Tuesday, 17 April 2012
நில் கவனி தவிர் - பிளாஸ்டிக்; பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்; Avoid using plastic products
அனைவருக்கும் வணக்கம், உலகம் முழுவதும் அன்றாடம் கொட்டப்படும் குப்பைகளில் 70 சதவீதத்திற்கும் மேலானவை பிளாஸ்டிக் கழிவுகள் தான் என்று கழிவுகள் மேலாண்மை நிறுவனம் (Waste Management Inc) தனது சமீபத்திய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது. அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை சரியாக கையாள்வதில் ஏற்படும் தோல்வியே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கிறது. கவனித்துபார்த்தீர்கள் என்றால் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் 95% சதவீதத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். மனிதர்கள் மத்தியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு எத்தனை தூரம் பயணித்திருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சான்று.
வானில் பறக்கும் விமானங்கள் முதல் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வரையிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் தயாரிப்பிலும் பிளாஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இவை அனைத்தும் மறு சுழற்ச்சிக்கு உட்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டியதுள்ளது. அட.., அவை ஏன் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படவேண்டும் என்கிறீர்களா..,? சுலபத்தில் அழியாத பிளாஸ்டிக்கின் மக்காத்தன்மைதான் (non-degradable) அதைப்பற்றி நிறைய பேசவும் யோசிக்கவும் வைக்கிறது.
Auto Parts, Industrial Fibers, Polyester Fibers, Electrical & Electronics Equipments, Laboratory Equipments, Play Ground Equipments, Pipes, Stationery Desk Accessories, Children Toys, Tables, Chairs, Cups, Jugs, Food Bottles, Soft Drinks Bottles, Grocery Bags, Plastic Bags – என்று இன்னும் ஏராளமான பரிணாமங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் மிக மெல்லிய வடிவில் உற்பத்தி செய்யப்படும் ‘பிளாஸ்டிக் பைகள் (Plastic Bags)’ மட்டுமே மக்கிப்போவதற்கு (Degrade) 1000 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது என்றால் எஞ்சிய பிளாஸ்டிக் பொருட்கள் மக்கிப்போக எத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்று நீங்களே எண்ணிப்பாருங்கள். சராசரியாக ஆண்டொன்டிற்கு 300 பில்லியன் டன் (Citation Needed) பிளாஸ்டிக் பொருட்கள் அமெரிக்க மக்களின் பயன்பாட்டிற்கு மட்டும் தயாரிக்கப்படுகிறதென்றால் உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் தேவைக்கு எவ்வளவு தேவைப்படும் என்று எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா..? உலகமெங்கும் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் வெறும் 5% சதவீத பிளாஸ்டிக்குகள் தான் மீண்டும் மறுசுழற்சி முறைக்கு உட்படுத்தப்படுகிறதாம்..!
மேற்சொன்ன அனைத்து வகை பிளாஸ்டிக்குகளும் நமக்கும் புவிக்கும் தொல்லைகளைத்தான் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்றாலும் அவற்றில் Soft Drinks Bottles, Food Bottles, Non Food Bottles & Plastic Bags ஆகிய நான்கு வகை பிளாஸ்டிக்குகள் தான் இன்று பெருமளவில் புழக்கத்தில் உள்ள, மறுசுழற்ச்சிக்கு உட்படுத்தப்படாத, இந்த புவிக்கும் நமக்கும் பெறும் தொல்லைகளை எற்படுத்திக்கொண்டிருக்கும் பிளாஸ்டிக்குகளில் முதன்மையானவை ஆகும். இவற்றில் PETS என்று அழைக்கப்படும் குளிர்பான பாட்டில்கள் (Soft Drinks Bottles) எத்தனை ஆண்டுகள் மண்ணில் புதைந்திருந்தாலும் மக்கி அழியாது (Non-Degradable) என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஆகும். குளிர்பானபாட்டில்களின் பயன்பாடு மனிதர்கள் மத்தியில் தற்போதைய இதே அளவில் தொடர்ந்து இன்னும் இருபது ஆண்டுகளுக்கு நீடிக்குமானால் 2040-க்குள் பிளாஸ்டிக் கழிவுகளால் இந்த உலகம் குப்பைமேடாய் மாறிவிடும் என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுசூழல் ஆய்வு மையம் தனது சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் எத்தனை மோசமான பாதையை நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம் என்று.
