Saturday 21 April 2012

அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் என்பதன் அர்த்தம் தெரியுமா?, சரித்திரங்களை சரித்த பெண் உளவாளிகள்; Female Spy


அனைவருக்கும் வணக்கம், ஏசி அறையில் அமர்ந்துகொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு தேனீர் அருந்திக்கொண்டே செயற்கைக்கோள் வாயிலாக உலகின் எந்த நாட்டின் எல்லைப் பகுதியையும் கண்காணிக்கும் வசதிகள் இன்று உள்ளது என்றாலும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் உளவுப்பணி என்பது முழுக்க முழுக்க மனிதர்களின் அறிவாற்றல், துணிவு, திறமை, சாகசம் ஆகியவற்றை சார்ந்தே இருந்தது. ஏனெனில் அப்போதைய உளவாளிகளுக்கு(Spy) தற்போதுள்ள எந்த வசிதியும் கிடையாது. விஞ்ஞான சாதனங்களும் இன்றுள்ளதைப்போல அன்று கிடையாது. ஆகையால் உளவுப்பணியில் ஈடுபடும் மனிதர்களின் அறிவாற்றல் துணிவு சாகசம் ஆகியவற்றையே அக்கால உளவு நிறுவனங்கள் பெரிதும் நம்பியிருந்தன. 

உளவுப் பணிகளுக்கு பெண்களின் அழகும் சாகசமும் பெரிதும் உதவும் என்பதால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பல நாட்டு அரசுகளும் இப்பணியில் அழகும், அறிவும், திறமையும், கொண்ட பெண்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்திருக்கிறது. பெரும்பாலான நாடுகளின் ரகசிய உளவுப்படைகளில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே அதிக முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது தற்போதும் தரப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல பெரிய அரசியல் மாற்றங்கள் பெண்களின் அழகாலும் அவர்களின் சாதுர்யமான செயல்களாலும் தான் நிகழ்த்தப்பட்டிருக்கிறது அவைகளுள் சிலவற்றை வரலாறு குறித்து வைத்திருக்கிறது, பெரும்பாலானவற்றை வரலாறு ஒழித்து வைத்திருக்கிறது.

அது 1963-ஆம் ஆண்டின் துவக்கம். நாற்பதிற்கும் மேற்பட்ட நாடுகளை கட்டியாண்ட இங்கிலாந்து பேரரசே கதிகலங்கிப் போனது. பிரதமராக இருந்த மாக்மில்லனின் (Harold Macmillan, in office 1957 – 1963) மந்திரிசபை ஆட்டம் கண்டது. ராணுவ அமைச்சராக இருந்த ஜான் புரோபுமோ (John Profumo, in office 1960 – 1963) தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓட்டம் பிடித்தார். எலிசபெத் ராணி சஞ்சலத்தில் மூழ்கினார். இத்தனைக்கும் காரணம் கிறிஸ்டின் கீலர் (Christine Keeler) என்ற 21 வயதே சாதாரணப் பெண் தான். யார் அவள் என்கிறீர்களா..? வாருங்கள் தெரிந்துகொள்வோம்..!


அவள் ஒரு மாடல் அழகி. லண்டன் மாநகரிலிருந்து 300 மைலுக்கு அப்பாலிருந்த ரோஸ்பர்ரி என்ற கிராமத்தில் வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து வந்தவள். அவளது பதினெட்டு வயதில் அவளின் தாயும், தந்தையும் சிறைக்கு சென்றுவிட நிர்கதியான அவள் வீட்டிலிருந்த வெறும் பத்து பவுண்டு பணத்தை எடுத்துக்கொண்டு லண்டனுக்கு வந்தாள். மிஸ்.கீலர் என்று தன்னை கூறிக்கொண்டு ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தவளுக்கு அடுத்தடுத்து வந்த சிலரின் நட்பால் டாக்டர் வார்டு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவளின் அழகில் மயக்கிய டாக்டர் வார்டு அவளை தன்னுடனேயே தங்கவைத்துக் கொண்டார். பெரிய பெரிய அதிகாரிகளுக்கெல்லாம் சிகிச்சையளித்து அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த டாக்டர் வார்டு ஒரு முறை பெரிய அரசு விருந்துக்கு கீலருடன் சென்றார். அந்த விருந்துக்கு இங்கிலாந்தின் ராணுவ அமைச்சர் ஜான் புரோபுமோவும் வந்திருந்ததுதான் இங்கிலாந்து பேரரசிற்கு கேட்ட நேரத்தை துவக்கி வைத்தது.


