Saturday 29 December 2012

வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன?; carbon dioxide can really destroy the world (part-2) - varalatru suvadugal


அனைவருக்கும் வணக்கம், உலகை அச்சுருத்திக்கொண்டிருக்கும் குளோபல் வார்மிங் பற்றிய எனது பதிவின் இரண்டாம் பாகம் இது. முதல் பாகத்தில் புவி தனது மேற்பரப்பு வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தொடர்ந்து எவ்வாறு தக்கவைத்துக்கொள்கிறது (has been called as Greenhouse Effect) என்பது பற்றி விரிவாக எழுதியிருந்தேன், அதோடு புவி வெப்பமடைதல் அல்லது புவி சூடாதல் அல்லது குளோபல் வார்மிங் (Global Warming) என்றால் என்ன என்பது பற்றியும், அது சார்ந்த அடிப்படைத் தகவல்களைப் பற்றியும் விரிவாக எழுதியிருந்தேன், முதல் பாகத்தை வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு, இந்த பதிவை தொடர வேண்டுகிறேன்!


வளிமண்டலத்தில் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மிகமுக்கியமாக கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதனுடன் சேர்ந்து புவியின் மேற்பரப்பு வெப்பநிலையும் அதிகரிக்க ஆரம்பிக்கும், இதைத்தான் புவி வெப்பமடைதல் அல்லது புவி சூடாதல் அல்லது குளோபல் வார்மிங் என்கிறார்கள் காலநிலை வல்லுனர்கள்! பொதுவாக புவியில் நிலவும் காலநிலைகள் (climate) புவியின் மேற்பரப்பு வெப்பநிலையைச் சார்ந்தே அமைந்திருக்கும்! புவியின் மேற்பரப்பு வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் போது புவியின் காலநிலையிலும் (Climate) மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கும்! அந்தவகையில் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான காலநிலை நிலவுவதற்கு, வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடு வாயுக்களின் எண்ணிக்கை 350ppm-க்குள் (Parts Per Million) இருப்பதுதான் பாதுகாப்பான அளவு என்கிறார்கள் தட்ப வெப்ப விஞ்ஞானிகள் (Climatologist), இந்த அளவை தாண்டி வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது காலநிலைகளில் (climate) மாற்றம் ஏற்பட்டு, பருவகாலங்களில் பெய்ய வேண்டிய மழை பெய்யாமல் பொய்த்து, பூமியின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட ஆரம்பிக்கும்!


வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 400ppm-யும் தாண்டி அதிகரித்தால், பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதன் இயல்பு வெப்பநிலையிலிருந்து (14°C) கிட்டத்தட்ட ஒரு டிகிரி செல்சியஸ் (1°C) வரை அதிகரித்து, துருவ பகுதிகளில் உள்ள பனிபாறைகள் உருகி, கடல்நீர்மட்டம் உயர ஆரம்பிக்கும்! இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும் போதே இன்னொருபக்கம் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக நிலத்தடிநீர் அதிக அளவில் ஆவியாகி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைய ஆரம்பிக்கும்! அதோடு சரியான காலகட்டங்களில் மழை பெய்ய தவறுவதால் விவசாயம் நலிவடைந்து உணவு பொருள் உற்பத்தியும் வீழ்ச்சியடையத் துவங்கும்!

வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை 450ppm-யும் தாண்டி அதிகரிக்கும்போது, புவியின் மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட மூன்று டிகிரி செல்சியஸ் (3°C) வரை அதிகரித்து, கடல்நீர்மட்டம் கிட்டத்தட்ட 10 முதல் 20 மீட்டர் உயரம்வரை அதிகரித்து, பூமியின் தாழ்வான பகுதிகள் கடலுக்குள் மூழ்க ஆரம்பிக்கும்! இதன்காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள மக்களில் கிட்டத்தட்ட 10% பேர், தங்கள் சொந்த இருப்பிடங்களை விட்டு மேடான இடங்களை நோக்கி இடம்பெயரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவார்கள்! இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும் போதே இன்னொருபக்கம் பருவமழை பொய்த்து பூமியின் பலபகுதிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி சிதைவடைய ஆரம்பிக்கும். அதுவே வாயுக்களின் எண்ணிக்கை 500ppm-யும் தாண்டி அதிகரிக்கும்போது புவியின் வெப்பநிலை கிட்டத்தட்ட 5°C வரை அதிகரித்து, கடல்நீர்மட்டம் கிட்டத்தட்ட 100 மீட்டர் உயரம் வரை அதிகரிக்கும்! உலகில் பல நாடுகள் கடலுக்குள் மூழ்கும், காலநிலை மோசமான பாதையை நோக்கி பயணித்து ஒருபுறம் மழை பெய்து அழித்தால் இன்னொருபுறம் மழை பெய்யாமல் அழிக்கும்! ஒருபுறம் வெய்யில் நெருப்பாய் தகித்துக்கொண்டிருந்தால் இன்னொருபுறம் ரத்தத்தையும் உறையச்செய்யும் கடும் குளிர் வாட்டிவதைக்கும்! குறிப்பிட்ட காலநிலைகளில் மட்டும் வாழும் விலங்கினங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அழிவை சந்திக்க ஆரம்பிக்கும், அதோடு பூமியின் நீர் ஆதார சுழற்ச்சியும் (Terrestrial Water Cycle) வெகுவாக பாதிப்படைய ஆரம்பிக்கும்.!


வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை 550ppm-யும் தாண்டி அதிகரிக்கும்போது, புவியின் வெப்பநிலை கிட்டத்தட்ட எட்டு முதல் பத்து டிகிரி செல்ஸியஸ் (8°C – 10°C) வரை அதிகரித்து, கடல்நீர்மட்டம் கிட்டத்தட்ட நூறு முதல் நூற்றைம்பது மீட்டர் உயரம்வரை அதிகரித்து, உலகில் பல நாடுகள் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போகும்! கடும்வெப்பநிலை உயர்வு காரணமாக எண்ணற்ற விலங்குகள் மற்றும் பறவையினங்கள் அடியோடு அழிய ஆரம்பிக்கும்! வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை இயல்பு அளவுகளை தாண்டி அதிகரிப்பத்திருப்பதன் காரணமாக, தாவரங்கள் அளவுக்கு அதிகமான ஒளிச்சேர்க்கை (Photosynthesis) நிகழ்வுக்கு தூண்டப்படும், இதனால் ஒளிச்சேர்க்கையின் மூலம் தாவரங்களில் உருவாக்கப்படும் ஆற்றல் (Energy, which is called as carbohydrate) அதிகரித்து, தாவரங்கள் மிகவேகமாக வளர ஆரம்பிக்கும்! இதனால் ஏற்படும் வளர்சிதை மாற்றம் (Metabolism) தாவரங்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும், இதன்காரணமாக தாவரங்கள் பூக்காது, அப்பிடியே பூத்தாலும் காய்க்காது!

வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை 600ppm-யும் தாண்டி அதிகரிக்கும்போது, புவியில் உயிரினங்கள் வாழ தகுதியற்ற ஆபத்தான காலநிலை (Extreme Climate) உருவாக ஆரம்பிக்கும் என்கிறார்கள் நமது தட்ப வெப்ப விஞ்ஞானிகள்! இந்த அளவை தாண்டி அதிகரிக்கும்போது பூமியின் வெப்பநிலை கிட்டத்தட்ட 10°C வரை அதிகரித்து துருவப் பகுதிகளிலுள்ள பனிப்பாறைகள் உருகி, முற்றிலும் மறைய ஆரம்பிக்கும்! அப்போது கடல்நீர்மட்டம் கிட்டத்தட்ட 200 மீட்டர் உயரத்தையும் தாண்டி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவ்வாறு அதிகரித்தால் இப்போதிருக்கும் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 25% சதவீதத்திற்கும் மேல் கடலில் மூழ்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது! அதுமட்டுமின்றி, மோசமான காலநிலையின் காரணமாக தொற்றுநோய் கிருமிகளின் தாக்கத்தினால் உலகம் முழுவதிலும் வருடத்திற்கு 50 முதல் 80 லட்சம்பேர் வரை மாண்டுபோகலாம் என்று மிரட்டுகிறார்கள் தட்ப வெப்ப விஞ்ஞானிகள்!


வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை 1000ppm-த்தையும் தாண்டி அதிகரிக்கும்போது, நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட பேராபத்துகள் பூமியை தாக்க ஆரம்பிக்கும்! காற்றில் ஆக்ஸைடின் எண்ணிக்கை 1000ppm-த்தையும் தாண்டி அதிகரிக்கும்போது மனிதன் உள்ளிட்ட எந்த உயிரினங்களாலும் இயல்பாய் சுவாசிக்ககூட இயலாது, மூச்சுத்திணறலை உணர ஆரம்பிப்போம், அதுமட்டுமின்றி நமது உடல் வேகமாக சக்தியை (Energy) இழந்து சோர்வடைய ஆரம்பிக்கும்.! வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை 5000ppm-த்தையும் தாண்டி அதிகரிக்கும்போது, உயிரினங்களில் சுவாசக்குழாய் உள்ளிட்ட உடல் உறுப்புகள் நேரடியாக பாதிப்படைய ஆரம்பிக்கும், அதுவே 10,000ppm-த்தை தாண்டினால் இதயம் உள்ளிட்ட உடலின் முக்கிய உறுப்புக்கள் மோசமாக பாதிப்படைய ஆரம்பிக்கும்! 50,000ppm-த்தை தாண்டும் போது புவியில் எந்த பொருளையும் நம்மால் தெளிவாக பார்க்ககூட இயலாது, அதுவே 100,000ppm-த்தை தாண்டினால் உடனடி மரணம்தான், ஆனால் அதுவரையில் புவியில் உயிரினங்கள் இருக்குமா என்பதற்கு 1% கூட உத்திரவாதம் தரயியலாது என்கிறார்கள் நமது தட்ப வெப்ப விஞ்ஞானிகள்.!

அமெரிக்காவை சேர்ந்த “மவுனா லோ” ஆராய்ச்சி நிறுவனத்தின் (Mauna Loa Observatory) சமீபத்திய அறிக்கையின்படி, தற்போது நம் வளிமண்டலத்திலுள்ள கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை 392ppm என்று மதிப்பிடப்பட்டுள்ளது! இது...., புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான காலநிலை (Climate) நிலவுவதற்கு, வளிமண்டலத்தில் இருக்கவேண்டிய கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கையை காட்டிலும் கிட்டத்தட்ட 10% அதிகம் என்பதும், இதன் காரணமாக புவியின் வெப்பநிலை தற்போதே கிட்டத்தட்ட 1°C அதிகரித்திருப்பதும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே?