பிளாஸ்டிக் பைகள், உணவுப்பொருட்களை அடைத்து விற்க்க பயன்படுத்தும் டப்பாய்கள், குளிர்பான பாட்டில்கள், உணவகங்களில் பயன்படுத்தும் தட்டுகள், மற்றும் மருத்துவமனைகளில் அன்றாடம் கழிவுபொருட்களாக வெளியேற்றப்படும் ஊசி, கையுறை, குளுக்கோஸ் பாட்டில்கள், ரத்தபாட்டில்கள், குழாய்கள் (Tubes) உள்ளிட்ட இன்னும் ஏராளமான பொருட்கள் பெரும்பாலும் பாலிஎத்திலின் என்ற வேதிப்பொருளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் பாலிஎத்திலினின் அடர்த்தியை பொறுத்து அதன் உபயோகம் மாறுகிறது உதாரணமாக அதிக அடர்த்தி கொண்ட பாலிஎத்திலின், டப்பாய்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் தயாரிப்பிலும், குறைந்த அடர்த்தி கொண்ட பாலிஎத்திலின், பிளாஸ்டிக் பேக்குகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது.
பிளாஸ்டிக் அதன் இயல்பான தன்மையில் மனிதர்களுக்கு எவ்வித தீங்குகளையும் நேரடியாக (கவனிக்க நேரடியாக) ஏற்படுத்துவதில்லை. தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கவர்ச்சியான வண்ணத்தை கொடுப்பதற்காக காட்மியம், காரியம், ஆண்டி ஆக்ஸ்டென்ட்ஸ் மற்றும் சாயங்கள் போன்ற வேதிப்பொருட்கள் பிளாஸ்டிக்குடன் சேர்க்கபடுகின்றன. இந்த சேர்மங்கள் தான் மனிதர்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக நீங்கள் தேனீர்க்கடைகளில் சென்று பிளாஸ்டிக் கப்புகளில் தேனிர் அருந்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சூடாக தேனீரை பிளாஸ்டிக் கப்புகளில் ஊற்றும் போது பிளாஸ்டிக் இளகி மேற்சொன்ன ரசாய சேர்மங்களுடன் வேதிவினை புரிந்து பியூரான் மற்றும் ஹைட்ரோகார்பன் என்ற இரு நச்சுவாயுக்களை தோற்றுவிக்கிறது இவை தேனீரில் கலந்து நம் உடலுக்குள் சென்றால், நம்முடைய நுரையீரல் திசுக்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இதே நிகழ்வுதான் உணவகங்களில் உணவை பரிமாற மற்றும் பார்சல் கட்டிக்கொடுக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் தட்டுகளை பயன்படுத்தும் போதும் நிகழ்கிறது.
நான் ரொம்ப உசாரு தேனீர் கடைகளில் பேப்பர் கப்புகளில் தான் தேனீர் அருந்துவேன் என்று சொல்பவர்கள் கவனிக்க.! பேப்பர் கப்புகளில் சூடாக தேனீர் ஊற்றும் போது அந்த கப்புகள் சிறிது நேரமாவது தாக்குப்பிடிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பேப்பர் கப்புகளின் உட்புறத்தில் பெட்ரோ-கெமிக்கல் கொண்ட முலாம் பூச்சு பூசப்படுகிறது. தொடர்ச்சியாக பேப்பர் கப்புகளை பயன்படுத்தும்போது இவை தேனீரில் கலந்து நம் உடலுக்குள் செல்லுமேயானால் அது தீராத வயிற்றுவலியை ஏற்படுத்துகிறது. இதனை பல்வேறு மருத்துவ கழகங்களின் ஆய்வு அறிக்கைகள் உறுதி செய்கின்றன.
