Showing posts with label ராக்கெட் உருவான வரலாறு. Show all posts
Showing posts with label ராக்கெட் உருவான வரலாறு. Show all posts

Tuesday, 15 May 2012

ராக்கெட் உருவான வரலாறு (பாகம் - 2), வெர்னர் வான் பிரவுன் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ராக்கெட் விஞ்ஞானி; History of Rocket (Part-2)

அனைவருக்கும் வணக்கம், வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 1799 ஆம் ஆண்டு ஸ்ரீ ரெங்கப்பட்டினத்தில் (Srirangapatna, Karnataka) நடந்த நான்காவது ஆங்கிலோ – மைசூர் யுத்தத்தில் (Forth Anglo – Mysore War, 1798 – 1799) திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்டதும் அவரது அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயப்படைகள் அங்கு எரிந்த மற்றும் எரியாத ராக்கெட்டுகள் என்று எதையும் விட்டுவைக்காமல் ஒட்டு மொத்தமாக 9700 - க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை கைப்பற்றியது. திப்புவின் அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ஓரியண்டல் லைப்ரரி (Oriental Library) என்ற நூலகத்தையும் விட்டுவைக்காத ஆங்கிலப்படைகள் அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் ராக்கெட் தயாரிப்பு சம்மந்தமான ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு நூல்கள் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் அள்ளிச் சென்றது. 

5/15/2012 10:40:00 am by வரலாற்று சுவடுகள் · 55

Wednesday, 9 May 2012

ராக்கெட் உருவான வரலாறு (பாகம்-1), திப்புசுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட்டை வடிவமைத்த விஞ்ஞானி; History of Rocket


அனைவருக்கும் வணக்கம், நம்மால் இன்று நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் கைதொலைபேசியின் வாயிலாக பேசிவிட முடிகிறது என்றால் அது செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்த செயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் (Outer Space) நிலைநிறுத்துவதில் ராக்கெட்டுகளின் (Rocket) பங்கு அளவிடற்கரியது. அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம் புதிய சகாப்தத்தை அடைய ராக்கெட் தொழில்நுட்ப (Rocket Technology) கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. 

5/09/2012 10:06:00 am by வரலாற்று சுவடுகள் · 40