Saturday 12 May 2012
25 - ஆவது பதிவு, டாப் டென் பை ஹிட்ஸ்; Top Ten by Hits
எல்லோருக்கும் வணக்கம், புதிதாய் பிறந்த நான் ஒருவழியாக உருண்டு பிரண்டு உட்கார்ந்து பின் தரையை தேய்த்து தவழ்ந்து, சுவற்றின் உதவியுடன் நின்று தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடக்கவும் ஆரம்பித்து விட்டேன், ஆம் இது என்னுடைய 25 – ஆவது பதிவு. தற்போது மீண்டும் ஒருமுறை எனது முதல் பதிவையும் கடந்த இருபத்தி நான்காவது பதிவையும் வாசித்துப்பார்க்கிறேன், எனது எழுத்து நடையில் கொஞ்சம் முன்னேற்றம் எற்பட்டிருப்பது (?) புரிகிறது.
முதல் பதிவை எழுதும் போது இருந்த நடுக்கம், பயம், மற்றும் வார்த்தைகளை உபயோகிப்பதில் இருந்த தடுமாற்றம் ஆகியவை இந்த இருபத்தைந்தாவது பதிவில் ஒரு 5% (out of 100%) அளவிற்கு குறைந்திருப்பதாய் உணர்கிறேன். ஆனாலும் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் அதிகமாய் (95%) இருப்பதை நினைத்துப்பார்க்கிறேன். முதல் பதிவை எழுதி பதிவேற்றியதும் சில மணித்துளிகளில் முதல் பின்னூட்டமிட்டு என் நெஞ்சில் உற்சாக வித்தையை விதைத்த நண்பர் ஆர்க் அவர்களை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூற்கிறேன் ..!
உங்களையும் என்னையும் இணைத்ததில் தமிழ்மணம், இன்டலி, தமிழ்10, யுடான்ஸ், வலைப்பூக்கள், தமிழ்வெளி, தமிழ்பெஸ்ட், திரட்டி ஆகிய மற்றும் மேலும் பல வலைதிரட்டிகளுக்கு முக்கிய பங்கு உண்டு, இவர்கள் இல்லாதிருந்தால் குறுகிய காலத்திற்குள் உங்கள் இத்தனை பேருடைய நட்புகளை பெறுவது என்பது சாத்தியமற்ற ஒன்றாக இருந்திருக்கும். இந்த பதிவின் மூலம் அனைத்து வலைத்திரட்டிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
இந்த சுபவேளையிலே இந்த வலைத்தளைத்தில் அதிகமாக பார்வையிடப்பட்ட முதல் பத்து பதிவுகளை நினைவுகூர ஆசைப்படுகிறேன். எழுதும் அனைத்து பதிவுகளும் நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும் என்று நான் விரும்பினாலும் கூட சில இடுகைகள் தான் அதிக வாசக நெஞ்சங்களை கவர்ந்திழுத்து அதிக வாசிப்பு பக்கங்களை எட்டுகிறது. அந்த வகையில் எழுதிய இருபத்தைந்து இடுகைகளில், வாசிப்பு பக்கங்களின் அடிப்படையில் முதல் பத்து இடத்தை பிடித்த பதிவுகளை இந்த பதிவின் மூலமாக உங்களிடையே பகிர்ந்து கொள்வதில் மற்றற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
உலக அதிசயங்களை யார் முதன் முதலில் பட்டயளிட்டது என்பது குறித்தும் அதிசயங்களின் பட்டியல் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்தும், அவை ஏன், ஏழு என்ற எண்ணிக்கையோடு நிருத்திக்கொள்ளப்பட்டது என்பது குறித்தும் விளக்குகிறது இந்த பதிவு.
சோப்புக்கு, சோப்பு என்று எப்படி பெயர் வந்தது என்றும், சோப்பு எப்படி உருவானது என்பது பற்றியும், எந்த நாட்டு மக்கள் முதன் முதலில் சோப்பு பயன்படுத்தி குளித்தார்கள் என்பது பற்றியும் விளக்கும் இப்பதிவு, சோப்பு கண்டறியப்பட்டதிற்க்கான அடிப்படை காரணம் என்ன என்பது பற்றியும் விளக்குகிறது.
பல் துலக்கும் பழக்கம் மக்களிடம் எப்போதிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது என்பது பற்றி விளக்கும் இந்த பதிவு ஆரம்பகால மக்கள் எவற்றை பற்பொடியாக பயன்படுத்தினார்கள் என்பது பற்றியும் எடுத்துரைக்கிறது. பற்பொடி, எப்படி படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டு தற்போதைய நவீன தோற்றத்தை எட்டியது என்பது பற்றி விளக்கும் இந்த பதிவு பற்பசை தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள் என்னென்ன என்பது பற்றியும் எந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பற்பசை பற்களுக்கு பாதுகாப்பானது என்பது பற்றியும் விளக்குகிறது.