அந்த விருந்தில் கீலரை பார்த்த ராணுவ அமைச்சர் ஜான் புரோபுமோ அவளின் அழகில் நிலைதடுமாறிப்போய், தான் யார், தன்னுடையை பதவியின் முக்கியத்துவம் என்ன என்பதை மறந்து அப்பொழுதே அங்கேயே கீலரை அணைக்க துடித்தார். அன்று (1961 ஜீன் மாதம் 10 ஆம் தேதி) கீலருக்கும் மந்திரி ஜான் புரோபுமோவுக்கும் ஏற்பட்ட அறிமுகம் நாளுக்கு நாள் வளர்ந்தது. இந்தச் செய்தி லண்டனில் உள்ள சோவியத் தூதரகத்திற்கு ஒற்றர்கள் மூலம் தெரியவந்தது. பிரிட்டிஷ் ரானுவமந்திரி நாலாந்தர வாடகைப் பெண்ணான கிறிஸ்டின் கீலரின் மடியில் மயங்கி கிடக்கிறார் என்று தெரிந்ததும் கீலரின் மூலம் ஜான் புரோபுமோவின் வாயிலிருந்து பிரிட்டிஷ் ராணுவ ரகசியங்களை கறக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது சோவியத் யூனியன்.


டாக்டர் வார்டிற்கு பணத்தை அள்ளி வீசி அவர் மூலம் கீலரிடம் பழகி அவள் மூலம் ஜான் புரோபுமோவை நெருங்க ஜவநோவ் என்கிற இளைஞனை ஏற்பாடு செய்தது. திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. அதி முக்கியமான ராணுவ ரகசியங்கள் களவாடப்பட்டன. அந்த ரகசியங்கள் வெளியிடப்பட்ட போது நாற்பதிற்கும் மேற்பட்ட நாடுகளை கட்டியாண்ட இங்கிலாந்து கதிகலங்கிப் போனது. பிரதமராக இருந்த மாக்மில்லனின் மந்திரிசபை ஆட்டம் கண்டது. ராணுவ அமைச்சராக இருந்த ஜான் புரோபுமோ தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு தலைமறைவானார். எலிசபெத் ராணி சஞ்சலத்தில் மூழ்கினார்.
*****
அவள் ஜெர்மன் நாட்டின் விலைமாது, பெயர் லில்லி. சிறுவயதில் வறுமையையும் அறிவாற்றலையும், இளம் வயதில் பேரழகையும் தாராளமாய் கொடுத்திருந்தான் இறைவன். வறுமையின் கோரப்பிடியில் அவளது கற்பும் சேர்ந்தே சிக்கிச் சிதைந்தது அதன் பிறகு இறைவன் அளித்த அழகையே மூலதனமாகக் கொண்டு தனது வறுமையை போக்க முயன்றுகொண்டிருந்தாள். 1939-ம் ஆண்டில் ஓர் இரவு ஹிட்லரின் உளவு நிறுவனமான ஆர்.எஸ்.எச்.ஏ (R.S.H.A)         நிறுவனத்தின் உளவாளி ஒருவன் லில்லியின் வீட்டுக் கதவை தட்டினான். கதவைத் திறந்த லில்லியிடம் அவன் கூறிய செய்தி அவளை மகிழ்ச்சியடையச் செய்து உடனே சம்மதிக்கவும் வைத்தது. அவன் கூறிய செய்தி இதுதான். உன் அழகை பற்றியும் திறமையைப் பற்றியும் எங்கள் உளவுப்பிரிவின் தலைவர் ஹின்ரிச் ஹிம்ளர் (Heinrich Himmler) நன்றாக அறிவார். நம் நாட்டு நலனுக்காக உன்னை உளவாளியாக சேர்த்துக்கொள்ள விரும்புகிறார், உனக்கு சம்மதமா.?.