1900-க்கு பிறகு போக்குவரத்து துறையில் (Transportation) ஏற்பட்ட அசாதாரண வளர்ச்சியின் காரணமாக இன்று நம்மால் வாகனங்களின் உதவியுடன் உலகின் எந்த மூலைக்கும் மிகக்குறுகிய நேரத்தில் சென்றுவர இயலுகிறது! 1950-களில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாக அத்தியாவசிய தேவை இல்லாவிட்டாலும் கூட இன்று நம் ஒவ்வொருவர் வீட்டிலும் நமது சொந்த பயன்பாட்டிற்க்கென்று வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன! பொதுவாக ஒரு லிட்டர் பெட்ரோலை எரிக்கும்போது வாகனங்கள் தோராயமாக 2.500 கிலோ கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுகிறது என்கிறார்கள் எந்திரவியல் வல்லுனர்கள், என்றால் நாளொன்று நாம் மட்டும் எத்தனை லிட்டர் பெட்ரோலை எரிக்கிறோம், உலகம் முழுவதும் எத்தனை லிட்டர் பெட்ரோல் எரிக்கப்படும் என்று,என்றாவது ஒருநாள் நீங்கள் சிந்திருப்பீர்களா நண்பர்களே? உலகம் முழுவதும் மக்கள் இயக்கத்திற்காக இயங்கிகொண்டிருக்கும் வாகனங்கள் வெளியேற்றும் புகையின் வாயிலாக மட்டும் வளிமண்டலத்தில் ஆண்டுதோறும் 7500 மில்லியன் மெட்ரிக் டன் (7500 million Metric Ton) கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்கிறது IPCC சமீபத்திய அறிக்கை!


உலகின் பெரும்பான்மையான நாடுகள் மின்சார உற்பத்திக்கென்று பெருமளவில் அனல் மின்நிலையங்களைத்தான் (Thermal Power Station) இன்றளவும் சார்ந்திருக்கின்றன இந்த அனல் மின்நிலையங்களில் பெரும்பாலும் நிலக்கரிதான் (Coal) பிரதான எரிபொருளாக இருக்கிறது. நிலக்கரியை எரிப்பதால் அனல் மின்நிலையங்களிலிருந்து வெளிவரும் புகையின் வாயிலாக வளிமண்டலத்தில் ஆண்டுதோறும் 8900 மில்லியன் மெட்ரிக் டன் (8900 Million Metric Ton) கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்துக்கொண்டிருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே? ஒட்டுமொத்த மனித நடவடிக்கையின் வாயிலாக ஆண்டுதோறும் 27,000 மில்லியன் மெட்ரிக் டன்கார்பன்டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்கிறது IPCC-யின் சமீபத்திய அறிக்கை! வளிமண்டலத்தில் இதே வேகத்தில் தொடர்ந்து கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்தால் எதிர்வரும் 2100-க்குள் “டேஞ்சரஸ் லிமிட்” என்று மதிப்பிடப்பட்டிருக்கும் 600ppm-யும் தாண்டிவிடுவோம் என்கிறார்கள் தட்பவெப்ப விஞ்ஞானிகள்! அப்படி அதிகரித்தால் காலநிலை மிக மோசமாக மாற்றமடைந்து, புவியிலுள்ள உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்து இறுதியில் முற்றிலுமாக அழிந்துபோவதை எவராலும் தடுத்து நிருத்திவிட முடியாது என்று மிரட்டுகிறார்கள் தட்பவெப்ப விஞ்ஞானிகள்.!


இத்தனை ஆபத்துகள் இருப்பது தெரிந்தும் இதுவரையில் எந்த நாடும் தங்களது ஆய்வு முடிவுகளை மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்து, உருப்படியான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் வருத்தமான உண்மை! வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடு வாயுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து ஐக்கிய நாடுகள் சபை (United Nations) 1997-ஆம் ஆண்டு கியோடோ ப்ரோடோகோல் (Kyoto Protocol) என்ற ஒப்பந்தத்தை டிசம்பர் 11-ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் நடைமுறைக்கு கொண்டுவந்தது! ஆனால் இந்த ஒப்பந்தம் வளரும் நாடுகளின் தொழில்துறையை நச்சுக்கும்படி உள்ளது என்று கூறி அனைத்து நாடுகளும் இதுவரையில் அமுல்படுத்த மறுத்து வருகின்றன, அதுமட்டுமின்றி குளோபல் வார்மிங் என்பதே பொய் என்ற ரீதியில் தங்கள் நாட்டு விஞ்ஞானிகளை கொண்டே உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பவும் ஆரம்பித்துவிட்டன!