அனைத்துவகை பயன்பாட்டிற்காகவும் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் அடிப்புறத்தில் பார்த்தீர்களென்றால் முக்கோண வடிவில் ஒரு அடையாளக் குறி பொறிக்கப்பட்டு அதற்குள் ஒன்றிலிருந்து ஏழுவரையுள்ள எண்களில் ஏதேனும் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். நம்மில் பலர் அதைப் பார்த்திருக்கவே மாட்டோம் அப்படியே பார்த்திருந்தாலும் கூட பலருக்கு அது என்னவென்றே தெரிந்திருக்காது. அந்த பிளாஸ்டிக்கை தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதியல் சேர்மத்தை அடிப்படையாகக் கொண்டு அதை எத்தனை முறை மறு சுழற்சிக்கு உட்படுத்தலாம் என்பதை குறிக்கும் எண்தான் அது. உதாரணமாக குறியீட்டிற்குள் 1 என்ற எண் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொண்டால் அந்த பிளாஸ்டிக் ஒரே ஒரு முறை மட்டும் தான் உபயோகப்படுத்தப்பட வேண்டும். குறியீட்டிற்குள் 2 எண் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த பிளாஸ்டிக் ஒரு முறை உபயோகித்தபின் மீண்டும் ஒருமுறை மறுசுழற்ச்சிக்கு உட்படுத்தி உபயோகிக்கலாம். ஏற்கனவே உபயோகத்தில் இருந்து அவை இரண்டாம் முறையாக மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் குறியீட்டிற்குள் அந்த எண் குறிப்பிடப்பட்டிருக்காது. மாறாக குறியீட்டிற்கு மேலே மறுசுழற்சி எண்ணிக்கையிலிருந்து பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கை கழித்து குறிப்பிடப்பட்டிருக்கும். Resin Identification Code (R.I.C) என்று அழைக்கப்படும் இந்த எண் Society of Plastic Industry என்ற அமெரிக்க தரநிர்ணய நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
இங்கே நம் பெண்களுக்கு சில முக்கியமான தகவல்களை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். பிரிட்ஜ்ஜிக்குள் தண்ணீர் ஊற்றி வைப்பதற்காகவும், உணவுப்பொருட்களை பதப்படுத்தி வைப்பதற்காகவும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் டப்பாய்களை அதிகம் பயன்படுத்துவீர்கள்தானே?. அதிக நாட்கள் குறிப்பாக உணவுப்பொருட்களை அடைத்துவைப்பதற்க்காக பயன்படுத்தப்படும் அனைத்துவகை பிளாஸ்டிக் டப்பாய் மற்றும் கேன்களின் R.I.C எண் குறைந்த பட்சம் 3 க்கு மேலாவது இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதற்க்கு கீழே உள்ள எண் கொண்ட பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தினால் நிச்சயம் புட்பாய்சனிங்கை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம். சமையலறையில் கடுகு உள்ளிட்ட சமையல் பொருட்களை அடைத்துவைக்க பயன்படுத்தும் டப்பாய்களிலும் கூட கண்டிப்பாக இதே கவனத்தை செலுத்துங்கள். எக்காரணம் கொண்டும் விலைமலிவாக இருக்கிறது என்று R.I.C எண் குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வரும் டப்பாய்களை பயன்படுத்தவேண்டாம். பின்னாளில் அது ஆயிரம் ஐநூறு என்று உங்களுக்கு மருத்துவமனைக்கு தண்டச்செலவை உண்டாக்கும் என்பதை கருத்தில்கொள்ளுங்கள்.