அடுத்து வந்த நாட்களில் அவளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தம் மூளத்துவங்கிய நேரத்தில் ஜெர்மானிய மக்களில் சிலர் அகதிகளாக அமெரிக்காவிற்க்குள் குடிபுகுந்தனர். அவர்களுள் ஒருத்தியாக லில்லி அமெரிக்காவிற்குள் உளவு பார்க்க சென்றாள். அமெரிக்காவில் நியூயார்க்கின் கிழக்குப்பகுதியில் 79-வது தெருவில் குடியேறி முதலில் காய்கறிக்கடை வைத்தாள் லில்லி. பின்னர் மாடிசன் அவென்யுவில் நாகரீகமான ஆடைக்கடையை திறந்தாள். அதன் மூலம் அமெரிக்க யுத்த இலாகா அலுவலகத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு கடனுக்கு ஆடை குடுப்பதாக ஆசை காட்டி சிலபல ரகசிய தகவல்களை சேகரித்தாள். கடைநிலை ஊழியர்களுடன் ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் அமெரிக்காவின் யுத்த இலாகா ஜெனெரல் வரை முன்னேறியது. அவரையும் தனது அழகால் வீழ்த்திய லில்லி, அமெரிக்க அரசாங்கத்தின் மிக முக்கிய ராணுவ ரகசியங்களை களவாடி வில்லியம் ஹிப்போர்டு என்பவன் மூலம் ஹிம்லரை எட்டச் செய்தாள். அதிமுக்கியமான ரகசியங்கள் எல்லாம் எப்படி வெளியே போகின்றன என்று அமெரிக்க ராணுவ இலாகா குழம்பித் தவித்தது. பின்னாளில் தனது நம்பிக்கைக்கு பாத்திரமான வில்லியம் ஹிப்போர்டு என்பவனாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு 10 வருடங்கள் சிறையில் இருந்தாள் என்பது வேறு விஷயம்.
****
மாவீரன் லெனினுக்கு பிறகு சோவியத் பேரரசை கட்டியாண்டவன் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin). ஸ்டாலினின் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும் சிந்திப்பவர்களையும் இனம் கண்டு அடியோடு அழிப்பதற்காக என்.கே.வி.டி. (N.K.V.D) என்னும் ரகசியப் போலிஸ் படை அமைக்கப்பட்டிருந்தது. அதன் தலைவனாக லவ்ரெண்டி பெரியா (Lavrentiy Beria) என்பவன் இருந்தான். லவ்ரெண்டி பெரியா, ஸ்டாலின் அரசை விமர்ச்சித்தவர்களை சித்ரவதை செய்து கொன்று குவித்தவர்களின் கணக்கு பல லட்சங்களை தாண்டும் என்கின்றனர் மேலை நாட்டு வரலாற்று ஆசிரியர்கள். லவ்ரெண்டி பெரியாவின் ரகசிய போலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு பாதாள அறைதான் சித்ரவதைக்கூடம். அங்கே உலக வரலாற்றில் எத்தனைவகை சித்ரவதைகள் உள்ளனவோ அவ்வளவும் அரங்கேற்றப்படும். பெரியாவின் ரகசிய போலிஸ் படையில் மயக்கும் அழகும் இளமையும் கொண்ட நடாஷா என்ற பேரழகுப் பெண் ஒருத்தியும் இருந்தாள்.


மாஸ்கோ பல்கலைகழக மாணவன் ஒருவன் ஸ்டாலின் ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து கையால் எழுதிய துண்டு பிரசாரங்களை விநியோகித்தமைக்காக லவ்ரெண்டி பெரியாவால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டான். தன் கண்முன்னே நடந்த அந்த கொடூர சம்பவத்தை கண்ட நடாஷாவின் கண்களில் கண்ணீர் வரவில்லை மாறாக ரத்தமே வந்தது. அன்று அவள் மனசுக்குள் மிகப்பெரிய சபதம் எழுந்தது. என்றாவது ஒருநாள் இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்டியே தீருவேன் என்று மனசுக்குள் சூளுரைத்தாள். தன் பருவ எழிலால் யாராவது ஒரு அதிகாரியை மயக்கி அவர் மூலம் தன் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள நினைத்தாள். ஆனால் நடாஷாவின் அதிர்ஷ்டமோ துரதிஷ்டமோ லவ்ரெண்டி பெரியாவே நடாஷாவின் அழகுக்கு அடிமையானான். வெறிபிடித்த லவ்ரெண்டி பெரியாவை தன் கைக்குள் போட்டுக்கொண்டு தன் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள துவங்கினாள்.