தற்போது வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை கடந்த இருபத்தி இரண்டாயிரம் ஆண்டுகளில் (20,000 BCE, Source Holocene Temperature Chart) முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகம் என்கிறார்கள் தட்பவெப்ப விஞ்ஞானிகள். தோராயமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதிவரை (1940 AD) வளிமண்டலத்தில் பாதுகாப்பான எல்லைக்குள் இருந்த கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை கடைசி அறுபது ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 35% வரை அதிகரித்திருக்கிறது என்கிறது “மவுனா லோ” ஆராய்ச்சி நிறுவனம்! இந்த நிறுவனத்தின் அறிக்கைப்படி வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை 400ppm என்பது நம்மை திருத்திக்கொள்ள, நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு ஆகும்! இதற்க்கு பிறகும் சீரிய நடவடிக்கைகளின் மூலம் வளிமண்டலத்தில் வாயுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதை கட்டுப்படுத்த தவருவோமேயானால் 2500-க்குள் புவி, வெள்ளி கிரகத்தை (Planet Venus) போல் மாறுவதை இறைவனால் கூட தடுத்துவிட முடியாது என்பதுதான் எவராலும் மறுக்கமுடியாத உண்மை.!

இந்த பதிவின் மூலம் புவி வெப்பமடைந்து வருவது பற்றிய சில அடிப்படை தகவல்களை நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன், பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை தவறாமல் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே! உங்களது கருத்துக்கள் மூலமாகத்தான் என் தவறுகளை திருத்திக்கொள்ளவும் என்னை வளர்த்துக்கொள்ளவும் முடியும்! விரைவில் மற்றொரு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன்., நன்றி.... வணக்கம்!

பதிவுகளை தவறவிடாமல் வாசிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

71 comments:

  1. வசு, மெதுவா படிச்சி உள்வாங்கிட்டு அப்புறமா கமண்டுறேன் ஒக்கே

    ReplyDelete
    Replies
    1. நல்லது நண்பரே..மெதுவாய் வாருங்கள்!

      உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. முத்தரசு வலியில் அடியேனும்....மன்னிக்க வழியில் என்று வாசிக்க...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  3. //வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 400ppm-யும் தாண்டி அதிகரித்தால், பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதன் இயல்பு வெப்பநிலையிலிருந்து (14°C) கிட்டத்தட்ட ஒரு டிகிரி செல்சியஸ் (1°C) வரை அதிகரித்து, துருவ பகுதிகளில் உள்ள பனிபாறைகள் உருகி, கடல்நீர்மட்டம் உயர ஆரம்பிக்கும்! இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும் போதே இன்னொருபக்கம் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக நிலத்தடிநீர் அதிக அளவில் ஆவியாகி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைய ஆரம்பிக்கும்!

    //

    இன்று இதுதான் நடக்கிறது .. தண்ணீர் பஞ்சமே தெரியாத எங்கள் ஊரில் தண்ணீர் அளந்து பயன்படுத்தும் நிலை

    ReplyDelete
    Replies
    1. இப்போது (400ppm) என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துகொண்டுதான் இருக்கிறது.. இனிமேல் என்ன நடக்கவேண்டுமோ அதுவும் நடக்கும் என்றே கருதுகிறேன்!

      Delete
  4. Replies
    1. கண்டிப்பா...படிச்சிருவோம் தல..

      Delete
  5. ரொம்பத்தான் பயமுறுத்துது பதிவு.அனைத்து நாடுகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். அதிகார பூர்வ உலக சுற்றுச் சூழல் அமைப்பு ஏதேனும் உள்ளதா?அது என்ன செய்து கொண்டிருக்கிறது/ இதையும் தேடிக் கொடுக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Intergovernmental Panel on Climate Change (known as IPCC)இதுதான் இப்போதைக்கு 'புவி வெப்பமயமாதல்' விசயத்தில்..... கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.!