விஞ்ஞானிகளின் விண்வெளி அராய்ச்சியின் நோக்கத்தை விளக்கும் இந்த பதிவு, விண்வெளி பயணத்தின் போது விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்கள் மற்றும் விண்கலன்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவற்றை சமாளிக்க விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை பற்றி விவரிக்கிறது. இத்தனை ஆபத்துகளையும் தாண்டி விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்வுகளின் நோக்கம் என்ன என்பது பற்றியும் விளக்குகிறது இந்த பதிவு.
கற்பகாலங்களில் பெண்கள் தினமும் காய்ச்சிய பசும்பாலில் குங்கும பூவை கலந்து குடித்து வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா என்ற கேள்விக்கு உண்மையான பதிலை எடுத்துரைக்கும் இந்த பதிவு, குங்கும பூவை யார்யாரெல்லாம் பயன்படுத்தலாம் மற்றும் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றியும் விளக்குகிறது.
அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் என்று அடிக்கடி யாராவது ஒருவர் சொல்லி நாம் கேட்டிருப்போம், எதனால் அப்படி கூறுகிறார்கள் என்பது பற்றி இந்த பதிவு விளக்குகிறது மேலும் தங்களது அபார செயல்திறன்களால் மிகப்பெரிய பேரரசுகளின் தலைமைகளை ஆட்டம் காணச் செய்த பெண் உளவாளிகளின் சிறப்பான செயல்பாடுகளை பற்றியும் இப்பதிவு விளக்குகிறது.
உலகிலேயே முதன் முதலில் உலோகத்தினாலான ராக்கெட்டை தயாரித்து ஏவியது திப்பு சுல்தான் என்ற இந்தியர்தான் என்று கூறும் இந்த பதிவு, ராக்கெட் உருவான வரலாறை அதன் துவக்கத்திலிருந்து விவரிக்கும் அதே வேலையில் ராக்கெட் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றியும் விவரிக்கிறது.
முடியும் வரை முயற்சி செய்., உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்தது முடியும் வரை என்று துவங்கும் இந்த பதிவு தோல்வியில் துவண்டிருக்கும் மனிதர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பல உற்சாக டானிக் வரிகளை கொண்டுள்ளது. கோபத்தினால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி கூறும் இப்பதிவு நல்லவர் கேட்டவர் என்ற வேறுபாடின்றி எல்லா மனிதர்களையும் நேசிக்க வேண்டும் என்று கூறுகிறது.
நிலத்திற்குள் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்பது பற்றி விளக்கும் இப்பதிவு, கச்சா எண்ணெய் உலகில் முதன் முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றியும் விளக்குகிறது, அதோடில்லாமல் கச்சா எண்ணெயிலிருந்து படிப்படியாக பெட்ரோல், டீஸல், மண்ணெண்ணெய் போன்றவை எப்படி பிரித்தெடுக்கப்படுகிறது என்பது பற்றியும் விளக்குகிறது.
மனிதர்களின் உடலில் தொப்பை எப்படி உருவாகிறது என்பதை பற்றி விளக்கமாக கூறும் இப்பதிவு, எப்படி தொப்பை ஏற்படுவதை தடுக்கலாம் என்பது பற்றியும் கூறுகிறது. அதோடில்லாமல் பெரும்பாலும் பெண்களுக்கு ஆண்களை போல் பெரிய அளவில் தொப்பை ஏன் ஏற்படுவதில்லை என்ற காரணத்தைப் பற்றியும் விளக்குகிறது.
எனது வலைத்தளத்திற்கு வருகை தந்து பதிவுகளை வாசித்து உற்சாகமளிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை இப்பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் மற்றொரு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன் நன்றி., வணக்கம் ..!
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள் நண்பா, நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி நண்பா ..!
Deleteவாழ்த்துகள் தோழர்..தொடர்ந்து வலையுலகில் தங்குதடையின்றி பயணியுங்கள்..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார் ..!
Deleteதொப்பை பற்றிய விளக்கம் சொன்ன விதம்....மூளை இவ்வளவு வேலையும் ரொம்ப நல்லதாம்யா செய்யுது
ReplyDeleteஇன்று தான் படித்தேன் அருமையான பகிர்வு நண்பா
வந்தேமாதரம் சசிகுமார் அண்ணனுக்கு நன்றி, இது அவருடைய பாணிதானே..., நல்லாவேதான் வேலை செய்யுது ..!