பெரியாவுடன் ஏற்பட்ட அறிமுகத்தின் முதலாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதர்க்குள் நடாஷாவால் காப்பாற்றப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாயிற்று. பெரியாவிற்க்கு சந்தேகம் ஏற்படாதவகையில் நாளொன்றுக்கு நான்கைந்து பேரையாவது மரணத்தின் பிடியிலிருந்து மீட்டு வந்தாள் நடாஷா. இந்நிலையில் பெரியாவின் கொடுமைகளுக்கு முடிவுகட்ட சி.ஐ.ஏ உளவு நிறுவனம் முடிவு செய்தது அதற்காக நடாஷாவின் உதவியை பெற முயற்சி செய்தபோதுதான் பெரியாவிற்க்கு தகவல் வந்து விழித்துக்கொண்டான். தன் கூடவே இருந்து தனக்கு குழிபறிப்பது தன் காதல் நாயகி நடாஷாதான் என்பதை மிகவும் தாமதமாக புரிந்துகொண்ட பெரியா, நடாஷாவின் மரணத்திற்கு நாள் ஒன்றைக் குறித்தான். அதே நாளைத்தான் சி.ஐ.ஏ உளவு நிறுவனத்துடன் இணைத்து நடாஷாவும் பெரியாவின் மரணத்திற்காக குறித்திருந்தாள். அந்த நாளும் வந்தது.

சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கல்லூரி மாணவன் மூலம் கொடுத்தனுப்பிய வெடிகுண்டு பொருத்தப்பட்ட மலர் தொட்டி ஒன்றை அந்த கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்த பெரியாவின் அறையில் வைத்தாள் நடாஷா. அப்போது மணி பனிரெண்டு, அடுத்த ஆறு மணிநேரத்தில் அந்த அறை ஆயிரமாயிரம் துகள்களாக வெடித்து சிதரப்போகிறது. கடிகார முட்கள் நகர்ந்தது மணி மூன்றை தொட்டிருந்தது. பெரியா வரவில்லை, மணி நான்கானது.., ஐந்தும் ஆனது அப்போதும் பெரியா வரவில்லை. ஏதோ தவறு நேர்ந்துவிட்டது என்று நடாஷாவிற்கு லேசாக புலப்பட ஆரம்பித்த போது சரியாக 5.30-க்கு பெரியா வந்தான். வந்ததும் வராததுமாக நடாஷாவை அனைத்து முத்தமிட்டு கொஞ்சினான், எல்லாம் முடிந்து இருவரும் சோர்ந்து கட்டிலில் விழுந்தபோது கடிகார முட்கள் 5.50-ல் துடித்துக்கொண்டிருந்தது எவ்வளவோ முயன்றும் நடாஷாவால் பெரியாவின் ராட்சத அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியவில்லை.

மணி 5.55 எட்டியபோது ‘ஐயோ எனக்கு தலைவலிக்கிறது என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியபடி அறையிலிருந்து வெளியேற முயன்றவளை தடுத்து நிறுத்தி ஒரு ‘ஜோக் சொல்கிறேன் அதைக் கேட்டால் தலைவலி பறந்துவிடும் என்றான் மணி 5.58. இனிய தூக்கத்திற்கு வாழ்த்துக்கள், குட்பாய் என்றான். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டமும் நடையுமாய் வந்து லிப்டை அழுத்தினாள், ஆனால் லிப்ட் மேலே வரவில்லை மணி 6.00; வெடிகுண்டு வெடித்தது, ஆயிரம் கோடி துணுக்குகளாய் சிதைந்தாள் நடாஷா. ரகசிய வழி மூலம் வெளியேறியிருந்த பெரியா கட்டிடம் வெடித்து சிதறுவதை பார்த்துக்கொண்டே துரத்தில் சிரித்தபடியே தனது உளவுத்துறையினரோடு பேசிக்கொண்டிருந்தான்.
****
வரலாற்று சிறப்புமிக்க எகிப்து தேசத்திற்கு வரலாற்றில் என்றும் அழியாத கறையை ஏற்படுத்திய மன்னன் தான் பாரூக். மன்னனாக இருக்க கொஞ்சம் கூட தகுதியில்லாத பாரூக் ஒரு நாளின் 24 மணி நேரங்களையும் பெண் சுகத்திர்க்காகவும் மது அருந்துவதர்க்காகவும் சூதாடுவதற்க்காகவுமே செலவழித்தான். மன்னனின் சூதாரித்தனத்தினால் எகிப்தின் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்கு சென்றுகொண்டிருப்பதை உலக நாடுகள் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தன. ஆனால் எகிப்திய இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவில்லை மாறாக கொதித்து எழுந்தனர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இளைஞர்களும், ராணுவத்தில் பணியாற்றிவந்த இளம் அதிகாரிகளும் இணைந்து புரட்சிப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களுள் ஒருத்திதான் பதினெட்டு வயது பருவக்குமரி இரான் தேசத்து பேரழகி பர்வீன். எகிப்து நாட்டின் தலையெழுத்தையே புரட்டிப் போட்டவள் அவள்தான்.

