Monday, 9 April 2012

பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு; பிளாஸ்டிக் (Plastic) பிறந்த கதை; History of Plastic by varalatru suvadugal


அனைவருக்கும் வணக்கம், இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை. அப்படி மனிதனால் தயாரிக்கப்பட்டு புவியினால் எக்காலத்திலும் சிதைத்து அழிக்க முடியாத பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் (Plastic). அது எப்படி உருவானது என்பதைத்தான் இன்றைய பதிவுனூடாக நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம் ..!

மனிதன் பெரும்பாலான பொருட்களை உருவாக்கும் மூல சூத்திரத்தை இயற்கையிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறான் என்றால் மிகையில்லை. அந்த வகையில் பறவையை கண்டு விமானத்தையும், எதிரொலி கேட்டு வானொலியையும் படைத்தான்.அந்த வகையில் மனிதனுக்கு பிளாஸ்டிக்கை படைத்திடும் எண்ணம் தோன்றியதும் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்கை கண்டுதான் என்றால் பொய்யில்லை. அட.., அது என்ன 'இயற்கை பிளாஸ்டிக்' இதுவரை கேள்விப்பட்டதில்லையே என்கிறீர்களா.? மாடுகள் (Cow) உள்ளிட்ட கால்நடைகளின் (Cattle) கொம்புகள் (Horns) தான் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக் ஆகும்.


பதினெட்டாம் நூற்றாண்டில் கால்நடைகளின் (குறிப்பாக மாடுகளின்) கொம்புகளை பற்றி துவங்கிய ஆய்வுகள்தான் பிற்காலத்தில் பிளாஸ்டிக் உருவாக மூலகாரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் கால்நடைகளின் கொம்புகள், பால்புரதங்களால் (Casein) தான் உருவாக்கப்படுகிறது என்பதை பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் மனிதன் தெரிந்துகொண்டான். கால்நடைகளின் கொம்புகள் பிளாஸ்டிக்கின் தோற்றத்தை ஒத்துக் காணப்பட்டாலும் கூட அவற்றின் கொம்புகள் மக்கும் திறன் கொண்டவை ...!

இதைத்தொடர்ந்து இயற்கையாக ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் ரப்பர் பாலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் முயற்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வேதியல் வல்லுனர்கள் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 1839-ஆம் ஆண்டு சார்லஸ் குட்இயர் (Charles Goodyear, 1800 – 1860 AD) என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (American Inventor) ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் பாலுடன் (Rubber Milk) கந்தகம் (Sulfur) கலந்து சூடாக்கி வல்கனைசிங் ரப்பர் (Vulcanizing Rubber) என்ற ஒருவகை ரப்பரை தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புதான் செயற்கை பிளாஸ்டிக் உருவாக்கத்திற்க்கு ஒரு ஊன்றுகோலாக அமைந்தது என்று சொல்லலாம்.


சார்லஸ் குட்இயரின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக்கொண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் (Alexander Parkes, 1813 – 1890 AD) என்ற உலோகவியல் வல்லுனர் (Metallurgist Specialist) உலகமே வியக்கும் வண்ணம் பார்க்ஸின் (Parkesine) என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் செயற்கை பிளாஸ்டிக்கை 1856-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மரத்தாதுக்களுடன் (Cellulose) நைட்ரிக் அமிலத்தை சேர்த்து சூடாக்கி இதனை அவர் தயாரித்திருந்தார். இந்த பிளாஸ்டிக், வெப்பப்டுத்தும்போது இளகும் தன்மைகொண்டதாகவும் குளிர்விக்கும் போது இறுகி மீண்டும் தனது பழைய கடினதன்மையை எட்டும் தன்மைகொண்டதாகவும் இருந்தது, இதனால் பிளாஸ்டிக்கை வேண்டிய தோற்றத்தில் சுலபமாக வடிவமைத்துக்கொள்ள முடிந்தது.


இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் மாநகரில் 1862-ஆம் ஆண்டு நடந்த உலக சர்வதேச கண்டுபிடிப்பு கண்காட்சியில் (Invention of World Great International Exhibition, London) தனது இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிப்பை பகிரங்கமாக வெளியுலகிற்கு செய்து காட்டினார். அவரது இந்த கண்டுபிடிப்பு அந்த ஆண்டு சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றது. தொடர்ந்து 1856 – ஆம் ஆண்டு 'Parkesine Company' என்ற பெயரில் உலகின் முதல் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பனியை துவக்கி பிளாஸ்டிக் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். இவரது செயமுறைப்படி பிளாஸ்டிக் தயாரிக்க அதிக அளவில் மரத்தாதுக்கள் (Cellulose) தேவைப்பட்டதால் இவரது நிறுவனம் மிகக்குறைந்த அளவே பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய முடிந்தது, இதன் காரணமாக வணிகரீதியில் இவரது பார்க்ஸின் பிளாஸ்டிக் (Parkesine Plastic) வெற்றிபெற முடியாமல் போய்விட்டது.