பிரிட்ஜ்ஜிக்குள் உணவைவைப்பதற்கு அலுமினியப்பாத்திரங்களை பயன்படுத்துவதைக் கூட தவிருங்கள். ஏனெனில் அலுமினியப்பாத்திரங்களை தயாரிக்கும் போதும் மற்றும் மெருகேற்றும் போதும் பல்வேறு ஆசிட்டுகளை பயன்படுத்துவார்கள் இந்தவகை பாத்திரங்களை குளிர்ந்த நிலையில் தொடர்ச்சியாக வைக்கும்போது பயன்படுத்தப்படும் ஆசிட்டுகள் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து அவை உணவுடன் கலந்து புட்பாய்சனிங்கை ஏற்படுத்தி மனித மூளையில் Alhzheimers Diseases என்ற நோயை ஏற்படுத்தும் முக்கியகாரணியாக இருக்கிறது என்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. துருப்பிடிக்காத எக்கு பாத்திரங்களே பிரிட்ஜ்ஜிக்குள் உணவுப்பொருட்களை வைப்பதற்கு சிறந்தது. ஆனால் அவை நான்-ஸ்டிக் (Non-Stick) பாத்திரங்களாக இருக்கக்கூடாது. ஏனெனில் நான்-ஸ்டிக் கோட்டுகள் (Coating) பாலிடெட்ராபுளுரோ எத்திலின் என்ற வேதிபோருளை கொண்டே உருவாக்கப்படுகிறது. இதுவும் குளிர்ந்த நிலையில் ஆக்ஸிஜனேற்றம் அடையவல்லது.
இன்று உலகமெங்கும் உள்ள அனைத்து வடிகால் வாரியங்களுக்கும் (Drainage Board) மிகப்பெரிய சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் என்றால் மிகையில்லை. சாலை ஓரங்களில் ஆங்காங்கே வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் காற்றின் மூலம் வடிகால் குழாய்களை அடைந்து., அடைப்பை ஏற்படுத்தி கழிவுநீரை வடியவிடாமல் தடுத்து தேங்கச்செய்கிறது. இதன் காரணமாக சாக்கடைகள் துர்நாற்றமடைந்து உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கும் கிருமிகள் மற்றும் கொசுக்கள் பல்கிப்பெருக மூலகாரணமாக அமைந்துவிடுகின்றன. இதன் காரணமாக தினந்தோறும் புதிதுபுதிதாக அடையாளம் காணப்படாத பல்வேறுநோய்கள் மனிதர்களை தாக்கி எண்ணற்ற இன்னல்களை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமா குப்பைகளாக நிலத்திற்குள் செல்லும் இந்த பிளாஸ்டிக் கவர்கள் அங்குள்ள நிலத்தடி நீருடன் வேதியல் சேர்மங்களை கலந்து மாசுபடுத்துகிறது. யோசித்துப்பார்த்தீற்கள் என்றால் ஒன்று புலப்படும் அதாவது 20 வருடங்களுக்கு முன்பு நிலத்தடி நீரில் இருந்த சுவை தற்போது உலகின் எந்தபகுதியிலும் இருக்காது. அது மட்டுமா பிளாஸ்டிக்கின் நீர் கடத்தாதிறன் நிலத்தடி நீர் மட்டத்தையும் வெகுவாக குறைக்கிறது.
பிளாஸ்டிக் பொருட்களால் மனிதர்கள் மட்டும்தான் பாதிப்படைகிறார்கள் என்று எண்ண வேண்டாம். விலங்குகள் பறவைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் பாதிப்படையத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு ஒரு அதிர்ச்சிகரமான புள்ளி விபரம் ஒன்றை கூறட்டுமா..? தினந்தோறும் கடல்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல்நீர் மாசடைந்து ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய கடல்வாழ் உயிரினங்கள் இறந்துபோயவிடுகின்றன. பிளாஸ்டிக்கை எரிப்பதால் வளிமண்டலம் மாசுபாடடைந்து ஆண்டுதோறும் மில்லியனுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் மடிந்துபோகின்றன.
மேலும் பிளாஸ்டிக் தயாரிக்க ஆயிரக்கணக்கான கேலன்கள் நன்னீர் பயன்படுத்தப்படுகிறது. அந்த தண்ணீர் பிளாஸ்டிக் தயாரிப்பு முடிந்தபின் சல்பியூரிக் அமிலமாக தொழிற்ச்சாலைக் கழிவாக வெளியேற்றப்படுகிறது இவை பெரும்பாலும் ஆறுகளிலோ அல்லது கடல்கலிலோதான் கலக்கப்படுகிறது தீரவே வழியில்லையென்றால் நிலத்திற்குள் பாய்ச்சப்படுகிறது அந்தவகையில் நீரையும் நாம் நேரடியாகவே மாசுபடுத்துகிறோம் சொல்வதற்கு இன்னும் ஏராளமான காரணம் இருக்கிறது பிளாஸ்டிக் பொருட்களை நாம் ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கு. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்..!