அழகான பெண்களிடம் மயங்கி கிடக்கும் பாரூக் மன்னனை ஒழித்துக்கட்ட இளம் ராணுவ அதிகாரி அப்துல் நாசர் என்பவரின் தோழியான பர்வீன் புரட்சி இயக்கத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டாள். பிறப்பிலேயே கோடீஸ்வரியான பேரழகி பர்வீன் எகிப்திய மக்களின் நல்வாழ்விற்காக தன் வாழ்வை சேதப்படுத்துக்கொள்ள துணிந்தாள். திட்டப்படி மாண்டிகார்லாவில் பாரூக் சூதாடும் இடத்திற்கு சென்றாள். வேடிக்கை பார்க்கும் சாக்கில் பாரூக் மன்னனின் கண்ணில் பட்டு தன் அழகால் அவனை வீழ்த்தினாள் . பர்வீனின் பேரழகில் பித்துப் பித்தவன் போலான பாரூக் தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு பர்வீனை திருமணம் செய்து கொள்ள துடித்தான். இதற்காகவே காத்திருந்த பர்வீன் சில நிபந்தனைகளுடன் பாரூக்கை மணந்து எகிப்து நாட்டின் ராணியானாள். அதன் பிறகுதான் பாரூக் மன்னன் தன் கனவில் கூட நினைத்துப் பார்க்காத முடிவை தேடிக்கொண்டான்.

எகிப்து தேசத்து ராணி பர்வீன், மன்னன் பாரூக் கொஞ்சம் சந்தேகப்படாத வகையில் புரட்சி படையினருடன் ரகசியமாக ஆலோசனை நடத்திக் கொண்டே தன் அதிகாரத்தையும் பலப்படுத்திக்கொண்டாள் அரண்மனையிலும் ராணுவத்திலும் புரட்சி படையினரில் பெரும்பாலானோர் சேர்க்கப்பட்டனர். பழைய வீரர்கள் மாற்றப்பட்டனர். பெரிய பெரிய அதிகாரிகளாலும் அமைச்சர்களாலும் பர்வீன் எதிர்த்து ஒன்னும் செய்ய முடியவில்லை. பாரூக் மன்னனுக்கு மிகவும் விசுவாசமாக இருந்த ராணுவ ஜெனரல் நசீப்பே பர்வீனிடம் புரட்சிபடைக்கு தலைமை வகிக்க சம்மதித்தது தான் மிகப்பெரிய ஆச்சிரியம் என்கிறது வரலாறு. பர்வீன் தன் அழகை பரிமாறித்தான் நசீப்பை சம்மதிக்க வைத்திருப்பாள் என்கிற சந்தேகம் வரலாற்று ஆசிரியர்களின் மூளையில் இன்னும் பதுங்கி நிற்கிறது. அது உண்மையோ பொய்யோ பர்வீன் என்ற பேரழகி எகிப்து நாட்டின் தலைவிதியை மாற்றியமைத்து புரட்சிக்கு வித்திட்டாள் என்பது மட்டும் உண்மை. புரட்சி வெடித்தது. மன்னன் பாரூக் பதவி இழந்து பக்கத்து நாட்டிற்க்கு துரத்தப்பட்டான்.

இன்றும் கூட பல்வேறு ராணுவ ரகசியங்கள் பெண் உளவாளிகளின் மூலமாகத்தான் கண்டம் விட்டு கண்டம் கடத்தப்படுகிறது. ஆகையால் தான் அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் என்று வரலாறு கூறுகிறது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் புத்தகம் ஒன்றை முழுமையாக வாசிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த புத்தகத்தில் வாசித்த நிறைய தகவல்கள் ஆச்சிரியமாகவும் வியப்பாகவும் இருந்தது. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இங்கே சில தகவல்களை தொகுத்து பதிவிட்டிருக்கிறேன் இதுபற்றிய உங்களது கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதனை அறிய ஆவலாய் உள்ளேன். விரைவில் மற்றுமொறு பயனுள்ள தகவலின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன்.., நன்றி, வணக்கம்..!

பதிவுகளை தவறவிடாமல் வாசிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

31 comments:

  1. சோதனை மறுமொழி ..!