      Delete
  6. அதிக தகவல்களை சேகரித்து தந்ததற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  7. நல்ல பதிவு, உலகத்துக்கு தேவையான பதிவு, வாழ்த்துக்கள், எங்கள் வீடு கடலோரத்திற்கு எதிரில் இருக்கு, நான் சிறு வயதாக இருந்த பொது மெரினா கடற்கரை போன்று இருந்த எங்களூரில் இன்று தடுப்புச்சுவர் எழுப்பபட்டிருகிறது, சிறு வயதில் நான் விளையாடிய கடற்கரை இன்று கடலுக்குள் சென்று விட்டது, நூறடிக்கு மேல் கடல் உள்ளே வந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. இது ஆரம்பம்தான்..இன்னும் நிறைய இருக்கிறது நாம் சந்திக்க வேண்டியவை!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  8. அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜா சார்!

      Delete
  9. இப்போதான் இரண்டு பதிவுகளும் வாசித்தேன்.எப்போதும்போல அதிசயத் தேடல்.இன்னொரு உலகத்துள் இருப்பதுபோல் ஒரு உணர்வு.நன்றி வசு !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹேமா அக்கா!

      Delete
  10. நல்ல தேடல்...
    உலக அழிவுக்கு காரணம் நாமளாய் இருந்து கொண்டு மாயன்களை வம்புக்கு இழுத்துவிட்டோமே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  11. வரலாறு, முன்னேரிய நாடுகள் அதிகபடியா வளிமண்டலத்தை மாசு படுத்தி மேல போயிடுச்சி,

    முன்னேறும் நாடுகள் அதிக அளவுல வெளிப்படுத்தினாதான் பொருளாதார ரீதியா முன்னேற வேண்டிய நிலை...

    அடுத்த ஏழ்மையில் உள்ள நாடுகள் மென்னேரும் நாடுகளா மாறும்போது....

    இதுவரை அதிகமா மாசு வெளிப்படுத்தி வளிமண்டலத்தை நாசம் பண்ணுன நாடுகள், தங்களது தொழில்நுட்பத்தை மத்த நாடுகளுக்கு குடுக்கிறதுதான், இதுக்கு அதிகபட்ச தீர்வு... இல்லைனா நாங்க மட்டும் ஏன் குறைக்கனும் பொரவு எப்படி நாங்களும் முன்னேறுவது ரீதியிலான வாதங்கள்னு....

    ம்ஹூம்....இது ஆவுறதுக்கில்லை போல... :-))))

    ReplyDelete
    Replies
    1. உண்மை..உண்மை தல! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  12. மிகவும் தெளிவான விளக்கங்களுடன் அருமையான விழிப்புணர்வு பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete

  13. கார்பன்டை ஆக்ஸைடு என்பது கிட்டத்தட்ட ஒரு சைலண்ட் கில்லர் போல.அதன் பின் விளைவுகளைப் படித்துப் பார்க்கும்போது திகிலா இருக்கு பாஸ்...அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து, பதிவுடன் சிறிதும் தொடர்புடையதாக இல்லாததால், அதனை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

      புரிதலுக்கு நன்றி....வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  15. ஆம்.உண்மையில் உலகம் அழிவதை தடுக்க நாமும் மாறிக்கொள்ளதான் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக மாறத்தான் வேண்டும் நண்பரே, வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  16. அருமையாக எழுதியுள்ளீர்கள்! இதை யார் உணரப்போகிறார்கள்!!!!?

    ReplyDelete
    Replies
    1. அதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது புலவர் ஐயா, வருகைக்குக் கருத்திறக்கும் மிக்க நன்றி!

      Delete
  17. மறுபடியும் மா ????????????????

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஏதோ சொல்ல வந்திருக்கிறீர்கள் என்று அனுமானிக்கிறேன், எதுவாக இருந்தாலும் தயக்கமின்றி வெளிப்படுத்துங்கள்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  18. மிக அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.!