பதிவைப்பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவுசெய்யுங்கள் நண்பர்களே, உங்கள் கருத்துக்கள் தான் இதுபோன்ற மேலும் பல படைப்புகளை உருவாக்க எனக்கு ஊன்றுகோலாக துணைநிற்கும் என்பதை மறக்கவேண்டாம். விரைவில் மற்றுமொறு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன். நன்றி, வணக்கம் ..!
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
நீங்கள்; வரலாற்று பதிவு என கூறிது உண்மையில் பாராட்டுகளுக்குரியது இந்த நெகிழிப்போருட்கள் நம்மை படுத்தும் படு இந்த உலகம் சீரழிவின் தொடக்கம் இந்த நெகிழி (பிளாஸ்டிக் ) பொருளை எவ்வளவு தவிர்க்கிரோமே அவளவு எல்லோருக்கும் நல்லதே ... சிறந்த இடுகை பாராட்டுகள் தொடர்க
ReplyDeleteவாங்க சகோ.., தங்களது வருகையால் அகம் மகிழ்கிறேன்..,
Deleteகருததுக்கு மிக்க நன்றி சகோ ..!
உங்கள் கடந்த பிளாஸ்டிக் பதிவின் போது இது குறித்து மறுமொழி இட்ட நினைவு...நல்ல ஆக்கபூர்வமான பதிவு...அழிய மறுக்கும் பிளாஸ்டிக் பற்றி...
ReplyDeleteநன்றி ரெவெரி சார் ..!
Delete//உலகமெங்கும் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் வெறும் 5% சதவீத பிளாஸ்டிக்குகள் தான் மீண்டும் மறுசுழற்சி முறைக்கு உட்படுத்தப்படுகிறதாம்..!//
ReplyDeleteஅப்ப 95% மக்காம இருத்து நம் உயிரை குடிக்க பார்க்குதா
நம்ம உயிர குடிச்சா குடிச்சுட்டு போகட்டும் சகோ, நம்ம பூமித்தாயின் உயிரையல்லவா குடிக்கிறது.....
Deleteஆம் நண்பரே, நம் உயிரைக்குடித்தால் அதன் பாதிப்பு நம்முடன் மட்டும் முடிந்துபோய்விடும் ஆனால் பூமித்தாயின் உயிரைக்குடிக்கும்போது நம் சந்ததியினரும் சேர்ந்து அல்லாவா பாதிக்கப்படுவார்கள்..!
Deleteதங்களது வருகையால் பெரும் உவகை அடைகிறேன் ., நண்பரே ..!
நல்ல தேவையான பகிர்வு நண்பா
ReplyDeleteபிளாஸ்டிக் பொர்டுகளை தவிர்க்கனும்னு சொல்லும் அதே வேளையில் மாற்றுஏற்பாட்டையும் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் தவிர்க்க முடியாமல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அதை எப்படி அகற்றனும்ன்னும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசாள்பவர்களின் கடமை சகோ.
ReplyDeleteஉண்மைதான்..,
Deleteஐயோ ப்ளாஸ்டிக்கைப் பார்த்தாலே பயமா இருக்கு.. என் முகனூலில் பகிர்ந்துள்ளேன் சகோ.
ReplyDeleteவணக்கம் அக்கா, எழுத்தில் சாதனை புரிந்த தங்களின் அங்கீகாரம் பெற்றது வசிஷ்டர் வாயால் மகரிஷி என்ற பட்டத்தை பெற்றது போல் உணர்கிறேன்..,
Deleteஎனது தளத்திற்கு வருகை புரிந்தமைக்கும் எனது எழுத்தை தங்கள் முகநூலில் பகிர்ந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி ..!
பிளாஸ்டிக் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு இன்றைய தேவை..
ReplyDeleteஅதை வெளிக்காட்டுகிறது உங்கள் கட்டுரை..