    ReplyDelete
  2. உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா...? http://www.hotlinksin.com/ திரட்டியில் உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

    ReplyDelete
  3. Comment la irukka link ka kuda click pana mudiala............Ponga pa nengalum unga pathukapum...

    ReplyDelete
  4. இந்த விளையாட்டில் என் பங்கு எதுவும் இல்லை என்பதை பனிவுடன் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.., நன்றி ..!

    ReplyDelete
  5. வரலாறையே புரட்டிப்போட்டிருக்கிறது பெண்ணழகு.ம்ம்ம்.அப்புறம் நாமெல்லாம் எந்த மூலைங்க,

    //
    பல தகவல்களை அறிய வைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோகுல் அண்ணே.., நம்ம கடைக்கு வருகை புரிந்தமைக்கும் மொய் வைத்தமைக்கும் மிக்க நன்றி ..!

      Delete
  6. //அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் என்பதன் அர்த்தம் தெரியுமா???//

    தெரிந்துகொண்டேன் அண்ணா...



    உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜா தம்பி.., வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..!

      Delete
  7. தலைப்பும் அதற்கான விளக்கமான பதிவும் அருமை
    படிக்கப் படிக்க சுவாரஸ்யமும் ஆவலும்
    அதிகரித்துக் கொண்டே போனது
    தங்க்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரமணி சார்.., தங்களது வருகையால் அகம் மகிழ்கிறேன்..,

      கருத்துக்கு மிக்க நன்றி ..!

      Delete
  8. சுவாரசியமான வரலாற்றுத் தகவல்கள். சூப்பர்

    ReplyDelete
  9. பலரின் வாழ்க்கை வரலாறு-களை அறிய முடிந்தது

    பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. என்டர் தி வேர்ல்ட் நண்பர் திரு.வெஸ்மோப் அவர்களின் வருகையால் அகம் மகிழ்கிறேன்..,கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே ..!

      Delete
  10. அழகான பெண்கள் படங்கள் மிஸ்ஸிங்...ஆபத்தானவர்கள் என்பதாலா? -:)

    ReplyDelete
    Replies
    1. கில்மா பதிவர்ன்னு கமண்ட்ஸ் வந்திறக்கூடாதுன்னு பயந்துகிட்டுதான் ரெவெரி சார் .. :)

      Delete
  11. ஹப்ப்ப்ப்ப்பா ஒரே பதிவில் எம்புட்டு தகவல்கள். ஆனால் போரடிக்க்காம இருந்துச்சுப்பா. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. மிக சுவாரஸ்யமான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா சென்னை பித்தன் அவர்களே.., தங்களது வருகையால் அகம் மகிழ்கிறேன், கருத்துக்கு மிக்க நன்றி ..!

      Delete
  13. மிக சிறந்த கட்டுரை உளவு பார்த்தல் பழங்காலம் முதலே பாலியல் ரீதியாக அணுகி இருக்கிறது சிறந்த ஆக்காம் பாராட்டுகள்

    ReplyDelete
  14. உங்கள் தளத்தின் பெயருக்கேற்ப பதிவு அருமை அன்பரே

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிரேம் சார்.., தங்களது வருகையால் அகம் மகிழ்கிறேன்.., கருத்துக்கு மிக்க நன்றி ...!

      Delete
  15. பார்ரா.....அப்படியா பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் மனசாட்சி, தங்களது வருகையால் அகம் மகிழ்கிறேன், கருத்துக்கு மிக்க நன்றி ..!

      Delete
  16. வரலாறு என்று அமெரிக்கா சொன்னதை சொல்வது வரலாறு அல்ல

    ReplyDelete
    Replies
    1. புவியில் ஒவ்வொரு பேரரசின் கையும் ஓங்கியிருந்த சமயத்தில், அந்த பேரரசுகள் பெண் உளவாளிகளால் எவ்விதம் இன்னல்களை சந்தித்தன என்பதை பற்றித்தான் இப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் அன்பரே..,

      புரிதலுக்கு நன்றி.., வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..!

      Delete
  17. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  18. பல அறிய செய்திகளை தெரிந்துகொண்டேன் நல்ல பகிர்வு பா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  19. ஆபத்தான அழகிகளின் புகைப்படம் இல்லாமல் கண்டிப்பாக இந்த கட்டுரை முற்றுப்பெறாது.[எங்களுக்கும் அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...