Showing posts with label அரேபியர்களின் சிறப்புகள். Show all posts
Showing posts with label அரேபியர்களின் சிறப்புகள். Show all posts
Thursday, 7 June 2012
அபுல்காசிஸ் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை, அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 2); History of Surgery (Part-2)
அனைவருக்கும் வணக்கம்., (அறுவை சிகிச்சை வரலாற்றின் இரண்டாம் பாகம் இது, முதல் பாகத்தை படிக்க
தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று படித்துவிட்டு இரண்டாம் பாகத்தை
தொடர்ந்திட வேண்டுகிறேன்) இந்தியர்களை போலவே கிரேக்கர்களும் பண்டைய காலத்தில்
இருந்தே பொது மருத்துவத்திலும், அறுவைச்சிகிச்சை மருத்துவத்திலும் குறிப்பிட்ட
அளவு நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள் என்று
தான் கூற வேண்டும். மருத்துவதிற்கென்று சில விதிமுறைகளை உருவாக்கியவரான கிரேக்கத்தை (Ancient Greece) சேர்ந்த ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates, 460 BCE – 370 BCE) பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று
நினைக்கிறேன். பொது மருத்துவத்தின் தந்தை (Father of General Medicine) என்று அழைக்கப்படும் இவரே உலகில் முதன் முதலாக உடலியல்
(Physiology), உடற்கூற்றியல் (Anatomy), மருந்தியல் (Pharmacology), நரம்பியல் (Neurology) ஆகியவற்றை பற்றி தெளிவான மேம்பட்ட கோட்பாட்டை உருவாக்கியவர்
ஆவர்.
6/07/2012 09:49:00 am by வரலாற்று சுவடுகள் · 40
Monday, 12 March 2012
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு; வரலாற்று சுவடுகள்; பெட்ரோல் உருவான வரலாறு, history of petrol
அனைவருக்கும் வணக்கம், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர்.
3/12/2012 06:42:00 pm by வரலாற்று சுவடுகள் · 28
Thursday, 9 February 2012
சோப்பு உருவான வரலாறு, உலகின் முதல் சோப்பு கம்பெனி பியர்ஸ் (Pears), சோப்பு பிறந்த கதை; History of Soap Making, Pears the World first Soap Company
எல்லோருக்கும்
வணக்கம், இன்றைய நவீன காலகட்டங்களில் சோப்பை பயன்படுத்தாமல் குளிப்பது நூறு சதவீத
முழுமையான குளியலாக இருக்காது என்பதில் எவர்க்கும் மாற்று கருத்து இருக்க
வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளைக் குளிப்பாட்ட
கூட இன்று நாம் சோப்பை பயன்படுத்துகிறோம் ஆனால் சென்ற தலைமுறை மக்களின் குளியலறையில்
சோப்பு இந்த அளவிற்கு முக்கிய இடத்தை பெற்றிருந்ததா என்றால் இல்லை என்று தான் கூற
வேண்டும்.
2/09/2012 10:24:00 am by வரலாற்று சுவடுகள் · 11
Sunday, 15 January 2012
உலகின் முதல் நூலகம், நூலகம் உருவான வரலாறு, நூலகம் பிறந்த கதை; The world's first library, history of library
அனைவருக்கும்
இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள், புத்தக பொக்கிஷம் என்று
அழைக்கப்படும் நூலகங்கள் பற்றி முன்னுரை எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றே
கருதுகிறேன் ஏனெனில் அதன் பயன்பாடுகளும் தேவைகளும் நாம் எல்லோரும் அறிந்த
ஒன்றுதான். வரலாற்று தகவல் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் ஒரு தலைமுறை
மக்களிடமிருந்து மற்றொரு தலைமுறை மக்களுக்கு சென்றடைவது நூலகங்களின் வாயிலாகத்தான்
என்றால் மிகையில்லை.
1/15/2012 09:38:00 am by வரலாற்று சுவடுகள் · 16
Subscribe to:
Posts (Atom)