பிளாஸ்டிக் தயாரித்தலின் அடுத்தகட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எட்டப்பட்டது. தற்போது இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி உட்சபச்ச ஜிரத்தில் இருக்கிறதோ அதுபோல பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு உட்சபச்ச ஜிரத்தில் இருந்தது. அப்போது பில்லியர்ட்ஸ் விளையாட தேவைப்பட்ட பந்துகள் யானையின் தந்தங்களிளிருந்து (Elephant Tusk) தான் தயாரிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரிப்பதற்க்காகவே படுகொலை செய்யப்பட்டது. யானைகளின் நிலையை எண்ணி வருத்தப்பட்ட அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ஜான் வெஸ்லி ஹையாட் (John Wesley Hyatt, 1837 – 1920 AD) இதற்க்கு மாற்று வழி கண்டறிய தீவிரமாக முயற்சித்தார். தொடர்ந்து ஜான் வெஸ்லி, அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக் கொண்டு 1868-ஆம் ஆண்டு பருத்தியிலிருந்து (Cotton) பிரித்தெடுக்கப்பட்ட செல்லுலோஸுடன் (Cellulose) நைட்ரிக் அமிலம் (Nitric Acid) மற்றும் கற்பூரம் (Camphor) ஆகியவற்றை சேர்த்து செல்லுலாய்ட் (Celluloid) என்ற புதியவகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.


இவரது இந்த கண்டுபிடிப்பை பற்றி கேள்விப்பட்ட அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் வெஸ்லியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு 1868-ஆம் ஆண்டு இறுதிவாக்கில் செல்லுலாய்ட் பிளாஸ்டிக்கில் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரித்து 'Parkesine Company' மூலமாக விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இன்றளவும் டேபிள் டென்னிஸ் பந்துகள் இவர்கள் தயாரித்த அதே தொழில்நுட்ப முறையை பயன்படுத்தித்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புகைப்படக்கருவி (Camera), பேனா (Pen), பொம்மைகள் (doll) உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது. மேலும் மோசன் பிக்சர்ஸ் (Motion Picture) மூலம் 1882-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்பட தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட புகைப்படச்சுருள் (Photo Reel) இவர்கள் தயாரித்த பிளாஸ்டிக்கை பயன்படுத்திதான் தயாரிக்கப்பட்டது. இவரது கண்டுபிப்பின் மகத்துவத்தை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட அமெரிக்க அரசாங்கம் 1914-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேதியல் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் உயரிய விருதான 'பெர்கின் மெடலை' (Perkin Medal) வழங்கி கெளரவித்தது.


அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் மற்றும் ஜான் வெஸ்லி ஹையாட் ஆகியோரது கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாகக்கொண்டு இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சின்தடிக் பிளாஸ்டிக் (Synthetic Plastic) எனப்படும் 100%  செயற்கை பிளாஸ்டிக்கை, பெல்ஜியத்தை சேர்ந்த வேதியல் வல்லுனரான ஹென்றிக் பேக்லேண்ட் (Hendrik Baekeland, 1863 – 1944 AD) என்பவர் 1907 ஆம் ஆண்டு கண்டறிந்தார். பேக்லைட் (Bakelite) என்று அழைக்கப்பட்ட இவரது பிளாஸ்டிக்கில் தாவரதாதுக்கள் (Cellulose), பெனோ-பார்மால்டிகைட் (Pheno-Formaldehyde), மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகிய மூலக்கூறுகள் அடங்கியிருந்தது. மிகச்சுலபமான தயாரிப்பு முறைகள் மற்றும் மிகக்குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக 'பேக்லைட்’' வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரேடியோ தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக் மூலம் தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இதன் 100% மின்கடத்தாத்திறன் பெரும்பாலான எலெக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து 1926-ஆம் ஆண்டு பாலிவினைல் குளோரைடு (Polyvinyl Chloride, known as PVC Plastic (PVC Pipes)), வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் முறையை வால்ட்டர் செமொன் (Walter Semon) என்பவர் கண்டறிந்தார். இதன் பிறகுதான் குழாய்கள் (Pipe) தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 1937-ஆம் ஆண்டு பாலியூரித்தீன் (Polyurethane) வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓட்டோ பாயர் என்ற ஜெர்மனியை சேர்ந்த வேதியல் வல்லுனர் கண்டறிந்தார், இதன் பிறகு பாலிஸ்ட்ரீன் (Polystyrene) வகை பிளாஸ்டிக் புழக்கத்தில் வர ஆரம்பித்தது.  