//நான் ரொம்ப உசாரு தேனீர் கடைகளில் பேப்பர் கப்புகளில் தான் தேனீர் அருந்துவேன் என்று சொல்பவர்கள் கவனிக்க.! பேப்பர் கப்புகளில் சூடாக தேனீர் ஊற்றும் போது அந்த கப்புகள் சிறிது நேரமாவது தாக்குப்பிடிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பேப்பர் கப்புகளின் உட்புறத்தில் பெட்ரோ-கெமிக்கல் கொண்ட முலாம் பூச்சு பூசப்படுகிறது. தொடர்ச்சியாக பேப்பர் கப்புகளை பயன்படுத்தும்போது இவை தேனீரில் கலந்து நம் உடலுக்குள் செல்லுமேயானால் அது தீராத வயிற்றுவலியை ஏற்படுத்துகிறது.//
இது புதிய தகவல்.. நன்றி!
அருமையான பதிவு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.!
Deleteஅழிவை அலங்காரத்துடன் எதிர்நோக்கும் நாம் . நவீனம் நாகரீகம் என்ற பெயரில் எந்தெந்த விதங்களில் அழிக்க முடியுமோ அவ்வளவையும் தேடிக்கொள்கிறோம். நல்ல பகிர்வு சகோ முகநூலில் பகிர்ந்துள்ளேன்.
ReplyDeleteபதிவை முகநூலில் பகிர்ந்து கெளரவித்தமைக்கு நன்றி சகோ, வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.!
Deleteபாராட்டுகள்,பலரையும் சென்றடைய வேண்டிய பதிவு.இயன்றவரை தவிர்ப்போம் இந்த நெகிழியை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோகுல்ஜி! :-))
Deleteபயனுள்ள பதிவு வசு....முகநூலில் பகிர்கிறேன்....தொடர்ந்து கிளாஸ் எடுக்க வேண்டுகிறேன்.....
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா!
Delete//பேப்பர் கப்புகளின் உட்புறத்தில் பெட்ரோ-கெமிக்கல் கொண்ட முலாம் பூச்சு பூசப்படுகிறது//
ReplyDeleteஇனிமே கையில மண் குவளையோட சுத்த வேண்டியதுதான்!!! ஆனா அதிலேயும் ரெட் ஆக்ஸைட் பூசறாங்களே!!! :D
அதிலையும் ஆரம்பிச்சுட்டாங்களா..சூப்பர்.!
Deleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்
வலைச்சர தள இணைப்பு : ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா
உலகம் அழிவை நோக்கி செனறுகொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. மக்கள் தொகைப் பெருக்கமும் ,அன்றாட வாழ்வின் அத்தியாவசியமும், விஞ்ஞானத்தின் அபரிமிதமான அசுர வளர்ச்சியும் பிளாஸ்டிக் உற்பத்தியும் பயன்படும் மென்மேலும் அதிகரிக்குமே தவிர பிளாஸ்டிக் தவிர்த்து மாற்று வழி என்ன என்று தெரியாத நிலையில் தெரியாத நிலையில் என்ன "மாற்று வழியே இல்லாத நிலையில் "பிளாஸ்டிக் தவிர்"என்பது "வெற்றுக் கூச்சல்கள்" "பெய்து பாக்கு வாதங்கள்"அப்த்தமான பேச்சுக்கள்.
ReplyDeleteஉலகம் அழிவை நோக்கி செனறுகொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. மக்கள் தொகைப் பெருக்கமும் ,அன்றாட வாழ்வின் அத்தியாவசியமும், விஞ்ஞானத்தின் அபரிமிதமான அசுர வளர்ச்சியும் பிளாஸ்டிக் உற்பத்தியும் பயன்படும் மென்மேலும் அதிகரிக்குமே தவிர பிளாஸ்டிக் தவிர்த்து மாற்று வழி என்ன என்று தெரியாத நிலையில் தெரியாத நிலையில் என்ன "மாற்று வழியே இல்லாத நிலையில் "பிளாஸ்டிக் தவிர்"என்பது "வெற்றுக் கூச்சல்கள்" "பொழுது போக்கு வாதங்கள்"அப்த்தமான பேச்சுக்கள்.
ReplyDelete