Deleteவாழ்த்துக்கள் மேன் மேலும் பதிவுகள் தொடரட்டும்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
Deleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
Deleteவாழ்த்துக்கள் அன்பரே இன்னும் பல சாதிக்க ஒரு சந்தேகம் உங்களது profile போட்டோவை பார்த்தால் பள்ளி மாணவர் போல தோன்றுகிறது பள்ளி மாணவரா நீங்கள் !
ReplyDeleteஆமாம் தல., ஆனால் இப்போ இல்லை 2006 -ல் .., ஹி ஹி ஹி
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
வரலாற்று நாயகனே வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார் ..!
Delete25 பதிவு வாழ்த்துக்கள். நான்லாம் 250 பதிவை நெருங்க போறேன் இருந்தாலும், உங்க எழுத்து நடையில் இருக்கும் மெருகு எனக்கு இன்னும் வரலை தம்பி. மென்மேலும் எழுத்துலகிலும், வாழ்விலும் மெருகுற வாழ்த்துக்கள் தம்பி.
ReplyDeleteஇது தங்களின் தன்னடக்கத்தை காட்டுகிறது, உண்மையென்னவெனில் பல பதிவுகளில் தங்களது அசத்தலான (குறிப்பாக இருவர் உரையாடுவது போல் அமைக்கும் இடுகை) எழுத்து நடை கண்டு நான் பொறாமைப்பட்டதுண்டு. தங்களை போல் சொல்வதை சுவைபட சொல்ல நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்கவேண்டும் ..!
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா ..!
25 ஆவது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே...
ReplyDeleteநான் உங்களது அனைத்து பதிவுகளையும் படித்ததில்லை.
இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திப் படிக்கிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே ..!
Deleteஉங்களது ஓய்வு நேரத்தில் எனது அனைத்து இடுகைகளையும் வாசித்திட வேண்டுமென்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ..!
வாழ்த்துக்கள் நண்பா.....
ReplyDeleteமேலும் நிறைய இடுகைகள் எழுதி சிறந்த பதிவராக வாழ்த்துக்கள்....
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தல ..!
Deleteவாழ்த்துக்கள் அண்ணா..மேலும் சிறப்பான பதிவுகளை தந்து உங்கள் வலையுலகப்பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
ReplyDeleteவரலாறு ரொம்ப முக்கியம் அண்ணா...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா ..!
Deleteவாழ்த்துக்கள்.இன்னும் நிறைய எழுதி சாதனைகள் பல புரியவேண்டும்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
Deleteஇருபத்தைந்து விரைவில் இருநூற்றைம்பது ஆகட்டும். நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
Deleteஎன் சார்பா இனிய அன்னையர்தின வாழ்த்துக்களை அம்மாக்கிட்ட சொல்லிடுங்க தம்பி.
ReplyDeleteதங்கள் அன்பிற்கு மிக்க மகிழ்ச்சி அக்கா ..!
Deleteவாழ்த்துகள். இன்றுதான் உங்கள் தளத்தை அறிந்துகொண்டேன். ஒவ்வொரு பதிவும் பயன்மிக்கது.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா ..!
Deleteபதிவுகள் குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு பதிவும் அற்புதமான தகவல்களாக எப்போதும் புரட்டிப் பார்க்கின்ற வகையில் அமைந்திருக்கின்றது என்பது உண்மை. உங்கள் பதிவுகளை புத்தகமாகப் போடலாம். முயற்சி செய்யுங்கள்.
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!
இது போன்ற அங்கீகாரங்கள் வெகு தூரம் பயணிப்பதற்க்குரிய உந்து சக்தியை எண்ணில் மட்டுமல்ல எவர் நெஞ்சிலும் ஏற்படுத்தும்.,உயர்ந்த அங்கீகாரம் ..!
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
தொடர்ந்து நின்று விளையாடுங்கள்,25க்குள் இவ்வளவு ஹிட்டா?வாழ்த்துகள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா ..!
Deleteஉங்களது பதிவுகள் எல்லாமே பிரயோசனமானதும் வித்தியாசனமானதும்கூட.இன்னும் இன்னும் தொடர வாழ்த்துகள் !
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ ..!
Delete25 பதிவுக்குள் இந்தளவு உச்சம் பெறுவது அதிசயமான விடயமே... நீங்கள் இன்னும் முன்னக்கு வருவீர்கள் என ஆருடம் கூறுகிறேன்...
ReplyDeleteஇதோ இணைகிறேன் நண்பா ..!
ReplyDeleteஉபயோகமான பதிவுகள் போட்டு நீ எப்பவும் உயர்ந்து நிற்கிறாய்....வாழ்த்துக்கள் மாப்ள!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல ..!
Delete