இன்று பெருமளவில் புழக்கத்தில் உள்ள பாலிஎத்திலின் டெரெப்தலைட் (Polyethylene Terephthalate, known as PET (Soft Drinks Water Bottle)) வகை பிளாஸ்டிக்கை இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் வல்லுனர்களான ஜான் ரெக்ஸ் வின்பில்டு (John Rex Whinfield) மற்றும் ஜேம்ஸ் டெனன்ட் டிக்சன் (James Tennant Dickson) ஆகிய இருவரும் இணைந்து 1941-ஆம் ஆண்டு தயாரித்தனர். அதுவரையில் மனித சமுதாயத்திற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாமல் சென்றுகொண்டிருந்த பிளாஸ்டிக்கின் பயணம் தடம் புரண்டு அழிவுப்பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது PET பிளாஸ்டிக் கண்டறிந்த பின்புதான்..!


பிளாஸ்டிக் என்ற சொல் கிரீஸ் நாட்டின் கிரேக்க மொழியில் இருந்து பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. பிளாஸ்டிக் என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ‘எளிதில் வடிவமைத்துக்கொள்ள இயலும் என்று பொருளாம். இன்று உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்பட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பு முதற்கொண்டு அனைத்தும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு உலக சந்தையில் விற்க்கப்படுக்கொண்டிருக்கிறது, ஏனைய உலோகங்களை காட்டிலும் இதன் மலிவான விலை, எளிதில் கையாளும் திறன், நீடித்து உழைக்கும் தன்மை ஆகிய காரணங்களால் பிளாஸ்டிக் மிகக் குறுகிய காலத்திற்குள் இமாலைய வளர்ச்சியை எட்டிப்பிடித்தது. இன்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை காணாமல் திரும்ப இயலாது.

பதிவை பற்றிய உங்களது கருத்துக்களை தவறாமல் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே, அது என்னை திருத்திக்கொள்ள உதவும், விரைவில் மீண்டும் ஒரு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன், நன்றி வணக்கம்..!

பதிவுகளை தவறவிடாமல் வாசிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

14 comments:

  1. சோதனை மறுமொழி ..!

    ReplyDelete
  2. பல புதிய தகவல்கள் .. நன்றி நண்பா

    ReplyDelete
  3. தெரியாத தகவல்களை தெரிந்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க 'வைரை சதீஷ்' சார்.., தங்களது வருகையால் அகம் மகிழ்கிறேன் ..!

      கருத்துக்கு நன்றி ..!

      Delete
  4. கூடிய விரைவில் அருங்காட்சியகத்தில் இருக்கப்போகும் இது பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி நண்பரே...

    ReplyDelete
  5. பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்காது, உலக நலனுக்கே கேடுனு மட்டுமே இதுவரை தெரியும். பிளாஸ்டிக் பற்றி மேலுமதிக தகவல்களை இன்றுதான் உங்க பதிவில் தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி அக்கா.., தங்களது வருகையால் உளம் மகிழ்கிறேன் ..!

      Delete
  6. பிளாஸ்டிக் பற்றி விரிவாக அறிந்துகொண்டேன்.நல்ல பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  7. தேவையான பகிர்வு.
    அருமை நண்பா.

    ReplyDelete
  8. அருமையான தகவல், இது இந்த மூலத்தில் (Resource) இருந்து எடுத்தது என்பதை குறிப்பிடவும்

    ReplyDelete
    Replies
    1. முதலில் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

      எங்கிருந்தாவது எடுக்கபட்டிருப்பின் அவ்வாறு கூறலாம்.. ஆனால் இது விக்கிப்பீடியாவின் பல்வேறு ஆங்கில கட்டுரைகளில் இருந்து குறிப்புகள் எடுக்கப்பட்டு பின்பு அவை தொகுக்கப்பட்டு ... பின்பு பதிவுகளாக உருமாற்றம் பெற்றவையாகும். ஆதலின் மூலம் (Resource) என்று எதைக்குறிப்பிடுவது என்று புரியவில்லை. இங்கிருக்கும் எனது பதிவுகள் அனைத்தும் அவ்வாறு எழுதப்பட்டவையே. புரிதலுக்கு நன்றி.

      Delete
  9. தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  10. அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  11. Choosing the right packaging partner is vital, which is why many industries trust a reputable PP Plastic Bag Manufacturer for reliable and durable solutions. Crafted from high-strength woven polypropylene, these bags deliver exceptional tear resistance and moisture protection—perfect for sectors such as agriculture, construction, and retail. Their lightweight yet robust design improves handling efficiency and reduces shipping costs. With options for customizable sizing and branding, they boost both functionality and market visibility. Opting for a trusted PP plastic bag manufacturer ensures consistent performance and long-term packaging value.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...