      Delete
  19. இந்த உலகம் காலநிலை மாறித்தான் அழியும்னு தெளிவா சொல்லியிருக்கீங்க அண்ணா. அருமையான விளக்கமான பதிவு

    ReplyDelete
    Replies
    1. புரிந்துகொண்டமைக்கு நன்றி தம்பி, வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  20. முதல் பக்கமும் சரி இரண்டாம் பாகமும் சரி.., தெளிவாகவும் விளக்கமாகவும் இருந்தது. பல தகவல்கள் திகைக்கவைக்கும் அளவிற்கு இருந்து. உங்களது பணிதொடர வாழ்த்துக்கள், செல்வின் ஸ்மைல்

    ReplyDelete
    Replies
    1. இரண்டு பாகத்தையும் முழுமையாக படித்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே, வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  21. அருமையான ஆக்கம்.

    நன்றி வசு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா செல்வம்!

      Delete
  22. #கடைசி அறுபது ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 35% வரை அதிகரித்திருக்கிறது என்கிறது “மவுனா லோ” ஆராய்ச்சி நிறுவனம்!# 60 ஆண்டுகளில் 35% அதிகரித்துள்ளது, அடுத்த 60 வருடங்கலியல் மேலும் உயரக்கூடும். வரும் அழிவை தடுக்கமுற்படவேன்டும். நன்றி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. இயன்ற அளவு நம்மை இயற்கையோடு இயைந்து வாழ பழக்கிகொள்வதுதான், அழிவை தடுப்பதற்கான சரியான வழி; வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.!

      Delete
  23. வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே, தங்களுக்கும் என் வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதில் மற்றற்ற மகிழ்ச்சியடைகிறேன்!

    ReplyDelete
  24. எதை செய்யக் கூடாது என்கிறோமோ அதைத் தான் அதிகமாக செய்வோம் தங்கள் தகவல்களை படித்த பிறகு பயமா தான் இருக்கு உணருவார்களா ?

    ReplyDelete
    Replies
    1. உணர வேண்டும் சகோ, வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  25. பதிவிற்கு வந்து ஒர் ஆண்டை முடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.. உங்கள் நற்பணி தொடரட்டும், வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நண்பரே!

      Delete
  26. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ, தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது இதயம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

      Delete
  28. தன்யனானேன், அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோ.!

    ReplyDelete
  29. வசு உங்கள் உழைப்பு அலாதியானது. கார்பன்டை ஆக்ஸைடு பற்றி பல தகவல்கள் தெரிந்திருந்தாலும் பல புள்ளிவிபரங்களையும் கொடுத்து அதிசயிக்கவைத்து விட்டீர்கள். மனிதர்கள் செல்லும் வேகத்தில் இதனை குறைக்க இயலாதோ என்றுதான் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விச்சு சார்.!

      Delete

  30. வணக்கம்!

    அருமையொளிர் ஆக்கத்தை ஆய்தே அளித்து
    பெருமையொளிர் பேற்றைப் பெருக்கு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.!

      Delete
  31. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா!

      Delete
  32. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா.!

      Delete
  33. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_9.html ) வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    ReplyDelete
    Replies
    1. அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா.!

      Delete
  34. வணக்கம்

    அறியாத பல விடயங்களை உங்கள் படைப்பின் மூலம் அறிந்தேன் அருமையான படைப்பு 9,3,2013 இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி நண்பரே, முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.!

      Delete
  35. வணக்கம்... நண்பரே நலமா...?

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி தனபாலன்ஜி.! :-)

      Delete
  36. Once Again...

    Visit : http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_25.html

    ReplyDelete
  37. அதிக தகவல்களை திரட்டி தந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  38. வலைச்சரம் மூலமாக தங்களின் பதிவுகளைப் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. புவி வெப்பமடைதல் என்பது வளர்ந்த நாடுகளால் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைக் கட்டுப்படுத்த திட்டமிட்டு கிளப்பிய ஒரு புரளி மட்டுமே விவரம் இங்கே https://vinganam.blogspot.com/p/global-warming.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...