்மையா???//
ReplyDeleteஅமெரிக்கர்கள் மென்பொருள் எழுதும்போது பிழை வாக்கியங்களுக்கு எரர்-1, எரர்-2 என்று எண்கள் இடுகையில், 13ஐத் தவிர்த்து எரர்-12A என்று மாற்றி அல்லது முற்றிலுமாகத் நீக்கி எழுதுவதைப் பார்த்திருக்கிறேன்.
வாங்க திரு.குலவுசனப்பிரியன்..,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோடி ...,
///////அமெரிக்கர்கள் மென்பொருள் எழுதும்போது பிழை வாக்கியங்களுக்கு எரர்-1, எரர்-2 என்று எண்கள் இடுகையில், 13ஐத் தவிர்த்து எரர்-12A என்று மாற்றி அல்லது முற்றிலுமாகத் நீக்கி எழுதுவதைப் பார்த்திருக்கிறேன்./////
மெத்தபடித்த அமெரிக்கர்களும் கூட இப்படியா????
மூடநம்பிக்கைகள் பற்றிய தாங்களின் தகவலுக்கு நன்றி. தங்களின் தகவல் மூடநம்பிக்கை என்பதை விட மூன்னோர் வழி பழக்கவழக்கம்.
ReplyDelete/////மூடநம்பிக்கைகள் பற்றிய தாங்களின் தகவலுக்கு நன்றி. தங்களின் தகவல் மூடநம்பிக்கை என்பதை விட மூன்னோர் வழி பழக்கவழக்கம்./////
ReplyDeleteவாங்க நண்பரே...,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோடி..!
மூடநம்பிகை மனிதர்களை வளர்க்கிறதா?மனிதர்கள் மூடநம்பிக்கையை வளர்க்கிறார்களா என்றே தெரியவில்லை.
ReplyDeleteநல்லதொரு கட்டுரை பகிர்வுக்கு நன்றி..தொடர்கிறேன் தளத்தை..வாழ்த்துகள்.
////// நல்லதொரு கட்டுரை பகிர்வுக்கு நன்றி..தொடர்கிறேன் தளத்தை..வாழ்த்துகள்.//////
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும், கருத்து ஊக்கத்திற்கும் நன்றிகள் கோடி...,
இத்தளத்தில் இணைந்தமைக்கு நன்றி நண்பரே ...!
ரயில் பாலத்தின் மேல ரயில் போகும் போது அதுக்கு கீழே கிராஸ் பன்னமாட்டாங்க. அது ஏன்?
ReplyDeleteஇது மூட நம்பிக்கையா ?
இல்ல ஏன்னா ரயிலி போரவங்க எதையாவது தூக்கி போடுவாங்க வாந்தி எடுக்கலாம் இது மாதிரி.
so, காரண காரியம் தெரியலேனா பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டத மூட நம்பிக்கை என்கிறோம்.
http://eniyavaikooral.blogspot.com/
@ இனியவை கூறல் @
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே ..!
ஙே தான்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ.!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅறியாத தகவலாக இருந்ததால்
ReplyDeleteஆச்சரியமாக இருந்தது
பதிவுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி ஐயா!
Deleteமனிதனிடம் பயம் என்ற உணர்வு இருக்கும் வரை இந்த மூடநம்பிக்கைகளும் இருக்கும்.
ReplyDeleteஅது என்னவோ உண்மைதான்..,
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.!
Jackie chandam oru vinothamana palakkam ondu averrum,aver carrum palatthen kela nirpathu avarukku pedikkathu..
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.!
Deleteமூச்சு ஏன் பலமாக விட கூடாது.?
ReplyDeleteசுவாசத்தின் போது நாம் ஆக்சிஜனை உள்ளிளுத்துக்கொண்டு கார்பன்டை ஆக்ஸைடை வெளிவிடுகிறோம் என்பது நீங்கள் அறிந்த ஒன்றே.
Deleteநம் உடலானது உள்ளிழுக்கும் ஆக்சிஜன் மற்றும் வெளியேற்றும் கார்பன்டை ஆக்ஸைடு ஆகிய இரண்டையும் எப்போதும் சமநிலையில் வைத்திருக்கும். ஆனால் நீங்கள் வேகமாக சுவாசிக்கும் போது அதிகப்படியான கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றிவிடுவீர்கள். இதனால சமநிலைத்தன்மை பாதிப்படைந்து ரத்தத்தில் Ph எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். இதனால் உடலில் காரதன்மை (alkaline) அதிகரித்து உடல் சோர்வடைந்து பலவீனமாக உணர்தல்.., மயக்கம் வாந்தி, தலைச்சுற்றல், கைகள் அல்லது கால்கள் நடுக்கம், தலைவலி, மயக்கம் மற்றும் இன்னபிற விளைவுகளுக்கு வழிகோலும். ஆகவே தான் வேகமாக சுவாசிப்பது தடுக்கபடவேண்டியதாக இருக்கிறது.
நீங்கள் இந்த அர்தத்தில் தான் வினவியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நான் மருத்துவம் பயின்றவனில்லை.. இருப்பினும் இயன்றவரை நான் அறிந்ததை தங்களுக்கு பதிலாக தர முயன்றிருக்கிறேன்... என் பதிலை சோதித்து தவறாக இருப்பின் ஓய்வு நேரத்தில் திருத்த முயற்சிக்கிறேன்
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே., தொடர்ந்து இணைந்திருங்கள்.
மூச்சு ஏன் பலமாக விட கூடாது.?
ReplyDelete