About Author


நான் வரலாற்று சுவடுகள் என்கிற வசு. இந்த வலைத்தளத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆவேன்.

தூத்துக்குடி மாவட்டம்.... விளாத்திக்குளம் வட்டத்திலுள்ள மாதலபுரம் என்ற சிறிய கிராமத்தில்தான் அடியேனின் ஜனனம் நிகழ்ந்தது. படிப்பு மற்றும் பல்வேறு விசயங்களுக்காக அருகிலுள்ள புதூர் என்ற சிறியரக நகரத்திற்கு (எனக்குதான் நகரம், உங்களுக்கோ அது பொட்டல் பட்டிக்காடாக இருக்ககூடும்) தொண்ணூறுகளிலே குடிபெயர்ந்து தற்போதுவரை புதூரில்தான் வாழ்ந்துவருகிறேன். எனது தாய் மற்றும் தந்தை இருவருமே விவசாயிகள் ஆவர். உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியை புதூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நிறைவுசெய்து.., பின் மதுரை காமராஜர் பல்கலைகழகம் வாயிலாக B.COM பட்டம் பெற்றுள்ளேன்.

படித்து முடித்ததும் லண்டன் ராணி என்அறிவை பயன்படுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்தும்.., அதைமறுத்து தென்னித்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாநகரிலே எனது திருத்தொண்டினை ஆற்ற துவங்கினேன். பின்பு சங்கதமிழ் வளர்த்த மதுரை மாநகர் என்னை ஆவலோடு அழைக்க அங்கு சென்று சிலகாலம் இளநிலை கணக்கராக திருத்தொண்டு புரிந்தேன். ஒரு நாள் என் கிளை மேலாளர்... ஃபிகர் உனக்கு நல்லா வருமா... எவ்ளோ கொடுத்தாலும் மெய்ண்டைன் பண்ணுவியா என்று கேட்க..... இங்கே இருக்குறதெல்லாம் சொத்தைதான்.... இருந்தாலும் பரவாயில்லை... ஒன்னுக்கு ரெண்டாகூட கொடுங்க, மெய்ண்டைன் பண்றேன் என்றேன். அடித்தார் பாருங்கள் டெர்மினேசன் ஆர்டரை.. அதன்பின்புதான் தெரிந்தது நம் அறிவுக்கும் திறமைக்கும் இந்தியா லாயக்கு இல்லை என்று.. இனி என்ன செய்யலாம் என்று வெறியாய் காத்திருந்த சமயத்திலேதான் வாகாய் சிக்கினார் பஹ்ரைன் அரசர் அப்புறம் என்ன.., அரபிக்கடலிலே குதித்து... நீச்சலடித்தே... 2006 – களில் பஹ்ரைன் வந்து சேர்ந்து., இப்போதுவரை இங்குதான் கணக்கு பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

BTW, எழுதுவதும், வாசிப்பதும் எனக்கு பிடித்த பொழுதுபோக்கு. வலைத்தளங்கள் உச்சத்தில் இருந்த 2011-களில்தான் எனக்கு வலைத்தளங்களை பற்றி தெரியவந்தது. நிறைய தளங்களை வாசிக்கும்போது நாமளும் இதுபோல் எழுதினால் என்ன? என்ற எண்ணம் தோன்றியதும் துவங்கியதுதான் இந்த வலைத்தளம். என் வாசிப்பு எல்லையில் வரலாறு பற்றி எழுதுபவர்கள் அதிகம் தென்படவில்லை என்பதால்., அதையே கருவாக கொண்டு எழுத துவங்கினேன். இங்கே நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு வினாடியும் உபயோகமானதாக இருக்க வேண்டும் என்று தீர்க்கமாய் முடிவெடுத்தே கேளிக்கைகளை தவிர்த்து உபயோகமான இடுகைகளை மட்டும் பதிவிட்டு வருகிறேன்.

உங்கள் கருத்துக்கள் மட்டும் பாராட்டுதல்கள் மட்டுமே மேன்மேலும் எழுதிட எனக்கு உந்துசக்தியாய் இருக்கும் என்றாலும் என் தவறுகளை சுட்டிகாட்டவும் தயங்கவேண்டாம். அது என்னை திருத்திக்கொள்ள உதவும். 

நகைச்சுவை என்னை பெரிதும் கவர்ந்த ஏழாம் சுவை.., ஆகவே என்னைபற்றி எழுதியதில் கொஞ்சம் நகைச்சுவையை கலந்துவிட்டேன்..., ஆதலின் மன்னிக்க.!

நன்றி... தொடர்ந்து இணைந்திருங்கள்.!

மிக்க அன்புடன்,
வசு (எ) வரலாற்று சுவடுகள்.

9/24/2016 08:42:00 am by MARI The Great · 0